நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வைர-முத்துமண்ணுக்குள் கிடைக்கும் வைரம்
சிப்பிக்குள் கிடைக்கும் முத்து
இவையிரண்டும் இணைந்து அதிசயமாய்
பெண்ணுக்குள்
உருவானது உயிராய்-அது
பேனா பிடித்து எழுதியது
முத்தமிழையும் கலந்த கவிதையாய்

கரிசல்காட்டு மண்ணையும்
கஞ்சி சுமந்த பெண்ணையும்
கல்லூரி கதையையும்
காதல் நெகிழ்வையும்
கவிக்குள் அடக்கும் திறன்
கவிப்பேரரசு என்ற
கருப்பு வைரம்

சங்கத்தமிழும் சிந்துபாடும்
சமுத்திர நதியும் சிணுங்கியோடும்
தங்குதடையின்றி
தண்ணீராய் வந்துவிழும்
தமிழ் வார்த்தைகளின் சரளம்
தங்கத்தமிழனாய்
தாய்மண்ணில் ஊர்வலம்

முத்தமிழும் கலந்த தமிழ்வித்து
தமிழ்தாய் பெற்றடுத்த வைரமுத்து..
டிஸ்கி//  இவர்கள் தமிழ்பேசும்போதும் கவிதை வாசிக்கும்போதும். ஏனோ கேட்டுக்கொண்டே இருக்கனும்போல் தோன்றும்.
தமிழுக்கு அத்தனை ஒரு ஈர்ப்பு, தமிழர்களை மட்டுமல்ல மற்ற மொழிக்காரர்களுடன் உடனே ஒட்டிக்கொள்வதும் தமிழ்மொழிதான்.அன்னைத்தமிழை அடுத்தவர் அழகாய் பேசும்போதும் அதை
அணு அணுவாய் ரசிப்பதில் ஓர் அலாதி இன்பம்தான்..//
 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது