நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தடயம் தேடி


காலமெல்லாம்
கூடவே இருப்பேனென்று
சொன்னவள்
நான்கைந்து மாதமாக
காணவில்லை
என்
கண்களுக்குள் கலக்கம்
மனதுக்குள் நடுக்கம்

காற்றோடு
மனம்புழுக்கம்தீர
கடற்கரையில் அவள்
காலடித்தடமாவது
தேடலாமென்று
கடல்கறை சென்றேன்


கூத்தடித்த மணல்களெல்லாம்
இப்போது கைகொட்டி
சிரித்ததுபோல் உணர்ந்தேன்

மனம் வலிக்க
வழிநெடுக நடந்தேன்
வெகுநேர நடைக்குப்பின்
என் கண்களுக்குள்
நெருஞ்சிமுள்ளின்
வலியை உணந்தேன்

அதோ என்னவள்

வேறு ஒருவனின்
கைகளை பிடித்தபடி
மஞ்சள்தாலி
கழுத்தில் சுமந்தபடி
வகுடு குங்குமம்வைத்தபடி
அந்த மற்றொருவன்
மல்லிகையை
இவள் தலையில் சூட்டியபடி

அதைக் கண்ட
மறுகணமே
என் கண்கள் இருண்டதடி
கால்கள் தள்ளாடியதடி
மண்ணுக்குள் 
கால்களை புதைத்தபடி
என் மனதையும்
சேர்த்து புதைத்தேனடி

உன் கால்தடயமாவது
கிடைக்குமென
தேடி வந்தேன்
வந்த
இடத்தில்தான் தெரிந்தது -
நீ தடயமே
இல்லாமல் தெளிவாய்
இருப்பது,

உன்னால் குழம்பியவன்
இப்போது
முகங் குப்புர விழுந்தழுதேன்
மீண்டும்
மணல்கள் என்னைக் கண்டு
வாய்விட்டு சிரித்தது
இப்போது
உணரவில்லை
உண்மையாலுமே...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது