நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சந்தேக கேள்விகளின் பதில்கள். [பகுதி 1]

வாங்க வாங்க உக்காரவெல்லாம் நாற்காலிபோடலை அதனால நின்னுகிட்டே படிச்சிட்டுபோங்க [அச்சோ அச்சோ நாங்க ஏற்கனவே சேர்போட்டுஉக்காந்துகிட்டுதானே இங்கேயே வந்தோம் ஹா ஹா]

கிட்டதட்ட இந்த பதிவை 440 மேற்பட்டவர்கள் பார்த்தும்
நான் கேட்ட கேள்விகளுக்கு ஏனோ  யாரும் பதில்
சொல்ல முன்வரவில்லை[ஒரு சிலரைத்தவிர] அனைவருக்கும் ஏதோ ஒருவிதத்தில், ஏதோ ஒன்று தடுக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை. இல்லை அப்படி கேட்கக்கூடாத கேள்வியா? என்றும் புரியவில்லை.

சரி சரி விசயத்துக்கு வா என முனங்குவது கேட்கிறது. என் பதில்கள் பிறருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனாலும் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லவேண்டிய விசயத்தை சொல்லிவிடவேண்டும் சந்தர்பங்கள் கிடைக்கும்போது ஆகவே எனக்கு தெரிந்த நான் அறிந்த வகையில் சொல்கிறேன்.

எனது பதில் தமிழ்நாட்டுக் கலாசாரத்தை சார்ந்தது. ஏனெனில் நான் தமிழச்சி.இங்கு [நீரோடைக்கு]வந்துபோகும் அனைவரும் தமிழைச்சார்ந்தவர்களேயென நினைக்கிறேன்[ஹி ஹி தமிழை தமிழர்தான் படிப்பார். சில வெளிநாட்டவர் தமிழ்படிக்கும் ஆர்வளர்களும் உண்டுதான்] ஆக நாம் எப்படியுள்ளோம். எப்படியிருக்கிறோம் எப்படியிருக்கப்போகிறோம் அதுதானிங்கே. மேலைநாட்டில் இப்படி. கீளைநாட்டில் அப்படி அதெல்லாம் இங்கில்லை. தமிழ்நாட்டில் எப்படி?

இவைகள் நான் கண்டதும். கேட்டதும். பார்த்ததும்.
முதலில்:

நாடுகடந்த சுதந்திரம்.
மனிதப் பிறப்பே மனிதப் பிறப்பே
மகத்துவமானதாக-அதை
மறந்து திரிந்தான் மறந்து திரிந்தான்
சுதந்திரமாக!

சுதந்திரமென்ற தென்றல் ஆனது
சூராவளியாக!-அதைச்
சுற்றிக்கொண்டபல மனிதரையிங்கு
சூறையாடுதே வேங்கை புலியாக!

சுதந்திரமென்ற பூக்கள் ஆனது
பூகம்பமாக! -அதை
சூடிக்கொண்டபல மனிதரையிங்கு
சுருட்டி போட்டதே சுக்கு நூறாக!

நல்ல சுதந்திரம் நல்ல சுதந்திரம்
நாடு கடந்ததிங்கே! -அயல்ச்
நாட்டு சுதந்திரம் பட்டாப் போட்டதும்
நிலைகுலைந்ததிங்கே!
நல்லறங்களெல்லாம்
நிலைகுலைந்ததிங்கே!
1ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?அந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும். இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?

ஆண்பெண் சுதந்திரம். அது தற்போதைய காலத்தைப் பொறுத்தவரை சற்றல்ல மிதமாகவே மிதமிஞ்சியே இருக்கிறது. நல்ல கலாச்சாரங்கள் கடந்துபோய் மிகவும்
பின் தங்கியுள்ளதால் நாகரீகமென்ற நாளொருகூத்து சுதந்திரமென்ற பெயரில் சுற்றிவலைத்து சூறையாடுகிறது. மனிதமனதையும் உடலையும்.

தினம் தினம் மீடியாக்களிலும். செய்திநாளிதள்களிலும் அக்கம் பக்கமும். அப்பப்பா தாங்கமுடியலப்பா எந்தபக்கம் போனாலும் இதேதான் என ஒருநாளாவது தனக்குள் நீங்கள் சொல்லி வருதங்கொண்டது கிடையாது?. அப்படி வருத்தங்கொண்டிருந்தால் இதிலுள்ள வரிகள் புரியும்.

ஓகே விசயத்திற்கு வருவோம். சில சில துளிகள் மட்டுமிங்கே கோடிட்டுகாட்டியுள்ளேன். அவ்வளவுதான்

தனக்கு பிடித்த, தான்விரும்பிய,தன் இஷ்டத்திற்கு நடப்பதுதான் சுதந்திரம் என்றெண்ணிக்கொண்டு, தான்விரும்பும் துணையை தான்தேர்ந்தெடுப்பதில் தவறில்லை, ஆனால் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைபெற்றவர்களிடம் மறைத்துவிட்டு, காலை 10 மணிக்கு, திருமணம் என்றபோது 9.30 யாருக்கும் தெரியாமல் ஓடிப்போவதும் அதனால் பெற்றோர்கள் இறந்தாலும். மனமிழந்தாலும்  .கேட்டால் சுதந்திரம்
என் சுதந்திரத்துக்கு தடை. அதனால் என்னை பெற்றவர்களுக்கு தண்டனை. எனசர்வசாதாரணமாக சொல்லும் பிள்ளைகள்.

தன்பிள்ளைகளை சுதந்திரமாய் திரியட்டுமென சினேகம் என்றஒரு தூய்மையானவற்றின் பெயரில், ஆணோடு பெண்ணையும், பெண்ணோடு ஆணையும், சுதந்திரமாய் வலம்வரவைத்துவிட்டு பின்பு அதனால் அடையும் மனவருத்தங்களும், மனச்சிதைவுகளும். ஏன்பலநேரம் மானத்தையே இழக்கும் தருவாயையும் உருவாக்கி உருகுலைக்க வைக்கிறது இன்றைய சுதந்திரம்.
போய் கேட்டுப்பாருங்கள் மனசாட்சியுள்ள டாக்டர்களிடமும். வீட்டு வைத்தியர்களிடமும்.திருமணத்துக்குமுன்னே கருகலைப்புகாக வந்து நிற்கும் சுதந்திரத்தை.

இது ஒரு மனிதமுள்ள மனிதரின் [காஞ்சி முரளி] பார்வையில்
இது என்னுடைய ஒரு பதிவில் கருத்துக்களாக போட்டது

//நீங்கள் துபையில் வசிக்கிறீர்கள்... இங்கு வந்து பாருங்கள்.... touristஆக அல்ல... ஓர் ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ வசித்து பார்த்தால்... இங்கு நடக்கும் அலங்கோலங்களை காணலாம்... 'பெண் விடுதலை' என்ற பெயரில் நடக்கும் அநியாங்களை பிரதான சாலைகளிலும் - பீச்சிலும் - தியட்டர்களிலும் குறிப்பாக ஸ்டார் ஹோடேல்களிலும் காணலாம்... இது தமிழ்நாடா என்று வியந்து போவீர்கள்...
மனிதன், .............விட கேவலமாய் சாலைகளில்....

என் கவிதை வரிகளில் சொல்லவேண்டுமென்றால்...
"பெண் விடுதலை என்ற பெயரில்...
அவயங்களைக் காட்டி...
அடுத்தோரை சுண்டியிழுக்கும்...
சில வக்கிரங்களின் அணிவகுப்பு...

சாலைகளில்...
பட்டப்பகலில்...
மாநகரத்தின்..
மையச் சாலைகளில்...
முகத்தில்... முக்காடிட்டபடி...
ஆணுடலோடு சங்கமித்து செல்லும்
பெண்ணினத்தைக் கண்டும்....

காலையிலேயே....
கடற்கரையில்...
சுடுமணலில்...
ஈருயிர் ஓருடலாய்...
பின்னிப் பிணைந்திருக்கும்
பெண்ணினத்தைக் கண்டும்...."

கல்வியில் சிறந்த பெண்கள்....
கலாச்சாரச் சீரழிவை
ஏற்படுத்தும் வகையில்...
"டேட்டிங்"கில் ஈடுபடும்
இன்றைய பெண்ணினத்தைக் கண்டும்.... //

மிக ஆழமாக இதைவிடசொல்லமுடியாது சுதந்திரமென்றபெயரில் சுற்றித்திரியும் அவலங்களை!

இதைவிடக்கொடுமை. மானத்தைகாற்றில்விட்டு திறந்துதிரியும் கூட்டம் சில, மானத்தை மூடிமறைக்கும் சிலரை வசைபாடுவதுதான். பிறரை சுண்டியிழுக்கும் அங்க அவங்களை மூடிச்செல்வதால் அடுதவர்களுக்கென்ன பாதிப்பு?. பிறரையும் பாதித்து தன்னையும் பாதிக்கும் ஒரு பாதகச்செயலிலிருந்த தன்னை காத்துக்கொள்வது சுதந்திரத் தடையா?ம். சுதந்திரத்திற்குச்சுமையாய் இருக்கிறதென சுமப்பவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை காணும் குற்றக்கண்கள் தன் கற்பனைக்குதிரைக்கு கடிவாளத்தை திறந்து ஓடவிட்டு தனக்கு வருத்தமளிப்பதுபோல் நினைத்துக்கொண்டு, பிறரை வருத்தப்படுதுவதுதான். வேடிக்கை..

இங்கே கொஞ்சம்தான் சொல்லியிருக்கேன் மற்றவைகளை சொல்லிதான் தாங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்றில்லை. தெரிந்தும் தெரியாமலிருப்போருக்கு நான் பொருப்பல்ல.
இவைகள் மேலை நாடுகளில் நடந்தால் இந்தக் கேள்விகளுக்கே இடமில்லை, ஏனெனில் அவர்கள் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை வெற்றுப்பார்வையில் பார்ப்பவர்களே அன்றி அதில் வாழ்பவர்களில்லை,வாழ்ந்தவர்களில்லை. [ஆனாலும் உலக நாடுகளில் நம்நாட்டுக்கென்ற ஒரு தனிமதிப்பு வேறுநாட்டுகில்லையென்பதே உண்மை அந்த மதிப்பே பலங்கால நல்லொழுக்கம்தான்] ஆனால் எந்நாடு சென்றபோதும் தமிழ்நாட்டுகென்ற மரியாதையையும். கலாச்சாரத்தையும்.தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்பவந்தானே தமிழன். சென்றிருக்கும் அந்நாட்டு [அ]நாகரீகத்தை கற்றுக்கொள்ளும் மனிதன் தன்நாட்டு ஒழுக்கத்தையும். கலாச்சாரத்தையும் ஒதுக்கிவிடுவது ஏன்? [ஓ கால சூழலுக்கேற்ப எதையும் மாற்றும் திறனோ மாற்றுவதைதான் மாற்றலாம் தன்மானத்தை?]ஏனெனில் இதில் பல கட்டுபாடுகள். இப்படிதான் வாழவேண்டுமென்ற கோட்பாடுகள் இவைகளெல்லாம் அவனுக்கு சுதந்திரத் தடையாக இருக்கிறது.

பல்லாண்டுகால பாரம்பரியங்களையும். கட்டுப்பாடுகளையும். இன்றும் பெருமையாய் பேசப்படுகிறதே ஏன்? அதில் நன்மையுண்டு அதனால் தீமைகளின்பக்கம் போகாமலிருக்க தடையுண்டு, ஆனால். அதை விளங்கியும்கூட விளங்காமலிருக்கும் மனிதனைக்கண்டுதான் வியப்பாகவும் உண்டு. வருத்தமாகவும் உண்டு.

திருமணத்துக்கு முன் கருகலைக்கும் கூட்டமாக!
தான்தோன்றிதனத்தால் தன்னையிழக்கும் இனங்களாக!
அங்கங்களை அடுதவர்களின் பார்வைகளுக்கு விருந்துபடைக்கும் படையலாக!
அயல்வீட்டுகாரரைக்கூட அடுத்துக்கொள்ளாத அன்னியனாக!
சொகுசு விடுதிகளில் சொக்கியாடி கொக்கிபோடும் கேடுகளாக!
எழுத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லைமீறும் எந்திரங்களாக!
முதியோர் இல்லங்களை நிரப்பும் மனசாட்சியற்ற மனங்களாக!
அனாதையில்லங்களை அகலப்படுத்தும் அவலங்களாக!
நான்கு சுவற்றுக்குள் நடக்கும் புனிதங்களை
நடுரோட்டில் அரங்கேற்றும் அசிங்கங்களாக!

இப்படி, இன்னும் இன்னும். ஆண்பெண் சுதந்திரம் மிக மிக பலவீனமாகி பாதிப்பை உண்டாக்கும் கேடாகத்தானிருக்கிறது.
சிலபல விதிவிலக்குகளைத்தவிர.

சரி எப்படியிருக்க வேண்டும்.? [இத நீ என்னத எங்களுக்குச் சொல்றது எங்களுக்கு தெரியும் என்பவர்களுக்கல்ல இது]

ஒழுக்கம் ஒழுக்கம் ஒழுக்கம்
முறையான ஒழுக்கம்
இதனுள் அத்தனையும் அடங்கும்.

காணும்இடத்திலெல்லாம் கழிந்துவைக்கும் காகமோ-இல்லை
நினைத்தபொழுதிலெல்லாம் நினைத்தை நடத்திச்செல்லும்
நான்குகால் மிருகமோ அல்ல மனிதன்,

மனிதன் மிகுந்த மதிப்பு மிக்கவன்
தன்னுடைய சுய ஒழுக்கம். தனக்கென்று ஒருகம்பீரம். தனக்கென்று ஒருமரியாதை. தனக்கென்று ஒரு கெளரவம். தான் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.
தன் பிறப்பிற்கான நோக்கமென்ன என்பதை உணர்ந்தால் நிச்சயம் தன்னை தரமிகுந்த.கண்ணியமான. ஆத்மார்தமான அழகிய செயல்களின் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டு, சுதந்திரமென்றால் என்ன? அது நம்மை எவ்வாறு சுற்றியிருக்கவேண்டும். அல்லது நாம் எவ்வாறு அதனைச் சுற்றிக்கொள்ளவேண்டும். என்பதையறிந்து சுதந்திரமென்னும் சுத்தமான சுகந்தத்திற்குள் சுகமாய் சுற்றித்திரிவதோடு,தன்னை சுற்றியுள்ளவர்களையும்
தன் சுழல்சியில் சேர்த்துக்கொள்வான். சுதந்திர சுகமாய் வாழ்வான்..

அப்பாடா ஒருவழியா முடிச்சிட்டேன் இந்த ஒருகேள்விக்கே முதுகும். விரல்களும் கண்களும். ஒரு வழியா வலியாயிடுத்துபா. இன்றைக்கு இதுபோதும் மீதம் அடுத்தடுத்து. இடையிடையே பிரேஏஏஏஏஏஏஎக்கும் விடுவோம். உங்க அளவுக்கு என்னால் யோசிக்க முடியாவிட்டாலும் ஏதோ என்னளவுக்கு அதாவது என் மூளைக்குள் சென்று இதயத்தை அடைந்த சில விசயங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். இதில் பிழைகளிருந்தால் பொருந்திக்கொள்ளவும்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

சந்தேக கேள்விகள் சில.

என்ன என்ன சந்தேகம் அப்படின்னு கேக்குகிறீர்களா? ஒன்னுமில்லை சும்மாதாங்கோ ஒரு மாற்றம் வேணுமுன்னுல்ல.
எப்பபாத்தாலும்  நாமளே பதில் சொல்லிகிட்டு இருக்கோமே ஒரு தபாவாச்சி நாம கேள்வி கேட்போமேன்னுதான், என்ன கேட்கலாம்தானே! இங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு  பதில் கிடைத்தால் 
உங்ககிட்டேர்ந்து நான் அறியாதவைகளை அறிந்துகொண்டு
நாங்களும் கொஞ்சம் அறிவாளியாகளாமுன்னுதான்.அதோடு அனைவருக்கும் அறியப்படுத்தவும்தான்

ஓகே ஸ்டாட் ரெடி.

1. ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?
அந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும்
இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?

2. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி?
அந்த சமத்தால் பலமா? பாதிப்பா?

3. பிறரை எளிதில் இளக வைக்கக்கூடியவர். அல்லது பிறரிடம் எளிதில் இளகிவிடுவது யார்? ஆணா! பெண்ணா?

4. ஆண் . பெண். என்றால் எப்படி இருக்க வேண்டும்
   இப்படிதான் இருக்க வேண்டுமென வரையறை இருக்கா?
   இல்லை எப்படிவேண்டுமென்றாலும் இருக்கலாமா?

5. தன்காலமுழுவதும் தனக்கு துணையாய் இருப்பவர்[வரபோகிறவர்] எப்படியிருக்க வேண்டுமென ஆண் பெண் இருவரும் விரும்புவார்கள். அப்படி விரும்புவது ஏன்?

டிஸ்கி//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒருவழியா கேள்விகளை கேட்டுட்டேன். இதற்கு விதண்டாவாதமாகவோ. சும்மாவாச்சிக்குமோ
பதில் தராமல் உளப்பூர்வமாக, உண்மையான பதில்கள் தரவேண்டும். இது நான் மட்டும் அறிந்துகொள்ளவல்ல, நம் அனைவருமே அறியத்தான். அறிய அறியத்தானே அறிதலில் ஓர் தெளிவு உண்டாகும்.[ஆத்தி,,,, அதுக்குமீறி சேட்டைபண்ண வாரவுகளுக்கு இங்கே இடமில்லை சொல்லிபுட்டேன் ஆமா ஓகேவா?

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

இது நமக்கு புதுசு.[எனக்குள் நான்]


என்ன கவிதையைக் காணோமேன்னு பாக்குறீகளா. இதோ இந்த பொட்டிய கிளிக் பண்ணுங்க வரும்.
எல்லாரும் புதுசு புதுசா யோசிக்கிறார்களே! நீமட்டும் ஏண்டி மல்லி மக்காவேயிருக்கேன்னு மண்டைக்குள் ஒரே சலசலப்பு.
 நாமெயென்ன பட்டப்படிப்பா படிச்சிகிறோம். ஏதோ அறிஞ்சதவச்சி இப்படி சும்மா பிலிமுகாட்டிக்கீனுகீறோம்.
நமெக்கென்ன தெரியும், இருந்தாலும் முயற்சிப்போமேன்னுதான்

இத செய்தேனுங்க!

நல்லாயிருக்குதான்னு கொஞ்சம் கிளிக் செய்துபார்த்து கருத்துசொல்லுங்க மக்கா. கிளிக் கிய பிறகு நல்லாயின்னா என்ன செய்வதாம். ஆங் அதை சொல்லிப்புடுங்க மக்கா. அப்பதானே அடுத்த கட்டத்துக்கு இல்லயில்ல இந்தகட்டத்தையே சரிசெய்யலாமுல்ல.

என்ன அடுத்தகட்டம் போகலாமா? இல்லை இதையே சரிசெய்யனுமா?இல்லை வழக்கம்போலதான் எழுதனுமா? எதுன்னாலும் சொல்லுங்கப்பு..

அப்பால இதான் அதுக்குள்ள இருகிற கவிதைகள்.

உன் உச்சி முகர்கையில்
என் நாசியின் வழியே
உட்செல்லும் உன்சுவாசம்
எனக்குளிருக்கும்
உயிரை குளிரச் செய்கிறது
உன் ஸ்பரிசத்தால்.

மலரைவிட இந்த
மழலையழகு-பூத்துசிரிக்கும்
மழலை கண்டு

பூரித்து விரிகிறது
தன்னிதழசைத்து
மெல்லிய புன்னகையால்.

தேனெடுக்க வண்டாய்
தன் காதலன் 
சுற்றுவது கண்டு
தேன்மொழியால் தேன் தடவி
தன்னிதழை வைத்தாள்

சொக்கத்தங்கம் இதழ்களிலே
சொட்டுகின்ற தேனைக்கண்டு
சுற்றிவரும் வண்டினமாய்

சொக்கிபோய் நின்றான்

நீந்திச் செல்லும்
நிலவொளியே வா வா
உன்னொளியால்
என்னுறக்கம் களைத்துவிட்டு

நீ மட்டும் நிம்மதியாய்
நீலவானில் நீந்துவது சரியா
உன்னொளிக்குள்
ஒளிந்துவிளையாடவேண்டும்
 வா வா

அடியே!
அழகிய மலரே
நீ, நீரில்
ஆடிபாடுவது கண்டு
எனக்குள் காய்ச்சலடிக்கிறது

நீருக்குள் நானும் வந்துவிடவா
நீயும் நானும் சேர்ந்தாடி
என் காய்ச்சல் தனிக்க.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

”வாய்ப்பும் வியப்பும்”

வியப்பு வியப்பு

விண்கண்டு,
விண்ணில் உலவும் வினோதங்கள் கண்டு
மண்கண்டு,
மண்ணில் உலவும் மனிதர்கள் கண்டு
வான்கண்டு,
வான்தூவும் மழைகண்டு
வனம்கண்டு,
வனத்திலும் இனம்கண்டு

பூக்கும் பூமிகண்டு,
பெண்மையும் பூப்பது கண்டு
பூவைவண்டு உண்பது கண்டு
பூவைக்குள் பூகம்பம் வெடிப்பது கண்டு

உச்சியிலெழும் அருவிகண்டு
உருண்டுவிழும் அழகுகண்டு
உடலில் ஓடும் உயிர்கண்டு
ஊடுருவிப்பாயும் குருதிகண்டு
ஊர்ந்துசெல்லும் உயிரினம் கண்டு

மூச்சிகாற்று சுழல்வது கண்டு,
மூங்கிலில் இசை வருவதுகண்டு
முற்றத்தில் குருவி வந்தமர்ந்து,
முனங்கும் பாடல் கண்டு

ஆணும் பெண்ணும் இணைவதுகண்டு,
அதிலுருவாகும் உயிர்கள் கண்டு
அழிந்துவிடும் எனத்தெரிந்தும்,
ஆட்டம்போடும் உடல்கள் கண்டு

காகிதம் மனிதனை ஆள்வது கண்டு,
கானல் தண்ணீராய் தெரிவது கண்டு
காதல் காதல் காதலென்று,
கலங்கித் தவிக்கும் மனங்கள் கண்டு

பாசங்கள் மறந்து பணத்தின் பின்னே
பேயாய் அலையும் மனிதர்கள் கண்டு
பொய்முகம் புனைந்து வாழ்வது கண்டு,
பண்புகள் நாளும் குறைவதுகண்டு
பிறப்பும் இறப்பும் கண்டு,
பயப்படாமல் பாவம் செய்வது கண்டு

இறுதியாய்

என்வீட்டுக்கு கண்ணாடியில்
என்னைக்கண்டு, என்விழிகள் கண்டு
எனக்குள் எழுந்தடங்கும்
எண்ணங்கள் பலகண்டு

வியப்பு வியப்பு
இருவிழியும் மனவிழியும்
விரியும் வியப்பு
வியப்பால் வியக்க வைத்து
வித விதமானவைகளையும்
வினோதங்களையும்,
வியப்போடு அறியத் தந்த - ஏக

இறைவனை
வணங்க கிடைத்திருக்கும்
இந்த அரிய வாய்ப்பு
இவ்வுலகில் எனக்குக் கிடைத்த
இன்றியமையா இப்பிறப்பு....

டிஸ்கி// இது ஒரு கவிதைபோட்டி, இந்த தலைப்பை தந்து எழுதச்சொன்னார்கள் எழுதிவிட்டேன்.

நம்ம கிறுக்கள் பாசையில். வரும் 24 நாளாந்தேதி முடிவாம்,
ஏதாவது தேறுமா? நீங்களும் சொல்லுங்களேன் எப்டிக்கீதுன்னு.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

மனம் ஒரு குரங்கு


நிலையில்லா உலகில்
கிளையில்லா மரத்தைத்தேடி
இளைப்பாற நினைக்கும் மனம்
தட்டுத் தடுமாறி
தன்நிலை திசைமாறி-சிலநேரம்
தற்கொலையிலும் போய் நிற்கும்

நினைவுகளை சுமந்தபடி
நீரோடையில் நீச்சலடிக்கும்-
நினைவிழக்கும் வேளை வந்தால்
நீச்சல் தெரிந்திருந்தும்
நீருக்குள் மூழ்கியிறக்கும்

எவரும் தொடா எல்லயைத் தொட
எத்தனித்து -
எட்டுத்திக்கும் தான் பறக்கும்
எதுவும் முடியாது போக
ஏறிய இடத்திலேயே வீழ்ந்திருக்கும்

திசைகள் பல
தேடித் தேடி திரிந்து வரும்
தேடியது கிடைக்க வில்லையெனில்
திகைத்துபோய் சோர்ந்துவிடும்

தன்னாசையைப் போக்க
தாவித் தாவி தான் குதிக்கும்
தடுமாற்றம் கண்டு விட்டால்
தடம்மாறிப் போய்விடும்

குரங்கைவிட படுவேகம்
மனித மனம் - குரங்கோடு
மனிதனைச் இணைத்துச் சொன்னால்
கடுஞ்சினம் கொள்ளும்
குரங்கின் இனம்....டிஸ்கி// இது சிங்கபூர்ல நடக்கும் கவியரங்கத்திற்காக எழுதியதுங்கோ. என்ன ஒன்னு இத நாம அங்கேபோய் படிக்கனுமாம்.[அடியாத்தி நமக்கு அங்கெல்லாம் எப்புடி இப்ப போகமுடியும்] இநத தலைப்ப குடுத்து எழுதச்சொல்லியிருந்தாங்கோ ஒருதளத்தில்.. அதபார்ததும் நம்ம மூளை சும்மா இருக்குமா! அதான், மூளையை முடுகிவிட ஏதோ வந்தது கவிதையின்னு. இது எப்புடிக்கீதுன்னு நீங்க சொன்னாத்தானே தெரியும்.


அதுசரி ஏன் எதுகெடுத்தாலும் குரங்கு. நாய். என பாவம் அதுகளையேன் மனிதர்களோடு ஒப்பிடுறாங்க அதுகும் நமக்கும் நிறைய கனெக்ஷன்கீதோ..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

விரல்கள் விதைக்கும் விதைகள் [தொடரோ தொடர்]மின்மினி அன்போடு அழைத்த தொடர் இடுகை..  நீண்ட நாட்களுக்கப்புறம் ஊருக்கு சென்றுவிட்டதால்]இத்தொடரை எழுதுகிறேன்.எழுத அழைத்த மின்மினிக்கு  என் நன்றிகள்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?.

அன்புடன் மலிக்கா

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

நிச்சியமாக அதுதான் என் உண்மையான பெயர்.முதலில் இனிய குடும்பம் என்று வைத்திருந்த பெயரை எடுத்துவிட்டு. என் சொந்தப்பெயரையே வைத்துவிட்டேன்.ஏனெனில் என்றும் எல்லோர் மீதும் அன்புடன் இருக்க விரும்புவதால், அன்புடன் மலிக்கா என்று வைத்துள்ளேன்.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

காலடி எடுத்துவைக்கவில்லை விரலடிதான் எடுத்துவைத்தேன். [ஐய்யோடா]கவிதைகளின்மீது அதீத காதல் இருந்ததால் அதனுடன் நான் என்றும் தொடர்போடு இருக்க விரும்பியதால். என் எண்ணங்களை எழுத்துவடிவில் காணவிரும்பியதால். என் விருப்பத்தை பிறரும் விரும்புகிறார்களா என அறிய நினைத்தால்.

விழிகளின் வழியே இந்த வலையில் விழுந்தேன். விரல்கள் வழியே விதைகளை விதைக்கிறேன்.[ஒரு விதையாவாவது மரமாகுமுன்னுதான்].

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

வலை திறந்து முதல் 3. 4. மாதம் எப்படி இதை பிறருக்கு தெரியப்படுதுவதென தெரியாது. பின்புதான் தமிழ்மணம். தமிழிஸ். தற்போது [இன்ட்லியில்] உலவு. தமிழ்வெளி திரட்டிகளிலும்.

தினமணியிலும் இணைத்துள்ளேன். திரட்டிகளுக்கும். தினமணிக்கும் என் நன்றிகள்.பேஷ்புக்கிலும் என் தளத்தினை இணைத்துள்ளேன்.

இதெல்லாம்விட முக்கியமாக பிற தளங்களுக்குச்சென்று அவரவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதாலும் அவர்களின் ஆக்கங்களுக்கு கருத்திடுவதாலும் அவர்களுக்கும் மகிழ்ச்சி.அதைகாணும் எனக்கும் திருப்தி.அதுவும் என் தளம் பிரபலமடையச்செய்ய ஒரு வழி.[எல்லா ரகசியமும் சொல்லியாச்சி இனி என்ன ஆகுமோ ஹி ஹி ஹி]

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நம் சொந்த அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ளும்போது மன‌துக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது
மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. துக்கம் துண்டிக்கப்படுகிறது.

இதன் மூலம் எத்தனை மனங்களுக்கு சந்தோஷம் உண்டாகிறது [அட அதாரு அங்கே சொல்லுறது. சிலருக்கு சிலரின் மகிழ்ச்சி சோகத்தை உருவாகுமுன்னு. சிலரின் சோகம் சிலருக்கு மகிழ்ச்சியை தருமுன்னு] ஆக மொத்தத்தில் பகிர்தலால் பலன் உண்டு. அது யாருக்காக இருந்தாலும் மகிழ்ச்சிதான் இல்லையா.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?..

சம்பாத்தியம் அடைத்திருக்கிறேன் பெருமளவில் மிகப்பெருமளவில்.உங்கள் அனைவரின் அன்பை இதைவிட ஒரு சம்பாத்தியம் வேண்டுமா?பணம் சம்பாத்தித்திருந்தால் அது சிலகாலத்திற்குதான். ஆனால் பிறரின் பாசத்தை சம்பாரித்துவிட்டால் அது கடைசிவரையில் நிலைத்திருக்கும் [நிலைத்து வைத்திருக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும்] அந்த வகையில் நான் மிகவும் அதிஷ்டசாலி.

எத்தனை நல்லுள்ளங்களின் அன்பும். பாசமும்.சகோதரத்துவமும் கிடைத்திருக்கிறது.அதுமட்டுமல்லாது இந்த பதிவுகளின் மூலம் எனக்கு ஆத்ம திருப்தி அதிகரிக்கிறது.எனக்கான என் என்ணங்களை வெளிப்படுத்தும் தளமாகவுமிருக்கிறது.

நாளை நான் சாதிக்கிறேனோ இல்லையோ! ஆனால் இன்றுவரை சந்தோஷத்தில் திழைக்கிறேன்.  என் கிறுக்களென்னும் கவிதையின் வாயிலாக உங்கள்  ஆதரவென்னும் அன்பைப்பெற்று அதுபோதாதா?இன்றைய சந்தோஷம் நாளைய சாதனை..[சாதனையாக்கிடுவோமுல்ல அப்படின்னு கோரசா சொல்வதுபோல் கேட்குது. என்னா ஒரு ஆசையப்பாரு இந்த மல்லிக்கு]

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

மூன்று வலைகளுக்கு சொந்தக்காரி.மூன்றுமே தமிழ்தான் தமிழைத் தவிர வேறெதுவுமில்லை..[ஆமா இவுகளுக்கு வேறு மொழி தெரிஞ்சிட்டாலும் முணு முணுப்பது கேட்குதுங்கோ]

என் எண்ணங்களை கவிதையாக்கும் இந்த நீரோடை. என் எண்ணங்களை கலைகளாக்கும் கலைச்சாரல். அதையெல்லாம்தாண்டி இவ்வுலகத்திலிருக்கும் இருளை அகற்றி சிறு ஒளியைத்தேடும் என் ஆன்மாவிற்காக என் பயணமாக. இனிய பாதையில்.

இதை தவிர வெகுவிரைவில் வேகிவா மொழியில் ஒரு வலை திறக்கவுள்ளேன். அதுவும் கவிதை நடையில்தான். அந்த மொழியை டிரான்ஸ்லேஷன் செய்யத்தெரிந்தவர்கள் எந்தமொழியிலும் வேணுமுன்னாலும் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம்.நோ அப்ஜக்‌ஷன். பர்மிஷன் கிராண்டட்..[ஓடு மல்லி அந்த மொழியின் ரகசியம் கேட்டு படைதிரண்டு வாராக]

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?..

சில வலைப்பதிவர்கள் மீது வருத்தமுண்டு. ஏனெனில் மற்றவர்களின் மனதை ரணமாக்கி அவர்கள் சுகங்காணும்போது.

மற்றபடி யார்மீதும் பொறாமை கிடையாது அவரவரின் திறமைகளில் அவரவர் திறமைசாலிகளே! ஆனால் அனைவரின்மீதும் போட்டி உண்டு. போட்டி ஏனெனில் இக்கால வலைபதிவர்களுக்கு மத்தியில் போட்டி வேண்டும். அதுவும் ஆரோக்கியமான போட்டி அப்போதுதான் தன்னாலும் தன் திறமைகளை வெளிப்படுத்தி நிலைத்து நிற்க வேண்டுமல்லவா சகலகலா திறமைசாலியாக! [ஹி ஹி ஹி இது கொஞ்சம் ஓவர்தான்.ஹூம் ஓவரோ ஓவர்தான்]

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

இந்த வலைதிறக்க ஊக்கப்படுத்தி உதவிய என் அண்ணன் ஆரீஃப்.மற்றும் என் அன்பு மச்சான்.அதற்கு துணையாக என் அன்பு மகள். இவர்களின் ஊக்கத்தோடு தொடங்கியதுதான் இந்த வலை

நான் வலைதிறந்து முதன்முதலில் பதிவிட்டு திரும்பி வருவதற்குள் முதல் பின்தொடர்பவராக ஒரு Greece நாட்டைச்சேர்ந்தவர்தான்//kulturosupa// Gender: Male Location: θσσαλονικη : Greece Wishlist என்பவர்தான்.[வாழ்க அந்த மனிதர்]

அதன் மறுநாள் கோலங்கள் சாரூக்காதான். எனக்கு முதல் கருத்திட்டவர்கள். அதன்பின்,முதல் விருதும் தந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்

நீராடியவங்க சொன்னது.:
sarusriraj சொன்னது…
மலிக்கா நீங்க பிளாக் ஆரம்பிச்சதில் மிகவும் சந்தோசம், மென்மேலும் வளர வாழ்துக்கள்
25 ஆகஸ்ட், 2009 11:44 am

அப்புறம் ஆசான். அன்புடன் புகாரி அவர்கள்
அன்புடன் புகாரி சொன்னது…
வாழ்த்துக்கள்மலிக்கா
அழகியவடிவமைப்பு!

///கோடையின்மனைவிவாடை
வாடையின்கணவன்கோடை
இருவரும் தனித்தனியே வந்தால்
நமக்குஎதிரணி///
நன்றாக இருக்கிறது
அன்புடன் புகாரி

மற்றும் ஃபாயிஜா. என் பாலோவர் காணாதுபோக அதை கண்டுபிடித்து ஊக்கமும் தந்தவர் சுமஜ்லாக்கா.அவர்களுக்கு நன்றி சொல்வதோடு,  இங்கு வந்து செல்லும் தாங்கள் அனைவரின் பாராட்டையும்.ஊக்கத்தையும். நினைத்து பெருமையடைகிறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

என்னைப்பற்றி என்னசொல்ல. இறைவனை நேசிப்பவளாக.அன்பான இனிமையான குடும்பம் அமைந்தவளாக. அயல்நாட்டில் வசித்தபோதும் தாய்நாட்டின்மீதும் தமிழின்மீதும் பற்று கொண்டவளாக. என்எழுத்துக்களின் மூலம் பலபல நல்லுள்ளங்களின் அன்பைப்பெற்றவளாக இருக்கும் நான்.

என் எழுத்துக்களால். பல பெரியவர்களின். அன்பையும். பாராட்டுக்களையும். வாழ்த்துக்களையும். பரிசுகளையும். விருதையும். பெற்றுள்ளேன் என நினைக்கும்போது, நானா? என எனக்குள்ளே கேள்விகள் கேட்டுக்கொள்வேன்.இதெல்லாம் எனக்கு இறைவன் வழங்கியது புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது.

பல மாபெரும்கவி ஜாம்பவான்கள் உலாவரும் இவ்வலையுலகில் என் கிறுக்கள்களை கவிதைகளென்று சொல்லிக்கொண்டு கிறுக்குகிறேன் அவ்வளவுதான். ஆனால் உங்கள் அனைவருக்கும் மத்தியில்
இன்னும் கத்துக்குட்டியாகவேயிருக்கும் நான். சாதிக்கவேண்டும்.
என் எழுத்துக்கள் மூலம் சிறுதுளியாவது சாதிக்கவேண்டும்.

என் எழுத்துக்கள் எப்போது முழு வடிவம் பெற்று ஏட்டில் வருகிறதோ! அப்போது நான் மீண்டும் என் தாய்வயிற்றிலிருந்து பிறக்கும் உணர்வு கிடைக்கும் அந்த உணர்வுக்காக காத்திருக்கிறேன். அதற்கு இறைவனின் உதவியும்.தாங்கள் அனைவரின் அன்பும். ஆதரவென்னும் ஊக்கமும் நிச்சயம் வேண்டும். அதை கிடைக்குமென்ற நம்பிக்கையில். எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்திவளாய். உங்களிடமிருந்து விடைபெறுவது
உங்கள் அன்புடன் மலிக்கா..

டிஸ்கி//அதுசரி இத்தொடர் யாரும் எழுதாமல் இருக்கீகளா. அப்படியிருந்தா உடனே தொடருங்க. அட உங்களைபற்றியும் நாங்களும் தெரிஞ்சிக்கோனுமில்லையா..

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

எல்லாம் வல்ல இறைவன்.[ஈத் முபாரக்]

உலகில் உள்ள அனைத்து நெஞ்சங்களுக்கு என் அன்புகலந்த
ஈத் முபாரக்.  நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இறையே இறையே அருள் இறையே!
உன் புகழ் பாடுது திருமறையே!
மறையே மறையே அருள் மறையே!
மாநபி கொண்டுவந்த திருமறையே!

ஆகுக என்னும் ஒரு சொல்லால்
அகிலத்தை படைத்த அருள் நீயே!
ஆதியும் அந்தமும் உண்டாக்கி
அதிலுன் கருணையைத் தேக்கி

பார்த்துக்கொள்ளும் பண்பாளனும் நீயே!
பாதங்கஞ் செய்வோர்களின் பாவங்களை
மன்னிதருள்பவனும் நீயே!-அதேசமயம்
பாவத்தின் நிலைபொறுத்து
தண்டிப்பவனும் நீயே!

மாநபிகள் பலரையுமே
மண்ணில் படைத்தவனும் நீயே!
மாபெரும் அருள்களும்
மனமுவந்து கொடுத்தவனும் நீயே!

மகத்தான பலசெயல்கள்
செய்ய வைத்தவனும் நீயே!
மன்னிப்பு தருவதையே
மாண்பாக்கித் தந்தவனும் நீயே!

ஒருதுளி நீரில் மனிதயினம்
உருவாக்கிய உன்னத அருள் நீயே!
உயிர்களின் தேவைகள் தான்அறிந்து -இந்த
உலகையே தந்த உயர் நீயே!

கடல்தாண்டி மலைதாண்டி
கானத்தின் நிலம்தாண்டி
காக்கும் காவலனும் நீயே
கவலையைத் தீர்க்கும்
மருந்தும் தருவாயே!

வானத்தில் சுற்றி வரும்
சூரியனும் சந்திரனும்-அதில்
வலம்வரும் நட்சத்திரமும்கூட - உன்னை
வணங்காமல் இருந்ததேயில்லை -நீயிடும்
கட்டளையை கேட்காமல் விட்டதுமில்லை

பிறப்பையும் இறப்பையும் வைத்து-இப்
பூமியை புனிதமாக்கியவனும் நீயே!
படைப்பினங்களை சிறப்பாக்க -இந்த
பூலோகத்தை
பூரிப்படைய வைத்தவனும் நீயே!

அகிலத்தை ஆட்சி செய்பவனும் நீயே
அண்ட சராசரத்தின் அதிபதியும் நீயே!
உலகிலுள்ள அனைத்தின் மீதும்
அதீதசக்தி பெற்றவனும் நீயே!

உனதருள் வேண்டியே!
மரணம்வரும் வேளைவரை
மண்டியிட்டுக் கிடக்கவேண்டுமே
மனிதயினம்

நித்தம் நித்தம் தொழுதபடி
நோன்புகள் முப்பதும் பிடித்தபடி
ஜக்காத் நிறைய கொடுத்தபடி-முடிந்தால்
ஹஜ்ஜின் கடமையும் முடித்தபடி

உன்னை நினைக்க வேண்டுமே
இவ்வுலகம்
உன்நினைவிலேயே கரையவேண்டுமே
நொடியும் பொழுதும்
இம்மானிடம் முழுவதுவும்

ஈகை பெருநாளை இனிதாக
இன்பமாய்  மகிழ்வோடு கொண்டாட
எல்லாம் வல்ல அருள்கொடையே
எங்களுக்கு நீ அருள்புரிவாய்

பாவங்கள் அனைத்தையும்
மன்னித்து
புனித சொர்க்கத்தை
எங்களுக்குத் தந்திடுவாய்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

வாங்க வாங்க விருந்து களிக்க வாங்க.

[நம்மவீட்டு ஹீரோ மரூஃபும். என்தோழியின் மகள் ஜுல்பியாவும்.]

[காஞ்சி முரளி கூறியது...

ஏனுங்க...! 'நோன்பே' முடியப்போகுது... வரும் வாரம்..!
atleast .... 'நோன்பு கஞ்சி' கொடுப்பீங்கன்னு பார்த்தா....!
நல்லா... ஏமாத்துறாங்கப்பா...!
அப்படியே... ஒரு பிரியாணி சட்டிலே
எனக்கும்... ஜெய்லானிக்கும்... நாடோடிக்கும்... courierல போட்டனுப்புங்க.]

அப்படின்னு பிரியாணியும் நோன்பு கஞ்சியும் கேட்ட சகோ முரளிக்கும்.
அதில் பங்குகேட்ட ஜெய்லானி அண்ணாத்தேக்கு மற்றும் நாடோடியால் வந்த விருந்துதான் இது..

நீரோடையில் கண்களால் கவிதை நீராடி
களைத்தும் களைக்காமலும் -கண்
கலங்கியும் கலங்காமலும்-உதடு
சிரித்தும் சிரிக்காமலும்-மனம்
மகிழ்ந்தும் மகிழாமலும் -நெஞ்சம்
நிறைவடைந்து நிறைவடையாமலும்
எல்லாவற்றுக்கும் மேலாக
பொறுமையாய் படித்து
பொறுப்பாய் கருத்திட்டு - என்னை
பூரிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும்.

என் அருமை தமிழ்மக்களே! உங்கள் அன்பிற்குறிய மலிக்கா
[நிறுத்து என்னது பாரதிராஜா ஸ்டைலில்தான் இத நாங்க படிக்கனுமா அப்படினெல்லாம் கேட்காம படிங்கப்பூ] அன்போடு வழங்கும் [ நோன்பு மற்றும் பெருநாள் விருந்து [கண்களுக்கு மட்டும்] இது
தர்பூசணி. நோன்புக்கஞ்சி. சாம்பார். சம்சா.ஃப்ரைட் ரைஸ். டம்ளிங். கீமாதோசை. பேரிச்சைபழம். பால்சர்பத். கொய்யாஜூஸ்.
அனைத்தும் மச்சான் ஸ்பெசல்..[ஆனா தர்பூசணி நான் கட்பண்ணியது எவ்வளவு கஷ்டமான வேலை அதை என்னிடம் விட்டதுதான் கொடுமை அதை செய்து முடிப்பதற்குள் அப்பப்பா ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்]
இது முட்டை, மட்டன்கீமா. லாப்பா.

லாப்பா. வாழைக்காய் பச்சி. பெங்களூர் பக்கோடா.
வெள்ளரிமற்றும் பழங்கள். சைடிஸ் வருவதற்குள் கிளிக்.

நோன்புக்கஞ்சி. இது நான் செய்தது அதுவும் ஓட்ஸில் மட்டன்போட்டு.
என்னது குடிக்கிறமாதரி இருந்ததாவா? கோப்பையும் சேர்த்து காணோம் கடைசியில் கச்சடா சுருட்டும்போது சுருட்டியிருப்பாக! அவ்வளவு நல்லாவாஆஆஆ இருந்துச்சி. [முரளியண்ணா கேட்டீகளே நோன்புக்கஞ்சி இதோ]

நோன்புக்கஞ்சி. சிக்கன்கட்லெட். உளுந்து போண்டா. கொண்டைக்கடலை கூட்டு.

இது உருளைக்குகிழங்கு ஓட்ஸ் கட்லெட்.

இது எங்க அண்ணன்வீட்டுக்கு நாங்க நோன்பு திறக்க போயிருந்தபோது வைத்த பதார்த்தங்களை நான் எதார்த்தமாக செய்த கிளிக்.
இது கீமா மற்றும் ஓட்சில் செய்த மசாலா ஹரீஷ்.
இது ஒரு தனி டேஸ்ட்.
என்னதிது. ஏன் யாருக்கும் தெரியாதோ இதுதாங்கோ சிக்கன். இல்லயில்ல கோழி. ஓ அதுதான் இதா நாங்களும் என்னமோன்னு நெனச்சோம் அப்படின்னு பெருமூச்சி. காக்கா அதுவும் வெள்ளக்காக்கவை  இரவில் தின்னவங்க விடுவதுபோல் தெரியுது.
இத நாங்க கிரிளரில் சுட்டு. கப்சா சோறு செய்து. அதுமேல உக்காத்தி வச்சிருக்கோம். கோழி சோறை சாப்பிட்டுவிட்டு குண்டானதும்,
நாங்க சாப்பிட.

சரி சரி நீ கோழியைபார்க்காமல் கண்ணை மூடிக்கிட்டுதான் இருக்கேன்னு
அல்லாரும் நம்பிட்டாங்க! கண்ணு.
போங்க மம்மிஇன்னும் மீதியெல்லாம் எங்கே மம்மி.
 அதுவா வந்துகிட்டேயிருக்கு இதுகே கண்ணு போட்டுருவாங்கோ ன்னுதானே  சைடில் நின்னு கிளிக் செய்தேன் மரூஃப்கண்ணு.
ஓகே மம்மி
பாருங்க மம்மி ஜெய்லானி அங்கிளும். முரளி அங்கிளும். ஸ்டீபன் அங்கிளும். கூடவே இப்ப வந்திருக்கிற அய்யூஃப் அங்கிளும் குறு குறுன்னு என்னையே பார்க்கிறாங்க.
அச்சோ அப்படியா வெள்ளக்காக்காக்கிட்ட சொல்லி இவுகளெயெல்லாம் ஒரு வழிபண்ணிச்சொல்லாம்டா கண்ணு சரியா!
ஓகே மம்மி வெவ்வெவெவே..

தாயகத்திலிருந்து வந்தபின் எங்கள் வீட்டில் செய்த சில [ஏதோ ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டைபோல்] உணவு வகைகளை உங்களுக்கு விருந்தளிக்க இங்கே கொடுத்துள்ளேன். என்ன ஒன்னு வாசனை பிடிக்க முடியாது [அப்படாஆஆஆஆஆ தப்பிச்சேன்] கண்ணெதிரில் இருந்தும் கைதொட்டும் இடையில் கண்ணாடி [அதாங்கோ மானிட்டர் கண்ணாடி]தடுத்துக்கொண்டு வாயில் வைக்க முடியாமல் போகும் அவ்வளவுதான்.

இருந்தாலும் அன்பாய், பாசத்துடன் பரிமாறியுள்ளேன் அனைவருக்கும் உண்டுகளித்து அச்சோஒ கண்டுகளித்து மகிழுங்கள் [எங்கே மகிழ்வது வயிறு எரியுது அப்படின்னு எல்லாம் கோரசாக சொல்வதுபோல் கேட்குது] என்ன செய்ய என்னால் தற்போது இப்படிதான் விருந்து கொடுக்க முடியும். அனைவருக்கும் சேர்த்து கொடுக்க முடியாட்டியும் நிச்சயம் ஒருநாள் அனைவருக்கும் விருந்துகொடுக்க இறைவன் அருளட்டும். அருள் புரிவான்.

என்ன எல்லாரும் பெருநாள் துணியெல்லாம் எடுத்தாச்சா..
உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் என் அன்பான அட்வான்ஸ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

டிஸ்கி// மூன்று மாதமுன்பே டிக்கெட் புக்பண்ணிவைத்திருக்கும் கலாம்காக்காவுக்கு ஸ்பெசல் விருந்து பெருநாளைக்கு கொடுத்துட வேண்டியதுதான். [டிக்கெட்காலாவதி யானாலும் நாங்க விடமாட்டோமுல்ல அப்படின்னு அய்யூஃபிடம், கலாம்காக்கா அபுதாபியிலேர்ந்து சொல்லுறது கேட்குறதுபோல தெரியுது?]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

ஒரு காதலி காதகியானாள்.

அன்பேயென்றாள்
அரவணைத்தேன்
ஆருயிரேயென்றாள்
ஆட்டம் கொண்டேன்

அகிலமே நீதானென்றாள்
அடிபணிந்தேன்
உயிரே உனக்காகவென்றாள்
உருகி விட்டேன்

ஒருநாள் வந்து
ஓசையின்றி அழுதாள்
உதிர்ந்து விட்டேன்

அழுத முகத்தோடு
அழுத்தமான மனதோடு
அன்பே என்ற உதட்டால்
அண்ணா என்றழைத்தாள்

அழைத்த மறுநொடி
அடிதளம் அதிர அதிர
அதாளத்திற்குள் அழுத்தப்பட்டேன்
அண்ட சராசரம் அத்தனையும்
அப்படியே உரையக் கண்டேன்

அபூர்வமாய் தெரிந்த அவள்
அசிங்கமாய் தெரியக் கண்டேன்
அடுக்கடுக்காய் என் மனயேடு
அவளின் நினைவுகளை
அடிச்சுவடு தெரியாமல்
அழிக்கக் கண்டேன்

காதலல்ல காதலல்ல
அவள் என்மேல் கொண்டது
காதலல்ல
காதலின் பெயர்கொண்டு
காலமெல்லாம் எனை
கருகவைக்க வந்த
காதல் காதகி.

டிஸ்கி// பல இடங்களில் இதுபோன்று நடகிறது அதனால்
காதல்கள் கானலாகி போகிறது. சிலநேரம் கருகியும்போகிறது. உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அமைந்தால். அந்த ஏட்டின் வலியை என் கவிதையில் மூலம் இங்கு எழுதிக்கிறுக்கினேன்.

[சுஸ்கி//இது ஆண் பெண் இருவருக்குமானதுதான் அவரவர் படிக்கும்போது மாற்றி படித்துக்கொள்ள வேண்டும் ஜமால்காக்காவின் பின்னுட்டத்தால் வந்ததிந்த சுஸ்கி.. ஹா ஹா ஹா]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

சாட்டையடி

வீட்டைவிட்டு கிளம்பும்போது
விருட்டென சென்றது
வாசல்வழி வந்தபூனை

வாசலிலேயே நின்று
வடக்கு பார்த்தும்
வாஸ்து பார்த்தும் -மனதில்
விசமத்தோடு சென்றான்

வீதியிலொருப் பூனை-தன்
வயிற்றுப் பசிபோக்க 
எதிர்திசையில் கிடந்த -தன்
இரணத்தை எடுக்க ஓடியது

கூறுகெட்ட மனிதன்-அதன்
குறுக்கே போக
சர்ரென போனவண்டி-அதன்மீது
சட்டென ஏறியதும்

இறந்தது பூனை
இடிவிழுந்ததுபோல் நின்றான்
எல்லாம் கற்றறிந்த
இன்றைய மனிதன்

மரித்தது பூனை
மனிதனின்
சகுனம் சரியில்லாததால்-அவன்
மனதில் விழுந்தது சாட்டையடி
மனசாட்சியின் ஓசையால்......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது