நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இறுதியின் விளிம்பில்


நொடிகளும் நிமிடங்களும்
நாட்களும் மாதங்களும்
வெகுசீக்கிரம் உருண்டோடி
வருடத்தின் விளிம்பில் நின்றபடி
கடந்துவந்தவைகளை மனம்
கலைத்துப்போட்டு நினைக்குதடி!

கசப்புகளும் கஷ்டங்களும்
கலக்கத்தை கொண்டதோ!
சோகங்களும் வருத்தங்களும்
சோர்வுகளை தந்ததோ!
அழுகைகளும் ஆராரணங்களும்
ஆழ்மனம் உண்டதோ!

மகிழ்வுகளும் தித்திப்புகளும்
மனமேற்றுக் திளைத்ததோ! - சில
சந்தோஷங்களும் சகிப்புகளும்
சாந்தியாகி நின்றதோ!
பூரிப்புகளும் புன்னகைகளும்
பூந்தோட்டவாசம் வீசியதோ!

எண்ணியவைகள்
எல்லாம் நல்லவையே!
ஏனோ அவற்றில்
அல்லவைகளும் அண்டிக்கொண்டு
அனுதினமும்
அவதிக்குள்ளாக்கின!

எல்லாம் அன்பல்ல என்பதை
எடுத்துரைத்தவைகளும்
எல்லாமும் நன்மையல்ல என்பதை
அடித்துரைத்தவைகளும்
எல்லாத்திலும் தீமையுமுண்டு என்பதை
படிப்பினை தந்தவைகளுமாய்!

செய்தவைகளில் ஒன்றும்
சொல்லும்படியாக இல்லையோ
சொல்லியவைகளில் எதுவும்
செய்யமுடியவில்லையோ!
சொற்ச்செயல் எவற்றிலும்
சிறப்புகள் பதியவில்லையோ!

உலக நடப்புகளில்
ஓங்கிப்பெருகும் குற்றங்களும்
ஊர்த்தெரு பழக்கங்களில்
ஒய்யாரமிடும் தீங்குகளும்
தனிமனித ஒழுக்கங்களில்
தரம்குறையும் நடத்தைகளும்!

நகர்ந்த நாட்களிலோ
நடைபயின்ற வருடத்திலோ
குறைகளேதுமில்லை!
நாட்களில் நகர்ந்த
வருடங்களில் நடைபயின்ற
மனிதர்களிடமும் மனங்களிலும்
பலகுறைகள் பெருந்திரைகள்

இனிவரும் வருடத்திலாவது
இன்னலில்லா நல்லவைகளையே
சொல்லிலும் செயலிலும் எல்லாரும்
சிறப்பாய் செய்தருள
சங்கைமிகு இறைவனிடம்
சிரம்தாழ்த்தி கேட்கிறேன்...
 =================================


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஒளிவீசும் வெப்பத்தட்டு..
இறையளித்த திருவிளக்கு
வெப்பம் சுமந்துலவும் விசைவிளக்கு
துயிலெழுப்பும் தூண்டாமணிவிளக்கு
தன்  ஒளிக்கதிரால் புவியீர்த்து
இவ்வுலகின் இருளகற்றி
வெளிச்சம் தரவந்த ஒளிவிளக்கு!

உலகில் வாழும் உயிர்களுக்கு
ஊட்டம்கொடுத்து
வாட்டாம்போக்கும் வள்ளலாரே!
உன் வரவில்லையெனில்
வாடிப்போகும் நாரிப்போகும்
உயிர் வாழும் யாவும் சூரியரே!

உன்னொளியில் கடன்வாங்கி
இருள் நீக்கும் வெண்ணிலவும்!
உன் கதிர்வீச்சில்
உடல் பிணிதீர்க்கும் மானிடமும்!
உன் வரவுக்காக
இயற்கைமொத்தம் காத்திருக்கும்!
உன் கதகதப்பில் இவ்வுலகே
குளிர்காயும்!

அதிகாலை உன்வரவு
அமைதி காக்கும் - வானின்
உச்சிமீது நீ அமர்கையில்
உஷ்ண வெப்பம் கூடும்!
அந்தி நீ சாய்கையில்
அழகொளிகூட்டி
அடிவானும் நாணம்கொள்ளும்!

உன் வரவில் மந்தமெனில்
மழைமின்னலிடிக்கு கொண்டாட்டம்!
உன் வரவேயில்லையெனில்
மண்மீதிருக்கும் உயிர்களோ திண்டாட்டம்!

என்வீட்டு முற்றத்தில்
உனது ஒளிக்கீற்று - கண்டதுமெழும்
என்மனக் கூட்டுக்குள்ளே
எண்ணிலடங்கா கவிப்பாட்டு!
உனதொளிக்குள் ஒய்யார  வண்ணமிட்டு!
உலகைச் சுற்றும் நீயொரு வெப்பத்தட்டு!

மறையோனளித்த
இவ்வுலகின் மகத்துவமே
இச்சுடர்விளக்கு!
இச்சூரியரின் கடுஞ்சூட்டில்
இளகி கருக வேண்டாம்
மறுவுலகினில் மானுடமே யென
மன்றாடித் தொழுதிடுதே தினம் என்மனமே...


சூரியன் என்ற தலைப்பிற்கு கவிதை வயல் 202காக எழுதியது...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சுதந்திர சிறை.


சிறகிருந்தும் சிறையில்
இறகு பிடுங்கபட்ட நிலையில்
எக்கி எக்கி பார்த்தும்
எட்டாக் கனியாய்
எங்கோ எங்கெங்கோ
எள்ளிநகையாடியபடி

ஏனென்று கேட்டால்
என்னடி எகத்தாளமா
இடிசொல்,,

எதற்கென்று கேட்டால்
என்னம்மா திமிர்தனமா
பழிச்சொல்,,

எனகென்று கேட்டால்
என்னடி எடுப்புதனமா
கடுஞ்சொல்,,

சுமைக் கல்லைகட்டி
சுகமாய் பறக்கசொல்லும்
சுதந்திரம்,, பலருக்கு

சுகபோக வாழ்வுகொடுத்து-மன
சுறுக்குபோட்டு நிலைகுலைக்கும்
சுதந்திரம்,, பலருக்கு

தரத்தையும் கெடுக்கும்
தரத்தையும் கொடுக்கும்
சு தந்திரம்
தந்திரமிக்கது
தரம் பார்த்தே
தங்குமிடத்தை
தேர்வு செய்கிறது...

 கவிதை வயல்-- 186--

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மண்ணும் நானும்...

நீ என் ஆதிமூலம்
நான் உனது அங்க நாளம்

உன்னையன்றி
என் பயணம் போக
வேறு வழியில்லை

நீதானே
என் வாழ்க்கையின்
வரையறுத்த எல்லை

உன்மீது நான்போடும்
ஆட்டமெல்லாம்

என் ரத்தநாளங்கள்
அடங்குவரையே தொடரும்

உன்னைப்போலவே நானும்
பொறுமை காக்கிறேன்

பொறுக்க முடியா நிலையில்
சிதறி உடைகிறேன்

புன்னகையென்னும்
பூக்கள் பூக்கிறேன்

வாடும் நிலைதனில்
வதங்கி சிதைகிறேன்

பாச நீரூற்ற
படர்ந்து வாழ்கிறேன்

பாசம் வேசமாக
பட்டுப்போய் சாய்கிறேன்

..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெருமை...தற்பெருமை கொள்ளல்
தனதான நாசம்
பெருமை கொள்ளல்
தனக்கான நேசம்

எல்லாமும் நலமோடு
ஏகயிறைவன் நம்மை
படைத்ததையெண்ணி
பெருமைப்பட்டுக்கொள்

ஏற்றத்தாழ்வு வாழ்வினில்
ஏதேனும் ஒன்று
ஏற்றமிருந்தாலும்
பெருமைப்பட்டுக்கொள்
 
புகழ்ச்சியற்ற    
புகழாரம் கிடைக்கும் தருணம்
புன்னகையோடு
பெருமைப்பட்டுக்கொள்

உன்னத அன்பு
உனைதேடி அடைந்தால்
உணர்வுகள் உருக
ஒரு சொட்டு கண்ணீர்விட்டு  பெருமைப்பட்டுக்கொள்

என்னால் மட்டுமே முடியுமென்ற
இறுமாப்பு கலைந்து
என்னாலும் முடியுமென்ற நம்பிக்கை  
உன்னக்குள்  உண்டெனில்     பெருமைப்பட்டுக்கொள்

யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள்
எளிதில் உன்னை வந்தடைந்தால்
உனது திறமை எண்ணி
உளமார    பெருமைபட்டுக்கொள்

கொஞ்சம் அழகோடு
நிறைந்த மனதோடு
விட்டுக்கொடுத்து வாழும்
வாழ்க்கைத்துணை அமைந்தால்
மனதார  பெருமைப்பட்டுக்கொள்
     
உப்பு புளி காரம் சேர்த்து
அழகுற சமைத்து
உன்னவர்  ருசித்துண்பதோடு
உனை பாராட்டும்போது
உள்ளுக்குள் தட்டிகொடுத்து
பெருமைபட்டுக்கொள்

பிறப்பை எண்ணி  
வாழ்வை எண்ணி
இயற்கையெண்ணி  
எல்லாத்தையும்விட
எல்லாமுமான நம்மை  படைத்ததை எண்ணி
படைத்தவனை எண்ணி பெருமைப்பட்டுக்கொள்

தற் பெருமைகொள்வதிலிருந்து
தவிர்ந்துகொள்

பெருமை படுவதில்
பெருமைபட்டுக்கொள்...

தமிழ்தேர் மாத இதழுக்காக எழுதியது....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இந்திய விடுதலையில் சிந்திய குருதிகள்


.

சுதந்திரம் சுதந்திரம் என்றே பேச்சு
சுதந்திரத்திற்காக போனதே 
எங்கள் முன்னோர்களின் பல பல மூச்சு
செங்குருதிகள் அன்று ஆறா ஓடிச்சிச்சே- அதில்
சிதைந்த சிதையப்பட்ட உடல்கள் ஏராளமாச்சே

மூவர்ணத்தில் மூச்சுவிட்டு பறக்கும் தேசியக்கொடியே - எங்கள்
முன்னோர்கள் சிந்திய குருதிகளும் 
உங்கள் கம்பதிற்க்கு இன்றும் உரமாகுதே!

ஆங்கிலேய அடிமாட்டுத் தொழுவத்தில் 
அடகுவைக்கப்பட்ட அடிமைத்தனத்தை
ஆயிரமாயிரம் உயிர்பலிகொடுதல்லவா மீட்டுக்கொண்டோம்

இந்திய வீட்டுதோட்டத்து கனிகளுக்கு 
எங்கிருந்தோ வந்தவர்கள் விலைநிர்ணயிக்க
வாயில்லாப்பூச்சிகளாய் வக்கத்து நின்றதினை தகர்தெரிய
வாலெடுத்து விரட்டியல்லவா 
எங்கள் விலாசங்களை வாங்கிகொண்டோம்

அந்நியர்களை அப்புறப்படுத்தி 
அடிமைத்தனதிலிருந்து விடுதலைபெற
அனைவரோடிணைந்து அயராது பாடுபட்டபோதும்

எங்களின் சுதந்திர சரித்திரம் மட்டும்
இன்றளவும் மறைக்கப்பட்டும் மறுக்கபட்டும்
இந்திய மண்ணின் சுதந்திர வாசனையில்
இஸ்லாமியர்களின் குருதிகளின் வாடையும் 
இரண்டரவே கலந்திருக்கும்

இரட்டிப்புகள் செய்தாலும் 
இல்லையென்று மறுத்தாலும்
வீசும் காற்றிலது கலந்தே மணம் பரப்பும்

எதுவென்றபோதும் நாம் வென்றோம்
நம்மினம் வென்றோம், நம்மிடம் வென்றோம்
வாருங்கள் ஒன்றாய் இணைந்து நம்பாரதம் காப்போம் 
வந்தே மாதரம் என்போம்....

##முகநூலில் போட்டிக்கவிதை##


 https://m.facebook.com/photo.php?fbid=762736270429017&id=100000779522721&set=gm.1438304153124982&ref=bookmark

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கருவறைக் கணவன்உனக்கும்
எனக்குமான பந்தம்
அழகினை உண்டதல்ல
ஆத்மார்த்தம் கொண்டது
என்பதை நிரூபிக்க
என் கருவறை நிரப்பிய நீயே
உன் மனக் கருவறைக்குள்
எனையும் காப்பதில்
வெட்டவெளிச்சமானது
வெளியுலகிற்கு ;;.அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வேர்களைத்தேடி.


மலேசிய தொலைகாட்சியில் முதன் முறையாக மலிக்காஃபாரூக்.

மலேசிய தொலைக்காட்சியான ஆஸ்த்ரோ டிவி.மற்றும் நம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்கும் "வேர்களைத்தேடி" நிகழ்ச்சியில் மலேசியாவிற்க்கும் இந்தியாவிலுள்ள எங்கள் ஊரான முத்துப்பேட்டை க்கும் உள்ள தொடர்பு சம்பந்தமான உறவுப்பாலம் அமைந்ததை வெளியுலகிற்க்கு எடுத்துரைகும்படியான நிகழ்ச்சியில் எங்கள் வீட்டில் பெருநாள் கொண்டாட்டதோடு மலேசிய மண்ணில் எங்கள் உழைப்பின் வேர் எவ்வாறு விரிச்சமடையச்செய்தது என்பதின்
பின்னனிய நிகழ்வுகளும் பகிரப்பட்டது. 

இன்ஷா அல்லாஹ் இன்று மலேசிய நேரம் இரவு எட்டு 8. மணிக்கு இந்திய நேரப்படி மதியம் 5,மணிக்கு ஆஸ்த்ரோ தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்

..இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கும் அதன் நிர்வாகத்தார்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது அன்பு நிறைந்த ஈத் பெருநாள் வாழ்த்துகள்..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

பெரும் உபகாரி .
கொடைகளில்பெருங்ககொடை
இறையருளும் திருக்கொடை

இம்மாதத்தில் பிடிப்பது
உண்ணா நோன்பு மட்டுமல்ல
இது உயர்பதவியையும் பெற்றுதரும்
உன்னதமான மாண்பு!

பசியின் நிலையறிய- இழி
இச்சைகள் களைந்தெறிய
வரியவர் நிலை உணர்ந்து
வாரி வழங்கும் குணமறிய!

பதினொரு மாதங்கள் சேர்த்த
பாவங்களை எண்ணி கரைந்தழுக -இனி
பாவக்கறைகள் படியாதிருக்க
படைத்தோனை நினைத்துருக !

காலி வயிறுக்கும்
கடும் நா வறட்சிக்கும்
மனோ இச்சைகளைத் துறந்து
மறையோனை நினைப்பதற்க்கும்!

பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து
பாவசெயல்களிலிருந்து விலகியிருப்பவைக்கும்
கிடைத்திடுமே கூலி கூலி நற்கூலி
இறைவன் வழங்கிடும் ஏற்றமிகு கூலி!

கண்ணீர்விட்டு கையேந்தி கேட்டிடு
கருணையாளன் தந்திடுவான்
கண்ணியமிகுந்த
சுவர்கமென்னும் உயர் பதவி

...விருந்தாளியல்ல நோன்பு
உடலுக்கும் உலக்குக்கும் பல
நிலைகளை புரியவைத்து பாடஞ்சொல்லித்தரும்
பெரும் உபகாரி.......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நான் அவளின் பிரதிநிதி ...
உன்னை ஒருபோதும் நான்
மறக்கப் போவதில்லை
வெருக்கப் போவதுமில்லை

என் வாழ்வின்
திசையையே திருப்பியதும் நீ
திக்கற்று நிற்கவைத்ததும் நீ

உன்மூலம்தான்
அடுத்து கெடுக்கும் நரிதனத்தை
உள்ளம் அறிந்துகொண்டது!

உன்மூலம்தான்
பொய்மையின் கயமைத்தனம்
நெஞ்சதிற்கு புலப்பட்டது!

உன்மூலம்தான்
நல்லுள்ளத்திலும் தீயவை
ஒளிந்திருக்குமென்பது உணர்வுக்கெட்டியது!

உன்னால்தான்
உயிருடன் புதைவதெப்படியென்பது
உணர்த்தப்பட்டது!

உன்னால்தான்
ஊனமான உள்ளமும்
உருப்பெற கற்றுத்தரப்பட்டது!

அத்தனைக்கும் மேலாய்,,,,,

உன்னால்தான்
வழி தவறயிருந்த என் பயணம்
நேர்வழி பெற்றது

அப்படியிருக்க!
எப்படி மறப்பேன் உன்னை
உன் சொல்லை உன் செயலை!

உன்னை என்று மனம்
மறக்கிறதோ
அன்றே என் சுயம் செத்து மடியும்,

சுயமற்று வாழ்வது கோழையன்றோ
அஃதே மறவேன் மறவேன்
மரணத் தருவாயிலும் உனைமறவேன்....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என்னில் நீ எது!?
அந்தரத்தில்
அறுந்து தொங்கும்
வார்த்தைகள்
தனிமையின்
வெறுமை சொல்கின்றன!

நாவிலிருந்து
நழுவி விழுந்து புதைந்த
வார்த்தைகள்
மனப் புழுக்கத்தின்
நெறுக்கத்தை உணர்த்துகிறன!

இதயத்தின்
உள்சென்று ஒட்டிக்கொண்ட
வார்த்தைகள்
நெஞ்சத்தின்
நேசிப்பை கூட்டுகின்றன!

நீ!

அறுந்து தொங்கும்
வார்த்தைகளா?

நழுவி விழுந்த
வார்த்தைகளா?

ஒட்டிக்கொண்ட
வார்த்தைகளா?

ஒன்றும் புரியாமல்
மெளனமுடுத்தி தவிக்கிறேன்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உச்சதிலிருக்கும் ஒய்யாரி.


ஓடி ஓடி விளையாடி
ஒய்யாரத்திலேறும் விலைவாசி
உன்னால் பலருக்கு ஒப்பாரி
உனக்கோ  தினம் கச்சேரி
உன்னைச்சொல்லி குற்றமில்லை-ஆனாலும்
உன்னால்தானே பெரியத்தொல்லை!

உன்னாட்டத்தை தடுக்க யாருமில்லை
உன்முன்னேற்றத்தாலே பல
உயிர்கள் கொலை தற்கொலை
இதெல்லாம் எதனால் யாரால் வந்த பிழை
இப்படியேப் போனால் என்னாகும்
இம்மானிடரின்  நிலை

நாளுக்குநாள் அதிகரிப்பு
விலைவாசியின்  நச்சரிப்பு
ஏழையெளிய மக்களுக்கு
என்றுமே பஞ்சத்தின் கிலிபிடிப்பு
நடுத்தர வர்கத்திற்கு
ரெண்டு கெண்டான் பரிதவிப்பு

சுரண்டலுக்கு கட்டவிழ்த்து
சுருட்டலுக்கு சொகுசமைத்து
சுலபமாய் சொத்துசேத்து அனுபவிக்க
கட்டுகட்டாய் கிடப்பில் கிடக்கு
கள்ளநோட்டுக்கள் பதுக்கிவைத்து
சிலர்கள் வாழ பலர்கள் வதைத்து
சிம்மாசனத்திற்கலையும் கூட்டமைப்பு

பூனைக் கண்ணை மூடிக்கொண்டு
உலகமே இருட்டென்ற கதைகதைப்பு
கேப்பையில் நெய் வடித்து
கேட்பாருக் கூற்றும் வித்தைகற்று
விதவிதமாய் விளக்கஞ்சொல்லி
வாயடைக்கும் வசதிவாய்ப்பு

மலிவு விலையில் மயக்கம் கொண்டு
இலவசத்திற்கு இணக்கம் தந்து
மந்தையாட்டுக் கூட்டம்போல
மழுங்கிபோன மனிதரால
எகிறிபோகும் விலைவாசியேனென
எதிர்த்து பேசவும் வெடவெடப்பு

உயர்வாசி வலைவீசி
ஊடறுக்கும் விலைபேசி
குடிசைவாசி நடுவர்கவாசி
நட்டாத்தில் நிற்கும் நிலையோசி
தலைக்கேறிய விலைவாசி
தரிகெட்டு ஓட நீயோசி

உச்சதிலிருக்கும்  விலைவாசி
உருண்டுவிழ மாற்றியோசி
சுருண்டு கிடக்கும் நீ எழுந்து
சுறுசுறுப்போடு உழைப்பைநேசி......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மலையேறி போச்சிங்கண்ணே                                              
மாசற்ற காதலெல்லாம்
மலையேறி போச்சிங்கண்ணே
காதலர்கள் மாசாகிப் போனதால
களிசடைக் காதலாசிங்கண்ணே

காசுள்ள காதல் மட்டும்
களிகண்டு நிற்குதண்ணே
கற்புள்ள காதலெல்லாம்
கசிங்கிதான் போசிங்கண்ணே

மனமொப்பி வாழும் வாழ்க்க
மண்ணுக்குள் புதையுதண்ணே
பணப்பையி நிரம்பக் கண்டா
பம்பரமா மனங்க சுத்துதண்ணே

மனம் ஊனம் ஆவதால
மனிதமெல்லாம் சிதையுதண்ணே
உடல் ஊனம் பெரிசுயில்ல-இத
உணரும் மனம் எவ்ளோ அண்ணே

மதிப்புள்ள காதல் கண்டால்
மனமகிழ்வு கொள்ளுமண்ணே
மாசில்லா காதல் வாழ்ந்தால்
மாசற்று பூமி சுத்துமண்ணே....


 ===================================
காதல் என்ற எழுத்துக்குதான்
கால் துணைக்கால் முக்கியம்
மாசில்லா காதலுக்கு தேவையில்லை
மனமிருந்தால் தோளே காலாகும்
இணையே பெருந்துணையாகும்.
 ==========================================கவிதை வயல் 62க்காக எழுதியது..


 ”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

காரணம் அறிவீரோ?
உயிர்வதை கூடாதுன்னு
உயரிய சட்டமிருக்குங்க
அது எந்த உயிரென்பதிலே

தெரியாமத்தானிங்கே குழம்பிக் கெடங்குங்க

மனிதமிழந்து மானமிழந்து
மனிதர்கள் வாழும் உலகினில்
மனசாட்சி எதிர்பார்ப்பதெல்லாம்-நம்
மடமைதானுங்க

கேவலமா கூடிக் குலவி
குழந்த பெக்குறா
அப்பன் பேரூ தெரியாததால
அனாதையாக்குறா

ஆயி அப்பன் சேந்தும் பல
கூத்து நடத்துறார்
தன் கூத்து நடத்த தடையிதுன்னு
சிசுக்கள தொரத்தி வதைக்கிறார்

ஐந்தறிவும் ஆறறிவும்
ஒன்னாச்சேருது -அது
அவங்க பணபாசையில
ஜீவகாருன்யமாகுது

நாகரீக மெத்தயில
நாலுகாலு மிருங்கிடக்குது-கேட்டா
நன்றியுள்ள ஜீவனிதுதான்னு
நம்ம குத்திக் காட்டுது

ஐந்தறிவோ ஐயமின்றி
அறையில் தூங்குது
ஆறறிவோ
அடைக்காக்க யாருமின்றித் தவிக்குது

என்ன சொல்லி யார திட்ட
ஒன்னும் புரியல
காரணங்கள் என்னன்னு கண்டும்
காரி உமிழ முடியல

காரணங்கள் கொட்டிக் கெடக்கு
கேடு கெட்ட பூமியில்
பூமியென்ன செய்யுமிந்த
மனிதர் செய்யும் கேட்டினில்..... கவிதை வயல் - 60, திற்காக எழுதியது...


  ”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

துரோகியாகும் தோழமைகள்..

[யாரோ]

---------------------------------------------
காதலை
சேர்த்துவைப்பதாய் எண்ணி
கழிசடைக் காதலர்களை
கைகோத்துவிடும் தோழமைகள்

தாங்கள் செய்வது
சரியா தவறாவென
உணர்வதில்லை
சேருமின சொந்தங்களின்
உணர்வுகள் செத்துமடிவதையும்
அறிவதில்லை
புரிந்தும் பலர்
பொருட்படுத்துவதேயில்லை

தோழன் வாழ உதவுகிறான்
தோழன்-தன்
தோழனின் தாய் தந்தைகளுக்கு
துரோகமிழைத்து-அவர்களின்
பாசத்திற்க்கு பங்கமிழைவித்து

தோழமைக்கு
உதவுவது குற்றமில்லை
உதவினோரின் குடியின்
உயிர் குடிக்கும் உபத்திர
உதவிகள்  புரிவது சரியில்லை

காதலைசேர்ப்பது பாவமில்லை-அது
கழிவுக் காதலென அறிந்தும்
கூட்டுக் குடும்பத்தை
குலைக்க நினைப்பது
கொஞ்சமும் நியாயமில்லை

காதல்களில் பல
பொய்களின் பிறப்பிடம்-மன
நோய்களின் கூடாரம்
உயிர் உருஞ்சம் பிசாசினம்-அதற்கு
துணைபோகும் தோழமைகள்
துரோகங்களின் பங்காளியினம்..


 "கவியருவி
 அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சந்தேக"தீ"”தீ”க்குச்சி யில்லாமல்
”தீ”மூட்டி எரிக்கும்
தீபங்களைக் கூட
”தீ”பந்தங்களாய் மாற்றும்

தேள்கொடுக்கும் சொல்லால்
தினந்தோறும் விசமேற்றும்
கொடுஞ் செயல் புரிந்து
கருநாகத் தீண்டலுண்டாக்கும்

சந்தோஷ சாம்ராஜ்ஜியத்தை
சந்தி சிரிக்க வைக்கும்
சம்சார சந்தனத்தை
சாக்கடையிலிறக்கி மகிழும்

இனிவைகளை இழவுகளாக்கி
ஈனங்களை துணைக்கு அழைக்கும்
பூச்சியும் புழுவாகி
புண் நோண்டித்தின்று பிழைக்கும்

தேகம்
சந்தேக தீயில் வேகும்
சந்தோஷம்
சந்தேக தனலில் கருகும்

தன்
வீட்டையேக் கொளுத்தி
வெளிச்சம் கிடைத்ததென
வெற்றிக் களிப்பில் மிதக்கும்

வெற்றியின் கூலி -
தன் குடும்பமெரிந்த சாம்பலே
என்றுணரும் வேளையில்
சாம்பலும் காற்றில் கலக்கும்

சந்தேக நோயால்
தனக்கே பித்து பிடிக்கும்
மனமுரண்டுக்குமுண்டு
மருந்து

இல்லையே

இழிந்து வருத்தும் சந்தேகத்திற்கு
எதுவும்
வேண்டாம[டி]டா சந்தேகம்-அதில்
இழந்திடுவாய் உன்னையும்..

”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இதற்குத்தானே இத்தனையும்வகை வகையாய் சுவை சுவையாய்
சுத்திகரிக்கப்பட்ட உணவு
வாயிருந்தும் கையிருந்தும்

எடுத்துண்ண முடியாத
உடல் வருத்தும் நோவு

உண்டு களித் தொதிக்கிய
உண்ணாமல் குதறித் தள்ளிய
மிச்ச மீதி கழிவு
உயிர் போக்கும் பசிக்கு
உதவும் கவள உணவு

நுனி நாக்கின் ருசி
அடி நாக்கடையும்போது மறைந்து
உண்டதெல்லாம் செரித்த பின்னே
உமட்டிக்கொண்டு வரும் இழிவு

இதற்குத்தானே இதற்குத்தானே
எதையும் செய்ய தூண்டி
எல்லை தாண்டும்
எல்லாமும் தாண்டும் மனதுபசியென வந்துவிட்டால்
பத்தென்ன பதினொன்றுமறியாது
ருசிகொண்ட பேர்களுக்கெல்லாம்
பசியினருமை பார்த்தாலும் உணராது

எத்தியோப்பியா நிலை[உடல்]களை
ஒரு கணமேனும் சிந்தித்து பாரு
ஒரு பருக்கையேனும்
சிந்திவிட மனம் வருமோ கூறு

மலமாகப்போகும் உணவுக்குதான்
இத்தனை பெரும்பாடு - மனிதா[பிறர்]
மரணிக்குமுன் பசிக்கு
இயன்றவரை நல் உணவளித்து உதவு...கவிதை வயல் - 40  திற்காக எழுதியது.

 ”கவியருவி”
 அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

முடவனா? முயற்சிப்பவனா?
மின்மினிகளென்றும்
விண்மீன்களாகப் போவதில்லை
இருந்தபோதும்

இருளைக் கீறி சிறு
வெளிச்சம் தரமாலது வீழ்வதில்லை

எட்டு நாட்களென்றபோதும்
பட்டுபூச்சி
சிறகடிக்காமல் சாவதில்லை
தன்னிறப்பில் பிறர் சிறக்க
வழிசெய்யாமல் போவதில்லை

அறிவிலொன்று குறைந்தவைகளே
ஆகாசம் தொட எண்ணுகையில்
ஆறறிவு பெற்ற நாமக்கேன்
அசதி வெல்ல முயற்சியில்லை

அலைவதிலும் திரிவதிலும்
அர்த்தமில்லை-வீணாக
பொழுதை கழிப்பதிலும்-பிறருக்கு
பொதியாய் கிடப்பதிலும் பெருமையில்லை

தெருவினைகள் ஊர்வினைகள்
மனிதருக்கு அழகில்லை
பொறாமைகள் பெருந்தீவினைகள்
வாழ்வுக்கு சிறந்ததில்லை

திருவினைகள்
ஏற்படவே முயற்சிக்கனும்
தீவிர முயற்சிகள்தான்
ஏக திருப்பங்களையும் உண்டாக்கும்

சோர்வுகொண்டு வீழ்ந்து கிடந்தால்
சுறுசுறுப்பு எங்கே யிருந்துவரும்
முடங்கிக் கொண்டே
முத்தெடுக்க ஆசைக்கொண்டால்
மூச்சல்லவோ மூர்ச்சையாகும்

முயற்சிக்க முயற்சிக்க
முட்பாதைகளும் பழகிப்போகும்
நடக்க நடக்க
நாளடைவில் முள்ளும் கல்லும்
முருங்கைப் பூவாக மாறும்...


”கவியருவி”
அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஊளையிடும் சோதனைகள்இறை சோதனையின்
இடிபாடுகளுக் கிடையில்
அகப்படாதோர் யாருமுண்டோ!

எலும்பும் சதையும் போர்த்திய
எந்தவோர் மனிதனையும்
விட்டு வைக்காமல்

அச்சமூட்டி எச்சரிக்கும்
இறை சோதனைக்கு
உட்படாதோர் யாருமுண்டோ?

பனிப் புயலென்றும்
சூராவளிக் காற்றென்றும்
கடலின் கொந்தளிப்பென்றும்
எரிமலை குமுறலென்றும்,

புதிது புதிதாய் பெயர்வைத்தபடி
சுற்றும் பூமியையே சூரையாடுதடி
இயற்கையும் இயற்கையெய்தபடி
இவைகள் இறைசோதனையின் சாகுபடி!

சாகவரங்கள் பெற்றோர்
இப்புவியில் உண்டோ
சாதனை பட்டியலில்
சாவற்றவறென்ற முத்திரையுமுண்டோ!

எழும்புப் பிண்டங்களை எச்சரிக்கவே
எதிர்பாரா விதமாய் நிலைகுலையும்படி
உச்சரித்து செல்கிறது
ஊளையிடும் சோதனைகள் போதனைகளாய்!

இருந்துமேனோ -இவ்வுலக
மாயையில் மவுண்டுகொண்டே
மனிதக் கூட்டங்கள்
உயிரிருந்தும் ஜடங்களாய்...

-----------------------------------

கவிதை வயல் - 27

  ”கவியருவி”
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஏழ்மையிலும்..


ஓலக் குடிசையில மச்சான்
ஒன்னா யிருப்போமுங்க
கஞ்சிகூட கருவாடு சேத்துண்டு
கொஞ்சி கொஞ்சி மகிழ்வோமுங்க

கடனும் நோயுமில் லாமதான் மச்சான்
கவனமாக இருப்போமுங்க
கொஞ்சநஞ்சம் சேத்துவச்சி நாம
கொலந்தகள படிக்கவைச்சி பாப்போமுங்க

கந்தல் துணியானாலுமே மச்சான்
கசக்கிகட்டி அணிவோமுங்க
குடிசை ஓட்டைவழி நிலா வந்துதான் நம்ம
குதூகலித்து வைக்குமுங்க

மேல்தட்டபாத்து எச்சிலூ ராமத்தான் மச்சான்
கீழ்தட்டகண்டு கண்ணீர் விடுவோமுங்க
அடுத்தவங்கள பாத்து ஏங்கமாத்தான் நாம
அழகாக வாழ்வோமுங்க

வாழ்க்கைக்கு தேவையெல்லாம் மச்சான்
வசதி வாய்ப்பு மட்டுமில்ல
அன்பும் அரவணைப்பும்தான் வாழும்
வாழ்வுக்கே ஆதாரமுங்க

நிம்மதிகள் வேறெங்குமில்ல
ஏன்பொண்சாதியே
நெறஞ்சியிருக்கு ஓன் சொல்லுக்குள்ள
போதுமென்ற மனசுக்குள்ள-ஒரு
பூந்தோட்டமே இருக்குபுள்ள

மனமேத்து ஒத்துக்கிட்டா
ஏழ வாழ்க்கவிட இன்பமில்ல -மரிக்கொழுந்தே
போதும் போதும் இது போதும்புள்ள
உன்கூட ஈருலகமும் வாரேன்புள்ள
என்னக்கிம் இனிக்க இனிக்க வாழ்வோம்புள்ள.


”கவியருவி”
அன்புடன் மலிக்கா 
                                                                          இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சிந்திக்க மறுப்பதேனோ?


 அடிப்பெண்ணே!
பெண்புத்தி பின் புத்தியென்ற
பழமொழிக் கேற்ப
காலம் முன்னேறியும்
நீ பின்னோக்கியே

காதல் பறவையென்று
காமக் கழுகிடம் சிக்கி
மதியிழந்து
மட்டிலாது திரிந்து
கண்டதே காட்சி
கொண்டதே
கோலமென்றலைந்து

உன்பெண்மை கொத்தி
குதறிய பின்னே
மடியின் சுமையால்
மானத்தையு மிழந்து
தாய்வழி இறைகொடுத்த உயிரை
தரங்கெட்டோரின் இரைக்காக
கொடுக்கத் துணியுமுன்னை
மன்னிப்பதா?
தண்டிப்பதா?

மதியிருந்தும் கெட்டு விட்டு
விதியின்மேல் பழிபோட்டு
வீணாகிப் போகின்றாய்
வெளிவேசம் தெரியாமல்
வேடன்களின் மாட்டிக்கொண்டு
வீண்பழியும் சுமக்கின்றாய்
இன்னும் எத்தனை காலம்தான்
இப்படியே இருக்கப் போகின்றாய்!

மனிதத் தவறுகள்
மண்ணில் நிகழ்வது புதிதல்ல
தவறென தெரிந்தும்
தன்னையேத் தொலைப்பது தவறு
தவறியபின் தவறுக்கு பகிரமாய்
தற்கொலை செய்துகொள்வது
தவறிலும் தவறு

திசை மாறும் பறவைகள்
சிலமணி நேரம்
திக்கற்று நிற்குமே தவிர
தன் திசை நோக்காது-வீணாய்
தன்னுயிரை விடாது,
சிந்திக்கத் தெரியாத யினத்திற்கே
தன்னைக் காத்துக்கொள்ள
திறனிருக்கையில்-முன்பே
சிந்திக்க தெரிந்த பெண்ணே
உனக்கேன் பின்னே போகுது புத்தி

காசும் காமமும்தான் -இக்
காலத்தின் உயிர் நாடி
அதனால் போகுது
உன்போன்ற உயிர்கள் அடிக்கடி
பலமுறை யோசி
பாழா[பலா]ன
காதலை தொடங்குமுன்
ஒரே ஒரு நொடி
உன்னையே நேசி
உன் உயிரை விடுமுன்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உணர்வுகளின் வெளிப்பாடு!


                              கவியருவி
அன்புடன் மலிக்கா
முத்துப்பேட்டை
                                இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கற்றதென்ன? பெற்றதென்ன?கடந்த வருட நாட்கள்
கண்மூடி திறப்பதற்குள்
உருண்டோடி விட்டது
அதில் நீ
கற்றதென்ன?
பெற்றதென்ன?

இவ் வருடமேனும்
இதைச் செய்யனும்
அதைச் செய்யனுமென்ற
சபதத்தில் ஏதேனும்
செய்ததுண்டா?

உனக்கு நீயே
கேட்டுக்கொள்
எடுத்த சபதம்
கிடப்பில் கிடந்தால்
அடுத்த சபதத்தை
ஆரம்பித்து விடாதே!

வருடங்களோ
நாட்களோ
நாளிகைகளோ
நம் எண்ணங்களையும்
நம் செயல்களையும்
சீர்திருத்துமென்றால்
அந்நாளிலோ
அந்நாளிகையிலோ
அதனை செயல்படுத்தலாம்

ஆனால்
இதெல்லாம் செய்வதற்கு
ஒன்றுமில்லை

உன்மனதில் இருக்கு
உனக்கான உளி
அதனைக்கொண்டு
உன்னை செதுக்கு
மனதளவில்
தடுக்கவேண்டியதை தடுத்து
செயலளவில்
விலகவேண்டியதிலிருந்து விலகு
செய்யவேண்டியவைகளை
சிறப்புடன் செய்வதற்கு

உறுதியும் முயற்சியும்
உன்னிடமே இருக்கு
கூடவே
இறை நம்பிக்கையையும் பொருத்து
அதைக் கொண்டு
உன்னை நீயே
உருவாக்கு
உலகம் உன்னைக்கண்டு
வியாப்பிக்கும்
உன்னிடமும்
உளிகேட்டு யாசிக்கும்...


 கவியருவி
அன்புடன் மலிக்கா
முத்துப்பேட்டை
                                                                            இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது