நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நிம்மதியென்னும் வெளிச்சத்தில்.


கடந்தவைகளில்
கசப்பானவைகளை கடத்திவிடு
மனதைவிட்டு வெகு தூரம்

நடந்தவைகளில்
கெட்டதைதவிர நினைத்துக்கொண்டிரு
நெஞ்சின் ஒரு ஓரம்

நாட்களில் ஏதுமில்லை
நல்ல நாள்
கெட்ட நாளென்று

நேரத்தில் ஏதுமில்லை
நல்ல நேரம்
கெட்ட நேரமென்று

எல்லா நாட்களும்
நல்ல நாட்களே!
என்றெண்ணும் மனமிருந்தால்

எல்லா நேரமும்
நல்ல நேரமே!
என்றெண்ணும் தெளிவிருந்தால்

எந்நாளும் பொன்னாளே
எந்நேரம் பொன்னேரமே

விடியும் ஒவ்வொரு பொழுதிலும்
வெளிச்சமுண்டாகி
இருளகற்றுவதுபோல்

இப்பிரபஞ்சத்திலுள்ள
இதயங்களனைத்தும்
புதிதாய் பிறக்கும்

ஒவ்வொரு பொழுதும்
நிலவு ததும்பும் 
நீரோடையாகட்டும்
 
நாளும் பொழுதும்
நிம்மதியென்னும் வெளிச்சத்தில்
நீராடட்டும்...

டிஸ்கி// வீண்விரயமானகும் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்த்து.எந்நாளும் மனம் மகிழ்ச்சியில்  திழைக்கவும்.  நிம்மதிகள் தழைக்கவும்.நாடு நலம் பெறவும். நல்லவர்கள் பெருகவும். வறுமைகள் நீங்கவும். வருமானம் செழிக்கவும்.  மனமுருகி இறைவனிடம் வேண்டுங்கள்.
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது