நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கவிதையும்நானும் 100,யும்தாண்டி


100, ருக்கு மேல் எழுதிவிட்டேனா கவிதைகள் எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கிறது,

கவிதைகள்  எழுதும்போதே
உள்ளுக்குள் நீரூற்று பீறிட்டு பாய்க்கிறது, வால்கட்டிய பட்டம் வானைநோக்கிய பயணம்போல்
சிந்தனைகள் அனைத்தும் கவிதைகளுக்காக ரெக்கைகட்டிப்பறக்கிறது,
வெள்ளையருவி பார்த்ததும் துள்ளிக்குதித்தாடும் பிள்ளைமனம்போல்
விழிப்பார்வைகள் காணும் இடமெல்லாம் கவிதைகளாக்கி காணத்துடிக்கிறது.

எண்ணங்களை எழுத்துக்களாக்கி
எழுத்துக்களை காட்சிகளக்கி
காட்சிகளை வரிகளாக்கி
வரிகளை கோர்வையாக்கி
கோர்வைகளோடு கவிதையை
படைப்பதில்தான் எத்தனை ஆனந்தம்.

கவிதையெழுத கடந்துவந்தபாதையை
திரும்பிப்பார்த்து ரசிக்கிறேன்
என்னோடு உங்களை ரசிக்க அழைக்கிறேன்

என் அன்புமச்சானின் [கணவர்] அன்பும் இதற்கு ஒரு பெருங்காரணம் அவர்களின் ஊக்கம் இல்லாதிருந்தால் இத்தனை அளவிற்கு என்னால் எழுதியிருக்கமுடியாது.
அவர்கள் துபையிலிருந்து ஊருக்குவரும்போது கடிதம் எழுதுவதற்காக கொண்டுவந்து தரும் அத்தனை லட்டர் பேட், டைரிகளில்,
கத்தைக்கத்தையாய் கவிதைகளை காகிதமுழுவதும் எழுதி அதை மீண்டும் மீண்டும் படித்துரசிப்பதுதான் என் வேலை.

முதல் குட்டிகவிதை பெயர்மாற்றி 17 வயதில். இரு இதழ்களுக்கு அனுப்பியது. ஒற்றுமை இதழுக்கு பின்னூட்டங்கள் அனுப்பியது என ஞாபக்கிடங்கினுள் அத்தனையும் புதைந்து மிதந்து கொண்டிருக்கிறது.

துபை வந்தபின்பும் இங்கு நடக்கும் அத்தனைபதிவுகளையும் அப்ப மனதில் காப்பி [அச்சோ அந்த காஃபியல்ல]எடுத்துவந்து வீட்டில் அமர்ந்திருக்கும் நேரம் அதேபோல் லட்டர் பேடுகளில் கிறுக்கிவைத்திருந்த போதுதான் ஒரு சமயம் வீட்டிற்குவந்த சினேகிதி, தமிழ்குடும்பம் என்ற

ஒரு வெப்ஷைட் உண்டு அதை பாருங்கள் அத்தனையும் உங்களுக்கு பிடித்த அழகிய தமிழில் என சொல்லிச்சென்றாள் அன்றே அதில் உறுப்பினராக இணைந்தேன். முதலில் சிந்தனைக்கு சில என ஆரம்பித்தேன். பின் கவிதைகளைத்தந்தேன், ஒரு 7, 8, கவிதைகளிலேயே நல்ல வரவேற்பு மகிழ்ச்சிவெள்ளத்தில் மிதந்தேன்,

தொடர்ந்து உணர்வுப்பூர்வமாய் கவிதைகளைத்தரச்சொல்லி உறுப்பினர்களும் ஆதரவுதர, முதல்முறையாக எனக்கென்று கவிதைகென தனிபகுதி //மலிக்காவின் வரிகள்// என தமிழ்நேசன் அண்ணா, தந்து என்னை ஊக்கம் கொடுத்து எழுதச்சொன்னார்கள்.

சும்மாவே எழுதிகிறுக்கிய எனக்கு ஊக்கங்கள் தொடர்ந்துவர நம்மால் எதுவும் செய்யமுடியுமென, அறிவுப்பகுதி. விடுகதை. பட்டிமன்றம். என்று ஆரம்பித்தேன். [நாங்களும் பட்டிமன்றத்தீர்ப்பும் சொல்லியிருக்கோமுல்ல. நாகரீகமா—கலாச்சாரமா என்ற தலைப்பிற்கு] கைவண்ணக்கலை, தையல், மருதாணி டிசைன், பெயிண்ட் ஒர்க். ஜுவல் ஒர்க். சமையலில் புதிது, என எனக்கு தெரிந்தவகையில் தமிழ்குடும்பத்தில் புகுந்துவிளையாடி எனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டேன்.

அப்போதுதான் என்னை தமிழ்தேர் [அமீரகத்தித்தில் வெளியாகும் மாத இதழ்] இதழிலிருந்த சிம்மபாரதி அவர்கள், கவிதைகள் எழுதிதரும்படி அழைத்தார்கள். மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்

அதுவும் ஆண்டுமலர் வெளியாகும் சமயம், விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், அழைத்ததற்கு ஒரு நன்றி சொல்லலாமே என ஒரு கவிதை என நானாக நினைத்து கிறுக்கியதை அனுப்பிவைத்தேன், விழா அன்று என்னால் கலந்துகொள்ளமுடியாமல்போனதால் ஆண்டுமலர் சிம்மபாரதியிடம் பெற்றுக்கொண்டேன், அதில் பார்த்தால் நான் இதழ் வாழ்த்துக்காகஎழுதிய கவிதையை பிரசவம் [பிரசுரம்]செய்திருந்தார்கள்.

முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ்


           த ன்னம்பிக்கையென்னும் தைரியத்துடன்
     
          மி ருதுவான மனிதனாய்  மனசாட்சியோடு வாழ்ந்திடு

  வாழ்க்கை முழுதும் வசந்தம் பூ பூக்கும்

தமிழ்குடும்பத்தில் விண்ணப்பம் கொடுத்து
தமிழ்தேரை வடம்பிடிக்க விடுத்தது அழைப்பு
தமிழர்கள் ஒன்றுகூடி தமிழினை தொகுத்து
தமிழின் கழுத்தில்போடுவோம் தமிழ்மாலை தொடுத்து
திருவாரூர் தேருக்கு என்றும் இருக்குது மவுசு
தமிழால் தமிழ்தேருக்கு இனி கிடைக்கும் தனிசிறப்பு
தமிழரென்பதில் பெருமிதம் எனக்கு
தமிழினமே ஒன்றுபட்டு தமிழ் வடத்தைபிடிப்போம் இழுத்து

முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ்,என
அனைத்தையும் இணைத்து
தரணியெங்கும் பாடிடுவோம் தமிழ்தாய் வாழ்த்து.

அம்மாடியோ நான் எழுதிய கவிதை அதுவும் வெளிநாட்டு தமிழ் இதழில் பார்த்தபோது ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப்பார்த்தது,எனக்குள் என்னிலடங்கா பூக்கள் பூத்துக்குலுங்கின படபடத்தபடியே பறவைகளின் கீச்சு கீச்சு ஒலிகேட்டது.மனமெல்லாம் மகிழ்ச்சி ராகம் இசைத்தது.

அந்த மாத தலைப்பாய் /எதைத்தேடுகிறோம்/ வந்தது எழுதினேன் ஏதோ என் அறிவுக்கு எட்டிய வரையில். கவிதை எழுதியவர்களே கவிதையை வாசிக்கனும் என்பது தமிழ்தேரின் கொள்கை. அதுவும் சரிதானே எழுதியவருக்குத்தானே அதை எப்படி வாசிக்கனும் என்று தெரியும். மாதா மாதம் இதழ்வெழியீட்டுவிழா நடக்கும், அதில் வாசிக்கவேண்டும் நாம் எழுதிய கவிதைகளை, அந்தமாதம் என்னை அழைத்தபோது என்னால் முடியாது என மறுத்துவிட்டேன், பயம் ஒருபுறம். பதட்டம் ஒருபுறம் [மேடையேறியெல்லாம் பலக்கமா நமக்கு ஹா ஹா ஹா]

இருமாதங்கள் கழித்து /கோடையும் வாடையும்/ தலைப்பு
இதற்காவது வாசிங்கப்பா, என்றபோது சரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று எழுந்தால் கடகடவென காலெல்லாம் நடுநடுங்கியதே பார்க்கனும், உதறல் எடுத்த கைகளை காட்டிக்கொள்ளாமல் குனிந்த தலை நிமிராமல் [நிமிர்ந்தா எதிர்த்தாப்புல இருப்பவங்களப்பாத்து இந்த பச்சபுள்ள பயந்துடுவேனுல்ல]மைக் எடுத்து [ஹலோ மைக் டெஸ்டிங் கேட்குதா என மைக் டெஸ்டிங்கெல்லாம் பண்ணலிங்கோ] ஒருவழியா கவிதையை வாசித்து முடித்ததும் எழுந்ததே கரஹோஷம், காதில் இன்னும் ஒலிக்கிறது[முதல் முறையல்லவா அப்படித்தானிருக்கும்] அப்படியே பூமிக்குள் புதைவதை போலிருந்தது, எப்படி நடந்து என் சீட்டுக்கு வந்தேனென தெரியவில்லை.

சரி சரி எப்படி பிளாக் ஆரம்பிச்சேன்னு சொல்லிடுறேன்.
என்அண்ணன் முகம்மது ஆரீஃப் ஊரிலிருந்து இங்கு [துபை] வந்திருந்தது, அப்போது எனக்குள் இருக்கும் திறமைகளை பார்த்து[ஹே காலரை தூக்கிவிடுகிறேன்]
நீயே தனியாக அனைத்தையும் செய்யவும்,சேமித்துவைக்கவும் ஒரு வழியுண்டு எனசொல்லிவிட்டு ஊருக்குப்போய் அங்கிருந்து என் பெயரில் ஒரு பிளாக் ஓப்பன் செய்து இதில் எல்லாவற்றையும் சேர்த்து வெளியிடு என்று சொன்னார்கள், கேட்கவா வேணும் புகுந்துட்டமில்ல,முதலில் /கவிதைக்களஞ்சியம்/ என்று இருந்த பிளாக்கை மாற்றிவிட்டு பின்பு நீரோடை என இந்தபிளாக்கை திறந்து இதை கவிதைகளுக்கு மட்டும் என்று வைத்துவிட்டு, /கலைச்சாரல்/ என்று மற்றொன்றையும் திறந்து அதில் நம்ம கைவண்ணக்கலைகளையும் வெளியிடுகிறேன்.

இந்த பிளாக் திறந்து மூன்றுமாதம் முழுமையடைத்துவிட்டது இரண்டுமாதங்களாக தமிலிழ்ஸ், தமிழ்மணம், பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் தானாக படைப்புகளை சேர்த்துவைத்துவிட்டு பின்பு மற்றவர்களின் பிளாக்பக்கம் போனபோதுதான் இப்படிதான் செய்யனும் என ஒரு விபரம் கிடைத்தது. இடையில் ஃபாலோவர்ஸ் காணாமல்போய் சுஹைன்னாக்காத்தான் கண்டுபிடிச்சி தந்தாங்க. முதன்முதலில் சாருக்கா விருதுதந்து மேலும் ஊக்கம்படுத்தினாங்க.
அப்புறம் ஜலீலாக்கா மேனகா, ஸாதிக்காக்கா. எல்லாரும் எனக்கு விருதுகள் கொடுத்து ஊக்கம் ஆதரவும் கொடுக்கிறார்கள்.

பின்பு தமிழ்குறிஞ்சியிலும்.[இணைய இதழ்] தமிழ்த்தோட்டதிலும் எழுதி தரச்சொல்லிக்கேட்டாங்க அங்கும் தருகிறேன். அப்புறம்

சுதந்திரமே சுதந்திரமே, http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp கவிதையெழுதிய அன்று யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்காக தேர்ந்தெடுத்திருந்தாங்க.

நம்ம தியாவின் பார்வையில் மலிக்காவும் கவிதையையும் ஒரு ஆய்வு நடத்தியிந்தாங்க. அதிலிருந்து புரிந்துகொண்ட விசயம் ஏராளம் கவிதைக்குள்ளும் இத்தனையிருக்கா என்று..http://theyaa.blogspot.com/2009/11/blog-post_20.html [மிகுந்த மகிழ்ச்சியான விசயம்]

வலைச்சரத்தில் ஐந்தாம் நாளில் http://blogintamil.blogspot.com/2009/11/blog-post_27.html என் இரு தளங்களையும் தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியிருந்தாங்க.

இந்நேரம் .காம். என்ற இணையம் என் தளத்தை அறிமுகப்படுத்தலாமா என கேட்டு இருக்காங்க.
ரொம்பவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..

விரைவில் /ஒரு ரசிகனின் டைரி/ என்று திருச்சி சையத் அவர்கள் வெளியிடுகிறார்கள் அதிலும் என்கவிதைகள் வரவிருக்கின்றன.
இத்தனைக்கும் உறுதுணையாய் என் மச்சான்..

நம்முடைய எழுத்துக்கள் பிறறை சாரும்போது அது நல்எண்ணங்களாக சேரவேண்டும் என்பதுதான் என்நோக்கம்
எண்ணும் எண்ணங்கள் உயர்ந்ததாக இருந்தால் எல்லாமே உயர்வாக இருக்கும். நமக்குள் இருக்கும் திறமைகளை நாமே மூடிவைத்துக்கொண்டால் அதுவால் என்ன பயன்

பிறந்துவிட்டோம் இறப்பதற்குமுன்னால் எதாவது நல்லது செய்துவிடுவோம் என்ற நல்நோக்கமிருந்தால் எதையும் செய்வோம்.

என் எழுத்துபணி நல்லவிதமாக அமையவேண்டும், பிறறின் மனம் நோகாதவாறு என் எழுத்துக்கள் சொல்லும் எதுவும் பயன்தராமல் வீணாகாதவாறும் இருக்கவேண்டும். பொய்களை முடிந்தவரை தவிர்த்து எழுதவேண்டும்[[சிரிப்பதுபோல் தெரிகிறது கவிதைக்கே பொய்தானே அழகு என சொல்வது காதில் கேட்கிறது] நல்லெண்ணங்கள் உருவாக என்எழுத்துக்கள் ஒரு காரணமாக அமையவேண்டும் என்பதுதான் என் உளமார்ந்த ஆவல்.

அதற்கு தாங்களைவரின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.நாம் ஒரு மனிதன் மேலே செல்வதற்கு ஏணியாக இல்லாவிட்டாலும் கீழே விழுந்துவிடாவன்னம் அவனுக்கு ஒரு கையாவது கொடுத்து பிடித்து இழுக்கவேண்டும். நீங்களைனைவரும் இதுவரையில் கொடுத்துவந்த ஆதரவுபோல் மேலும் என் படைப்புகளுக்கு கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுக்க இன்னும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்..

இதுவரை நான் எழுதிய எழுத்துக்களிலும் பின்னுட்டங்களிலும் யார்மனதும் நோகும்படி எழுதியிருந்தால் இறைவனுக்காக என்னைமன்னிக்கவும்

எனக்கு தமிழில் நிறைய எழுத்துப்பிழைகள் வருகிறது இருந்தபோதிலும் தமிழ்மீதிருந்த அளவுகடந்த பிரியத்தினால்தான் என்னால் என் எண்ணங்களுக்கு எழுதவடிவம் கொடுக்கத் தூண்டுகிறது. முடிந்தவரை பிழைகள்வராதவாறு எழுத முயற்ச்சிகிறேன்

நிறைகுறைகளிருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்,
தட்டிக்கொடுப்பதுமட்டுமல்ல நட்பு
தவறிழைக்கும்போது தட்டிக்கேட்ப்பதும்தான் நட்பு.
இதுவரை எனக்கு ஊக்கமும் ஆதரவும் தந்ததுபோல் தொடர்ந்துவரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்..
தாங்களனைவருக்கும் என்மனமார்ந்த நன்றியினை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்..

என்றென்றும்
அன்புடன் மலிக்கா.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது