நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கெளரவமாய் காக்கும் அசிங்கங்கள்..


தன் வயலில் வேறொருவரின் விதை
வேரூன்றி காலூன்றியதைக் கண்டும்
காணமல் காக்கிறதாம் கெளரவம்
தான்கட்டும் வேட்டியில் கறைபட்டுவிடாமல்

கூச்சநாச்சமற்று கொஞ்சி சிரிக்க
கூசாதோ உள்ளம்
கூடிக் களித்தால் நீங்கிடுமோ!
கறைபட்டதெல்லாம்!

அச்சாணி கழண்டு
அஞ்சாமல் ஓடும் வண்டி
எச்சாணியாலும், எச்சிலையானாலும்
ஏறிமிதித்தோடுமோ
எல்லைகளைத்தாண்டி!

மந்திரத்தால் காய்க்குமோ வாழை
மானமிழந்து வாழுமோ மானின் தசை
கெளவுரத்தைக் கட்டிக்காக்கும்  மீசை
குலத்தை குலைக்க வகுக்கிறதே
கேடுகெட்டபாதை

கூரைவீடுகளில் புகையமுற்ப்பட்டாலும்
கொழுந்துவிட்டெறிகிறது
தெருக்கோடிவரை
கோடிவீடுகளில் பற்றியே எறிந்தாலும்
கசியக்கூட மறுக்கிறது
தன்வாசல்வரை

வெக்கமற்ற வாழ்க்கை வாழும்
வெம்புழுக்களோ
வீதியில் மட்டும் காட்டும் வீராப்பு
வீட்டுக்குள்ளே போடும் மாராப்பு

வசைபாடும் சமூகம்கூட
வக்கனையோடு வாரியணைக்கிறது
வகைகெட்ட வகையார்களை
வாழையிலை பரிமாறி!

கண்ணிருக்கு பார்க்க
என்றிருக்க முடியாத -சில
எண்ணங்கள் மட்டுமே
கொதித்தெழுகிறது
அதுவும் வீட்டடுப்பில்
கொதித்தடங்கும் வெந்நீரைப்போல!!!.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

ஜீவராகம்..


நானும் நீயும் ஒன்றடா-என்
நாணம் சொல்லும் கேளடா
உன்வார்த்தை ஒன்று போதுமே
என் ஜென்மம் நீளுமே!

காற்று உந்தன் காதிலே
எந்தன் காதல் வந்து சொல்லுமே
அதை கேட்டு நீயும் பாரடி
உனைத் தேடுமென் ஜீவனடி

வான வீதிப் பாதையில்
வாசம் வீசும் பூங்குயில்
ராகம் சொல்லி பாடுதடா
ரகசியமாய் தினமும் தேடுதடா

உயிரும் மெல்ல உருகுதடி-அதில்
ஊணும் சேர்ந்து கரையுதடி
உண்ணும் உணவும் யாவுமே
உன் நினைவாய் உடலில் சேருதடி

நானும் நீயும் ஒன்றடா -அந்த
நாளும் பொழுதும் ஒன்றடா
நகரும் நொடியும் ஒன்றடா
நம் காதலும் அதனினுல் நன்றடா

காலந்தோரும் உன்னுடன்
கைசேர்ந்து கலந்து வாழனும்
இறுதி மூச்சு நாள்வரை-நம்
இதயம் இணைந்தே இருக்கனும்

வானம் பூமியாவுமே-நம்மை
வாழச்சொல்லி வாழ்த்துமே -அந்த
வசந்தமும் நம்முடன் சேர்ந்துதான்
விளையாடி மகிழுமே!

”நானும் நீயும் ஒன்றடா”
”நம் ஜீவன் இரண்டும் ஒன்றடி”


டபுள் டிஸ்கி//இதையெல்லாம் பாட்டுன்னு நெனச்சி யாரும் பாடிடாதீங்கோ சும்மா ஒளறி வச்சிருக்கோம் அவ்வளவுதேன் ஹா ஹா
சேதி தெரியுமா இப்படி நாம ஒளறி வக்கிறதக்கூட சுட்டுகிட்டுபோய் அவங்க எழுதின பாட்டா போட்டுக்கிறாங்கன்னு ஒருத்தர் வழக்கு தொடர்ந்திருக்காம். ஒன்னோடதெல்லாம் யாரு சுடுவாங்குறீங்களா அதுவும் சரிதான் ஹி ஹி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சுடாமல் சுடுதே!.

 சூடா ஒரு டம்ளர்  டீ கிடைக்குமா? என்னது டீயாஆஆஆஆஆஆஆஆஆஆஅ


இனி அடிக்கடியென்ன ஒருகடிக்கூட டீக்குடிக்க யோசிக்கனுமோ???? 

 [”அம்மா பால்”. ”போப்பா வாரம் ஒருதரம் வந்தாபோதும் போயிட்டுவா].
அடிய்யே தங்கப்பொண்ணு டீயா போட்டிருக்கே தலைய வலிக்கிறமாதரியிருக்கு ஒரு கப்பில் கொஞ்சம் தருகிறாயா இதோ வாரேன்..]


ஆகாகா இனி பக்கத்துல போகிற  பஸ்ஸை பாக்குறத்துக்கும் யோசிக்கனுமோ????


[பஸ்ஸில் ஏறினா நிக்கிறவங்களுக்கு அதே காசுதான்! உக்காந்துள்ளவங்களுக்கும் அதேகாசுதான்! அப்ப இனி பாக்குறவங்களுக்கும் கேப்பாங்களோன்னுதேன் அதுவும் டபுல்மடங்கில்]


அதைவிட இனி பதிவுபோடக்கூட யோசியோ யோசின்னு யோசிக்கனுமோ????


பின்ன பில் எலக்டிக் பில் எகிரிடுமாமே அப்ப பதிவுபோட கணினிக்கும் கரண்ட் தேவை அதை ஆப்ரேட் பண்ணுகிற நம்ம கண்ணுக்கு வெளிச்சவேணுமுன்ன ஒரு லைட் தேவை அப்போ டபுள் டிபுளாகிடுமேன்னுதாங்கோ!..
-----------------------------------------------------------------
அடடா எப்படியெல்லாம் சோதனை சுத்தி சுத்தி அடிக்குது
இதெல்லாம் நீ ஊருக்குள் வந்ததால்தானா. அதுசரி..
“ஏண்டிமா மல்லி ஊருக்குள்ள காலெடுத்து வெச்சே நீ துபாயிலே இருந்திருக்ககூடாதா இப்ப பாரு இங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு.”
ஹூம் இன்னும் என்னனமோ நடக்குமோ தெரியலையே!சரி சரி எப்போ போறே!
விஷா ரெடியாச்சா இல்லயா? கெளம்பு கெளம்பு நீ ஊருக்கு வந்திருந்ததுபோதும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பொசு[ங்]க்காதே!


பெண்ணுக்கு பெண்ணே
பேரெதிரியாகுமோ!
பொல்லாத பொறாமையால்
பூமியே புதைந்து போகுமோ!

பொருமைக் கடலென்றும்!
பூமித் தாயென்றும்!
சாந்த சொரூபமென்றும்!
சர்வமே நீயென்றும்!

சொல்லிச் சொல்லியே
சாந்தமான நீ
சர்வதிகாரியாகிறாயோ!-பிறரை
சந்தியில் நிறுத்தப்போகிறாயோ!

வீசுதடி விசக்காற்று-உன்
வார்த்தைகளில் வீரியத்தில்
குத்திக்காட்டல் வழியாக!
குடும்பம் குலைக்கும் கருவியாக!
வழியசென்று வம்பிழுக்கும்
வரைமுறையற்ற பேச்சாக!

உள்ளம் கொல்லும் விசக்காற்று
வளைத்து வளைத்து வீசுதடி!
ஊதலில்லாமல் பரவிப் பரவி
உலகையே அழிக்க நினைக்குதடி!

உன்னிணத்தை எப்போதும்
எண்ணனுமோ எதிரியாக
எண்ணிவிட்டு இருந்திடுமோ
உன்னுள்ளம் அமைதியாக!
பொல்லாத பெண்மையாக
பூமியில் வாழனுமா?
பூவோடு நாரும் சேர்ந்து
பொழுதுக்கும் மணக்கனுமா?

பொசுங்காதே பொறாமையில்
பொசுக்காதே பிறைரை தீயில்...

டிஸ்கி// இதை அப்படியே ஆணினத்துக்கும்[அதாவது ஆண்பாலுக்கும்] மாற்றிக்கொள்ளலாம். 
நாங்களெல்லாம் நல்லபிள்ளைங்கப்பா அப்படியெல்லாம் சொன்னா யாரும் நம்பமாட்டாங்கப்பா ஹா ஹா]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது