நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வீழ்வேன் என்று நினைத்தாயோ!


வாழவந்திருக்கும் பூமியில்
வசதிகளும் வாய்புகளும்
ஏராளம் ஏராளம்- அதை
வகையாய்
வகைப்படுத்திக்கொண்டால்
வசந்தம் கைகூடும் எந்நாளும்.

சாதிக்கத்துணிந்த பின்னே
சோதனைகளைகண்டு
சோகமெதற்கு-மனம்
அழுக்கானவர்களைக் கண்டு
அச்சம்கொண்டு
அடங்குவதெதற்கு- நீ

மறைவதுபோல
தோன்றிடும் இருட்டு-ஆனால்
மறுநாளே விடிந்திடும்
மங்கள கிழக்கு.

முக்காடிட்டு மறைத்திருப்பது
முகத்தையே தவிர
மூளையையல்ல –நீ
முன்னுக்கு வரும்வழியில்
முட்டுக்கட்டைகளைக்கண்டு
முடங்கிவிடாதே!

முயற்சிசெய்தால்- அதே
முட்டுக்கட்டைகளைக்கொண்டு
மேடைகளாக்கு! மேதைகள் கையால்
மாலைகள் கிடைக்கும்
மாபெரும் இறைவனின் அருளால்
மதிப்புகள் உயரும்.

உலகம் என்பது
ஒரு நாடகமேடை –அதில்
உலவும் மனிதரோ
ஓ ராயிரம் வகை
ஒவ்வொரு மனங்களும்
ஒவ்வொருவிதம்-அதில்
ஓடும் எண்ணமோ பலபல ரகம்

வீசிடும் தென்றலில்
வாஞ்சையுமுண்டு கோபமுமுண்டு
வாஞ்சையாய் நீயும் கோபத்தைப்பாரு
வருத்ததை உதறி வாரியணைத்து -உன்
வாஞ்சையை பகிரு
வந்துசேருமே- ஒன்றாய்
வசந்தங்கள் நூறு

கவிதை எழுதும் கடுகொ ன்று அங்கே
காலுன்றிகொண்டு வேரூன்றிவிடுமோயென
கவலை கொள்வோரின் முன்னே!
கவனமாய் நீயும்
கடந்திடு பெண்ணே-உன் கவனமெல்லாம்
களைகளைக் கலைந்து -நற்
க விதைகளை விதைப்பது தானே!

விசால மண்ணில்
[க]விதைகளை விதைத்து-அதில்
விசமில்லாத உரமும் தூவி-
விளைமண்ணைமுட்டி மோதிக்கொண்டே
வீரிட்டு எழுந்திடு!
வேர்விட்டு வளர்ந்திடு

வெட்டிதள்ளினும்
வேர்விட்டு தளைத்திடும்
ஆலமரம்போல
வரம்புமீராத உன்
வாழ்கையினாலே வளர்ச்சிகண்டிடு
ஆலம்விழுதினப்போல
வல்லோன் நினைத்தால் அதற்குமேலும்
வாழந்துகாட்டிடு
வாழையடி வாழை....

டிஸ்கி// சென்னை //ரஸ்மி// என்ற ரஸ்தாமாவிற்காக இக்கவிதை..
சிலர் சிலரை உயர்த்துவதும் தாழ்த்துவதும். தவறாக எடைபோடுவதும் .[ அவங்களுக்கு மட்டுமா எங்கும் இதுபோன்ற விசமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.குறுகியமனதோடு]
பூமியில் சகஜம். அதையெல்லாம் தாண்டி சாதிக்கத்துணிந்தவன்.
அது [செருப்பு தைய்பதாகட்டும்.
சிகரத்தை தொடுவதாகட்டும்.] எதுவென்றபோதும் மனசிந்தனையை ஒருநிலைப்படுத்தி இறைவனின் வழிப்படி போவோமேயானால் வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்.

தோல்வியன்றபோதும் தொடர்ந்த முயற்சி ஒருபோதும் வீணாகாது. ஒருமனிதனின் சிறு சாதனையும்  அது சிலமனிதர்களை மகிழ்ச்சி கொள்ளச்செய்யும் சிலமனிதர்களை சங்கடத்திற்குள்ளாகும்.
நம்மைவிட அவன் முன்னேறுவதா என மனதுக்குள் முனங்கிக்கொண்டே வெளிவேசமாய் உலவும் மனிதர்கள் நிறைய இப்பூமியிலே!
உனக்கென்று எது கிடைக்க இருக்கிறதோ அது கிடைத்தேதீரும்
யார் தடுத்தாலும். ஆனால் உனக்கு எதுகிடைக்கமுடியாதோ அதை பெற்றுத்தரயிலவே இயலாது அது யார் நினைத்தாலும்.
 இது இறைவனின் வாக்கு!
எவன்வசம் எல்லாம் இருக்கிறதோ அவன்வசமே அனைத்தும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது