நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சோறுபோடும் சேறு!


காலக்கருக்களிலே களத்துமேடு போறமச்சான்”
காலக்கருக்களிலே களத்துமேடு போறமச்சான்”
கடக்கண்ணக் காட்டிடுங்க
கஞ்சிகொண்டு நானும் வாரேன்
சோடிசேந்து போவோம் -அந்த
சேத்தில் இறங்கி உழுவோம்
சோந்து போயிடாம -எடயில்
கஞ்சியையும் குடிப்போம்


செக்கச்சிவந்தபுள்ள சீமக்கார செவத்தபுள்ள”-அடிச்
செக்கச்சிவந்தபுள்ள சீமக்கார செவத்தபுள்ள”

சுள்ளுன்னு வெயிலுபட்டா
சுருங்கிபோகும் ஓவ்வுடம்பு

சூடெல்லாம் தாங்கமாட்டே
வீட்டிலேயேயிருடி நாமட்டும் போய் வாறேன்
வயலுவேல முடிஞ்சி அடி சொனங்கிடாம வாரேன்-
.
மாமென்பெத்த மன்னவனே! ஏம்மனசுகேத்த சின்னவனே!
மாமென்பெத்த மன்னவனே! ஏம்மனசுகேத்த சின்னவனே!

செக்கச் செவந்தமேனி யானாலும்
செல்லச்சீமாட்டியா பொறந்தாலும்
செத்தபின்ன வெத்துடம்பு

செத்துப்புட்டா மண்ணுக்குதான்
நானுங்கூட வந்து ஒங்கூட நாத்து நடவ வேணும்
நாகரீகம் பாத்தா அட நம்ம வயிறு காயும்


வேணான்டி அன்னக்கிளி வேற வேல ஊட்டுலபாரு

வேணான்டி அன்னக்கிளி வேற வேல ஊட்டுலபாரு


வெள்ளாம நமக்கு வேணாம்
வெவசாயம் ஒண்ணுவேணாம்
வெளச்சலும் சரியில்ல
வரவுங்கூட ஒன்னுமில்ல
விட்டுப்புட்டு போயிடலாம்
வேற வேல பாத்துக்கலாம்
வெளி நாடுபோயி அங்க வேல கீல பாப்போம்
வெள்ளக்காரங்கபோல நாம வசதியாக இருப்போம்
அச்சச்சோ ஆசமச்சான்அப்படியெல்லாம் சொல்லாதீங்க!
அச்சச்சோ ஆசமச்சான் அப்படியெல்லாம் சொல்லாதீங்க!

வெள்ளாம அழிஞ்சுபோகும்
வெவசாயம் நின்னுபோகும்
விட்டுபுட்டு போயிவிட்டா
வெட்டவெளியாகி போகும்
வெவரமில்லாம பேசாதீங்க
வெளுத்ததெல்லாம் பாலுமில்ல
வெள்ளாமையில் உள்ள சுகம்
வேறெதிலும் அங்கேயில்ல
வெளிநாட்டு பேச[ஷ]ன் அது எல்லாமே மோசம்
வேல இல்லாம போனா அட வெவகாரமாகிபோகும்


மாமிபெத்த மரிக்கொழுந்தே ஏம்மனசுகேத்த மகிழம்பூவே
மாமிபெத்த மரிக்கொழுந்தேஏம்மனசுகேத்த மகிழம்பூவே

மனகண்ண தொறந்துப்புட்ட
மனசக்கூட உசுப்பிவிட்ட
மடப்பய மண்டையில
மதியைக்கூட தூண்டிவிட்ட
காலக்கொஞ்சங் காட்டு நாதண்ட கொலுசுபோட
காத்திருக்கேன் வாடி நாமசோடிசேந்து போவ


அப்படிபோடு கருத்தமச்சான் நாஞ்சொன்ன கருத்தக்கேட்ட
அப்படிபோடு கருத்தமச்சான் நாஞ்சொன்ன கருத்தக்கேட்ட

சும்மாட்ட தலையில் வச்சி
சுமந்துவாரேங் கஞ்சிக்கூட
சோடி சேந்து போய்வரலாம்
சுகமாக வாழ்ந்திடலாம்
சேந்து நாமபோவோம் அந்த
சேத்தில் இறங்கி உழுவோம்
சோந்து போகமாட்டோம் எப்பவும்
சுறுசுறுப்பா இருப்போம்.....
[டிஸ்கி;;;நாட்டுப்புற பாட்டப்போல படிச்சுப்பாருங்க
நல்லாயிருந்த கருத்தயும் ஓட்டையும் போடுங்க!]


அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது