நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வேண்டாம் இனி வரவுகள்.. ம்மா என்றால்
அகிலமும் போற்றுகிறது
அன்பொழுக நேசிக்கிறது-ஆனால்
எங்களால் மட்டும் முடியவில்லையே
உங்களை நேசிக்க!
உங்களோடு சுவாசிக்க!

ந்து நிமிடம்
யோசிக்கமறந்த உங்களால்
அசிங்கமாகிப் போனேமே
அனாதையாக ஆனோமே

ள்ளத்தனம் செய்துவிட்டு
கருவில் கலைக்க வழியின்றி
பத்துமாதம் எப்போது கழியுமென
பயந்துப் பதுங்கிச் சுமந்து
பாசமே இல்லாமல்
பரிதவிக்கவிட்டுச் சென்றவர்களே!
பச்சோந்தியாக ஆனவர்களே!

தாறித்தனம் செய்துவிட்டு
உயிருள்ள எங்களை
உயிரற்ற ஜடமாக்கி
உதறிவிட்டுபோவது நீங்கள்
உம்போன்றோர்களின் செயல்களால்
ஊரடிபடுவதும் உருக்குலைவதும்
ஒன்றுமறியாத எம்போன்ற
உள்ளம் ஊமையான பிஞ்சுகள்

கூடிக் கூடி குலாவி
கும்மாளமிட்ட நீங்கள்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்
கூளமாக்கி எங்களை
குப்பைத் தொட்டியை நிரப்பிய
கொடும்பாவிகள்

ரக்கமற்ற அரக்கர்களாய்
இதயமில்லாது போனது ஏனோ?
இச்சையின்மேல் இன்பம்கொண்டு
எங்களை எச்சிலையாக்கிடத்தானோ

சூழ்நிலைகள் காரணமென
சூத்திரம் செய்யாதீர்
சூடுபட்ட ரணங்களோடு-நீங்கள்
சுமந்த சிசுக்களை
சித்ரவதை செய்து
சிதைத்துக் கொல்லாதீர்

ங்களோடு முடியட்டுமே!
அனாதைகளென்ற வரவுகள்
எத்தனைபேர்கள் ஆதரவளித்தபோதும்
அவர்களெல்லாம் ஆகமாட்டார்களே
எங்களை ஆரத்தழுவும் அம்மாக்கள்...

தமிழ்குறிஞ்சியில் வெளியான கவிதை
நன்றி தமிழ்குறிஞ்சி இணைய இதழ்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

21 கருத்துகள்:

 1. "சமுக சிந்தனை" கவிதை
  வாழ்த்துக்கள் கவிதாயனி

  பதிலளிநீக்கு
 2. இரக்கமில்லா அரக்கர்கள்
  தாய்மை என்ற சொல்லிற்கு இழுக்கானவர்கள்
  பெண்மை என்ற புனிதத்ததின் பெயரில்...............
  ””இவர்களை திட்டினால் கூட நமது ஜீவனம் கலங்கப்பட்டுவிடும்”” திட்டுவதற்கு கூட தகுதியில்லாதவர்கள்

  பதிலளிநீக்கு
 3. உள்ளத்தை
  நெகிழ...
  நெருட...
  வைத்த கவிதை...!

  அதிலும்...
  ///எங்களோடு முடியட்டுமே!
  அனாதைகளென்ற வரவுகள்
  எத்தனைபேர்கள் ஆதரவளித்தபோதும்
  அவர்களெல்லாம் ஆகமாட்டார்களே
  எங்களை ஆரத்தழுவும் அம்மாக்கள்.../// என்ற வரிகள்தான்
  இக்கவிதையில் highlightடான வரிகள்...!

  வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 4. S Maharajan கூறியது...
  "சமுக சிந்தனை" கவிதை
  வாழ்த்துக்கள் கவிதாயனி.//

  வாங்க மகா. வருகைக்கும் முதல் கருதுக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 5. isaianban கூறியது...
  இரக்கமில்லா அரக்கர்கள்
  தாய்மை என்ற சொல்லிற்கு இழுக்கானவர்கள்
  பெண்மை என்ற புனிதத்ததின் பெயரில்...............
  ””இவர்களை திட்டினால் கூட நமது ஜீவனம் கலங்கப்பட்டுவிடும்”” திட்டுவதற்கு கூட தகுதியில்லாதவர்கள்.//


  மதியிழந்த மாக்களாக
  மானங்கெட்டு
  மழலைகளைவிட்டுசெல்லும்
  மந்தையாட்டுக்கூட்டங்களை என்ன சொல்லி என்ன செய்ய
  செயழிலந்து போவதும்
  செய்யாகுற்றதிற்கு தண்டனை அனுபவிப்பதும் பாவம் பிஞ்சுகளே!

  பதிலளிநீக்கு
 6. isaianban கூறியது...
  இரக்கமில்லா அரக்கர்கள்
  தாய்மை என்ற சொல்லிற்கு இழுக்கானவர்கள்
  பெண்மை என்ற புனிதத்ததின் பெயரில்...............
  ””இவர்களை திட்டினால் கூட நமது ஜீவனம் கலங்கப்பட்டுவிடும்”” திட்டுவதற்கு கூட தகுதியில்லாதவர்கள்.//


  மதியிழந்த மாக்களாக
  மானங்கெட்டு
  மழலைகளைவிட்டுசெல்லும்
  மந்தையாட்டுக்கூட்டங்களை என்ன சொல்லி என்ன செய்ய
  செயழிலந்து போவதும்
  செய்யாகுற்றதிற்கு தண்டனை அனுபவிப்பதும் பாவம் பிஞ்சுகளே!

  பதிலளிநீக்கு
 7. காஞ்சி முரளி கூறியது...
  உள்ளத்தை
  நெகிழ...
  நெருட...
  வைத்த கவிதை...!

  அதிலும்...
  ///எங்களோடு முடியட்டுமே!
  அனாதைகளென்ற வரவுகள்
  எத்தனைபேர்கள் ஆதரவளித்தபோதும்
  அவர்களெல்லாம் ஆகமாட்டார்களே
  எங்களை ஆரத்தழுவும் அம்மாக்கள்.../// என்ற வரிகள்தான்
  இக்கவிதையில் highlightடான வரிகள்...!

  வாழ்த்துக்கள்...!

  //

  வாழ்த்துக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ..

  பதிலளிநீக்கு
 8. நிஜம்தானே.. அந்த பிஞ்சுகள் செய்த பாவம்தான் என்ன??

  அருமையான கவிதை மலிக்கா..

  பதிலளிநீக்கு
 9. மிக வலியை உணர வைத்த வார்த்தைகள்.. நல்ல சமூக பார்வை.. திருந்தட்டும் அந்த ஜென்மங்கள்..

  பதிலளிநீக்கு
 10. //””இவர்களை திட்டினால் கூட நமது ஜீவனம் கலங்கப்பட்டுவிடும்”” திட்டுவதற்கு கூட தகுதியில்லாதவர்கள்//

  பதிலளிநீக்கு
 11. அனாதை என்ற வார்த்தை அனாதையாகிப் போகட்டும்,

  நல்ல கவிதை சகோ

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 12. கள்ளத்தனம் செய்துவிட்டு
  கருவில் கலைக்க வழியின்றி
  பத்துமாதம் எப்போது கழியுமென
  பயந்துப் பதுங்கிச் சுமந்து
  பாசமே இல்லாமல்
  பரிதவிக்கவிட்டுச் சென்றவர்களே!
  பச்சோந்தியாக ஆனவர்களே!//

  அனைத்தும் அருமை...
  அதில் இது இன்னும் கொஞ்சம் அழகு ...
  சரியான வார்த்தைகளில் சவுக்கடி கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

  அருமையான கவிதை.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. சமூக சிந்தனையுள்ள அருமையான கவிதை. படிக்கும் போதே மன்தை என்னவோ செய்கிறது. குற்றம் செய்த அந்தத் தாயின் மனமும், வாழ் நாள் முழுவதும் பரிதவிக்கத் தான் செய்யும். அதுவே அவளுக்கோர் ஆயுள் தண்டனை.
  தாய் அன்பு தேடும் இந்தப் பிஞ்சுகள் பாடு தான் அதைவிட மிகவும் கொடுமை.

  பதிலளிநீக்கு
 15. வார்த்தைகள்கூடக் கலங்கிக்கிறது தோழி.மிக மிக அருமை !

  பதிலளிநீக்கு
 16. சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதை.

  பதிலளிநீக்கு
 17. நல்ல சாடல் கவிதையில்.. குறிஞ்சி இணைய இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 18. //இரக்கமற்ற அரக்கர்களாய்
  இதயமில்லாது போனது ஏனோ?
  இச்சையின்மேல் இன்பம்கொண்டு
  எங்களை எச்சிலையாக்கிடத்தானோ //

  கவிதையால் கொடுக்கப்பட்ட சவுக்கடி.

  பதிலளிநீக்கு
 19. அம்மா!
  அன்புன்னு சொல்வாங்க
  ஆனால் அம்மா என்பது எங்களுக்கு வலி!
  பத்து நிமிட சுகத்திற்கு பரிகாரம்
  பத்துமாதம் சுமந்தது,பின்
  காலமெல்லாம் துன்பம் சுமக்க செய்தது. நீ புரட்சி பெண்தான்.
  தாய் பால் பாறாத நாங்கள் சில நேரம் நாய் பால் குடித்திருக்கிறோம்.
  தாய் பால் குடித்து வளர்ந்தனீயோ, நன்றி கெட்டவளாகவும்,
  பாசங்கெட்டவளாகவும்
  மனித இனமென்று பீற்றி கொள்கிறாய்.
  தாயெனும் தகுதியை தந்தவர்கள் நாங்கள்.பதிலுக்கு நீ செய்த கைமாறு காலமெல்லாம் நாங்கள் அனாதை.இதுதானே நீ செய்த சாதனை?

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது