நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அரசியலென்பது..


தேர்ந்தெடுக்கும் மக்களை
திண்டாடவைக்கும் 
குறுக்குத் தந்திரம்
கை தேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த
தாரக மந்திரம்


பாமரர்களின் தாகம் தீர்க்காத 
கானல் நீர்
பணம் படைத்தோர் வாய்கொப்பளிக்கும்
வாசனைப் பன்னீர்
கோடிகளை காக்கும் கவசப்பெட்டி-தெரு
கோடிகளை அடக்கியாளும் கபடபுத்தி


ல்லாதோர் தூக்கத்தில் வந்துபோகும்
கருப்பு வெள்ளைக் கனவு
இருக்கப்பட்டோர் கண்ணெதிரில்
கூத்தாடும் செயற்கை நிலவு


திகார வர்க்கங்களின்
ஆஸ்தான சிம்மாசனம்-இது
ஆட்டக்காரர்கள் போட்டிபோட்டு
அரங்கேறும் ஆடுகளம்


ரசியல் என்பது
அழுக்கென்று சொல்லியே
குப்பையாக்கப்பட்ட ஒரு கோபுரம்
அதை தூய்மைப்படுத்த வேண்டும்
மனத்தூய்மை நிறைந்த
மனிதமுள்ள நிர்வாகம்


சாக்கடையென்று சொல்லியே
அதனோடு சாக்கடையானார்கள் பலர்
அதனையும் சுத்தம் செய்து
சாதனை படைத்துள்ளார்கள் -நற்ச்
சான்றோர்கள் சிலர்


கூட்டுச் சதி குறுக்கு புத்தி
கூடிக் கொள்ளை கூத்துகும்மாளமென
நிறைந்து வழியும் உலக போதை
இவைகளனைத்தும் விட்டொழித்தால்
இதைவிட இல்லை
மக்களுக்கு வழிகாட்டும் பாதை


ல்லது நடக்குமென
எதிர்பார்க்கும் நெஞ்சங்கள்
வரும் தலைமுறைக்குள்ளாவது
நிறைவேறிடுமா? நம் எண்ணங்கள்....

டிஸ்கி.// என்ன இப்போது பாத்து இந்த கவிதை அப்படியெல்லாம் கேட்கக்கூடாது. அரசியல் அப்படிங்கிற தலைப்புகு கவிதை எழுதுசொன்னதால் வந்து விழுந்த வரிகள் அம்பூட்டுதான்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது