நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அடி ஆத்தி!அத்த வித்தேன் இத்த வித்தேன்
தேரலையேக் காசு
அத்தனையும் பாலப்போச்சே
மிஞ்சலையே நோட்டு

நஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும்
நாதியத்த பொலப்பு
மாரடிச்சி மாரடிச்சி
மண்ட வீங்கிப்போச்சே!

அடுக்கடுக்கா பன்னவச்சி
அள்ளுறாங்க காசு
அதப்பாத்து பாத்து கெடந்துயிங்கே
அடிச்சிக்கிடுதே மனசு!

பன்னுமேல எள்ளபோட்டு
மேலும் கீழும் வச்சி
அடுக்கடுக்கா அதுகுள்ளேயே
அரச்சக்கறி பச்சகீரயும் வச்சி

அதுமேல வெண்ணயின்னு
ஏதோ ஒன்னத் தடவி
அத துண்ணும்போது விக்கிடாம
டின்னில் காக்கித் தண்ணி

விக்கிறாக வெதவெதமா
வெளிநாட்டு ஆளு
அத வாங்கித் துண்ண
வரிசையில நிக்கிறாக
நம்மஊரு ஆளு

அதபாத்த எனக்கு ஒரு
யோசனையும் தோன
நானும் இப்போ மாறிக்கின்னேன்
நாட்டு நடப்புக்கூட

ஆயா சுட்ட பன்னெடுத்து
அடுக்கடுக்கா வச்சி
அதுகுள்ளே எனக்குத்தெரிஞ்ச
அத்த இத்த வச்சி
அப்படியே வித்துப்புடுவேன்
ஆயா பெத்த பொண்ணு

துண்ணுகிட்டே இருக்கையிலே
விக்கலெடுத்துச்சின்னா
நம்மகிட்டயிருக்குதுல்ல
நாளுமாசம் முந்தி புடிச்சி
அடச்ச வெச்ச
ஊத்து தண்ணி டின்னு...

டிஸ்கி//இந்த போட்டோ மெயிலில் வந்ததுங்கோ
அதபாத்த ஏன் மண்டைக்குள்ள இந்த பாட்டு ஓடிச்சிங்கோ
அதேன் அத இங்கே வந்து  கிறுக்கிப்புட்டோமுங்கோ எப்புடி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது