நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஓசையின் எதிரொலி- 300 வது பதிவோடு..

300, வது பதிவு.

இது என்னுடைய 300.வது பதிவு என்பதை தெரிவித்துகொள்வதோடு மிகவும் மகிழ்கிறேன். நான் தானாயிது என என்னையே கிள்ளிப்பார்க்கும் தருணமாய்,பல தருணங்கள் அமைந்துவிட்டது.நீரோடையென்னும் வலைதளம் ஆரம்பித்து அதில் கவிதைகளை எழுதி. உங்கள் அன்பையும் பெற்று. உணர்வுகளின் ஓசையெனும் நூலும் வெளியிட்டு, அப்பப்பா நினைக்கவே மனம் சந்தோஷத்தில் திலைக்கிறது.இன்னும் பல நற்ச்சிந்தனையுள்ள கவிதைகளையும் நிறைய நிறைய எழுதவேண்டும் அதற்கு உங்கள் அன்பு என்றென்றும் வேண்டும்.

இதோ கீழேயிருக்கும் வாழ்த்துக்களும். கவிதைகளும். எனது “உணர்வுகளின் ஓசை” கவிதை நூலுக்காக நிறைய கிடைக்கப்பெற்றது. அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு.  அடுத்தடுத்து பதிவுகளில்  மற்றவைகளையும் வெளியிடுவேன்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

என்னையே நான் உணர்ந்தேன்
உணர்வுகளின் ஓசையின் மூலம்
என்னையே நான் உணர்ந்தேன்
உணர்வுகளின் ஓசையில் அன்பை உணர்ந்தேன் .....

உணர்வுகளின் ஓசையில் எந்தன் உயிரை உணர்ந்தேன் .....
உணர்வுகளின் ஓசையில் பிரிவின் வலியை உணர்ந்தேன் ....

உணர்வுகளின் ஓசையில் பிரிவிலும் ஓர் வாழ்வை உணர்ந்தேன் ....
உணர்வுகளின் ஓசையில் என்னையே நான் உணர்ந்தேன் ....

Best Regards,
S.A.K.MUSABBIHU
Al Tawayeen.
Fujairah, U.A.E.
---------------------------------------------------------------
அன்பு சகோதரிக்கு என் இனிய வாழ்த்துகள்.

அசன் முகம்மது ஜின்னா
திருவாரூர் [சென்னை]

--------------------------------------------------------------------
திருமதி. மலிக்கா ஃபாரூக் அவர்களின்
உணர்வுகளின் ஓசை
காவிரிமைந்தனின் வாழ்த்துரை..

காலக் கணக்கெடுப்பில்
வாழும் மனிதர்களில் - புவி
ஆளும் மன்னர்களைவிட - மொழி
ஆளும் கவிஞர்களே மிஞ்சுகின்றனர்!

கவிதைத் தூரிகையைக்
கையிலெடுத்து வரையும்
காரிகைகள் மிகக்குறைவு
உணர்வுகளின் ஓசையெனும்
உங்களது படைப்பில்
ஒவ்வொரு கவிதையுமே

ஓசையின்றி பேசுகிறது!
விதவிதமாய் தலைப்பிட்டு
விரிந்திருக்கும் கவிமலர்கள்
பலவிதமாய் உணர்வுகளை
பதிவுசெய்து விடுகிறது!

அறிவின் கூர்வாள்
முனைந்து சுழலும்
அரிச்சுவடி காண முடிகிறது!
உணர்வின் வடிகால்
கவிதை என்கிற
உன்னதம் பொங்கி வழிகிறது!
வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
15.04.2011

என்றும் அன்புடன்,
காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
சென்னை 600 075
தற்போது - ருவைஸ், அபுதாபி..
---------------------------------------------------------------
அன்பு மலிக்கா
ஆஹா அருமை அருமை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மலிக்கா
சிறப்பாகச் செய்த்துள்ளீர்கள்
அனைத்து மகிழ்ச்சியும் உங்களை வந்தடையட்டும்.

அன்புடன் புகாரி 
கனடா
---------------------------------------------------
அக்கா...
ரொம்ப சந்தோஷமா இருக்கு.
முதல் முத்து எடுத்ததற்கு வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய முத்தெடுங்கள்.
உங்கள் புத்தக வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள்.

பாசமுடன்,
சே.குமார்
------------------------------------------------
மாஷா அல்லாஹ். ரொம்ப சந்தோஷம். மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

அன்புடன்
நவாஸ்
--------------------------------------------------
நாலாவது படித்தவரென்றாலும்
நூல் ஆவது செய்கிறார்
பெண்ணால் எழுத முடியுமா
முஸ்லிம் பெண்ணால் எழுத முடியுமா
என்ற முக்காட்டை தகர்த்தெறிந்து இவர் தம்
பென்னால் எழுதுகிறார் கவிதைகளைப்
பொன்னா(ய்)ல் எழுதுகிறார்
எல்லா உயிரும் ஒரு காலத்தே
மலடாவது இயற்கை

எழுத்தாளன் மட்டுமே மலடாவதில்லை
இறுதிவரை என்பது பெருமை
அதனால் தான் அவன் இறுதி வரை பிரசவிக்கிறான்
கற்பனைக் குழந்தை கையில் தவழ
அக்குழந்தை கண்டு நாமெல்லாம அகமகிழ
ஈன்ற தாய்க்கு வாழ்த்துக்கள்

With best regards
 கமால்
துபை
--------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்
மிக்க சந்தோஷம், சொல்ல வார்த்தையில்லை, தாங்கள் திறமையை உலகுக்கு பறைசாற்றும் ஒரு பொன்னான நாள், எம் சொந்தம் மற்றும் ஒரு சாதாரண குடும்ப பெண்ணின் திறமை நினைத்து பெருமிதம் அடைகிறேன். அல்லாஹ் மேலும் தாங்களுக்கு கல்வி ஞானத்தை கொடுத்து நம் சமுதாய பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கசெய்வானாகவும்.

மேலும் நிறைய பயனுள்ள புத்தகங்கள் வெளியிட்டு சமுதாய முன்னேற்றத்திற்கு வித்திட வாழ்த்துக்கள்...

அன்புடன்
மாலிக்
ஃபாத்திமா மாலிக்.
------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்

அட, எவ்வளவு சந்தோஷமான நிகழ்ச்சி. அல்லாஹ் போதுமானவன். கனவு கைகூடும் நாள். இதுபோல பல புத்தகங்கள் எழுத இறைவன் துணைநிற்கட்டும் மலிக்கா.
இன்ஷா அல்லாஹ், இன்னொரு நாள் உங்களை வீட்டில் சந்திக்கிறேன். இதற்கு ட்ரீட் அப்போ தந்துடுங்க!!

வஸ்ஸலாம்.
அன்புடன்
ஹுசைன்னமா
------------------------------------------
அன்புள்ள சகோதரி, துஆ ஸலாம்.

தங்களது முதல் நூல் மிகச் சிறப்பான முறையில் வெளியீடு காணவுள்ள தகவல் மகிழ்வளிக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.

தங்களது 'தந்தையார்' என் சகோதரர் டாக்டர் ஜின்னாஹ் ஷர்புத்தீன் அவர்கள் விழாவில் கலந்து கொள்வதும், மிகச்சிறந்த பல தமிழறிஞர்கள் விழாவில் கலந்து கொள்வதும் இன்னொரு கூடுதல் சிறப்பு.

எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு மென்மேலும் சிறப்புகள் அளித்து வாழ்வாங்கு வாழ அருள்பாலிப்பானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்

சகோதரன்
ஹிமானா சையத்.
சிங்கப்பூர்
---------------------------------------------
’நீரோடை’ வலைப்பூவில் பூத்த ‘உணர்வுகளின் ஓசை’ அனைத்து அமீரகத்திலும் ஒலித்து, பாலையை சோலையாக்கட்டும்.

அன்புடன்
அப்துல் கதீம்.
துபை
---------------------------------------------
அன்பு தோழி மலிககா அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமா தோழி.
வாழ்த்துக்கள்.உங்க ஒவ்வொரு வெற்றியையும் தாய்மை நெஞ்சோடு ரசிக்கிறேன் தோழி.வல்ல ரகுமான் நமக்கு எல்லா நலங்களையும் வளங்களையும் ஈர்ருலகிலும் குறையின்றி தர துவா செய்வோம் தோழி.

அன்புடன்
பிரோஷா
சென்னை
----------------------------------------------------
மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு..

எதைக்கொண்டு நெய்தாய் வார்த்தைகளை
என்று கேட்பதற்கு விடாமல்
உணர்வுகளைகொண்டு நெய்துள்ளேன் என்று
உணரவைத்துவிட்டாய்.ஒவ்வொரு வரிகளும்
உள்ளத்தில் பதிந்தது உன்[னைப்] புன்னைகை கவிதைபோல
காலங்கள் கடந்தாலும் மனத்துக்குள் மணம்வீசும்
மல்லிகையின் கவிதைகள்.

அணிந்துரையை அருமையாய் வழங்கிய
அன்புடன் புகாரிக்கு அன்பார்ந்த பாராட்டுக்கள்.
வாழ்த்துரைகளை வளமாக வழங்கி நெஞ்சங்களுக்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

வாழிய நீ பல்லாண்டு
வானளவு கவிதைகளை படைத்துக்கொண்டு.
என்றும் உன்னை வாழ்த்திடுவோம்
எல்லாம் வல்ல கடவுளையும் வேண்டிடுவோம்..

விஜயன் [சாரதாவிஜயன்]
கன்னியாக்குமரி..
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
தனது அன்பாலும். வாழ்த்துகளாலும். கவிதைகளாலும் உள்ளப்பூர்வமாக வாழ்த்திய பாசநெஞ்சங்களுக்கு. மனமகிழ்வோடு கண்ணீர் மழ்க நன்றிகளை
அன்புடன் தெரிவித்துக்கொள்றேன்.

ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஊக்கம் முக்கியம்.அதை நெஞ்ச்சாரதரும்போது.அதைவிட மகிழ்வுவேறிருக்கமுடியாது.
அதை சிறப்பாக செய்துவரும் தாங்கள் அத்தனைபேருக்கும் நான் கடமைபட்டவளாக உள்ளேன். என்றும் உங்கள் அன்பை எதிர்பார்க்கும் ..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது