நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நான்கு விதத் துளிகள்..


பசியோடு காத்திருக்குது
பக்கத்துவீட்டு வயிறு
பசிக்காமல் பசியாற
பந்தி பரத்து 
பணக்காரத் திமிறு....

விதவிதமா விளைக்குது
விவசாய நிலம்
விளைக்கும்
விவசாயிக்கு மட்டும்
வஞ்சகமில்லா பஞ்சம்...
                                                

பணமிருந்தும் பாவைக்கு
பஞ்சமானதே உடல்மறைக்கும்
பட்டாடை
பணமில்லா பேதைக்கு
பஞ்சமானதே உடல்மறைக்க
சிற்றாடை...

நெய்யுது ரகரகமாய்
நெசவாளரின் தறி
நொந்துபோகுது மனசு
 நெய்தவருக்கில்லையே
நூல்கழியாத் துணி...

டிஸ்கி// கிறுக்கள் என் சிந்தனையில் பட்டது.
படங்கள் கூகிளில் சுட்டது.


இப்படத்திக்கு அஹமது இர்ஷாத் எழுதியது


நேற்று காதலில் தோற்று
மனதை வைத்தோம் பூட்டி
இன்று வானில் சிறகடித்து
நிலவுக்கே போட்டி..

போட்டினதும்தானே இக்கவிதையே வந்தது. இல்லையா இர்ஷாத்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நிஜமாய்..டிஸ்கி// எதாச்சையாக ஒரு தளத்துக்குசென்றேன் அங்கே இப்படத்தைப்போட்டு கவிதயெழுதச்சொல்லியிருந்தாகோ. அப்போ அங்கே எழுதமுடியலை!
அதான் இங்கேவந்து கிறுக்கிவிட்டேன். என்ன படத்தைபார்த்து எழுதச்சொன்னாங்க நான் படத்துக்குள்ளேயே சின்ன சின்ன இதயம்வச்சி எழுதிட்டேன் எப்புடியிருக்கு..


இப்படத்திற்க்கு ஷேக் என்கிற ஸ்டார்ஜன் எழுதியது.

ஒருமுறை பார்க்க தோன்றும்
நிலவொளியில் உன் முகம்
அடிக்கடி பார்க்கத் தூண்டும்
போட்டி உனக்கும் நிலாவுக்கும்
ஜெயிப்பது நீயாக இருந்தால்
என் ஓட்டு உனக்குதான் அன்பே..
பிடிச்சிருக்கு அவளை மட்டும்
விரல் கோர்த்து வீதியில்
உலா வருவேன் கூட நீயும்.

அதாறு ஷேக். மச்சிதானே...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

நாயா? நானா?

அம்மா அம்மா என்னப்பாரு
அதையும் கீழே எறக்கிவிடு
வயித்துல என்ன சுமந்தியே-இப்போ
வழியில சுமக்க முடியலையா!

அம்மா அம்மா இதக்கேளு
அழுது சொல்லுறேன் கொஞ்சங்கேளு
நாயின் வாழ்வைப் பார்த்தயா!
நா அழறதுக்கூட கேக்கலையா!

பிஞ்சுவிரலை பிடித்துக்கொண்டு
பரக்கப் பரக்க போறாயே
ஒன்னோட வேகத்துக்கு-என்னால
ஓடிவரவும் முடியலையே!

பச்சபுள்ள என்னையும்தான்
பரிதவிக்கவிட்டு விட்டு
செல்லப்பிரணி என்பதனால்
சோக்கா தோளில் சுமந்தாயோ!

நாலுகாலு இருந்தபோதும்
நாயை நடக்க விடுவதில்லை-ஆனா
நான் தத்தித் தத்தி நடக்கிறனே
தடுக்கிக் கீழே விழுகிறனே

பெத்தவளே பெத்தவளே
பிள்ளை சொல்றதக் கேளம்மா
பெத்தெடுத்த பிள்ளையைவிட -உனக்கு
பாசம் அந்த பிராணிமேலா?

உன்பொறுப்பைக் கண்டு வருந்துகிறேன்
உனக்கு மகளாய் வெதும்புகிறேன்
நாயிக்குயிருக்கும் நன்றிகூட
நானிருக்க மாட்டேனென்று நினைத்தாயோ!

அடுத்த ஜென்மம் ஒன்னிருந்தால்
அதில் நீ எனக்கு மகளாகு
பாசமென்றால் என்னவென்று-உனக்குத்
பாடம் படித்துத் தருகின்றேன்...

டிஸ்கி//இதை பாட்டாப் பாடுங்கோ பாப்போம் அம்மா இங்கே வா வா அந்த ரைமிங்கில்[யாரு[ம்மா]ப்பா இந்த போட்டோவ எடுத்தது. அல்லாரும் சாக்கிரதையா இருங்கோன்னு யாரோ பின்னால் இருந்து எச்சரிக்கிறாங்கன்னு நெனக்கிறேன். கையில கேமரவோட அலையுறாக பாத்துங்கோ] ஏன் கேக்குறீங்க இந்தபோட்டோவை பார்க்கசொல்லி கிட்ட தட்ட எனக்கு 20. 25 மெயில்கள்..

அதிலிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் மனதை கஸ்டப்படுத்தினாலும். இன்றைய சில அம்மாக்கள் இப்படியிருப்பதால் எல்லாருக்கும் சேத்து எழுதுறாங்க. என்ன செய்ய ஒரு பானைசோத்துக்கு ஒருசோறு பதமாம். இது எந்த ஊரு நியாங்க.. என்ன கொடுமையிது. அப்படின்னு தலைப்பு வேறு..
இதபாத்த நம்ம மூளை சும்மாயிருக்குமா அதான் இருக்கும் கொஞ்சூண்டு மூளையை  கசக்கிப்பிழிஞ்சி கவிதையின்னு கிறுக்கியிருக்கேன். இதை எழுதியது யார்மனதையும் நோகடிக்கவல்ல. அப்படியிருப்பின் பொருந்திக்கொள்ளவும்..

இப்படத்திற்க்கு ரியாஸ் எழுதிய கவிதை


ஏ.. நிலவே

பூமிக்கு
வந்துவிடாதே
வந்தால்
என் நிலைதான்
உனக்கும்.


துண்டு போட்டு
பங்கு
போட்டுக்கொள்வார்கள்
மனிதர்கள்..
மழைக்கு
காத்திருப்பது போல
பின்
இவர்கள்
இரவுக்கும்
காத்திருக்கலாம்.

ஆமாம்மா செய்தாலும் செய்வாங்க!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!

நீயின்றி நானேது!....


எனைத்தொடரத்தான்
உனைப் படைத்தானோ!
இல்லை-எனக்குள்
உனைப் புதைத்துதான்
எனைப் படைத்தானோ!

என்னில் நீ
முழுமையாகி -நான்
எழும்போதும் விழும்போதும்
நிற்கும்போதும் நடக்கும்போதும்
முன்னும் பின்னும்
என் எல்லா நிலைகளிலும்
எனக்குளாகிவிட்டாய்!

சிலவேளை
உனைக்கண்டு நான் அதிர!
பலவேளை
எனைக்கண்டு நீ மிரள!

என்னைப்போலவே நீயிருந்தும்
எலும்புகள் ஏதும் உனக்கில்லாததும்!
என் உருவம் அழகாய் இருக்கையில்
எனக்குளிருக்கும் நீ
நிழலாய் தெரிவதும்
உலகப் பாடம் படித்திடவே
மனசாட்சி
நிழல்ப் படமாய் தெரிகிறதோ!

நான் தவறிடாவாறு
கண்கானிக்கிறாய்-என்
மனம்போன போக்கை
கண்டிக்கிறாய்!
மனசாட்சியாய் தண்டிக்கிறாய்!
நிழல்சாட்சியாய் நிந்திக்கிறாய்!

நீ
என்கூடவே வரும்வரை
என்னக்கில்லை மரணம்
நீ
என்னைவிட்டுப் பிரிந்தபின்
எனக்கேது உலகிலே உறைவிடம்.

டிஸ்கி// இப்படத்திற்கான /சிநேகிதன்/ அக்பரின் கவிதை
மரக் காதல்
நீ அமுதை பொழிகிறாய்
நான் அன்பை பொழிகிறேன்
இந்த நேரத்தில்
செங்கதிரோனுக்கு
இங்கு என்ன வேலை?
நீ ஓடி விடாதே நில்..

அக்பர் அங்கேயே நிற்கச்சொல்லி நிலாவுக்கு தூது அனுப்பிச்சாச்சி ஓகேயா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

அதிரைக்கு கிடைத்தது அங்கீகாரம்

அதிரை. யுனிக்கோட் தேனீ உமர்தம்பி அவர்களுக்கு செம்மொழி மாநாட்டில்: உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது

"உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்" ஒரு நாள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருக்கிறது.. 24 ஆம் தேதி... அம்மாநாட்டு அரங்கில் உமர் தம்பி அவர்களின் பணிக்கு சிறப்பு சேர்பிக்கும் வகையில் ஓர் அரங்கிற்கு "உமர் தம்பி அரங்கம்" எனப் பெயர் சூட்டியுள்ளனர் இந்த அங்கீகாரம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியான செய்தி.

உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டி நான் ஒரு பதிவை என் வலைதளமான கலைச்சாரலில் April 21, 2010 8:59.க்கு போட்டேன். அதில் நிறைய சகோதர சகோதரிகளின் ஆதரவும் இருந்தது. அத்துடன் அப்பதிவிலேயே சகோதரர் காஞ்சி முரளி அவர்கள் வலைத்தளப் பதிவில் போட்டால் மட்டும் போதாது. இக்கோரிக்கை நேரடியாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் இது அரசு சம்மந்தப்பட்டது எதையும் நேரடியாக செய்யவேண்டும் என்றார்கள். அதனால் அவர்களை மெயில்மூலம் தொடர்புகொண்டு என்ன செய்யவேண்டுமென விபரம் கேட்டேன். அவர்கள் மெயில் ஐடிகள் தந்தார்கள்.

இதை இப்படி இப்படிசெய்யவேண்டும். இன்ன இன்னாருக்கு கடிதம் அனுப்பவேண்டுமென விபரமாக சொன்னார்கள். அவர்கள்சொன்னதுபோல் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு . Tue, Apr 27, 2010 at 6:40 AM அன்று கடிதம் எழுதினேன்

அக்கடிதத்தோடு, நான் கலைச்சாரலில் போட்ட பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அத்தனை கருத்துரைகளையும் சேர்த்து மாண்புமிகு துணை முதல்வர் வலைதளத்தின் தலைமை நிர்வாகியான திரு ஹசன் முகம்மது ஜின்னா அவர்களுக்கு, துணை முதல்வர் பெயரில்

Wed, 5 May 2010 10:23:11அன்று உமர் தம்பி தொடர்பான கோரிக்கை அனுப்பினேன்...
இதுதான் நான் துணை முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவிலிருந்து சில.
""மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சார் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு...
என் அன்பான வாழ்த்துக்களுடன்...
வலைதள தமிழை பயன்படுத்தும் தமிழன் என்ற முறையில்,
ஓர் தமிழனுக்கு ஓர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்க்கு,
தாங்கள் 'கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில்' அங்கீகாரம் கிடைக்கும் - தாங்கள் நிச்சயம் செயல்படுத்தி காட்டுவீர்கள் எனும் நம்பிக்கையில்  அயல்நாட்டில் வாழும் தமிழர்களின் சார்பாக
இக்கோரிக்கை மனுவினை தங்கள் முன் வைக்கிறேன்...

அனுப்புனர்:
திருமதி. மலிக்காஃபாரூக்

அடுத்தடுத்து யார் யார்க்கு மெயில் அனுப்பனுமோ அவர்களுக்கெல்லாம் மெயில்கள் அனுப்பினேன். அனுப்பியதோடல்லாமல் இடையிடையே விசாரித்துக்கொண்டேயிருந்தேன்.

அதன் காரணமாய். திரு.ஹசன் முகமது ஜின்னா அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டுபோய்... துணை முதல்வர் மாநாட்டு செயலாளர் அலாவுதீன் அவர்களுக்கு பரிந்துரை செய்து, இது தொடர்பான குழு அமர்ந்து, இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, அதன் தொடர்ச்சியாக மாநாட்டினை முன்னிட்டு மாணவர்களுக்கான கணினி போட்டி நடைபெறுகிறது.. அப்போட்டியில் முதலிடத்தில் வெற்றிபெறும் மாணவருக்கு செம்மொழி இணைய மாநாட்டில் "உமர் தம்பி விருது" வழங்க உத்தேசித்து. பின்பு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தமிழ் இணையதள மாநாடு நடைபெறும் ஐந்து அரங்கத்தில் ஓர் அரங்கினுக்கு "உமர் தம்பி அரங்கம்" என உமர் தம்பி அவர்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளது தமிழக அரசு.

இறைவனின் உதவியால் உமர்தம்பி அவர்களுக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கிய தமிழக அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
அதோடு இதற்கு பேருதவியாக இருந்த நல்லுள்ளங்கள். சகோதரர் காஞ்சி முரளி, திருவாரூரில் பிறந்த சகோதரர், வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா, உலக தமிழ் மாநாட்டு செயலாளர் திரு. அலாவூதீன். அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.

என்னுடைய இந்த அன்பான வேண்டுகோளை ஏற்கச்சொல்லி திரு. ஹசன் முகம்மது ஜின்னா அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சொல்லியபோது மறுக்காமல், செய்ய சொல்வதாய் சொல்லியதோடு இல்லாமல் அதை நிறைவேற்றிதந்த

”உமர் தம்பி அரங்கம்” பெயர் வைத்திட முழுக்காரணமாக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் மாநாட்டு செயலாளர் அலாவுதீன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..

ஒரு நல்ல விசயத்துக்காக என்னாலான சிறு உதவி. இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திய இறைவனுக்கே என் சிரத்தை தாழ்த்துகிறேன்..

எந்த ஒரு அடியானும் அவன் சக்திக்குமீறி சோதிக்கப்படுவதில்லை.
அதேபோல் எந்த ஒரு நல்ல மனிதருக்கும் அவரின் நல்லதொரு செயல்களுக்கு தகுந்த கூலி வழங்கப்படாமலிருப்பதில்லை என்பது இறை வாக்கு. அதன்படி தான் உயிரோடுயிருக்கும்போது செய்த நல்லதொருக் காரியம், தான் இறந்தபின்னும் உலகவாசிகள் பயனடைவதுபோல் செய்து சென்ற உமர்தம்பி அவர்களுக்கு, தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரம் சாலச்சிறந்ததே!

இது நன்மை செய்தவருக்காக இறைவன் அளித்த நற்கூலி அல்கம்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே...

நான் கலைச்சாரலில் இட்ட பதிவுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..

டிஸ்கி// எனது தந்தையும் அதிரையென்பதால்
எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..
இத்துடன் நான் சகோதரர் தாஜுதீன் அவர்களின் பதிவில் இட்ட கருத்துரைகளும். சகோதரரின் பதில்களும்.

அன்புடன் மலிக்கா, Thursday, April 22, 2010
நிச்சியம் கிடைக்கனும். இன்ஷா அல்லாஹ்.
நானும் இப்பதிவை போட்டுள்ளேன்.
http://kalaisaral.blogspot.com/2010/04/blog-post_21.html
தாஜூதீன், Thursday, April 22, 2010
அன்புடன் மலிக்கா.
வருக்கைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் மலிக்கா, தங்களின் வலைப்பூவிலும் இந்த வெளியிட்டதற்கு மிக்க நன்றி. இந்த முயற்சிகளுக்கு பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிரகாசமாக உள்ளது.
அன்புடன் மலிக்கா, Sunday, May 02, 2010
அன்புச்சகோதரர் அவர்களுக்கு.
இது சம்மந்தமாக தெரிவிக்கவேண்டி இடத்திற்க்கு என்னால் ஆன ஒரு சிறு முயற்ச்சியை செய்துள்ளேன்.
அந்த முயச்சிக்கு பலன் [கிடைக்குமென்ற நம்பிக்கையிருக்கு]நிச்சயம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்..
தாஜூதீன், Sunday, May 02, 2010
சகோதரி மலிக்கா அவர்கள், உங்களின் தனிப்பட்ட முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம், தேனீ உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க உண்மையில் உங்களை போன்ற மற்ற தமிழ் ஆர்வளர்களின் வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும் என்று நம் அனைவரின் நம்பிக்கை.
 நம்பிக்கையின்படியே இறைவன்  நிறைவேற்றித்தந்துவிட்டான்..அல்ஹம்துலில்லாஹ்!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

தந்தையர் [தியாகிகள்] தின வாழ்த்துக்கள்.

அனைத்து தந்தையர்களுக்கும் [இனிதந்தையாகப் போகிறவர்களுக்கும்] என் நெஞ்சார்ந்த தந்தையர்தின வாழ்த்துக்கள்..

தந்தையின் தவிப்பு!

நன்றி கூகிள்

எனது
அன்பு மகனே
அன்னையைமட்டும்
அணைத்துகொள்கிறாய்
இந்த தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்!

ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத் தந்தைக்கும்
பங்குண்டல்லவா!

சிலஇடங்களிலும்
சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் -உன்
சிந்தையிலும் தவறாகவே
சித்தரிக்கபடுகிறது!

சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா?

அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படகூடாதே என
என்பாசத்தை
பூட்டியே வைத்துள்ளேன்!

அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப் போலவே
பார்ப்பதைதான் என்னால்
பொறுக்க முடிவதில்லை

விரோதியல்லடா உன் தந்தை

உன்னை
இவ்வுலகத்திற்கு
வெளிச்சமாய் காட்ட
என்னை நான்
மெழுகாக்கிக் கொண்டேன்
உருகுவதற்காக
வருந்தாது மெழுகு

தன்
உடலை உருக்கி
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நான்

மகனே!
நீ உயிர்வாழ
உன் அன்னை
தன் உதிரத்தைப்
பாலாக்கித் தந்தாள்

நான்
உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா?

இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,,,,,,,,,,அறிவாயா?

டிஸ்கி// இது நான் முன்பே எழுதியகவிதை. மீண்டும் பதிவுசெய்கிறேன் ஏனெனில் தந்தையர் தினத்திலாவது சில தவப்புதல்வர்கள் தந்தையை அறிந்துகொள்ளட்டும் என்ற நப்பாசைதான்.
எல்லாதினமும் அன்னைதந்தை தினம்தான் ஆனால் அதையும் மறந்தவர்களுக்கு  நினைவுபடுத்தவே இதுபோல் கொண்டாடுகிறார்களோ ? ஏனெனில் சிலர்தான் தாய்தந்தையரின் தியாகங்களை மறந்து பாரமாக நினைத்து, அச்சோ இல்லையில்லை பேஷனாக நினைத்து அதாவது வயதாகிவிட்டால் மூலையில் தள்ளப்படுவதுதானே வாடிக்கை ஆனால் இதுகொஞ்சம் டீசண்ட் முதியோர் இல்லங்களில் இதேபோன்ற மற்றவர்களுடன் தனிமைப்படுத்திவிடுவது.
இது முதியவர்களுக்குதான் பாதுகாப்பாம்.
இன்று அவர்கள் நாளை??????????

இப்படத்திற்கு கவிதை எழுதிய ராசராசசோழன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


பட்டம் அறுந்து
போனாலும்
அது காதல் பட்டம்
பால் நில ஒளியில்
அது
சுமந்து செல்கிறது...
உன்னோடு நான் இருந்த
கடைசி சில
நிமிடங்களை ..

கண்ணே!

இங்கே பார்...
நிலவுக்கு ஆதரவாய்
செஞ்சுடர்...

தலை சாய்த்து
கொஞ்சி நிற்கும்
மர நிழல்கள்...
அதற்கு ஆதரவாய்
மலை முகடு...

என்
நினைவலைகள்
வானில்
மேக மூட்டமாய்...

நீ
மட்டும்
இங்கு இல்லை
உன்
சுவடுகள்
எங்கும் எதிலும்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகதானே!

கோடையும் வாடையும்..

கோடை குழந்தைகளுக்கு
கொண்டாட்டம்-அதன்
வெயிலோ தருமே
திண்டாட்டம்

கோடை விரும்புவது
குறைந்த உடை
வாடை தேடுவது
நிறைந்த போர்வை

வாடை உடம்புக்கு
கொண்டாட்டம்-அதன்
குளிரோ நரம்புக்கு
திண்டாட்டம்

கோடைவெயில் தேடும்
குளுகுளுப்பு
வாடைகாற்று நாடும்
கதகதப்பு

கோடையின் மனைவி வாடை
வாடையின் கணவன் கோடை

”ஆகமொத்தத்தில்”

இருவரும் ஒரே கூட்டனி-அவர்கள்
இருவரும் தனித்தனியே வந்தால்
நமக்கு எதிரணி.
 
டிஸ்கி// இக்கவிதை தமிழ்தேரில் கோடையும் வாடையும் தலைப்பில் வெளியான என்கவிதைதான்.
ரொம்ப நாளாச்சி வெளியாகி.
 
 
 
 
 
 
 
 
 
இப்படத்திற்க்கு கவிதைஎழுதவேண்டும் என சொல்லி இப்பதிவை பப்ளிஸ்பண்ணிய மிக கொஞ்ச நேரத்தில்  இப்படியொரு அழகிய கவிதையை நமக்குதந்த  சகோதரர் காஞ்சி முரளியவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..
 
காதலியே...
ஓர் நிலாக்காலத்தில்....

இந்த
இயற்கையின் நிலவொளியில்
இணை மரங்களுக்கிடையில்...
இணையாய் நீயும் நானும்.... அது
நினைவுகளின் தேக்கமாய்... இன்றும்
நிழலாய் என் நெஞ்சில்...

இந்த
நிலாக்கரையில்...
இடம்மாறிய - நம்
இதயங்களின் சங்கமம்...
இன்னும் - என்
இதயத்தில் நினைவலைகளாய்...
இன்றும் என் நெஞ்சில்...

அன்று..
என் இதயத்திற்கு பதிலாக
உன் நினைவுகளை
தந்துவிட்டு பறந்துவிட்டாய்...
என்னை வதைப்பதாய் நினைத்து -
உன்னையே
நீ வதைத்துக் கொள்கிறாய்...

என்
நினைவுகளின்
நிஷ்டையிலிருந்து கலைத்துவிட்டு...
நீ
நிம்மதியை தேடுவது...
நிரம்பாத குடத்தின் நீர் போலத்தான்...

இன்றும்
இவ்விடம் எனக்கோர்
தாஜ்மகால்தான்...

ஆனால்... உனக்கு...!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!

விலாசம் தேடும் விழிகள்.


நன்றி கூகிள்
உன்
ஓரவிழிப்பார்வையில்
என்னுள்ளம்
ஈரமாய் நனைந்தது
நனைந்த நினைவுகளை
நித்தமும் நினைக்கின்றேன்

உன்னை
நினைத்த நாள்முதலாய்
நிலவு சுடுகிறது
நெருப்பு குளிர்கிறது
காகம் மயிலானது
கரும்பு கசப்பானது
கரையில் நிற்கும்போதே
மனம்
கடலில் தத்தளிக்குது

தனியாய் புலம்புகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
நீ இருப்பதாய்
நினைத்துக்கொண்டு
எனக்குள்
நானே சிரிக்கின்றேன்

கார்மேகம் தலையைதொட
வான்மழை மடியில் விழ
வண்ணக்கனவு விழியில் வர
வசமாய் மாட்டிக்கொண்டேன்
உன்வசத்தில்

ஏனிந்த போராட்டம்
எதற்கிந்த ஆர்ப்பாட்டம்
கல்நெஞ்சம் எனக்குள்ளே
கரைந்தோடுது நீரோட்டம்

எனக்குள் நீவந்தாய்
விழிவழியே
மறு  உயிர்தந்தாய்
மறந்துவிட வழியில்லை
மரிக்கின்ற நிலைவரையில்

உன் ஓரவிழிப்பார்வை
என் உயிருக்குள் உறைந்தது
வரமா? இல்லை சாபமா?
விடைசொல் விழியே
நீ என் விலாசம்வரும்
வரையில்
என்நெஞ்சம் உன்
நினைவரையில்...

 டிஸ்கி// இன்று. இப்படத்திற்கான  L k.  என்ற கார்த்திக்கின் கவிதை.பௌர்ணமியை பழிக்கும்
முகமுடையவளே ..

இரண்டாய் இருந்த நம்
இதயம் மணத்தால்
ஒன்றாகியது..

நம் காதலின் தூய்மை
நிலவின் வெண்மையிலும்
தூய்மையானது ..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

வெற்றி யாருக்கு![கவிதைப்போட்டி]

நன்றி கூகிள்
இந்த சின்ன விருதை கவிஞர்கள் அனைவரும் அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.

கவிஞிகள்.
அன்னு----
ஆசியா உமர்-----
நிலாமதி-----
அமைச்சாரல்---
மலிக்கா---

கவிஞர்கள்.
கார்த்திக்-------
காஞ்சி முரளி-----
ராஜராஜசோழன்-----
அக்பர்-----
ரியாஸ்-----
ஸ்டார்ஜன் -----
விஜய்------
இர்ஷாத்---
வெறும்பய----
ஜெய்லானி----
பார்த்தீபன்--
சீமாங்கனி---
நிஜாம் நியூஸ்--
நியோ---
மங்குனி---
நாடோடி---
தஞ்சை வாசன்---
திகழ்----

அன்பான கவிஞர்களே! கவிஞிகளே!

முதலில் தாங்கள் அனைவருக்கும் என் மனம்நிறைந்த
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
கவிதைப்போட்டியென்றவுடன் கலந்துகொண்டு தங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் கொட்டிக்கலக்கி
தாங்களின் அன்பான கவிகளை அழகாய் அருமையாய், தந்துள்ளீர்கள்.. ஒவ்வொருத்தருக்குள்ளும் கவிஞன் எனும் கற்பனை சிற்பி சிந்தனைகளை செதுக்கிக்கொண்டுதான் இருக்கிறான். அதை வெளிப்படுத்தும் தருணம் கிடைத்தால்,மிகஅழகியமுறையில் செதுக்கி சிற்பமாக்கி விடுவான் என்பதற்கு சான்றே இக்கவிதைப்போட்டி.

இதில் யாரும் யாருக்குக்கும் சலைத்தவர்கள் இல்லை. ஏனெனில் அவரவர் அவரவரின் சிந்தனைக்கு தகுந்தவாறு தன் சிந்தனைகளை கற்பனைக்குள் கலந்து படைத்துள்ளார்கள். இதில் முதலிடம் இரண்டாமிடம் என்றுசொல்லி அவர்களின் சிந்தனைகளை சிதைத்துவிட விரு[ம்ப]ப்பமில்லை.

ஆகையால் அனைவரும் கவிஞர்களே! ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் தன்மனவோட்டத்தை பதிவுசெய்துள்ளீர்கள். அதற்க்கே முதலில் பாராட்டவேண்டும்.பாராட்டுக்கள்.
யாரும் பிறக்கும்போதே இன்னதுவாகத்தான் பிறப்பதில்லை. வளரும் சூழ்நிலைகளும். வளர்க்கப்படும் சூழ்நிலைகளும்தான் அவர்களை இன்ன இன்னதுக்கென்று ஆக்கிவிடுகிறது, ஆக்கப்படுகிறது, இது கவிதைக்குமட்டுமல்லை அனைத்துக்கும்தான்.

இதிலிருந்து நான் புரிந்துகொண்ட விசயம் ஒருசிலருக்கு மட்டுமே கவிதை வருவதல்ல, ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதன் சிந்தனைக்குதந்தவாறு எழுதமுடியும். பதிவுசெய்யமுடியும். [இதில் நான்கூட சும்மா ஜுஜிபிதான் என்று.].

ஆகவே உங்களுக்குள் இருக்கும் திறமைகளை சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது வெளிப்படுத்த தவறவேண்டாம். அது எதுவென்றபோதும் உங்களால் முடியும் என்று எதை நினைக்கிறீர்களோ அதை சாத்தியப்படுத்த முயலுங்கள்..
வெற்றி நிச்சயம்.

/சரி சரி யார் யார் பிஸ்கோத்துக்கு ஆசைப்பட்டதோ அவங்களெல்லாம் வரிசையாக நின்னு சண்டைபோடாம ஒவ்வொன்றாக எடுத்துக்கோங்க./

டிஸ்கி// என் ஒவ்வொரு பதிவின் கீழும். உங்கள் கவிதைகளை ஒவ்வொன்றாக பதிப்பேன்..

இதோ என் கவிதென்னும் கிறுக்களும்


ஆதாம் ஏவாள்

காரிருள் சூழ்ந்த இவ்வுலகம்
கனிமரத்தின் புண்ணியத்தோடு
ஆதாம் ஏவாளின் வருகையால்
விடிவு பெற்றெதென்பதை
உணர்த்தவே

ஒவ்வொரு இரவும்
உலாவரும் நிலா இருள்மீது
ஒளிவீசி இவ்வுலக்கிற்க்கு
உணர்த்துகிறது-அதை
வண்ண வானம் விளக்குகிறது.
......................................................................
ஒளியான காதல்
பசுமை நிறைந்த நம் காதல்
பிரிந்த சோகத்தில்
பச்சைமரம்
கருப்பானதே தவிர
கறுகிவிடவில்லை-அதை

உறுதிப்படுத்த இந்தநிலா
உலாவரும் வேளையில்
ஒளி விசீயபோது
இருள் சூழ்ந்த நேரத்திலும்
வண்ண வானத்தில்-நம்

இதயங்களின் சங்கமத்தை
இதமாய் காட்டியது-நம்
உண்மைக் காதலை
உலகுக்கே உணர்தியது..

ஏதோ நம்மால முடிந்தது

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

போட்டி உங்களுக்குதான்!.

நன்றிகூகிள்
எப்பப்பாரு நானேதானே கவிதையின்னு ஏதாவது ஒன்ன கிறுக்கிட்டு இருக்கேன். ஒரு மாறுதலுக்கு. இன்று நீங்க
நான் கொடுத்துள்ள போட்டோவுக்கு கவிதையை எழுதுங்களேன்.
வரிகள் கணக்கில்லை
வார்த்தைகள் முக்கியம்.


யார் இதற்கு பொருத்தமாக எழுதுறாங்களோ அவுங்களுக்கு அவுங்களுக்கு. அது பின்னர் அறிவிக்கப்படும்.

எங்கே ஆராம்பிங்கோ பார்க்கலாம் ம்ம்
கலைகட்டட்டும் கவிதை அரங்கம்.
தகதகவென ஜொலிக்கட்டும்
உங்கள் எண்ணச் சுரங்கம்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகதானே!

நிழல் தடம்..........

நன்றி கூகிள்

டிஸ்கி// யாரோ ஒருவர் தன் காதலியின் கால்தடத்தில் வைத்த பூவுக்கு என் வித்தியாச சிந்தனை
.
 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகதானே!

மரண சிந்தனை!!


நன்றி கூகிள்

மனமே மனமே பாவம் செய்வதேன்
மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்
மரணசிந்தனை நினைவில் வரலையா!
இல்லை
மரணமென்பதே உனக்கு இல்லையா!

பூமியில் இறைவன் படைத்த அனைத்துமே
புனிதமனிதனே உனக்காவே! -இங்கு
சிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்
பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குது
புண்ணியங்களும் குவிந்து இருக்குது

புண்ணிய வழியை புறந்தள்ளிவிட்டு
பாவத்தின் பக்கம் மனது போவதேன்
பாதை மாறியே பயணம் செய்வதேன்
உலகவாழ்க்கையில் உன்னைத்தொலைத்ததேன்
உண்மையை உதறி உள்ளம் அலைவதேன்

கூடிக்கூடியே கோள்சொல்கிறாய்
குடும்பத்தைப்பிரிக்க புறஞ்சொல்கிறாய்
கூத்து கும்மாளாம் தேடிப்போகிறாய்
கூட்டுக்கொள்ளையில் பங்குகொள்கிறாய்

மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்
மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்
மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு
மனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்

ஃபேஷன் ஃபேஷனென
வேசமிடுகிறாய்
பெருமைப்பேசியே
பொழுதைக்கழிக்கிறாய்

வர தட்சனையை வாங்கிகொள்கிறாய்
வறுமையுடையோரை வதைசெய்கிறாய்
வட்டிக்கு வட்டி வாங்கிகுவிக்கிறாய்
வரம்புமீறியே வாழநினைக்கிறாய்

இப்படி,,,,,,,,,,

பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்
புண்ணிய வழியை மறந்துபோனதேன்
மரணசிந்தனை மனதில் வரலையா
இல்லை
மரணமென்பதே நினைவில் இல்லையா.

இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்
உண்மையில் வாழ்க்கை
மறுமையில்தான் -இதை
மனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு
மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....

டிஸ்கி//இக்கவிதை ஷார்ஜா சீமான் 12 ஆம் ஆண்டுவிழாவில்
நான் எழுதி வாசித்த கவிதை!
”சீமான்” உதவிகள் பல செய்து உதவும் மனிதநேயமுள்ள ஒருஅமைப்பு.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!

என் இனிய பெற்றோர்களே! உங்களுக்குத்தான்!..அனைத்து பெற்றோர்களும் அப்பாடா என பெருமூச்சுவிட்டு,
 மீண்டும் ஓரு பெருமூச்சுவிட காத்திருக்கும் நேரம் தற்போது இல்லையா!. பெருமூச்சோடு சேர்ந்து சில பெற்றோர்களுக்கு பெரும்குடல் சிறுங்குடல் எல்லாம் சேர்ந்துவிடுவதுபோன்ற கலக்கமும் மனதில் இருக்கும்.
 தேர்வுகள் முடிந்து தேர்ச்சிகளும் பெற்று அடுத்தது என்ன படிப்பது. எங்கு சேர்ப்பது. எந்த பள்ளி சிறந்தது. எந்த காலேஜ் சிறந்தது. அதுவும் ஹாஸ்டல் வசதியெப்படியிருக்கும். அதற்கு எவ்வளவு சிலவாகும் என மண்டையைக் குடையும் கேள்விகள் பலஎழுந்து எழுந்துஅடங்கும்.


இச்சமயத்தில்தான் மிக கவனமாக செயல்படவேண்டும்.
படிப்பு என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிக மிக முக்கியமானது. அதை சரியானநேரத்தில். சரியான விதத்தில். சரியாக தேர்வுசெய்து அவர்களுக்குத்தரவேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை. அவர்களின் எதிர்காலமே இப்படிப்பில்தான் இருக்கிறது என்பதை முதலில் அவர்களுக்கு உணர்த்துதல் மிக அவசியம். அப்புறம். அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
அவர்களின் விருப்பங்களைகேட்கவேண்டும்.


அவர்கள் எடுத்திருக்கும் முடிவும். தேர்வும். சரியானதாக இருக்கும் பட்சத்ததில் அவர்களின் விருப்பத்திற்கே படிக்க அனுமதிப்பது சிறந்தது. அல்லது அது சரியானதாக இல்லாதபட்சத்தில் எடுத்துச்சொல்லுங்கள். ஏன்? எதனால்? என்பதையும் சற்று விளக்கிச்சொல்லுங்கள். அத்தோடு குடும்ப சூழலையும் அவர்களுக்கு புரிவதுபோல் சொல்லுங்கள்
நம் குழந்தைகள்தான் அவர்களிடம் பக்குவமாக சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். ரொம்ப கறாராக நடந்து. இவங்க என்னத்த சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலையை உருவாக்கிவிடாதீர்கள். நிதானம் அவர்களைவிட நமக்குதான் மிகமுக்கியம்.


அடுத்து தேர்ந்தெடுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி அதில் மிக கவனமாக இருங்கள். தரமான கல்லூரிகளாக! அதேசமயம் உங்கள் வசதிக்கு தகுந்தார்போல் தேர்ந்தெடுத்துச் சேருங்கள். அதற்குமீறி சேர்த்துவிட்டு பின்பு அவஸ்தைக்குள்ளாகாதீர்கள். இதனால் பாதிப்படைவது இருவருமே! நிறைய மார்க் வாங்கியும். வசதியில்லாத காரணத்தால் தரமான கல்லூரிகளில் சேர்க்கமுடியவில்லையா! தொண்டு நிறுவனங்களையும். கல்விக்காக உதவும் நல்லுள்ளங்களையும் தயங்காமல் நாடுங்கள். கல்விக்காக உதவ எத்தனையோ மனங்கள் காத்திருக்கு அவைகளை நல்வழிக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


அடுத்து ஹாஸ்டல். ஹாஸ்டலில் தங்கிப்படிக்கவைப்பது தற்காலத்தில் பேஷனாகிவிட்டது.முதலில் ஹாஸ்டலில் தங்கிதான் படிக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்துகொள்ளுங்கள். ஏனெனில். ஹாஸ்டல் என்பது குழந்தைகளுக்கு நல்லன்பைதரக்கூடிய இடமாக இருக்குமா!
எல்லாம் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையாவும்.  ஏதோ எதற்கோ படிக்கவந்துள்ளோம் என பொடுபோக்குதனமான படிப்பை படிக்குமிடமாகவும் தானேயிருக்கும்.   பிஞ்சுமனசு பயமறியாது.எவ்வித  பயமில்லாமல் நாம் இங்கே எதைச்செய்தாலும் யார் கேட்கப்போகிறார்கள். எதையும் செய்துக்கொள்ளலாம் எங்கும் மனம்போனபோக்கில் போகலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுமே?


அங்கே அன்னையின் அன்போ, தந்தையின் அரவணைப்போ,
கிடையாது. கிடைக்காது. நினைக்கலாம் அதெல்லாம் பார்த்தா படிப்பு
எப்படி வருமென கண்டிப்போடு இருந்தால்தான் படிப்பு ஏறுமெனவும். தனிமைபடுதப்பட்டால் தன்னால் முன்னேறிவிடுவார்களெனவும் நினைப்பது சரியானதா!
அதுவும் சரிதான் என்றாலும் சிறுவதியேலேயே அதற்காக தனிமைபடுத்தும் சிறை அவசியமானதா! அங்கே கூட்டம் கூட்டமாக இருந்தாலும் மனதளவில் தனிமைச்சிறைதானே! தட்டிக்கேட்க ஆளில்லாமல். கட்டுக்கடங்காமல். [ஒருவார்டனை சமாளிப்பதா பெரியவிசயம்மென] எத்தனை எத்தனை தவறுகள்.
எத்தனை எத்தனை குற்றங்கள். பிஞ்சியிலேயே வெம்பி வெதும்பவிடவும் யார்காரணம். சில வேளை யாருக்காக ஓடாய் தேய்கிறார்களோ அவர்களே இல்லாமல் போய்விடுகிறார்களே இதெற்கெல்லாம் எது காரணம்! யார் காரணம்?


ஆனால் தற்காலத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் குழந்தைகளை கவனிக்க வீட்டில் ஆளில்லாமல் இருக்கும் பட்சத்தில் ஹாஸ்டலில் விட்டுவிடுவதுமேல் என நினைப்பது சரி. அங்கே தன் குழந்தை எப்படியிருக்கு. எந்த மனநிலையில் இருக்கு என்று நிறைய பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை. அவன் நல்ல நிலைக்கு வரவேண்டும். அதற்காகதானே நாங்களிருவரும் மாடாய் உழைக்கிறோம்.என்கிறார்கள். ஆனால் இவர்கள் இங்கு ஓடாய் தேய்வது பலநேரம் பலனற்றுப்போய்விடுகிறது. ஒரே ஒரு குழந்தை அதுவும் ஹாஸ்டலில் என்ன கொடுமை. அக்குழந்தை வளர்ந்து ஆளாகி எப்படி நம்மை கடைசி காலத்திலோ! அல்லது முடியாமல் போகும் நேரத்திலோ தம்மை வைத்துபார்ப்பார்களா?.


சின்னச்சிறிய வயதிலேயே நாம்தானே அவர்களுக்கு கற்றுக்கொடுகிறோம் தனிமையை! அதையேதான் அவர்களும் பிற்காலத்தில் விரும்புவார்கள். தான்மட்டும் தனியாக எந்த தொந்தரவுமில்லாமல் இருக்கவேண்டுமென்று, அதனால்தான் இன்று முதியோர்கள் இல்லம் களைகட்டிநிற்கிறது.
அவன் படித்து அவன் வாழ்க்கையை பார்த்துக்கொண்டால் போதும். என்ற மனநிலையை அவர்களுக்கு உருவாக்கிவிடாதீகள்.
அதையும் அவர்களெதிரிலேயே சொல்லாதீகள்.


நீ படித்து பெரியாளாகி. உன்னை நாங்கள்பார்த்துக்கொண்டதுபோல். எங்களையும் நீ பார்த்துக்கொள்ளவேண்டுமென அவர்களுக்கு அறிவுறுத்துங்கள் அப்போதுதான் அவர்களுக்கு நமக்கென்று குடும்பமிருக்கு, அதுவும் நம்மை நம்பியிருக்கு, என்று மனஉறுதியோடு படிக்கவும். அதனால் பின்பு நல்ல நிலைக்கும் வரமுடியும்.நம்மையும் வைத்து காக்கமுடியும். நீங்கள் நினைக்கலாம் அது நம்கடமையல்லவா அதற்கு கைமாறு எதிர்ப்பார்கலாமான்னு. இது கைமாறல்ல. அவர்களுக்கும் கடமையிருக்கு என்பதை உணர்த்துவதேயாகும்.
எதுவென்றபோதும் அனைவரும் அமர்ந்து கலந்து ஆலோசியுங்கள். முதலில் குழந்தைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் போக்கில மாறுதல்கள் தெரியும் பட்சத்தில். கடிவாளத்தைப்போடுங்கள். நீங்கள் போடும் கடிவாளத்தை மிக கவனமாக போடுங்கள். அது அவர்களின் வாழ்க்கையென்னும் குரல்வளை நெறித்துவிடாதவாறும். அல்லது இவ்வாழ்க்கையிலிருந்தே அறுத்துக்கொண்டு ஓடிவிடாதாவாறும் இருக்கவேண்டும்.


உங்களின் எதிர்காலம் அவர்களின் எதிர்காலம் எல்லாமே நீங்கள் எடுக்கும் முடிவிலதான் இருக்கிறது. எடுக்கும் முடிவை நீங்கள் தவறாக எடுத்துவிட்டு கடைசியில் அவர்களை குற்றம் சொல்வதில் எவ்விதத்திலும் நியாயமேயில்லை! ஆகவே பெற்றோர்களே! உங்களின் தேர்வுகள். மிக தெளிவானதாகவும். அது. உங்கள் வம்சத்தையும் உங்களையும் பாதிக்காதவாறு தேர்வுசெய்யுங்கள் அதாவது.படிப்பைதந்துவிட்டு வாழ்க்கையை தொலைக்க வைத்துவிடாதீர்கள். அவர்களின் எதிர்காலம் என்பது அவர்களுடையை வாழ்க்கையையும் சேர்த்துதான்.


வாழ்க்கைக்கு கல்வி மிக மிக அவசியம்
அக்கல்வியை நெறியாக. முறையாக.
அமைத்துகொடுத்தலும் அமைத்துக்கொள்ளுதலும்.
மிக மிக மிக அவசியம்..


டிஸ்கி//இதில் நான் எதுவும் தவறாக சொல்லியிருந்தாலும். மனம்படும்படியான வார்த்தைகளிலிருந்தாலும் இறைவனுக்காக பொருந்திக்கொள்ளுங்கள்.


நீலவானில் ..

படிப்பு வேண்டும் படிப்பு வேண்டும்

பள்ளிப்படிப்பு படிக்கவேண்டும்

புகழ் வந்து சேர்த்த போதும்
பெரும் வசதிவாய்ப்பு வந்தபோதும்
படிப்பறிவு இல்லையென்றால்
பத்தாம் பசலியாகக் கூடும்

பணக்காரனும் படிக்கவேண்டும்
பாமரனும் படிக்கவேண்டும்
பள்ளிப்படிப்பு முடித்த பின்னே
பட்டப்படிப்பு தொடரவேண்டும்
படு புத்திசாலியாக வேண்டும்

வீட்டைகாக்க படிப்பு வேண்டும்
நாட்டைக்காக்க படிப்பு வேண்டும்
படிப்பை மட்டும் படித்துவிட்டால்
பல சோதனைகளை வெல்லக்கூடும்
பெரும் சாதனைகள் வந்து சேரும்.

சில்லென்ற காற்றில் கூட
சிறு சலசலப்பின் சத்தம் கேட்கும்
நீ படித்துவிட்டு பட்டம் பெற்றால்
நீலவானில் -உன் கால்கள் நடக்கும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.


என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!

உன்னைப்போல!.. டிஸ்கி// அச்சோ அச்சச்சோ. இந்த காதலிக்கிறவங்க இருக்காங்களே! அவங்களோட தொல்லையே இதுதானோ. காதல் நினைவா அவங்ககிட்ட ஏதாவது ஒன்னு இருந்துட்டாபோதும் இப்படிதான் புலம்பி, உருக்கிபோய்விடுவார்களாம்.[என்னாது யாரு இப்போ இப்படியெல்லாம் உருகி ஓடுவதுன்னு எல்லாம் சும்மா சும்மான்னு யாரோ சொல்லுவதுபோல் கேட்கிறது. நெசந்தானோ.]. இக்கவிதை தமிழ்குடும்பத்திலும் வந்திருக்கு  முன்னாடியே! அத அப்படியே படத்துக்குள் கொண்டுவந்திருக்கேன் அவ்வளவுதான்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பெண்பூவே!
டிஸ்கி// கூகுளில் தேடும்போது. எதாச்சையாக இப்பாவை
கண்ணில்பட்டாள் அதான் இவளை வைத்து ஒரு பட்டையை போட்டுட்டேன்..ஹா ஹா.எப்புடிகீது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

முன்னெச்சரிக்கை!

இருங்க இருங்க படிக்கும் முன் ஒரு செய்தி! என்னான்னா. தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலிக்கா வாரம்.” அதாங்க நம்ம வாரம் ஓடிக்கிட்டு கீது போய் பாக்க நினைக்கிறவங்க போய்பார்த்துவரலாம்.
ஹூம் உஹூம் போய் பாத்துதான் வரனும் சரியா! இல்லேன்னா அழமாட்டேனே![அப்ப்டித்தான் சொல்லிக்கீன்னு அழறது]


உன்


ஓரவிழிப் பார்வைக்குள்
ஒளிந்துகிடக்கும் ரகசியம்
கசியும் மெளனத்தில்
கரையத் தொடங்கியபோது
காதல் கைகூடியதோ

அதனால்தான்

அக்கரையில் நானும்
இக்கரையில் நீயும்
அலைபாயும் நெஞ்சத்தை
அங்குமிங்கும் அசையாது
அணைப்போட முடிந்ததோ

வாழ்க்கையை வழிநடத்திச்செல்ல
காதல்மட்டும் போதாதென்பதால்
காசைத்தேட கடல்தாண்டி நானும்
கானகத்தில்!

கண்ணுக்குள் தோன்றிய காதல்
கண்ணீரோடு கரைந்துவிடாமல்
காலமுழுதும் காதலுடன் வாழ
கண்மணியே!

காத்திருப்பாயா!சிலகாலம்
காசோடு சேர்த்து
காதலுடன் வருகிறேன்
கைகோத்து இருவரும்
கலங்காமல் வாழ்ந்திட.....அன்பான இர்ஷாத் கதை கட்டுரை கவிதைக்காக!
கொடுத்த இந்தவிருதை பாசதோடு ஏற்றுக்கொண்டு அதை நானும்
பகிர்ந்தளிக்கிறேன்.

புதுமுகம் ரியாஸ்

புதுமுகம் செந்தில்குமார்

பனிதுளி சங்கர் பல அறியாத விசயங்கள் இங்கே சென்றால் அறியலாம்!

செ.சரவணக்குமார்.  நல்ல எழுத்துநடை..

என் அன்புத்தோழி ஹேமா கவிதை எழுத அசத்தல் ஆளு..

அப்புறம் நம்ம கனி சீமாங்கனி கவிதையிலேயே தொடர்கவிதை எழுதி கலக்கும் ஆளு!

டிஸ்கி//பட்டியல் நீண்டுகொண்டே போக ஆசைதான் அல்லாரும் வாங்கின்னா அப்புறம் வாங்க ஆளேயிருக்காது நான் மறுதபா கொடுக்கோனுமுல்ல!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

கனவுக்குள்ளே!தென்றல் தாலாட்டி-
என்
தலைகோதிட
கண்மூடினேன்


வீசிய காற்றோடு
வம்பளந்தேன்
வாசனைப்பூவோடு
விளையாடினேன்


நீர்வீழ்ச்சியோடு
கோபித்துக்கொண்டேன்
நீர்முகி கப்பலுக்குள்
போராடினேன்


அதிகாலைப்பொழுதில்
மூச்சுமுட்டியதாய்
உணர்ந்து
அயர்ந்தெழும் வேளையில்


தலைகுப்பற
நான்
தலையணையின்
மடியில்…


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.


என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது