நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வரமா--சாபமா


உன்
ஓரவிழிப்பார்வையில்
என்னுள்ளம்
ஈரமாய் நனைந்தது
நனைந்த நினைவுகளை
நித்தமும் நினைக்கின்றேன்


உன்னை
நினைத்த நாள்முதலாய்
நிலவு சுடுகிறது
நெருப்பு குளிர்கிறது
காகம் மயிலானது
கரும்பு கசப்பானது
கரையில் நிற்க்கும்போதே
மனம்
கடலில் தத்தளிக்குது


தனியாய் புலம்புகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
நீ இருப்பதாய் நினைத்துக்கொண்டு
எனக்குள் நானே சிரிக்கின்றேன்


கார்மேகம் தலையைதொட
வான்மழை மடியில் விழ
வண்ணக்கனவு விழியில் வர
வசமாய் மாட்டிக்கொண்டேன்
உன்வசத்தில்

ஏனிந்த போராட்டம்
எதற்கிந்த ஆர்ப்பாட்டம்
கல்நெஞ்சம் எனக்குள்ளே
கரைந்தோடுது நீரோட்டம்

எனக்குள் நீவந்தாய்
விழிவழியே
மறுஉயிர்தந்தாய்
மறந்துவிட வழியில்லை
மரிக்கின்ற நிலைவரையில்

உன் ஓரவிழிப்பார்வை
என் உயிருக்குள் உறைந்தது
வரமா? இல்லை சாபமா?
விடைசொல் விழியே
நீ
என் விலாசம்வரும்
வரையில்
என்நெஞ்சம் உன்
நினைவரையில்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்"

வாடிய மலர்வாடி வதங்கி
வாசனைபோன மலர்
தோல் சுறுங்கி
கூன் விழுந்த கிழவி


தன் வயிற்றுப்பசியைப்
போக்க
வாசனை நிறம்பிய
மலர்களை
விற்க்குது கூவி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

மலர்கள்


வண்ண வண்ண மலர்களே
வாசம் வீசும் மலர்களே
வாசலிலும் கொல்லையிலும்
வசந்தம் பாடும் மலர்களே


மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமிருக்கும்


மல்லிகையைக் கண்டதும்
மணமாலையின் நினைவுவரும்
முல்லைமலரை கண்டதும்
என் மன்னவனின் நினைவுவரும்

சாதிமல்லி கண்டதும்
சிந்தனையில் சிரிப்புவரும் [மலிரிலுமா சாதி]
சூரியகாந்தி கண்டதும்
சுறுசுறுப்பு கூடவரும்

தாமரையை கண்டதும்
அதன்னுடனே குளிக்கத்தோன்றும்
அல்லியை கண்டதும்
அள்ளி கையில் எடுக்கத்தூண்டும்

அசருமல்லி கண்டதும்
அதன்
அழகியகலர் கண்ணைச்சீண்டும்
தாழப்பூவை கண்டதும்
பாம்புவருமென்ற பயம்வரும்
வேப்பம்பூவை கண்டதும்
அதன்
வாசம் நெஞ்சில் வீசிடும்

அரலிப்பூவை கண்டதும்
கண்கள் கண்ணீர் வடித்திடும்
கனகாமரம் கண்டதும்
காற்றில் மனம் ஆடிடும்

செவ்வந்தி கண்டதும்
நெஞ்சில் சிலிர்ப்பு ஏற்படும்
பாரிஜாத மலர்களால்
மனம்
பரவசம் அடைந்திடும்
காதல்ரோஜா கண்டதும்
மனம்
 காதல் வானில் பறந்திடும்


துபை
சலையோர மலர்கள்
தூதுச்செய்தி
அனுப்பிட
நானும் சாலைரோம்
நடந்திட
காற்று கானம்
பாடிட
மலர்கள் தலையை
ஆட்டிட

நடந்து சென்ற
நானும்தான் சற்று
தயங்கி நின்றிட
என் நினைவைப்
புரிந்த என்னவன்
கண்களால்
சைகை செய்திட

இந்த மலரும்
அந்த மலரின்கூட
அமர்ந்திட
மனதெல்லாம் மத்தாப்பாய்
 பூத்திட


சீசனுக்கு
ஒவ்வொரு மலர்களென
என்வீட்டுச்
சன்னல்களை அலங்கரிக்கும்
அதைப்பார்த்து பார்த்து
என்மனம் பூரிக்கும்

என் கற்பனைகளுக்கும்
ஒருவிதத்தில்
இவைகள் காரணம்
என் மனவாசலில்
மாம்பூத்தோரணம்.அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

பறந்தன பறவைகள்
ஒரு மரத்துக்கிளிகளாய்
ஒரே கூரையின்கீழ் வாழ்ந்த எங்களை

ஒரே ஒரு நாளின் மின்சாரத்துண்டிப்பு
ஒவ்வொரு மூளையில் தள்ளிவிட்டது

பாரதவிலாஸாய் கூடியிருந்த நாங்கள்
இப்பொழுது ஆளுக்கொகொரு
பக்கமாய் பிரிந்துவிட்டோம்.

கடல்கள் கடந்துவந்த எங்களுக்குள் ஓர்
பாசப்பிணைப்புகள் கண்கள் பார்த்து வார்த்தைகள் கோர்த்து-
மனங்களை இணைந்த மகத்தான நட்புகள்

சிலநேரங்களில் பாஷைகள் புரியாதபோதும்
அகிலத்துக்கே புரிந்த பாஷையான- சிரிப்பும்
சைகைகளும் எங்களை இறுக்கி பிணைத்தன

பாலைவன ரோஜாக்களாய் பகிர்ந்துகொண்ட
பதிவுகள்தான் எத்தனை எத்தனை

சட்டென்று துண்டிக்கப்பட்ட மின்சாரத்தால்
மனங்கள் சஞ்சலங்களுக்கு ஆளானது

திசைகள் மாறியபோதும் எங்களின்
நினைவுகள் மாறிடாது

நேரங்கள் கிடைக்கும்போது ஒருநொடியாவது
கண்டுவந்துவிடனும் என எங்களுக்குள் கண்டிசன்

காலங்கள் தரும் எத்தனையோ மாற்றங்கள்
அதில் மாறாதது மாற்றம் என்ற ஒன்றுமட்டுமே

அந்த மாற்றம்போல்தான் ”நட்பும்”


அன்புடன் மலிக்காஇறைவனை நேசி இன்பம் பெருவாய்

தேடுதல்அன்பு என்ற
அருமருந்து
அகிலமெங்கும்
கொட்டிகிடக்கிறது

உள்ளொன்று வைத்து
புறமொன்றும்
பணக்காரன்
என்றால் ஒருமுகம்
பாமரன்
என்றால் ஒருமுகமென
பிரித்துப்பார்ப்பதா


தேடுகிறேன் தேடுகிறேன்
தெளிவான முகங்களை
அதில்
எது தெளிவென்று
இன்றுவரை புரியவில்லை

அத்தனை முகங்களுக்குள்ளும்
அன்பும் உண்டு
ஆன்மாவும் உண்டு
ஆன்மீகமும் உண்டு
ஆதங்கமும் உண்டு

’ஆதலால்’
எந்த மனிதர்கருக்குள்
எது இருந்தபோதிலும்
மரணம் வரும்வரை
மனிதர்களாய் வாழ்வோம்

பொய்முகங்கள் புணையாமல்
பெயருக்காக பழகாமல்
மனம் பொருந்திய அன்போடு
மனமகிழ்வுடன் வாழ்வோம்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

முதிர்கன்னி

வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்வானம்போல்,,
வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்வாலிபம்!!

வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிறப்பிக்கொண்டு
வயது
போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை
கொடுக்க வழியில்லையே என்று!

உடல் இருக்கும் வரனுக்கு
உள்ளம் ஊனமா?
பழமுதிர் சோலையாகவேண்டிய
கன்னியற்க்கு
பாலைவன வாழ்க்கையா?

இந்த முதிர்-கன்னிகளின்
தேடலுக்கு முடிவென்ன?
முதிர் என்னும் வரதட்சணையை
எதிர்த்து நில்லுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கணவர் எனும் உறவுக்கு
கெளரவம் சேருங்கள்..

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

கோடையும் - வாடையும்

கோடை குழந்தைகளுக்கு கொண்டாட்டம்-அதன்
வெயிலோ தருமே திண்டாட்டம்

கோடை விரும்புவது குறைந்த உடை
வாடை தேடுவது நிறைந்த போர்வை

வாடை உடம்புக்கு கொண்டாட்டம்-அதன்
குளிரோ நரம்புக்கு திண்டாட்டம்

கோடைவெயில் தேடும் குளுகுளுப்பு
வாடைகாற்று நாடும் கதகதப்பு

கோடையின் மனைவி வாடை
வாடையின் கணவன் கோடை

”ஆகமொத்தத்தில்”

இருவரும் ஒரே கூட்டனி-அவர்கள்
இருவரும் தனித்தனியே வந்தால் நமக்கு எதிரணி

அன்புடன் மலிக்கா

நாங்கள் நாங்களில்லை!

இது நாங்களென்று நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல

அந்த அழகான சந்திப்பின் அன்பு மனம்
ஆலினார் ஜலீலாக்கா தான்


ஹி ஹி ஹி ஹா ஹா

என்ன ஜலீலாக்கா பயந்துட்டீங்களா. 
போட்டோவை போட்டுவிட்டேன்னு.
இது நாமா?
சிந்திக்க சில வரிகள்
கெடுதலிலும் நன்மைகளை செய்தல் சிறந்தது
அந்த நன்மையைவிட கெடுதல் தன்னை விடுதல் உயர்ந்தது

மெளனமாக இருப்பதைவிட பேச்சு நல்லது
தீயபேச்சைவிட மெளனம் அதை காத்தல் சிறந்தது

தீயவரின் உறவைவிட தனிமை சிறந்தது
அந்த தனிமையிலும் நல்லவரின் உறவு உயர்ந்தது

உறவுகளின் வலுவைவிட நட்பு சிறந்தது
அந்த நட்புக்குள்ளே உறவு அது வருதல் உயர்ந்தது...

அன்புடன் மலிக்கா
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது