நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

யார் இவர்?

 மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்..
 
 
அன்பின் திருவுருவாய்
ஆதியின் நெறிவுருவாய்
அகிலத்தில் பிறந்து
அண்டதிற்கே முன்மாதரியானவர்

பின்னால் வரப்போகும்
பண்பின் பகுத்தொளியென்று
மூத்தோர் வேதங்களாலும்
முன்மொழியப் பெற்றவர்

சாணக்கிய தந்திரங்களை
சாதூர்த்தியமாய் அடக்கி
சாத்தான்களின் வேதத்திற்க்கு
சாட்டையடி கொடுத்தவர்

சத்திய மார்க்கத்தைக் பரப்ப
தன்நாடு துறந்து
இறைவனுக்காக எதையுமே
எதிர்த்து நின்று ஜெயித்தவர்
அனைவரும் சமமென்று
அரவணைத்து சினேகமாய்
அதிசய உள்ளத்தோடு
அன்பு நிறைந்து நடந்தவர்

வாக்குத் தவறாது வாழ்ந்து
நீதி தவறாது காத்து
நெறி பிரழாது கடைப்பிடித்து
நேர்மையின் பிறப்பிடமானவர்

உலகத்தின் ஆண்களுக்கு
ஒப்பற்ற முன்னோடியிவர்
ஓரிறை கொள்கையின்
உயிர் நாடியிவர்

அரசராய் வாழ்ந்தபோதும்
ஆணவம் அறுத்தெறிந்து
ஏழ்மையிலும் மகிழ்வுகண்டு
எழிலோடு வாழ்ந்தவர்

புகழுக்கு ஆசைப்படாத
புதுமை மனங்கொண்டு
அகிம்சையான புரட்சிகளால்
ஆட்சியை ஆண்டவர்

சகமனித உணர்வுகளை
கருணையோடு புரிந்துக் கொண்டு
பிறமத மனிதர்களிடமும்
பண்புகொண்டு நடந்தவர்
 
படைத்தவனே புகழ்ந்த
அருட்கொடை இவர்
நற்குணமும் நன்னடைத்தையும் நிறைந்த
நிழற்கொடை இவர்

 ஈருலகிற்க்கும் சிறப்புப்பெற்ற
ஏற்றம் நிறைந்த ஏந்தலர் - அவரே
தீனுலகின் அருள்போற்றும்
திருநபித் திருத்தூதர்
முகமத் என்னும் எங்கள் நபிநாதர் …..
 

அன்புடன் மலிக்கா இறைவனை
நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது