1999-பிப்ரவரி-7. சனிக்கிழமை காலை 10 மணி. ராஜம் ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்றது அந்த அம்பாஸிட்டர் கார். அதிலிருந்து தன் தாய், பெரியம்மா, நாத்தனார், தன் சகோதரி இவர்களால் கைத்தாங்களாக இறக்கப்பட்டாள் மலர். முகம்முழுக்க வியர்வை வழிந்தோட கண்கள் குளமாகி நீரை தாரை தாரையாக வடித்துக்கொண்டிருக்க உதட்டை பற்களால் கடித்து வலியையை விழுங்கினாள்.
ஆனாலும் வலிபொருக்கமுடியவில்லை அம்மா அம்மா என்று முனங்கியபடி ஆஸ்பத்தியின் உள்ளே அழைத்துவரப்பட்டாள்.
டாக்டர் ரூமிற்கு அழைத்துசென்று செக்கப்செய்து உடனே பிரசவ வார்டுக்கு கொண்டுசெல்லப்பட்டாள். அங்கு குல்கோஸ் பாட்டில்போட்டு கிடக்கவைக்கப்பட்டாள், வலி மேலும் அதிகரிக்க மலர் வாய்விட்டு அழுதாள். யாரும் ரூமிற்குள்அனுமதிக்கப்படவில்லை, சிறிது நேரத்தில் வலி நின்றுவிட
”வலியில்லையா?என நர்ஸ்கேட்டாள்”
”லேசாக வலிப்பதுபோல் தெரிகிறது ஆனால் முன்புபோலில்லை”
என்றாள் மலர்.
மீண்டும் குல்கோஸ் போடப்பட்டது, இடையிடையே மலரின் தாயும், நாத்தனாரும் அடிக்கடி உள்ளே வந்து பார்த்துசென்றார்கள்,இப்படியாக வலி வருவதும், விடுவதுமாக சனிக்கிழமைசெல்ல.
[இன்று]
பிப்ரவரி 7- ஞாயிறு காலையும் போய் மதியம் 3 மணியானது. பிரசவ ரூமின் வெளியே ஒரே சப்தம், நேற்றிலிருந்து வலியால் துடிக்கிறாள் இன்னமும் ஒன்று சொல்லாமல் இருக்கீங்களே டாக்டர் சுகப்பிரசவம் ஆகவில்லையென்றால் இப்பவே ஆப்ரேஷன் செய்துடுங்க இதற்குமேல் அவள் வலிபொருக்கமாட்டாள் என மலரின் நாத்தனார் சொல்ல,
மலரின் தாயாரும் கண்ணீருடன் ஒன்றுமேசொல்லமுடியாமல் திணற.
டாக்டர் ராஜம், இருங்க இன்னும்கொஞ்சம் பொறுப்போம். இல்லையென்றால் இன்று ஆப்ரேஷன் செய்துவிடலாம் சிறுவயது வேறு முதல்குழந்தைக்கு பிறகு 8, 9.வருடம் கழித்து பிரசவிப்பதென்பது சாதாரணமா? வேதனை கூடுதலாகத்தானிருக்கும்,என சொல்லிக்கொண்டே பிரசவ அறையினுள் வந்தார் டாக்டர்.
”என்னடிமா சின்னவளே” ஏன் இப்படி வதைகிறாயாம் குழந்தையை வெளியில்விட மனசு வரலையா” எனக்கேட்டுக்கொண்டே வயிற்றை அழுத்திப்பார்த்து
“இத்தனை பாட்டில் குல்கோஸ் ஏற்றியும் தலையிறங்கவேயில்லையேடி , என்னசெய்ய 5.மணிக்கு ஆப்ரேஷன் செய்துவிடலாம். வெளியே இருப்பவர்கள் என்னிடம் சண்டைபோடுகிறார்கள். என்று சொல்லிக்கொண்டே நர்ஸ்களிடம் ஆப்ரேஷனுக்குண்டான வேலைகளை தயார் படுதச்சொல்லிவிட்டு கிளம்பினார்.
மலருக்கோ மனதிற்குள் பயம், அச்சம், ஆனாலும் தன்பிள்ளை சுகமாக பிறந்திடும் என்றநம்பிக்கை ஆழமாகயிருந்தது.
நேரம் 4,10 நெருக்கிங்கொண்டிருந்தபோது அனைத்தும் முடித்து ஆப்ரேஷனுக்கு மலரை தயாராக்கி
தியேட்டருக்கு கொண்டுபோக ரெடியாக இருக்கும் சமயம் டாக்டர் உள்ளேவர மலருக்கு சற்றுவலியெடுத்தது இருந்தாலும் கூடுதலாக வலியில்லை.
இது உம்ராவுக்கு [மக்காவில்] சென்றபோது
”டாக்டர் மெல்ல அழைத்தாள் மலர்”
என்னம்மா [ராஜம் மலரின் குடும்படாக்டர்தான்]
”ஆயுதம் போட்டாவது குழந்தையை எடுத்துவிடுங்கள் ஆப்ரேஷன் வேண்டாம் என்றாள்”
உடனே டாக்டர், ”மலர் ஆயுதம்போடவும் தலையிறங்கினால்தாம்மா எடுக்கமுடியும்”
[ இந்த டிராயிங் அண்ட் பெயிண்டிங் வரைந்து பரிசுவாங்கினார்]
”இல்லைடாக்டர் தலையிறங்கும். என் இறைவன் எப்போதும் எனக்குதாங்கும் அளவுக்குதான் சோதனைதருவான் இது எனக்கு சுகப்பிரசவம்தான். சுகமாக பிறக்கும் என் இறைவனுக்காக நான் விரதம் இருப்பேன்” எனச்சொல்லியபடியே
என் இறைவா உனக்காக நான் நோன்புவைக்கிறேன் எனக்கும் என்குழந்தைக்கும் எவ்வித கஷ்டமுமில்லாமல் சுகமாக்கித்தா என அழுதபடியே வேண்டிக்கொண்டே
”ஒரு 10 நிமிடம் இங்கேயிருக்கேன் பின்புவேண்டுமென்றால் ஆப்ரேஷன் தியேட்டருக்குபோகலாம் என்றாள் மலர்” இறைவனின்மேல் அழுத்தமான நம்பிக்கைவைத்து.
[ இது 5 வயதில் முதல் நோன்பு வைத்தது]
இவ்வளவு அழுத்தமாக சொன்ன மலரைபார்த்த டாக்டர்,
”சரி இன்னொருமுறை செக்கப் பண்றேன் சரியா” எனச்சொல்லி செக்கப் செய்தார் உடனே டாகடரின்முகம் மலர்ந்து.
“சீக்கிரம் சீக்கிரம் நர்ஸ் இங்கவாங்க எனசெல்லி ரூம்பிற்கு தாள்போட்டு வேகமாக பிரசவ வேலையைதொடங்க சிறிது நேரப்போராட்டத்திற்குப் பிறகு
மதியம் 4.45, க்கு குழந்தை பிறந்தது.
எந்தமயக்க மருந்தும் இல்லாமல் தன்கண்முன்னே பிறந்த குழந்தையைகண்டதும், இரண்டுநாள் வலியில்துடித்த வேதனையெல்லாம் பஞ்சாய் பறந்தது.
வெளியே என்ன இன்னமும் ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டுபோக வரவில்லையேயென அனைவரும் நிற்க, கதவை திறந்து டாக்டர் குழந்தை பிறந்தாச்சி ஆண்குழந்தை எனச்சொல்ல அனைவருக்கும்
ஆனந்தமும் ஆச்சர்யமும்.
[இன்று]
குழந்தையைகண்ட சிறிதுநேரத்தில் உடம்பு அயர்ச்சிதர மயங்கினாள் மலர்,
கண்விழித்தபோது வேறு வார்டிற்கு மாற்றப்பட்டிருந்தாள். குழந்தை பிஞ்சுக்காலை உதைத்து கண்களைமூடிக்கொண்டே சிரித்தது.
5 நாள் கழித்து வெள்ளிகிழமை மாலை 2 ,மணிக்கு கதவை தட்டிவிட்டு டாக்டர் உள்ளேவந்து ”எப்படியிருக்கே நினைத்ததை முடிச்ச வெற்றி முகத்தில் தெரியுதே என்றார்” புன்சிரிப்பு சிரித்தாள் மலர்.
மலரின் முதல்குழந்தையிடம்
”உனக்கு தம்பி வந்துட்டான் உங்கம்மாதான் என்னை ஏமற்றிவிட்டாள்”
ஆப்ரேஷன் செய்திருந்தால் 20,000 வாங்கிருப்பேன் இப்போ 3000. மட்டும்தான் தருவாள். ஆனாலும் கடவுள்மேல் இவளுக்கு அபார நம்பிக்கை. கடவுளும் இவள் வேண்டிக்கேட்டதும் கொடுத்துட்டாரே என சொல்லி மகிழ்ந்தார்.
[ மதீனத்துல் ஜுமேரா[துபை]
சொன்னதோடல்லாமல்
டாக்டருக்காக கொடுத்த பணத்தில் 200,ரூ முதல்குழந்தையின் கையில்கொடுத்து இது உனக்கு தம்பிபொறந்ததற்காக நான்தரும் கிஃப்ட் என்று சொல்லிக்கொடுத்தார்.
ஆனந்தமும் நிம்மதியும் கைகோர்த்து மகிழ அன்றுமாலையே வீடுவந்து சேர்ந்தார்கள் இறைவனுக்கு நன்றி சொல்லியபடி....
[இன்று என் அன்புமகன் முகமது மஃரூப் அவர்களின் பிறந்தநாள் ]
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இஷாந்த்[டெல்லி] மரூஃப்
வருடங்கள் பல
தவமிருந்து
வேண்டிக்கேட்டு
வசந்தமாய்
வரமாய்
வந்தமகன்
இறைவன் தந்த
பொக்கிஷம்
இதோ இன்று
இரு ஐந்தைக்
கடந்து நிற்கும்
இனிமையான
தங்க ரதம்
இவ் வுலகில்
எனக்குக்
கிடைத்த
இரண்டாவது
மணி மகுடம்
அன்னை தந்தை
சொல் கேட்டு
அனுசரித்து
போகும் பழக்கம்
அக்கா என்றால்
அலாதிப் பிரியம்
என் முகம்
வாடக்கண்டால்
முன்நெற்றித்
தொட்டுப்பார்க்கும்
தாய்மை குணம்
பிறருக்குதவும்
அன்பு மனம்
நான்
பெற்றெடுத்த
அன்பு மகன்
நற்கல்வி
நாலும் பெற்று
நலமுடன்
ஆண்டுகள் பல
வாழந்திடனும்
செல்ல மகன்
நல்வழியில்
நேர்வழியில்
வளமாய் நலமாய்
மனம் நிறைய
உயர்ந்திடனும்
செல்வ மகன்
இறையருள்
நிறைந்துப்பெற்று
ஈருலகிலும்
சிறப்புப்பெற்று
உயர்ந்து சிறந்து
விளங்கிடவே
என்றும்
வாழ்த்திடுமே
இந்த
அன்னை மனம்..
அண்ணன் மகன் ஹரீக்[சிங்கப்பூர்] மஃரூப்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
வாழ்த்துகளும் துவாக்களும்
பதிலளிநீக்குநெகிழ்வுடன் ...
///இறைவனை நேசி இன்பம் பெறுவாய்///
பதிலளிநீக்குஇதன் விளக்கம் இப்போதுதான் புரிந்தது, இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமலிக்கா,உங்கள் செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், இந்த நாள் எனக்கு மறக்கவே மறக்காது, இன்று எனக்கு திருமண நாள்.
பதிலளிநீக்குஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்,
மிகச்சரியே
உங்கள் கதையே தான் எனக்கும் என் இரண்டாவது மகன் ஹனீப் பெறும் போது கடைசி ஆப்ரேஷனுக்கு எல்லாம் ரெடி செய்து விட்டு கடைசி ஒரு நொடியில் எல்லாம் மாறியது அதை (அந்த வல்ல ஆண்டவனின் கருனையை) இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் தான், இதே எட்டு வருடத்துக்கு பிறகு தான்.
வித்யாசமான வாழ்த்துரை..எனது வாழ்த்துகளும் மலிக்கா..
பதிலளிநீக்குமுகமது மஃரூப்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குjaleela அக்காவிற்கும் இங்கு திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..
அட என்னுடைய முதல் பையனுக்கும் இன்னிக்குத்தான் பிறந்தநாள்..:))
பதிலளிநீக்குஉங்கள் செல்லத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:))
தங்கள் அன்பு மகன் முகமது மஃரூப் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும், எமது பிராத்தணைகளும்.
பதிலளிநீக்குஎனதன்பு பேரனுக்கு இந்த தாத்தாபாட்டியின் அன்புகலந்த ஆசீர்வாதங்கள்.
பதிலளிநீக்குநீடூழி வாழ்க. சிறப்புகள் பலபெற்று தாய்தந்தை மனம்நோகாமல், பலசாதனைகள் நீசெய்ய அந்த கடவுள் என்றும் கூடவே இருப்பார். வாழ்த்துகளோடு சாரதா விஜயன்
மருமகன் மஃரூப்பிற்க்கு அன்புகலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு[ஆண்டி பிரோஷா..]
உங்கள் அன்பு மகனுக்கு, எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் மகன் மஃரூப் க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குஎல்லா வளமும் இறைவன் அருளால் பெற்று வளமோடு வாழ வாழ்த்துக்கள் .
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மஃரூஃபிற்கு!! இறைவன் எல்லாம் எப்பொழுதும் நலமாக்கித் தருவானாக!!
பதிலளிநீக்குஉங்கள் இந்த சம்பவம் என்னை சிலிர்க்க வைக்கிறது.சுபானல்லாஹ்
பதிலளிநீக்குமுகமது மஃரூப்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..:-))
பதிலளிநீக்குஅன்பு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழிய பல்லாண்டு
பதிலளிநீக்குவிருந்து இல்லியா?
அன்பு மருமகன் மஃரூபுக்கு மாமாவின் அன்பும், வாழ்த்துக்களும் துஆவும்.
பதிலளிநீக்குரொம்ப நெகிழ்வான இடுகை தங்கச்சி.
மாஷா அல்லாஹ்.. சொன்ன மாதிரி நெகிழ்ச்சியான பதிவு..
பதிலளிநீக்குஉங்கள் செல்லத்துக்கு என் துவாக்கள்.. :)
"நல்வழியில்
பதிலளிநீக்குநேர்வழியில்
வளமாய் நலமாய்
மனம் நிறைய
உயர்ந்திடனும்
செல்வ மகன்"
"இறைவனும் அதற்கு அருள் புரிய "
"முகமது மஃரூப்" க்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மலிக்கா,உங்கள் அன்பு ம்கனுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்களும்,து ஆவும்.
பதிலளிநீக்குஉன்னையதான் சின்னவயசியேலே கல்யாணம் செய்து கொடுத்துடுத்துட்டாங்களேப்பா.
பதிலளிநீக்குஇறைவனுடைய அருள் உனக்கு எப்பவுமே கிடைக்கும் துஆச்செய்கிரேன் நீயும் செய்
அ்ன்புச்செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன் சித்தி மாலிக்
அன்புச்சகோதரி மலிக்கா! தவறாக நினைக்க வேண்டாம். பிறந்த நாள் கொண்டாடுவது நம் கலாச்சாரம் அல்ல. குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று நாம் செய்யப்போனால் அது நாளையும் தொடரும். அவர்களுக்கு நாம் தான் வழிகாட்டியாக இருக்க வேண்டும். எனவே தவிர்த்துக்கொள்வது நலம்.
பதிலளிநீக்குதவறாக நினைக்கவில்லை நிஜாம்.
பதிலளிநீக்குஎன்மகன் நான் எடுத்துச்சொல்வதை புரிந்துக்கொள்ளக்கூடியவர், புரிந்துகொண்டார் அதனால்தான்
சென்றவருடங்களில்கேட்டதுபோல் அல்லாமல்
இவ்வருடத்திலிருந்து கேக்கெல்லாம் வேண்டாமா என் சொல்லிவிட்டார்.
எல்லாம் வல்ல இறைவனை முன்செய்த தவறுகளை மன்னிப்பானாக!
நினைவுகளை பகிர்ந்துகொள்ளவே இத்தினத்தை தேர்ந்தெடுத்தேன்..
தங்கள் மகனுக்கு
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
வாழ்க வளமுடன் நலமுடன்
நட்புடன்..........
காஞ்சி முரளி................
தங்கள் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஉங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் ஆருயிர் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பை, இத்தனை அருமையாய் பதிவில் சொல்லி இருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்களும் ..கல்வியில் சிறந்து வர வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குமாப்ள நீடுழி வாழ வாழ்த்துகள்...
பதிலளிநீக்குbelated b'day wishes maroof
பதிலளிநீக்குஜமால்காக்கா-
பதிலளிநீக்குஜெய்லானி-
அண்ணாமலையாந்
ஜலீலாக்கா-
புலவன் புலிகேசி-
கண்ணா-
ஷங்கர்-
ஷஃபீக்கண்ணா-
பிரோசா-
சைவக்கொத்துப்பரோட்டா-
அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுக்கு தாங்களனைவருக்கும் என்அன்புகலந்த நன்றிகள்.
என்மகனும் அனைவருக்கும் தேங்க்ஸ் சொல்லசொன்னார்..
ஸ்டார்ஜந்
பதிலளிநீக்குஹூசைனம்மா-
ஒருவனின் அடிமை-
மாதவி-
கார்த்திகைப்பாண்டியன் -
அபு அப்ஷர்-
நவாஸண்ணன் -
நாஸியா-
s மஹாராஜன் -
அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுக்கு தாங்களனைவருக்கும் என்அன்புகலந்த நன்றிகள்.
என்மகனும் அனைவருக்கும் தேங்க்ஸ் சொல்லசொன்னார்..
சாரதா விஜயன் கூறியது...
பதிலளிநீக்குஎனதன்பு பேரனுக்கு இந்த தாத்தாபாட்டியின் அன்புகலந்த ஆசீர்வாதங்கள்.
நீடூழி வாழ்க. சிறப்புகள் பலபெற்று தாய்தந்தை மனம்நோகாமல், பலசாதனைகள் நீசெய்ய அந்த கடவுள் என்றும் கூடவே இருப்பார். வாழ்த்துகளோடு சாரதா விஜயன்.
இதைவிட பேரனுக்கு சந்தோஷம் வேரென்ன மிகுந்த மகிழ்ச்சிமா. மிக்க நன்றிம்மா
ஸாதிகாக்காக்கா -
பதிலளிநீக்குசித்திமா- [எப்படிப்பா இருக்கே ஞாபகமெல்லாம் இருக்கா என்னை
சென்னையோட போய்ட்டியா இல்ல ஊருக்கு போய்வருகிறாயா?]
இப்படிக்கு நிஜாம்-
காஞ்சி முரளி-
மேனகா-
நிலாமதி-
பிரியமுடன் வசந்த்-
அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுக்கு தாங்களனைவருக்கும் என்அன்புகலந்த நன்றிகள்.
என்மகனும் அனைவருக்கும் தேங்க்ஸ் சொல்லசொன்னார்..
சித்ரா டீச்சர்-
பதிலளிநீக்குதேவன் மாயம்-
சாரூக்கா-
அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுக்கு தாங்களனைவருக்கும் என்அன்புகலந்த நன்றிகள்.
என்மகனும் அனைவருக்கும் தேங்க்ஸ் சொல்லசொன்னார்
ஆண்டவனுக்கு நன்றி!
பதிலளிநீக்குஆண்டவனுக்கு நன்றி!
ஆண்டவனுக்கு நன்றி!
"இல்லை டாக்டர் ... தலையிறங்கும். என் இறைவன் எப்போதும் எனக்கு தாங்கும். அளவுக்குதான் சோதனைதருவான். இது எனக்கு சுகப்பிரசவம்தான். சுகமாக பிறக்கும். என் இறைவனுக்காக நான் விரதம் இருப்பேன்”
பதிலளிநீக்குஎனச்சொல்லியபடியே ....
"என் இறைவா! உனக்காக நான் நோன்புவைக்கிறேன். எனக்கும் என்குழந்தைக்கும் எவ்வித கஷ்டமுமில்லாமல் சுகமாக்கித்தா என அழுதபடியே வேண்டிக்கொண்டே...
படிக்கையில் கண்கள் குளமாகின...
திருமதி. சாபிரா சையது.
அன்னை தந்தை
பதிலளிநீக்குசொல் கேட்டு
அனுசரித்து
போகும் பழக்கம்
அக்கா என்றால்
அலாதிப் பிரியம்
என் முகம்
வாடக்கண்டால்
முன்நெற்றித்
தொட்டுப்பார்க்கும்
தாய்மை குணம்
- குட்டீஸ் மஃரூப்ஐ நான் நன்கு அறிவேன்.
வயசில் சிறுவனாய் இருந்தாலும் பெரிய மனுஷனுக்கு உள்ள பக்குவமும், பெருந்தன்மையும், சாந்தமும் அவனிடம் பார்கின்றேன்.
மலிக்காவின் மகன் மஃரூப் என்பதுபோய் மஃரூப்கின் அம்மா மலிக்கா என்று சொல்லும் காலம் வரும்.
பேர் சொல்லும் பிள்ளை!
பெருமையாய் மப்ரூக்கை பார்க்கிறேன்!
வாழ்த்துக்கள் குழந்தாய்!
திருச்சி சையது