நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பட்டங்கள் பல



முதிர் கன்னியாய்
முப்பது வருடங்கள்
காத்திருந்தாலும்
ஏனென்று கேட்க்காத
ஊர் உலகம்

காதலித்தவனையே
கைபிடித்துகொண்டு போனால்
அவளுக்கு கொடுக்கும் பட்டம்
”ஓடுகாலி”


ஊரறிய கைபிடித்து
காலமெல்லாம் கூடவே
கடைசிவரை வருவேனென்று
கட்டியவன்
திடீரென்று கலட்டிவிட்டு
காணாமல் போய்விட்டால்

வாய்கூசாமல் இவளுக்கு
கொடுக்கும் பட்டம்
”வாழாவெட்டி”

கட்டிய நாள்முதல்
கட்டில் ஆடியும்
தொட்டில் ஆடாவிட்டால்
அட்ச்சதை தூவி
ஆசிர்வதித்த அதே வாயால்
அஞ்சாமல் கொடுக்கும் பட்டம்
”மலடி”


விதி செய்த சதியால்
கட்டியவன் காலமாகிப் போக
கலங்கி நிற்கும் அவளுக்கு
கலப்படமே இல்லாமல்
கொடுக்கும் பட்டம்
”விதவை”

அடி பெண்ணே!

படித்து பட்டங்கள் பல
பெறா விட்டாலென்ன
பெண்களுக்காகவே
பல பட்டங்களை
வாரி வழங்க காத்திருக்கிறது
வள்ளலான இவ்வுலகம்

வாழுந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால்
தன்மானமுள்ளவளென்று
உன்னை
இந்த தரணியே பேசும்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

அடியே அன்னகிளி


அடி கானகருங்குயிலே
கரிசல்காட்டு பொன்மயிலே
மாலவேளயிலே
உன்னகட்டிய மச்சான்
நாவருவேன்

தளதளன்னுசேலகட்டி
தலநிறைய பூவச்சி
தங்கச்சிலையாட்டம்
தமிழச்சியே காத்திருடி

சோலக்காட்டுக்குள்ள
நாம சோடிசேந்து போகையில
நம்ம காட்டிகொடுத்துவிடும்
உன் கெரண்டகால்கொலுசு

கெலட்டி வைச்சிபுட்டு
என்கைபுடிச்சி வாடிபுள்ள
கம்மாகரவோரம்
கதகதையா பேசிக்கொள்ள

உன் செந்தூரகண்ணத்துல
குழிஒன்னு இருக்குபுள்ள
அதகண்டுகொண்டே வருகையில
உனக்குள்ள விழுந்தேன்புள்ள

உதட்டோர மச்சமொன்னு
என்ன மொரச்சி மொரச்சி
பாக்குதடி
உயிரோடு கோக்கச்சொல்லி
என்கிட்ட உத்தரவு
கேக்குதடி

ஆயிரம் மையில்தாண்டி,
ஆசமச்சான் கனவுகண்டுகாத்திருக்கேன்
ஆதரவா ஒருவார்த்த
அன்னக்கிளியே தூதுவிடு.
அடுத்தமாதம் வந்திடுவேன்
எதிர்பர்த்திடு அன்போடு.......

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என் உறவே


காலைபனித்துளி
கதிர்களில் ஆட –அதை
கண்ட என்கண்கள்
கும்மாளம் போட
மகிழ்வென்னும் சோலைக்குக்குள்
மத்தாப்பூ பூத்ததுபோல் :
ஆனது நம் உறவு;


சூரியனின் சூடு சுல்லென்று சுட
–அதை
சில்லென்ற காற்று வருடி விட
சுறுசுறுப்பான உடல்
சிட்டாய் பறந்ததுபோல்
:ஆனது நம் உறவு;


அந்திவானம் மஞ்சள் அரைக்க
அதை அவசரமாய்
கறுத்தமேகம் மறைக்க
மூடியிருந்த முக்காடை
கிழித்துக்கொண்டு
எட்டிப்பார்த்த ஒளிகதிர்களைபோல்
:ஆனது நம் உறவு;


இருண்ட வானத்தில் 
சின்னதாய் சிதறிகிடக்கும்
மின்மினிபூச்சிகளாய்
நட்சத்திரங்கள் மின்ன,
உருண்டை உலகில்
உன்னதவானில்
உலாவரும் வெண்ணிலாவைபோல்
:ஆனது நம் உறவு;


கறுத்து வெளுத்த மேகங்கள்
பவணி வர -அதனுடன்
கண்ணைபறிக்கும் வெளிச்சத்துடன்
மின்னல் இணைய
பட்டாளத்து வெடிசத்தமாய்
இடிகளும் வெடிக்க
வெள்ளைமழை
வருகை தருவதுபோல்
:ஆனது நம் உறவு;


அடர்ந்த காட்டுக்குள்
அத்தனைகுயில்களும் கானம்பாட
அதைக்கேட்டு அங்குள்ள
மரங்களெல்லாம் தன்னைமறந்து ஆட
சில்லுன்று  வீசும் தென்றல்காற்றில்
சில்வண்டுகளின் ஸ்ரிங்காரம்போல்
:ஆனது நம் உறவு;


மலைக்காதல்
வெள்ளையருவி  நீரையெல்லாம்
மண்ணுக்கு தானமாய் தர
பூமியைநோக்கி
வேகமாய்வந்து விழ
அதிலிருந்து
எழும் வெண்பஞ்சு புகைபோல்
:ஆனது நம் உறவு;

எனதுறவே!

உறவுக்குள் உயிராய்
உறைந்துவிட்டபின்பு
நம் உறவுக்குள்
இனி பிரிவென்பதேது
உயிரோடு உயிர் சேர்ந்த உறவு
இதில்
வேண்டாமே என்றைக்கும் பிரிவு.........


//இக்கவிதை உறவா பிரிவா என்ற தலைப்புதந்து
எழுதசொன்ன கவிதை,
இம்மாத தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதி வெளியான கவிதை://

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது