நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பொய்யின் தண்டனை!


பொய்யுரைக்கும் நாவிற்கு
போசனமேதுமில்லை!
பொய்யாளியின் பேச்சிற்க்கு
போதியளவேனும் மதிப்பில்லை!

ஒற்றைப்பொய்யை மறைப்பதற்கு
ஓராயிரம் பொய்களை அடுக்கிக்கொண்டால்
ஒழுக்கக்கேட்டை அணிந்துகொண்டே
ஒப்பாரி வைக்க வர வேண்டிவரும்

பொய்யில் தொடங்கும் தொடக்கமெல்லாம்
பிரயோசனமற்று அழிந்துவிடும்
பொய்யுரைப்போருக்கு தண்டனையோ
அவர்
மெய்யுரைத்த போதிலும்
அனைத்தும்
பொய்யே என்று  தூற்றுப்படும்

நெருப்பு விறகை   தின்பதுபோல்
பொய் இறையச்சத்தை தின்றுவிடும்
பொய்யின் வழியே செல்வோருக்கு
நல்வழித்தடங்களே  மறைந்துவிடும்.

பொய்யைச்சொல்லி ஒருகவளம்
சோற்றை வாங்கி உண்பதற்க்கு
மெய்யைசொல்லி ஒருகுவளை
தண்ணீர் வாங்கிப் பருகிவிடு
தவறும் வழியிலிருந்து மீண்டுவிடு!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது