நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இப்படியும் நடக்குமா! 
 
நினைக்கவேயில்லை
இப்படியும் நடக்குமென்று
என்றோ ஒன்றாகி பிரிந்த
இரண்டு இதயங்கள்
யாரென்று அறியாமலே உறவாடின
இணையத்தின் வாயிலாக
 
எத்தனைநாள்தான்
எழுத்திலேயே தொடர்வதென
தொலைபேசிவழியே தொடர்புகொண்டு
குரலைக்கேட்ட மறுநொடியில்

மூளைக்குள் ஒரு மின்னல்
இக்குரலோசை இதயத்தின் அருகே
இசைபாடியதாயிற்றேயென

எதார்த்தமாய்
நீதானே அவளென்று கேட்க
அவளேதான் நானென்று சொல்ல

மேலிருந்து யாரோ
பூமழை தூவியதுபோல்
பொன்னடல் பூரித்தது
புல்லாங்குழல் வாசித்தபடி உள்ளம்
                                                            புதுராகம் பாடியது    

அலைபேசிவழியே ஆச்சர்யங்கள்
அலைமோத
இணைந்த இதயங்கள் இரண்டும்
மகிழ்ச்சிகடலில் குளித்தது
 

தூரம்போன நட்பு
தோள் தொட்டு தூளியாடியதைக் கண்டு
வான் நோக்கிய
                                                                இரண்டு கைகள்
இறைக்கு நன்றி சொல்லி
இளகி உருகியது
 
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
 இருக்கும் இடங்களை நோக்கி
இதயம் ரெக்கைகட்டிப் பறந்தது...


---------------------------------------------------------------------------
என்னப்பா இது யாருப்பா அது என்றென்றாலாம் கேட்கத்தோணுதா.. சரி சரி சொல்லிடுறேன்.. 1.1/2 வருடமாக இணையத்தின்வாயிலாக எழுதின்மூலமே தொடர்பு கொண்டிருந்த நாங்கள்.  நேற்றுகாலை ஒரு மெயில்கண்டு அதில் அலைபேசிகேட்டுயிருந்ததும் உடனே அனுப்பிவைத்தேன். நேற்று இரவு அலைபேசி அழைக்கும்வேளை ஹாஸ்பிட்டலில் இருந்தேன். [அட நமக்கு ஒன்னுமில்லைபா துணைக்குபோயிருந்தேன்] ஒலித்த அழைபேசியை எடுத்து  பேசியபோதுசலாம் சொல்லி  என்னமேடம் நல்லாயிருக்கீங்களான்னு வந்தது. நல்லாயிருக்கேன்னு சொல்லும்போதே இந்த குரலை எங்கேயோ கேட்டிருக்கோமேன்னு மூளைக்குள் மின்னல்மின்னியதுபோலிருந்து. அப்பாலதானே தெரிந்தது அது எனக்கு மிகவும் பலக்கப்பட்ட குரல் என்று உடனே நீங்க அவுகதானேன்னதும் அடஆமா எப்படிதெரியும் என கேட்க நானும் சொல்ல அடி நீயா உன்னையா நான் மேடம் கீடமெல்லாம் போட்டேன். வாங்க போங்கனெல்லாம் இம்பூட்டுநாளா சொன்னேன் .

அப்பாவி மலிக்காவா இது அடப்பாவி நீதானா இப்படி கவிதையில் கலக்குற.நம்மபேமுடியலடிமா என ஆச்சரியங்கள் அலைமோதியது இருவருக்குள்ளும்.. சந்தோஷம் தாங்கலை எனக்கு எத்தனை வருடங்கள் கழித்து அப்பப்பா சத்தியமாக நான் நினைத்துக்கூடபார்த்ததில்லை இப்படி நாங்கள் மீண்டும் இணைவோமுன்னு..

அதுசரி யாருப்பா அது எப்படிப்பா அவுக பழக்கம்.. அதுவா. அதிரை மதரஸாவில் நான் மாணவி அவுக ஆசான்.. அவுகன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் கட்டயா சற்றே குட்டையா கலையான கும்முன்ன கன்னங்களோடு அழகா  சூப்பராக இருப்பாங்க. அவுக வெளிய ஹாஸ்டலிலிருந்து போக துணையே நாந்தான்...இவுகளுக்கு ஒரு டியர் ப்ரண்ஸ் இருக்காக அவுகன்னா இவுகளுக்கு ரொம்ப உசிரு அப்படியொரு நட்பு.. இப்படியான எங்கள் பாசம் நான் பாதியிலே மதரஷாவிட்டு நின்னதாலே விட்டுப்போச்சி.. ..1991  [நான் எங்கே நின்னேன் நிப்பாட்டிட்டாக கல்யாணமுன்னு ஹூ ஹூம், அழுறேனாம்] சின்னப்புள்ளவேறு அவுக போன் நம்பரோ அல்லது அட்ரஸோ வாங்கிவச்சுக்க தெரியல அப்போ எனக்கு. அதன்பின்பு இப்போது 2012 ல்  அல்லாஹ் அக்பர்
இணையம் அதில் எழுத்து அது சேர்த்து வைத்தது காணாப்போச்சோன்னு நான் நினைத்திருந்த நட்பை.. அல்ஹம்துல்லில்லாஹ்..

அந்த அக்காவை நீங்களுக்கும் யாருன்னு பார்க்க ஆசையா இருக்கா இங்கே கிளிக் செய்யுங்கள்..

நம் உணர்வோடு ஒன்றிய சிலவற்று நீங்கியதாய் நினைக்கும் எதுவும் நம்மிடமிருந்து நீங்குவதில்லை நம்முடனே இருக்கிறது நாம் அறியாமல் நம்மருகிலேயே..

மனம் நிறைந்த சந்தோஷம் இறைவனுக்கே புகழ் அனைத்தும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது