நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நம்பவே முடியவில்லை 401



அன்பான அன்புகளுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள். ஏன் திடீரென்று நன்றியெல்லாம் அப்படின்னு பார்க்கிறீங்களா? எல்லாம் காரணமாத்தான். இந்த நீரோடையில் நான் எழுதத்தொடங்கிய பொழுது தந்த ஊக்கங்களும் கருத்துகளும் அன்பு பரிமாற்றங்களும் நட்புவட்டங்களும் சொல்லில் அடங்காதவைகள். அவைகளின் தொடர்ச்சியால் இன்றோடு எனது 400 வது பதிவை முடித்து 401 வது தொடங்குகிறேன். எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே! அதிகம் கற்றறியாத எனக்கு அவன் அறிவைத் தந்தான் அதனில் நின்றும் எழுதறிவையும் எழுத்தாக்கத்திற்கான எண்ணங்களில் அறிவையும் தந்தான். அதன்மூலமே பற்றிப்பிடித்துக்கொண்டேன் எழுத்தாற்றலை ஆகவே எனது எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரனான இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரியவைகள்..

நம்பவே முடியவில்லை நானா எழுதுகிறேன் என்று..

மேலும்  நீரோடையில் மட்டும் இது 401 வது பதிவு. இதற்க்கு ஒத்துழைப்பு தந்துகொண்டிருக்கும் உலக்கிலுள்ள அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் எந்நாளும் எனது நன்றியென்னும் அன்புகலந்த நட்பு பாசம் அனைத்தும் இம்மியளவும் குறையாதிருக்கும் என்றும் அன்புடன் மலிக்கா ஆனந்தகண்ணீரோடு தங்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைகூறிக்கொள்கிறேன்..

டிஸ்கி//
பொதுநலவாதி சொன்னது…
விழிப்புணர்வு அதுவும் பெண்கள் சமூக விழிப்புணர்வுக்கு விழிப்புணவை ஏற்ப்படுத்த பேசுவதற்க்கும். நீங்கள் தொகுப்பதற்க்கும் பணம் வாங்கிகொண்டுதானே செயலாற்றியிருப்பீர்கள். பணம் இருப்பின் விழிப்புணர்வுகள் தானாக வரும் பணம் படைத்தவன் எந்நேரமும் விழிப்புணவோடும் இருப்பான் விழி மூடாமல்கூட இருப்பான்.. பணமிருந்தால் விழிப்புணர்வு மாநாடென்ன உலக மாநாடே போடலாம்.. தொகுத்து வழங்குனதற்கு எவ்ளோ கொடுத்தாங்க பணம் அதை வைத்துக்கொண்டு விழிப்புணர்வோடு இருங்க இல்லாவிட்டால் அதையும் ஆட்டய போடும் உலகமிது..// அன்பு சகோதரே!  மனிதர்களில் செயல்கள் அனைத்தையும் அறிந்தவன் இறைவன்  . பெருமைக்காவோ அல்லது புகழ்ச்சிக்காவோ சொல்லவில்லை. நான் தொகுத்தளித்த இரு நிகழ்ச்சிகளுக்கும் பணம் வாங்கியதில்லை. இதற்க்கு முன் March 03, 2012 இலக்கிய மாநாடு நடந்தது அதற்க்கும் நான்தான் தொகுத்து வழங்கினேன். இதோ 12-5-2012 அன்று நடந்த சமூக விழிப்புணர்வு மாநாட்டையும் நான்தான் தொகுதளித்தேன் ஆகவே! தாங்களைபோல் என்னைப்பற்றி தவறாக எண்ணியுள்ள ஒருசிலருக்கு[ அட சிலர் இங்கிட்டும் இதபோல முணுமுணுக்குறாங்கப்பு] இதன்மூலம் சொல்லிக்கொள்கிறேன் பணம் இன்று வரும் நாளைபோகும். நான் முதலில் செய்தது என் தமிழுக்காக! தற்போது செய்தது என் மார்க்கத்திற்காக!. பணம் வாங்கிக்கொண்டு நான் செய்திருந்தாலும் அது தவறில்லையே! இருந்தபோதும் நான் செய்யாத ஒன்றை செய்ததாக சொல்வது. கதை கட்டுவதெல்லாம் நல்லதில்லீங்கோ! அதுசரி இப்படி எத்தனைபேர் கிளம்பிருக்கீங்க.. ஹா ஹா.. அதவிடுங்க முதலில் நான் எப்படி தொகுத்து வழங்கினேன் மாநாட்டையின்னு இங்கு சென்று பார்த்துவந்துவிட்டு கருத்துகளை பகிருங்கள் ஓகேவா! அனைவரும் சென்று பார்த்துவிட்டு கருத்துகளை சொல்லுங்கள். மீண்டும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். என் எழுத்துகள்
எங்கும் ஒலிக்கட்டும்
ஏகயிறையோனின் அருள்கொண்டு
நீரோடை என்றும் 
தெளிந்த நீராய் ஓடட்டும்
எண்ணிலடங்கா உங்களின் 
ஏற்றமிகு கருத்துகளைக்கொண்டு..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது