நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

துரோகங்களின் மூப்பு...


 
பசுமையாய் படர்ந்த மனக்கிளையை
துரோக நீரூற்றி பட்டுபோகவைத்து 
மர[]த்தடியில் கிடத்திவிட்டு
மார்தட்டி மற்ற கிளைபரப்பி
வான்நோக்கி பறக்கிறாய்.
 

மெளனங்களை
மொழிபெயர்க்கத் தெரியா என்மனக்கூடு
திடமில்லாமல் திண்டாடி 
நேசமில்லா உன்மனக்கிடங்கில்
பாசமெதிர்பார்த்து
துடித்தது கதறல்களாய், 
 
நேசத்தீ நெஞ்சேறியபோதும்
சுவாசிக்கத் தெரியாமல்
சுடும்தீயின் சுவாலையில்
சுருண்டுகிடந்தே சோர்ந்தது மெளனமாய்.
 
மலக்குழிக்குள் மாட்டிக்கொண்ட
தோரணையாய் என் மனம்
துரோகங்களில் சாயல்
உன் முகத்தில் தெரியவில்லை
ஆனால் நீதான்
துரோங்களின் மூப்பு என்பதை
நானெப்படி அறியாது போனேன்

சில தாலி வேலியாக
சிலவேலி தாலிக்காக்க
தாலிதந்து வேலியமைத்து
வெண்ணை திரண்டு வரும் சமயத்தில்
தாளி உடைவதுபோல்
விட்டுச் சென்றுவிட்டாய்
வீதியில் நிறுத்திவிட்டு

புயலடித்து உடையா கிளையை
மரமே உடைத்து
மண்ணில் வீழ்ந்தியபோது
வேண்டாத சருகுகளோடு ஒரு சருகாய்
விதியை நொந்து
வீசும் காற்றுகளோடு மல்லுக்கு நிற்கிறது
வஞ்சனை செய்யத்தெரியா என்மனது


சிறகு தந்து பறக்கவைப்பாய் என்றிருந்தேன்
இப்படி
இதயமொடித்து இறக்கவைப்பாய் என்பதையறியாமலே….


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது