நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒரு காதலி காதகியானாள்.

அன்பேயென்றாள்
அரவணைத்தேன்
ஆருயிரேயென்றாள்
ஆட்டம் கொண்டேன்

அகிலமே நீதானென்றாள்
அடிபணிந்தேன்
உயிரே உனக்காகவென்றாள்
உருகி விட்டேன்

ஒருநாள் வந்து
ஓசையின்றி அழுதாள்
உதிர்ந்து விட்டேன்

அழுத முகத்தோடு
அழுத்தமான மனதோடு
அன்பே என்ற உதட்டால்
அண்ணா என்றழைத்தாள்

அழைத்த மறுநொடி
அடிதளம் அதிர அதிர
அதாளத்திற்குள் அழுத்தப்பட்டேன்
அண்ட சராசரம் அத்தனையும்
அப்படியே உரையக் கண்டேன்

அபூர்வமாய் தெரிந்த அவள்
அசிங்கமாய் தெரியக் கண்டேன்
அடுக்கடுக்காய் என் மனயேடு
அவளின் நினைவுகளை
அடிச்சுவடு தெரியாமல்
அழிக்கக் கண்டேன்

காதலல்ல காதலல்ல
அவள் என்மேல் கொண்டது
காதலல்ல
காதலின் பெயர்கொண்டு
காலமெல்லாம் எனை
கருகவைக்க வந்த
காதல் காதகி.

டிஸ்கி// பல இடங்களில் இதுபோன்று நடகிறது அதனால்
காதல்கள் கானலாகி போகிறது. சிலநேரம் கருகியும்போகிறது. உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அமைந்தால். அந்த ஏட்டின் வலியை என் கவிதையில் மூலம் இங்கு எழுதிக்கிறுக்கினேன்.

[சுஸ்கி//இது ஆண் பெண் இருவருக்குமானதுதான் அவரவர் படிக்கும்போது மாற்றி படித்துக்கொள்ள வேண்டும் ஜமால்காக்காவின் பின்னுட்டத்தால் வந்ததிந்த சுஸ்கி.. ஹா ஹா ஹா]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது