நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

”உணர்வுகளின் ஓசை” ஒலித்தது..

அஸ்ஸலாமு அலைக்கும்:
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

”உணர்வுகளின் ஓசை” இதுதான் என் கவிதைகளின் முதல் தொகுப்பு. [என்னுடைய மகள் தேர்ந்தெடுத்த தலைப்புதான் இது] ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் ஒவ்வொருவிதமான கனவுகளும். நினைவுகளும். ஆசைகளும். இன்னுமும் பல பல விதங்களில் நிரம்பிக்கிடக்கும் . அவைகளின் பிரதிபலிப்பை சிலரால் வெளிப்படுத்த சந்தர்பங்கள் அமையும் . சிலருக்கு அதை வெளிப்படுதுவதற்கான சந்தர்பங்கள் அமையாது. அமைத்துக்கொள்ளவும் சிலர் விரும்புவதில்லை.ஆக மொத்தத்தில் அனைவருக்கும் உணர்வுகளிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அப்படித்தான் என்னுள்ளும் அந்த உணர்வுகள் ஊற்றெடு[த்தது]க்கிறது.
என்னைபோல்தானே பிறருக்கும் துன்பம். துயரம். சிரமம். சந்தோஷம். ஆசை. கனவு. வலி. வேதனை. சாதனை.வெற்றி. தோல்வி. என இருக்கும். அதையும் என்மனம் உணர்வதை  உணர்ந்து  அதை ஓசையாக ஒலிக்கச்செய்ய முயற்சித்துள்ளேன் இத்தொகுப்பின் வாயிலாக.
”உணர்வுகளின் ஓசை”இந்த கவிதை தொகுப்பினை படித்துவிட்டு குறை நிறைகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.
25/02/2011 வெள்ளிக்கிழமை அன்றுமாலை 6 மணிக்கு. துபை லேண்ட் மார்க் ஹோட்டலில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை நடத்திய இஸ்லாமிய இலக்கியவிழா மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழாவில்
காவியத்திலகம் டாக்டர்  ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் தீரன் ”திப்பு சுல்தான்” காவியம். மற்றும் தொழிலதிபர் திரு கீழை சீனாதானா அவர்களின்
”நான் நேசிக்கும் திருக்குர்” ஆன் விளக்கமும் - நீதியும்.
என்ற குறுந்தகடு மற்றும் என்னுடைய ”உணர்வுகளின் ஓசை.” கவிதை தொகுப்பும்  வெளியிடப்பட்டது.
சங்கமம் டிவி. கலையன்பன் ரபீக் அவர்கள் தொகுத்துவழங்க, திரு. மஃரூஃப் காக்கா அவர்கள் கிராத் ஓத விழா இனிதே துவங்கியது.
வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடைபோர்த்தி, பூங்கொத்தும். நினைப்பரிசுகளும் வழங்கி  கவுரவிக்கப்பட்டது.

திரு.கீழை சீனா தானா அவர்களின் “நான் நேசிக்கும் திருக்குர் ஆன்” விளக்கமும்- நீதியும் குறுந்தகடு வெளியிடப்பட்டது.


இலங்கை எழுத்தாளர் கலாபூஷணம்.மானா மக்கீன் அவர்கள் உரையாற்றியபோது.

 இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவர்.காவியத்திலகம் டாக்டர்   ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் தீரன் ”திப்பு சுல்தான்”காவியம் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய தலைமை கழகத்தின் பொதுச்செயலாளரும்.
முனைவர்ருமான திரு
சேமுமு. முஹமதலி அவர்கள் வெளியிட,
பிரபல கிரிகெட் வர்ணனையாளரும்.தமிழ் அறிஞருமான. 
சாத்தான்குளம்.திரு அப்துல் ஜப்பார் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இதோ இத்தருணம்.இத்தருணம்.எனக்குள் ஆயிரமாயிர உணர்வுகளின் ஓசைகள் ஒலிக்க. கற்றறிந்த மேதாவிகளின் முன்னிலையில்.கற்றறியா என்படைப்பு வெளியிடப்பட.உடலில் இயங்கும் அத்தனை நரம்பெழும்புகளின் இயக்கங்களும் சற்று அடங்கியெழுந்து ஆர்ப்பரித்தது ஆனந்ததில். எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
பலவருடங்கங்கள் குழந்தையிலா பெண்மை கருத்தரித்து அதை ஈன்றடுக்கும் தருணம் எவ்வாறிருக்குமோ! அதே நிலையில் அன்றென்னை உணரும்படியான வரத்தை தந்த இறைவனுக்கும். இத்தாய்மை தன்மையை என்னிலிருந்து வெளிபடுத்தி இவ்வுலகம் அறியும்படிசெய்ததோடு எனக்கு தாயுமானவாராகயிருக்கும் என்மச்சானை நான் கணவராக அடைந்தற்க்கு இறைவனுக்கும் என் தாய்மாமன்[தற்போது உயிரோடுயில்லை] அவர்களுக்கும். என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் போதாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் வாழ்க்கைதுணை சரிவர அமைந்துவிட்டால் அவளுக்கு சொர்க்கம் ஈருலகிலுமே கிடைத்திடும்.

இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவர்,காவியத்திலகம். டாக்டர் திரு ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்கள் ”உணர்வுகளின் ஓசை” புத்தகத்தை வெளியிட, தமிழக கவிஞர் பேரவைத் தலைவர், பாடலாசிரியர், கவிச்சித்தர் திரு மு.மேத்தா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

அத்துடன்.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளரும்,இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான முனைவர் திரு. சேமுமு. முஹமதலி அவர்களும்.
இலங்கை எழுத்தாளர் கலாபூஷணம். திரு.மானா மக்கீன் அவர்களும் உடன் இருந்தார்கள்.

ஒரு பெண்ணின் தனித்திறமைகளை வெளிகொண்டுவர வீட்டிற்குள் உள்ளர்வர்கள் முனையும்போதும்.இச்சமூகத்தின் சிலரால் அவளுடைய திறமைகள் முடக்கப்பட்டு முன்னேறத் தடைவிதிக்கபடுவாள் என்பது உண்மைதான்.அதையெல்லாம் தாண்டிவர அவளுக்கு உறுதுணையாக அவளின் குடும்பம் இருப்பது எல்லாருக்கும் வாய்க்காத ஒன்று. அப்படியொரு இறைவன் அருளிய வாய்ப்புதான் எனக்கும்.
எல்லோருக்கும் உங்க மச்சானின் மனதைபோலிருக்குமென்று நினைத்தால்  எப்படி அப்படிங்கிறீங்களா! இல்லையிலை அதேபோன்று நல்லுள்ளம்கொண்ட சில மனிதர்களும் இருக்கிறார்கள்

.
அப்படியுள்ள மனிதர்களில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். நான் சிறியவயதில் தந்தையை இழந்தவள்.அந்தபாசத்தை என் தாய்மாமனிடம் உணர்ந்தவள்.எனக்குள் உணரபட்டவைகளை  காகிதத்தில் கிறுக்கிய கிறுக்கல்களை தொகுத்து வைத்திருந்த வேளையில் திருச்சி சையதண்ணன் மூலமாக காவியத்திலகம் தந்தை. ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்களிடம் காண்பிக்க, சென்ற வருடம் சென்றிந்தபோது எல்லாம் பேசிவிட்டு கிளம்பும்போது சொன்னோம் என் கவிதை தொகுப்பென்றுஒன்றுவெளிவந்தால், நான் துபையில் இருந்து அதை வெளியிட சந்தர்ப்பம் கிடைத்தால் அதை தாங்களின் கரத்தால் வெளியிட வேண்டும் வாப்பா என்று சொன்னோம் .
 
அதையின்று சாத்தியப்படுத்தியது இந்நிகழ்வு,  நாங்கள் இம்முறை அவர்கள் வந்திருப்பதையறிந்து பார்க்கசென்றபோதுதான் தகவல் வந்தது மணிமேகலை பிரசுரத்திடமிருந்து.எனது புத்தகம் ரெடியாகிவிட்டது என்று, என்ன ஒரு சந்தர்ப்பமென்று மகிழ்ச்சியாக இருந்தது அதை தந்தையிடம் தெரிவித்து விழாவில் வெளியிட முடியுமாயென கேட்டபோது, அப்படியா சந்தோஷம் நானும் அமைப்பின் மற்ற உறுப்பினர்களையும் கலந்துகொண்டு சொல்கிறேன். என்று சொல்லிவிட்டு சரி இப்போது எப்படி வரவழைப்பது விழாவிற்கு மிககுறுகிய நாட்கள்தானே உள்ளது என்றார்கள்.நீங்கள் மற்றவர்களிடம் கேட்டு ஒப்புதல்பெற்றுசொல்லுங்கள் வரவழைக்கமுடியுமா என்று முயற்சிக்கிறோம் என்று சொல்லிவந்தோம் .
 
 செவ்வாக்கிழமை தகவல் தந்தார்கள் இறைவன் நாடியபடி.
உடனே மணிமேகலை பிரசுரத்திற்கு போன்செய்து பிரதி ரெடியாக உள்ளவிபரத்தை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்துகொண்டு,  கூரியரில் அனுப்பினால் குறைந்தது 48  மணிநேரமாவது ஆகுமென்றும் அதாவது.விழா நடக்கும்  வெள்ளிகிழமை  அன்றுதான் கிடைக்குமென கூறினார்கள்.மேலும் கூரியரில் கூடுதல் புத்தகம் அனுப்பமுடியாதெனவும்  முடிந்தவரை அனுப்புகிறோமென்று கூறினார்கள். இருப்பினும்     மணிமேகலை பிரசுரத்தாரின் முழுமுயற்சியில்.” புளு டார்ட் கூரியர் சர்வீஸ்மூலமாக 24 மணிநேரத்தில் எங்களுக்கு புத்தகம் கையில் கிடத்தது” [எவ்வளவு செலவானது என்பதைபற்றிமட்டும் கேட்கக்கூடாது.]  நான் வேண்டாமென்றும் என்னவரான என்மச்சானின் அக்கறைதான் இக்கவிதைதொகுபிற்கான முழு உழைப்பும். எழுத்துக்கள்மட்டுமே என்னுடையது அதை ஏடாக்கியது என்னவரே]
 
கூரியரில்வந்ததைதந்தையிடம்ஒப்படைத்துவிட்டோம்.  அவர்கள் மேற்கொண்டமுயற்சியால்  யார் மனமும் கோணாதவாறு  என் புத்தக வெளியீட்டை நடத்திய விதம். அனுபவமும் பெரியவகளுக்கே உண்டான அன்பான அணுகுமுறையும் அழகியவெளிப்பாடுகளாய்இருந்தது. அதோடுஅவர்கள் ஆற்றியஉரையின்போது என்னைபற்றியும் என் ”உணர்வுகளின் ஓசைகள்” பற்றியும்  பாராட்டி பேசியது சிறிதளவாகவேயிருந்தாலும் எங்களின் மனங்களை மிகவும் ஆனந்தமடையச் செய்தது. 

புத்தகம் வெளியிட்டு முடிந்ததும்.என்னுடைய புத்தங்களை அவர்களே பெரிவர்களுக்கு  எடுத்துச்சென்றுகொடுத்ததைபார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்களின் மகள் சாமிலா சொன்னார் ”ராத்தா வாப்பாவைப்பாருங்கள் அவர்களே போய் உங்களின் புத்தகத்தை எல்லாருக்கும் தாராங்க மலிக்காமகள்மீது அவ்வளவு பிரியம்! என்று அவர்களின் மகளே என்மீது தன்தந்தைக்குப் பிரியம் என்று சொன்னபோது தந்தையின் பாசத்தைகண்டு நெகிழ்ந்தேன். தந்தை. தாய். தங்கை. அண்ணன் தம்பிகள். என்று ஒரு குடும்பமே கிடைத்துள்ளது. அவர்கள் அனைவருமே மிகுந்த அன்புள்ளவர்களாக அக்கறையுள்ளவர்களாக இருப்பதை பார்க்கும்போது நெகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறது.அவர்களுக்காக எங்களின் துஆவும்  எங்களது நன்றிகளும் என்றும் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்.


தொழிலதிபர் ஈ டி ஏ நிறுவனதின் நிவாக இயக்குனர். திரு சையது சலாவுதீன் அவர்களை சந்தித்து என்னுடைய  புத்தகத்தை கொடுத்து என்புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு விமர்சனம் தாருங்கள் அது என் எழுத்துக்களுக்கு ஊக்கத்தை தரும்என்றுகூறினேன்.அதைஅவர்கள்.மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டதோடு உடனே புரட்டிப்பார்த்தபடி,
நெருங்கியவர்களோடு பேசுவதைபோல் பேசினார்கள்.[நாங்கள் முதல்முறையாக அவர்களிடம் பேசுகிறோம்]

பின்பு வந்து அமர்ந்துவிட்டு சிறிதுநேரம் கழித்து எதார்த்தமாக என்பார்வை அவர்கள்பக்கம் திரும்பியபோது என்புத்தகத்தை இன்னும் அவர்கள் புரட்டிக்கொண்டிருப்பதை பார்த்து நெஞ்சம் நிறைவடைந்தது. அடுத்து அவர்களின்  தம்பி திரு கீழை சீனாதானா அவர்களும் அந்தபுத்தகத்தை வாசிப்பதை கண்டு ரொம்ப சந்தோஷம் அடைந்தேன். திரு.கீழை சீனாதானா அவர்களும் ஒரு எழுத்தாளர் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே அவர்களின் புத்தகங்களை நான் வாசித்துவிட்டு அவர்களிடம் போனிலும் பேசியும் உள்ளேன்.

திரு சையது சலாவுதீன் அவர்கள் கிளம்பும்சமயம் அவர்களை பார்க்க மீண்டும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது.. உடனே அவர்கள் உன் புத்தகத்தைதான் படித்துக்கொண்டிருந்தேன் முதல் மூன்று கவிதைகள் படித்தபோதே அருமையாக இருந்தது மீதத்தையும் படிப்பேன் என்று சொல்லியதோடு அன்பளிப்பாக 1000. திர்கம் எடுத்து தந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ”இல்லையில்லை வேண்டாம்” என தயங்கிய நேரத்தில். ”காக்கா அவர்களிடமிருந்து அன்பளிப்பு பெருவது நமக்கு பெருமைதான் பெற்றுக்கொள் என சகோதரர்  S M ஃபாரூக் அவர்கள் கூறியபோது  என்னால் மறுக்கமுடியவில்லை.
பெரும் செல்வந்தர்கள்  சாதரணமானவர்களிடம் பேசுவதற்கே தயங்குவார்களாம்.ஆனால் பணம்படைத்த மனிதர்களில் கண்ணியமிக்க பண்பானவர்களும் உண்டு என்பதற்கு உதாரணம் இவர்களைபோன்றவர்கள்தான் என்பதை நேரில் உணர்ந்தேன். எல்லோரிடமும் இயல்பாய் மிக அன்பாய் பேசும்தோரணை இறைவன் வகுத்த வழியில் நடப்பதை எடுத்துக்காட்டுகிறது .அவர்கள் என் எழுத்துகளை வாசித்ததே எனக்கு மிகப் பெருமிதமாக இருந்தது

கவிச்சித்தர் மு.மேத்தா அவர்கள். தன்னுடைய நாயகம் ஒரு காவியம் என்ற நூலில், குகையில் சிலந்தி நெய்த திரைச்சீலை என்று  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ் அலைஹிவஸ்ஸலம் அவர்கள் காலத்தில் நடந்த ஒரு அற்புதமான நிகழ்வை  கவிதையாக்கிவடித்திருப்பதை அருமையாககவிபாடிகாட்டினார்கள். அதோடு  தன்னுடையபேச்சில் எனது”உணர்வுளின் ஓசை” என்ற இந்நூலையும் குறிப்பிட்டு ஒருசிலவரிகள் பாராட்டி பேசினார்கள்.
இலங்கைஇசையரசி.நூர்ஜஹான்அவர்கள்.இஸ்லாமியப் பாடல்களை தனது இனிமையான குரலின்மூலம் அருமையாக பாடினார்கள். அவர்களிடம் பேசியபோதுமிகுந்தஅன்போடு பேசினார்கள். தாய்மையுணர்வோடு நெற்றிலும் கன்னத்திலும் முத்தமிட்டு நெகிழ்ந்து இன்னும் பல நல்ல படைப்புகளை உருவாக்கும்மா என பாசத்தோடு வாழ்த்தினார்கள்.
முனைவர் திரு சேமுமு. முஹமதலி அவர்கள். பேசிய பேச்சு இன்னும் கொஞ்சம் நீளாதா என்ற வகையில் மிக தெளிவாக . இஸ்லாத்தைபற்றியும். இலக்கியத்தைபற்றியும். சீரழிந்துவரும் மனங்கள் பற்றியும் மிகமிக அருமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உரையாற்றினார்கள்.
”நெஞ்சத்தில் நஞ்சைவைத்து உதட்டில் தேனை வைத்து உதிர்க்கின்ற வார்த்தைகளெல்லாம் கவிதையில்லை. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வுகளை உணர்வுகள் பொங்க உண்மையாக்கித்தருவதே கவிதை” என்று மிக நயமாக கவிதைக்கு அர்த்தத்தை அழகுறச்சொன்னார்கள்.
அவர்களின் உரையில் வளர்ந்து வரும் இஸ்லாமியர்களின் இலக்கியங்கள் எழுத்தாளர்களைப்பற்றி பேசும்போது  என்னுடைய உணர்வுகளையும்   பாராட்டிப் பேசினார்கள்.
.
இலக்கிய கட்டுரைபோட்டிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.முதல் பரிசான ரிட்டன் டிக்கெட்டை[துபை டு சென்னை] கவிஞர் அத்தாவுல்லா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

எனது தோழிகளும் வந்திருந்தார்கள்.
நானும் ஜலிக்காவும்.எங்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்
 ஜலீலாக்கா வந்தது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. [கூடவே பிரியாணியுமுல்ல வந்தது]
விழாவின்போது இடையிடையே சமோசா தேனீர் பிஸ்கட் என உபசரிப்புகள் அருமை.[நமக்குதான் ஒண்ணும் எடுபடலை எப்படி எடுபடும் முற்பகுதி படபடப்பினாலும் பிற்பகுதி மனநிறைவாலும் சூழப்பட்டுவிட்டுமுல்ல]
திரு.மஃரூஃப் காக்காவின் கிராத்தில். தொடங்கிய இவ்விழா. S. M.பாருக் அவர்களின் அன்பான நன்றியுரையில் இனிதே நிறைவடைந்தது. 
இதில் விழாக்குழுவினர்களின் பங்களிப்பும். உழைப்பும் பாராட்டக்கூடியது .
அடுத்த தொகுப்பிற்கான அடிக்கல்.
கவிச்சித்தர் மு.மேத்தா அவர்களிடம் வாழ்த்துரைக்கா எனது அடுத்த கவிதைத் தொகுப்பை வழங்கியபோது.
முனைவர் திரு சேமுமு. முஹமதலி அவர்கள். மற்றும் நானும் என் குடும்பமும்.
தொழிலதிபர் திரு.கீழை சீனாதானா  அவர்கள் குடும்பமும்.  என் குடும்பமும்.

அவசர காலத்தில் கூரியர் மூலமாக வரவழைக்கப்பட்ட உணர்வுகளின் ஓசை யின் குறைந்தளவு புத்தகங்கள் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது. புத்தகம் பெற்றவர்கள் நேரடியாக வந்தும், புத்தங்களை அனுப்பியும் ஏதாவது எழுதும்படி கேட்டபோது என்னையறியாமல் கண்ணீர் சிந்தியது.
புத்தகத்தில் என்றும் அன்புடன் மலிக்கா என்று எழுதிக் கொடுத்தேன். இருப்பினும் புத்தகம் கிடைக்கபெறாத நண்பர்கள்  நேரடியாக வந்து
புத்தங்கள் கிடைக்கும் விபரத்தினை கேட்டுக்கொண்டார்கள்.மீதமுள்ளவைகளை இந்தியாவிலிருந்து வரவழைக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம்.அவைகள் வந்தவுடன் என்னுடைய நீரோடை வலைதளம்மூலம் தெரிவிக்கிறேன் மேலும் தாயகத்திலுள்ளவர்கள் நேரடியாக வாங்கிக்கொள்ளவிரும்பினால்  சென்னை மணிமேகலை பிரசுரத்தை அணுகவும்.
முகவரி:

மணிமேகலைப் பிரசுரம்
தபால்பெட்டி எண்: 1447
7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை
தியாகராய நகர்,சென்னை - 600 017
தொலைபேசி: 009144 24342926 , 24346082

என் கவிதை தொகுப்புக்கு அணிந்துரை மற்றும் வாழ்த்துரை வழங்கிய:
கவிதாயினி.. கனிமொழி M  P . அவர்களுக்கும்.கனடாக் கவிஞர் அன்புடன் புகாரி அவர்களுக்கும்.  M  அப்துல் ரஹ்மான் M  P .அவர்களுக்கும்.
இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவரும்,காவியத்திலகம். டாக்டர்
ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்ளுக்கும்.
நர்கீஸ் இதழ்  கெளரவ ஆசிரியரும்.பிரபல நாவலாசிரியர்
டாக்டர்.ஹிமானாசையத் அவர்களுக்கும்.
கவிச்சுடர் கவிதைபித்தன் அவர்களுக்கும்.
இக்கவிதை தொகுப்பின் அட்டைப்படம் முதல் அனைத்தையும் மிக அழகாக அருமையாக வடிவமைத்துக்கொடுத்த மணிமேகலை பிரசுத்தின் நிர்வாகஸ்தர்கள் திரு ரவி தமிழ்வாணன் மற்றும் பணியாளர்களுக்கும். எங்களின் உள்ளப்பூர்வமான நன்றிகள்.

அதோடு   என் கவிதை தொகுப்பு வெளிவர காரணமாக என்னுடைய மச்சான்.
முகமது ஃபாரூக்.
தந்தை காவியத்திலகம் . ஜின்னாஹ் ஷரிபுத்தீன். 
சகோதரர் காஞ்சி முரளி. பத்திரிக்கை ஆசிரியர் திருச்சி சையத் அண்ணன் . மற்றும் என் வலைதளமான நீரோடையில் என் எழுத்துக்களுக்கு அன்பபென்னும் ஊக்கங்களை வாரிவழங்கொண்டிருக்கும் அன்புநிறைந்த தோழமைகள்.சகோதர சகோதரிகள். அமீரகத்தின் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழத்தின் ஆட்சிமன்றக்குழு மற்றும் விழாக்குழு நண்பர்கள் மற்றும் இவ்விழாவிற்கு கலந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும். என்குடும்பத்தார்கள் அனைவருக்கும்.
எங்கள் மனமார்ந்த நன்றியினை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம். . 
”இறைவன் மிகக் கருணையுள்ளவன். மகா கிருபையாளன். நான் கொஞ்சம் சந்தோஷத்தைக் கேட்டேன், அவன் நிரம்பிவழியும்சந்தோஷத்தை தந்துவிட்டான்.அவனுக்கே புகழனைத்தும்”.
அன்புடன்
மலிக்கா ஃபாரூக்.

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அன்புடன் மலிக்காவின் புத்தக வெளியீடு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இறைவனின் சாந்தியும் அருளும் அனைவருக்கும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

என் கிறுக்கள்களையும் கவிதைகளென்று நினைத்து.தங்களின் அன்பான கருத்துக்களின் மூலம் ஊக்கம் தந்து என்னையும் ஒரு கவிதை தொகுப்பு வெளியிடுமளவிற்கு கொண்டுவந்த உங்கள் அனைவருக்கும். என் நன்றிகலந்த கண்ணீரை தாரை வார்க்கிறேன் மனநெகிழ்வோடு..
வரமுடிந்தவர்களின் அன்பான வருகையையும். வரமுடியாச் சூழலிலிருப்பவர்களின். அன்பான பிராத்தனைகளையும். எதிர்பார்த்திருக்கும்
உங்கள் அன்புடன் மலிக்கா

 
இன்ஷாஅல்லாஹ் வரும் 25/02/2011 வெள்ளிக்கிழமை அன்று
மாலை 6 மணிக்கு. லேண்ட் மார்க் ஹோட்டல் அல் நாசர் ஸ்கொயர் துபாயில்.பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை நடத்தும் இஸ்லாமிய இலக்கியவிழா மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா நடைபெற இருப்பதோடு,என்னுடைய முதல் கவிதை தொகுப்பான
                                                ”உணர்வுகளின் ஓசை”
புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது. தாங்கள் அனைவரும் வந்து இவ்விழாவினில் கலந்துகொண்டு சிறப்பித்து தரும்படி
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

இடம்: லேண்ட் மார்க் ஹோட்டல், அல் நாசர் ஸ்கொயர் துபாய்.

நாள்: 25-2 -2011 வெள்ளிக்கிழமை

மாலை 6.00 மணி

சிறப்பு விருந்தினர்கள் :

டாக்டர்.சேமுமு. முகமதலி
பொதுச் செயலாளர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் தலைமையகம் - சென்னை.

டாக்டர். ஜின்னாஹ் ஷரீபுத்தீன் துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்சங்கம்.

கவிச்சித்தர்.மு.மேத்தா

கலாபூஷணம்.மானா மக்கீன் எழுத்தாளர்-இலங்கை

இசையரசி. நூர்ஜஹான் இஸ்லாமியப் பாடகி -இலங்கை

அனுமதி இலவசம்!!
அனைவரும் வாருங்கள். விழாவை சிறப்பாக்கித் தாருங்கள்.

அன்புடன்
மலிக்கா ஃபாரூக்
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கற்றறிந்தவர்களும் கத்துக்குட்டியும்..


சிறுகதை எழுத்தாளரும். பத்தரிக்கை ஆசிரியருமான
 திருச்சி சையது அண்ணன் அவர்களின்
புகழ்பெற்றவர்களைப் பற்றி ஒரு ரசிகனின் பதிவுகள்
என்ற 367 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில்
 மிகப்பெரும் புகழ்பெற்றவர்களைப் பற்றி தொகுத்துள்ளார்கள்.
இந்நூல்மிக அருமையாக வந்துள்ளது அதில் என்னப்பற்றியும் சில,,,
கண்ணே! கண்மணியே! 


கருவறையில் என்ன
கண்ணாம்பூச்சி ஆட்டம்
அதனால் என் உள்ளத்தில்
தினமும் தொடருது தேட்டம்

கருச்சோதனைக் கருவியோடு-என்
வயிற்றுக்குள் நடக்குது போராட்டம்
உன்உருவத்தைப் பார்க்க
என் உள்மனதிற்குள் ஏக்கம்
உனக்கு உயிர்கொடுக்கச்சொல்லி
இறைவனிடம் மன்றாட்டம்

அன்னை அழுது புலம்புகிறேனே
அமுதே என் அழுகுரல்
உனக்கு கேக்கலையா!
புலம்பித்தான் தவிக்கின்றேன்
தேனே என் தவிப்பு
உனக்கு புரியலையா!

பூமியைப் பார்க்க உனக்கு
விருப்பமில்லையா -இல்லை
இந்த அப்-பாவித் தாயை
பார்க்கப் பிடிக்கவில்லையா!

மருவித் தவிக்கின்றேன்
மன்றாடித் துடிக்கின்றேன்
உருவமில்லா உனக்காக
உருகித்தான் போகின்றேன்

பதுமையே பதுமையே
எனை காணக் வருவாயா!
பட்டுப் பூவினமே
என்னை பதறவைப்பாயா!

காத்திருக்கிறேன் கண்மணியே
உயிருக்குள் உருகியபடி
வசந்தமான உனைக்காண
என் வயிற்றை வருடியபடி

ஒவ்வொரு பெண்ணுக்கும்
தாய்மைதான் முழுமையின்
அடையாளம்
அதை பெருவது பெண்மைக்கு
இறைவன் தரும் பெரும் வரம்..
அறம் செய மற

அன்பை மற
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவஞ்சனை செய்
ஔவையாராய் ஆகாதே..

எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு எதிர்மறையாய்
செய்வதுதானே மனிதகுணம்
தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர்மறையாகவே

செய்து பாருங்களேன்........

அதில் என்றும் இளமைக் காதல்எங்களுக்குள் மற்றும் திரு தந்தை ஜின்னாஹ் ஷ்ரிபுதீன் அவர்கள் எனக்கு விருதுகொடுத்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு என்று, நமளோட கவிதைகளும். கட்டுரைகளும்  வந்துள்ளது.பெரும் புகழ்பெற்ற  ஜாம்பவான்களுக்கு மத்தியில்.
மிக சாதரணமான இந்த கத்துக்குட்டியும் இருப்பதை நினைத்து மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.  பெரும் புகழ்பெற்ற பெரியவர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்தமைக்கு திருச்சி சையது அண்ணன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நூலினை சுடர் வம்சம் தொண்டு நிறுவனம் துபாய் கெனடியன் பல்கலைக்கழக அரங்கில் 11.2.2011 அன்று வெளியிட்டது. முதல் பிரதியினை தொழிலதிபர் கருணாகரன் வெளியிட தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான சீனா தானா அவர்கள் பெற்றுக் கொண்டார். விழாவில் கலைமாமணி டாக்டர் சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். சுடர் வம்சம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ரகுராஜ் தலைமை தாங்கினார். புத்தகத்தைபற்றி மிகச்சிறப்பாக பாராட்டி பேசினானார்  திரு அத்தாவுல்லா அவர்கள்.
விழாவில் சிறுமி வித்யாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. செல்வி நிவேதிதா தொகுத்து வழங்கினார். விழாவில் துபாயில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நூல் விற்பனை மூலம் கிடைக்கும் முழுத்தொகையும் ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.!
நூல் வாங்க விரும்பும் உள்ளவர்கள் சுடர் வம்சம் திரு. ரகுராஜ் அவர்களை (050 2164375) தொடர்பு கொள்ளவும். ஈமெயில் முகவரி :
sudarvamsam@yahoo.co.in

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தோஷ மோசம்..கிளிக் கிளிக்

 இதுபோன்றவைகளால் நெடு-----நெடுநாள் திருமணமாகதிருந்த எங்களுக்கு தெரிந்த பெண்ணொருத்தியின் மனநிலையிலிருந்து இக்கவிதை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உன்னாலே! உன்னாலே!.

chezயிரம் பேர் அமர்ந்திருந்தபோதும்
அருகில் நீயில்லாததால்
ஆளவரமற்றிருப்பது போன்று
அடிமனதிலொரு உணர்வு

ன இறுக்கத்தை மண்டியிட வைத்து
மயிலிறகாய் மனதினை வருடும்
வித்தையைக்கற்ற உன்
வார்த்தைகளின் வலிமை

சொட்ட சொட்ட -உன்
நினைவுகளால் நனைந்தபோதும்
செப்படி வித்தையாய்
நீருக்குள்  நனையாமலே நான்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உயிர்கள் எழுதிய உயிர்க்கவிதை.

இதயங்கள் இணைந்ததில்
இரத்த சம்பந்தம் உருவானது
ஈருயிர் சங்கமித்ததில்
ஓருயிர் உதயமானது.

இன்று எனது அன்புசெல்லத்தின் 12.வது பிறந்தநாள்.இறைவனின் சாந்தியும் அருளும். அவனுக்கு என்றென்றும் குறைவில்லாமல் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை இருகரமேந்திக் கேட்கிறோம்
.
நான்தாங்கோ மரூஃப்
சிங்கத்தின் வாயிலேயே கைவைத்து  சிறை பிடிச்சிட்டாறாம்.
என் தங்கை மகள்.பக்கத்தில் நம்ம ஹீரோ.இறக்கத்தில் அண்ணன் மகள்.மூவரும் சேர்ந்து, கல்ஃபா டேனலையும் விலைக்கு வாங்க வந்திருக்காங்களோ!

ஹயாத் ஐஸ்கேட்டிங்கில்,ஸ்கேட்டிங் செய்ய  களத்தில் குதிச்சிட்டாரோ!
ஸ்கை துபையில[எமிரேயிட் மாலில் ] ஆத்திக்காவும் மரூஃபும்.
ஐஸ் விண்வெளியை சுத்திப்பார்க்கப் போறாங்களாம் ..
ஆகா கெளம்பிடாருய்யா கெளம்பிட்டாரு. குதிரையிலேறி நாட்டை வென்றெடுக்க போறாரோ.
ஆத்திக்கா. மரூஃப்.  ஜிஹான் மூவரும் வீட்டில் நடத்தும் வெவ்வெ வெவே!

பாலைவன மணலையும் [பிளாட்]பங்குபோட.பைக்கிலேறி
புறப்பட்டு விட்டாரோ!
ஹை உயிருள்ள இரு சித்திரங்களுக்கு  நடுவில்.ஒருஉயிரற்ற சிற்பம் நிற்கிறதே!.
250.300. அடி ஆழத்திலிருக்கும் மலையில் இறங்கிவிட்டு மீண்டும் மலையேறுகிறாரே சாதனை செய்யப்போகிறாரோ!
கடல் நீரைகண்டதும் உற்சாகம் ஊற்றெடுக்க கானம் பாடுகிறாரோ!
இளவரசனும் இளவரசியும். ஒட்டக ஊர்கோளம் போறாங்களோ!
கோல்டுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு  குளிர குளிர ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்களோ!.
அல் அயில் சுடுதண்ணீர் வாய்காலில்.சுடுதண்ணீர் சுள்ளென்று சுட்டுவிட முகத்தை சுளிக்கிறாரோ!

மதினத்துல் ஜிமேராவில் நின்றுகொண்டு  மாடல்போஸ் கொடுக்கிறார்களோ!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது