நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விசமிரண்டும் விற்பனைக்கு...போதையும் புகையும்
புதைகுழியின் இருப்பிடம்
இதில்
புதைந்துகொள்ளவே  விரும்புதே
பேதைகொண்ட மனிதமனம்

அறிவிருந்தும் கெட்டவர்களை
அடிமையாக்க எண்ணிய
ஆங்கிலேயர்
விரித்த வலையிலும்
தானாய் விழுகிறது இவ்வினம்

ஓடாய் தேய்ந்து
உழைக்கும் பணத்தை
ஊதாரியாக்கும் உதவாக்கரைகளால்
அரசாங்கத்திற்கு
கோடி கோடியாய் வருமானம்

குடும்பம் குழந்தைகளை
இழந்தாலும்
குடித்து குடும்பழிப்பதிலும்
புகைத்து தன்னை புதைப்பதிலும்
இன்பம்காணும் தீவிரம்

தீவிரவாதிகளெல்லாம்
தீயவர்களென்று
தேடித்தேடி
ஒழித்தொழிக்கயெண்ணும்
அரசாங்கமுமே

தீயவைகளைளெனத் தெரிந்தும்
தீண்டித் தீண்டி தான் தன்குடும்பழிக்கும்
இத்தீவிரவாதிகளை
உருவாக்குவதும் ஊக்குவிப்பதும்
எவ்விதத்தில் நியாயம்?
இது மனுகுலத்தின் சோகம்…

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது