அதிரை. யுனிக்கோட் தேனீ உமர்தம்பி அவர்களுக்கு செம்மொழி மாநாட்டில்: உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது
"உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்" ஒரு நாள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருக்கிறது.. 24 ஆம் தேதி... அம்மாநாட்டு அரங்கில் உமர் தம்பி அவர்களின் பணிக்கு சிறப்பு சேர்பிக்கும் வகையில் ஓர் அரங்கிற்கு "உமர் தம்பி அரங்கம்" எனப் பெயர் சூட்டியுள்ளனர் இந்த அங்கீகாரம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியான செய்தி.
உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டி நான் ஒரு பதிவை என் வலைதளமான கலைச்சாரலில் April 21, 2010 8:59.க்கு போட்டேன். அதில் நிறைய சகோதர சகோதரிகளின் ஆதரவும் இருந்தது. அத்துடன் அப்பதிவிலேயே சகோதரர் காஞ்சி முரளி அவர்கள் வலைத்தளப் பதிவில் போட்டால் மட்டும் போதாது. இக்கோரிக்கை நேரடியாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் இது அரசு சம்மந்தப்பட்டது எதையும் நேரடியாக செய்யவேண்டும் என்றார்கள். அதனால் அவர்களை மெயில்மூலம் தொடர்புகொண்டு என்ன செய்யவேண்டுமென விபரம் கேட்டேன். அவர்கள் மெயில் ஐடிகள் தந்தார்கள்.
இதை இப்படி இப்படிசெய்யவேண்டும். இன்ன இன்னாருக்கு கடிதம் அனுப்பவேண்டுமென விபரமாக சொன்னார்கள். அவர்கள்சொன்னதுபோல் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு . Tue, Apr 27, 2010 at 6:40 AM அன்று கடிதம் எழுதினேன்
அக்கடிதத்தோடு, நான் கலைச்சாரலில் போட்ட பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அத்தனை கருத்துரைகளையும் சேர்த்து மாண்புமிகு துணை முதல்வர் வலைதளத்தின் தலைமை நிர்வாகியான திரு ஹசன் முகம்மது ஜின்னா அவர்களுக்கு, துணை முதல்வர் பெயரில்
Wed, 5 May 2010 10:23:11அன்று உமர் தம்பி தொடர்பான கோரிக்கை அனுப்பினேன்...
இதுதான் நான் துணை முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவிலிருந்து சில.
""மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சார் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு...
என் அன்பான வாழ்த்துக்களுடன்...
வலைதள தமிழை பயன்படுத்தும் தமிழன் என்ற முறையில்,
ஓர் தமிழனுக்கு ஓர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்க்கு,
தாங்கள் 'கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில்' அங்கீகாரம் கிடைக்கும் - தாங்கள் நிச்சயம் செயல்படுத்தி காட்டுவீர்கள் எனும் நம்பிக்கையில் அயல்நாட்டில் வாழும் தமிழர்களின் சார்பாக
இக்கோரிக்கை மனுவினை தங்கள் முன் வைக்கிறேன்...
அனுப்புனர்:
திருமதி. மலிக்காஃபாரூக்
அடுத்தடுத்து யார் யார்க்கு மெயில் அனுப்பனுமோ அவர்களுக்கெல்லாம் மெயில்கள் அனுப்பினேன். அனுப்பியதோடல்லாமல் இடையிடையே விசாரித்துக்கொண்டேயிருந்தேன்.
அதன் காரணமாய். திரு.ஹசன் முகமது ஜின்னா அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டுபோய்... துணை முதல்வர் மாநாட்டு செயலாளர் அலாவுதீன் அவர்களுக்கு பரிந்துரை செய்து, இது தொடர்பான குழு அமர்ந்து, இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, அதன் தொடர்ச்சியாக மாநாட்டினை முன்னிட்டு மாணவர்களுக்கான கணினி போட்டி நடைபெறுகிறது.. அப்போட்டியில் முதலிடத்தில் வெற்றிபெறும் மாணவருக்கு செம்மொழி இணைய மாநாட்டில் "உமர் தம்பி விருது" வழங்க உத்தேசித்து. பின்பு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தமிழ் இணையதள மாநாடு நடைபெறும் ஐந்து அரங்கத்தில் ஓர் அரங்கினுக்கு "உமர் தம்பி அரங்கம்" என உமர் தம்பி அவர்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளது தமிழக அரசு.
இறைவனின் உதவியால் உமர்தம்பி அவர்களுக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கிய தமிழக அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
அதோடு இதற்கு பேருதவியாக இருந்த நல்லுள்ளங்கள். சகோதரர் காஞ்சி முரளி, திருவாரூரில் பிறந்த சகோதரர், வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா, உலக தமிழ் மாநாட்டு செயலாளர் திரு. அலாவூதீன். அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.
என்னுடைய இந்த அன்பான வேண்டுகோளை ஏற்கச்சொல்லி திரு. ஹசன் முகம்மது ஜின்னா அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சொல்லியபோது மறுக்காமல், செய்ய சொல்வதாய் சொல்லியதோடு இல்லாமல் அதை நிறைவேற்றிதந்த
”உமர் தம்பி அரங்கம்” பெயர் வைத்திட முழுக்காரணமாக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் மாநாட்டு செயலாளர் அலாவுதீன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
ஒரு நல்ல விசயத்துக்காக என்னாலான சிறு உதவி. இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திய இறைவனுக்கே என் சிரத்தை தாழ்த்துகிறேன்..
எந்த ஒரு அடியானும் அவன் சக்திக்குமீறி சோதிக்கப்படுவதில்லை.
அதேபோல் எந்த ஒரு நல்ல மனிதருக்கும் அவரின் நல்லதொரு செயல்களுக்கு தகுந்த கூலி வழங்கப்படாமலிருப்பதில்லை என்பது இறை வாக்கு. அதன்படி தான் உயிரோடுயிருக்கும்போது செய்த நல்லதொருக் காரியம், தான் இறந்தபின்னும் உலகவாசிகள் பயனடைவதுபோல் செய்து சென்ற உமர்தம்பி அவர்களுக்கு, தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரம் சாலச்சிறந்ததே!
இது நன்மை செய்தவருக்காக இறைவன் அளித்த நற்கூலி அல்கம்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நான் கலைச்சாரலில் இட்ட பதிவுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..
டிஸ்கி// எனது தந்தையும் அதிரையென்பதால்
எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..
இத்துடன் நான் சகோதரர் தாஜுதீன் அவர்களின் பதிவில் இட்ட கருத்துரைகளும். சகோதரரின் பதில்களும்.
அன்புடன் மலிக்கா, Thursday, April 22, 2010
நிச்சியம் கிடைக்கனும். இன்ஷா அல்லாஹ்.
நானும் இப்பதிவை போட்டுள்ளேன்.
http://kalaisaral.blogspot.com/2010/04/blog-post_21.html
தாஜூதீன், Thursday, April 22, 2010
அன்புடன் மலிக்கா.
வருக்கைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் மலிக்கா, தங்களின் வலைப்பூவிலும் இந்த வெளியிட்டதற்கு மிக்க நன்றி. இந்த முயற்சிகளுக்கு பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிரகாசமாக உள்ளது.
அன்புடன் மலிக்கா, Sunday, May 02, 2010
அன்புச்சகோதரர் அவர்களுக்கு.
இது சம்மந்தமாக தெரிவிக்கவேண்டி இடத்திற்க்கு என்னால் ஆன ஒரு சிறு முயற்ச்சியை செய்துள்ளேன்.
அந்த முயச்சிக்கு பலன் [கிடைக்குமென்ற நம்பிக்கையிருக்கு]நிச்சயம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்..
தாஜூதீன், Sunday, May 02, 2010
சகோதரி மலிக்கா அவர்கள், உங்களின் தனிப்பட்ட முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம், தேனீ உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க உண்மையில் உங்களை போன்ற மற்ற தமிழ் ஆர்வளர்களின் வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும் என்று நம் அனைவரின் நம்பிக்கை.
நம்பிக்கையின்படியே இறைவன் நிறைவேற்றித்தந்துவிட்டான்..அல்ஹம்துலில்லாஹ்!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!
வாவ்.. உண்மையிலே பாராட்டுக்குரிய அருமையான விசயம். என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு மலிக்கா.
முமுக தலைவர் அவர்களும் இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.
பதிலளிநீக்குhttp://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=587:unicode-tamil-umartambi&catid=43:tmmk-annoncement&Itemid=161
http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=585:umer-thambi-adirampatinam-tmmk-jawahirullah-unicode-tamil&catid=54:print-media&Itemid=172
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அதிரை யுனிகோட் தேனீ உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது மிகப்பெரிய சாதனை.தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்,துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்த சீரிய பணியில் சம்பந்தப்பட்ட சகோதரி,மலிக்கா,சகோ.காஞ்சி முரளி,சகோ.ஹசன் முகம்மது ஜின்னா,சகோ.அலாவுதீன் மற்றும் உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
பதிலளிநீக்குபொது நலத்திர்க்காக செய்யும் ஒவ்வொறு செயலும் இறைவனால் அங்கிகரிக்கப்பட்டதே
பதிலளிநீக்குவாழ்த்துக்களும் நன்றியும்.
தாங்களுக்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஅங்கீகாரம் கிடத்தமைக்கு வாழ்த்துக்கள்..
சந்தோஷப்படவேண்டிய
பதிலளிநீக்குவிஷயம் தோழி.
மகிழ்ச்சி. ....... வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.... தொடரட்டும் உங்கள் பணி...
பதிலளிநீக்குஜஸாக்குமுலாஹ் க்கைர்..
பதிலளிநீக்குரொம்பவும் சந்தோஷமான செய்தி. பணத்திற்கு அலையும் நிறுவனங்களுக்கு மத்தியில் இலவசமாக வழங்கியவருக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரம் கிடைக்க முயற்சி செய்ததுக்கு வாழ்த்துக்கள்.
இதை மற்றவர்கள் அரசியல் ஆக்காமல் இருந்தால் சரி
வாழ்த்துக்கள் தோழி உங்களின் முயற்சிக்கு .
பதிலளிநீக்குஅன்பு மலிக்கா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றியடைந்தமைக்கு ...
பெருமையாக இருக்கின்றது ...
முதற் செய்தி ஈரோடு கதிர் அவர்கள் குறித்து ...
தற்போது நீங்கள் ...
மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும் அன்புடன் !
உமர் தம்பி அரங்க நிகழ்வுகளில் நீங்கள் கலந்து கொண்டால் என்ன ?
பதிலளிநீக்குமச்சானோடு உடனே புறப்படுங்கள் !
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதமிழிஸ் இணையதளம் முதல் முதலில் தேனீ உமர் தம்பி என்று முகப்பில் வெளியிட்டு பெருமை சேர்த்தது அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி அக்கா உங்களுக்கு பாராட்டுகள்......
பதிலளிநீக்குநல்லமுயற்ச்சி மல்லிக்கா
பதிலளிநீக்குஉதவிய அனைத்து உள்ளங்களுக்கு என் நன்றிகள்
வாழ்த்துக்கள் மல்லிக்கா....தெடரட்டும்....
அன்புடன் மலிக்கா;தாங்களின் இப்பனி மிகசிறப்பானது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..
பதிலளிநீக்குஅன்புமலிக்கா
அதுசரி முரசொலியில் ஒரு கவிதை வந்துள்ளதே. அது உங்களோடதா ஏனெனில் அதிலும் இதேபெயர் மலிக்காஃபாருக் என்று இருந்தது அதான் கேட்டேன். அது உங்களோடவாக இருந்தால் அதற்க்கும் சேர்த்து வாழ்த்துக்கள்
உமர்தம்பி அவர்களுக்கு செய்யப்பட்ட
பதிலளிநீக்குமரியாதையை நினைந்து
மிக்க அகமகிழ்கிறோம்!
இவர்கள் தான் உண்மையிலேயே
போற்றுதலுக்குரியவர்கள்!
ஆனால், இங்கு சிறுபான்மை, பெரும்பான்மை என்றெல்லாம் யாரும் இல்லை!
எல்லாரும் தமிழக மக்களே! இது எனது அன்பான வேண்டுகோள்!
அனைவருக்கும் சம உரிமை உண்டு!
(திரு.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் குறித்து!)
மிக்க நன்றிகள்!
Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
பதிலளிநீக்குவாவ்.. உண்மையிலே பாராட்டுக்குரிய அருமையான விசயம். என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
நல்ல பகிர்வு மலிக்கா.//
மிக்க மகிழ்ச்சி ஷேக்.தங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..
அண்ணாமலை..!! கூறியது...
பதிலளிநீக்குஉமர்தம்பி அவர்களுக்கு செய்யப்பட்ட
மரியாதையை நினைந்து
மிக்க அகமகிழ்கிறோம்!
இவர்கள் தான் உண்மையிலேயே
போற்றுதலுக்குரியவர்கள்!
ஆனால், இங்கு சிறுபான்மை, பெரும்பான்மை என்றெல்லாம் யாரும் இல்லை!
எல்லாரும் தமிழக மக்களே! இது எனது அன்பான வேண்டுகோள்!
அனைவருக்கும் சம உரிமை உண்டு!
(திரு.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் குறித்து!)
மிக்க நன்றிகள்..//
அண்ணாமலை அவர்களே! தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி.
தாங்கள் அன்பான வேண்டுகோள் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுகிறது.
இப்படியே அனைவரும் நினைத்துவிட்டால் போதுமே! அதைதானே நாங்களும் எதிர்ப்பார்க்கிறோம்.
மிக்க நன்றி..
ரொம்ப மகிழ்ச்சிங்க மலிக்கா...உங்களது முயற்சி போற்றத்தக்கது....வாழ்த்துக்கள்... யுனிகோட் உமர்தம்பி அவர்களை நேரில் பார்த்தவன்.. பண்பானவர்.. அவர் நினைத்து இருந்தால் இதை வணிக நோக்கத்தில் செயது இருக்கலாம்.. ஆனால் அதையெல்லாம் செய்யாமல் இந்த தமிழுலகத்திற்கு அர்ப்பணித்த அவருக்கு எவ்வளவு பெரிய மனசு பாருங்கள்.... அவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது அவரின் மனது போல்...பெருமையடைகிறேன் நானும் அதிரையைச் சார்ந்தவன் என்பதில்..
பதிலளிநீக்குMaraicoir கூறியது...
பதிலளிநீக்குமுமுக தலைவர் அவர்களும் இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்..
தங்கள் வருகைக்கும்
தகவலுக்கு மிக்க நன்றி.
இதற்காக எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் பாராட்ட வார்த்தையில்லை மல்லிகா. முயற்சிக்கேற்ற வெற்றி கிட்டியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி
பதிலளிநீக்குவாழ்க உமது தொண்டு, வளர்க உமது புகழ்...
இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் என் சார்பாக வாழ்த்து மற்றும் நன்றிகள்
உங்கள் முயற்சி வெற்றி அடைந்ததற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎல்லா புகழும் இறைவனுக்கே... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குMasha Allah
பதிலளிநீக்கு//பொது நலத்திர்க்காக செய்யும் ஒவ்வொறு செயலும் இறைவனால் அங்கிகரிக்கப்பட்டதே
பதிலளிநீக்குவாழ்த்துக்களும் நன்றியும்///
மிகச்சரியே வாழ்த்துக்கள் மலிக்கா
உங்களின் முயற்சியும் காஞ்சி முரளி அவர்களின் முயற்சியும் போற்றத்தக்கவை.
பதிலளிநீக்குஎல்லாம் வல்ல இறைவனின் அருளால் அதிரை யுனிகோட் தேனீ உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது மிகப்பெரிய சாதனை. இந்த சீரிய பணியில் சம்பந்தப்பட்ட சகோதரி,மலிக்கா,சகோ.காஞ்சி முரளி,சகோ.ஹசன் முகம்மது ஜின்னா,சகோ.அலாவுதீன் மற்றும் உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்
பதிலளிநீக்குஅனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி..
பதிலளிநீக்குநட்புடன்...
காஞ்சி முரளி....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மலிக்கா
பதிலளிநீக்குதான் உண்டு தன் வேலை உண்டு...என்பவருக்கு மத்தியில் முயற்சி செய்தமைக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅருமை தங்கை மலிக்கா பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇறைவன் நேரடியாக உதவுவதில்லை.
மனுசாட்கள் மூலாமாக தான் என்று என் கிரான்மா அடிக்க்டி சொல்வார்க்ள்.
இது உங்கள் மூலம் கிடைக்கனும் என்று இருக்கிறது.
வாழ்த்துகக்ள் , ரொம்ப சந்தோஷம்.
இதை அனுப்ப, தூண்டிய காஞ்சி முரளிக்கும் என் பாரட்டுக்கள்.
சகோ,ஹசன் முகம்மது ஜின்னா மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமலிக்கா உங்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்களும் தூஆக்களும்.
well done sister.,
பதிலளிநீக்குit reached a proper way. keep it up your work.
and i congrats to all of us done for same achievements
//பொது நலத்திர்க்காக செய்யும் ஒவ்வொறு செயலும் இறைவனால் அங்கிகரிக்கப்பட்டதே
பதிலளிநீக்குவாழ்த்துக்களும் நன்றியும்///
மிகச்சரியே வாழ்த்துக்கள் மலிக்கா
மலிக்கா உங்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்களும் நண்ரிகளும்.
பதிலளிநீக்குதங்களை போலஒரு சிலு நல்லவங்க இருப்பதாலதான்பா கொஞ்சமாவது நல்லது நட்க்குது.
அதுசரி உமர்தம்பி உங்களுகு உறவா..
என்ன இருந்தாலும் உங்களுக்கு பாராட்டுக்கள்பா. நெஞ்சார வாழ்த்துக்கிறேன்..
அதிரை எக்ஸ்ப்ரஸில் உங்கள் பதிவைப் பற்றி சகோ. மன்ஸூர் எழுதியிருந்தார்.
பதிலளிநீக்குமுயற்சிக்குப் பாராட்டுகள்!
அஸ்ஸாலாமு அலைக்கும் மலிக்கா
பதிலளிநீக்குஉன் மெயில் பார்த்த பின் இங்கு வந்து பார்த்தேன் உன் ஊரை சார்ந்த சாதனையாளரை கவுரவித்த தமிழக அரசுக்கும் அதற்கு முயற்சி எடுத்த உனக்கும் எனது மனமார்ந்த பாரட்டுக்கள்.
‘’முயற்ச்சி திருவினையாக்கும்”
ஜமீல் கூறியது...
பதிலளிநீக்குஅதிரை எக்ஸ்ப்ரஸில் உங்கள் பதிவைப் பற்றி சகோ. மன்ஸூர் எழுதியிருந்தார்.
முயற்சிக்குப் பாராட்டுகள்.
ஜமீல்பாய் எந்த அதிரை எக்ஸ்ப்ரஸில் வெளியிட்டுள்ளார்கள் எதிலும் காணோமே சகோதரி மலிகாப்பற்றி.
கொஞ்சம் விபரம் தாருங்களேன்
அன்புடன் இப்னுஉமர்.
அட, இவ்ளோ வேலை செஞ்சிருக்கீங்களா? நல்ல விஷயம் மலிக்கா; பலரும் சேந்து செய்த முயற்சிக்குப் பலன் கிடைச்சதைப் பாக்கும்போது சந்தோஷம்!!
பதிலளிநீக்குநல்ல முயற்ச்சி. வாழ்த்துக்கள். இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும்.
பதிலளிநீக்குஅன்பிமகளே! தினமும் உன் வலைதளம் கண்டாலும். அப்பபமட்டுமேகருத்திடுகிறேன்.
பதிலளிநீக்குஎன் அன்புமகளீன் இச்செயல்குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன்.
அடுதவர்களிக்காக நன்மைசெய்வதில் நீஎடுத்துக்கொண்ட முயற்சி வெற்றியடைந்திருக்கிறதே இதைவிடவா உனக்கு சிறப்புவேண்டும்.
மூன்றுமகன்களைமட்டுமே பெற்றிருகேனே மகளில்லையே என்றவருத்ததை. என்முதல் வருகையிலேயே போக்கிவிட்டாய்.
என் அன்புமகளீல் வளர்ச்சிகண்டு பூரிக்கிறேஎன்.
அப்பாவுக்கு மிகுந்த சந்தோஷம் வாழ்த்தச்சொன்னார். என்வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோமா.
உடல்நிலை சரியில்லையென்றாயே இப்போதுஎப்படியிருக்கு அதையும்பார்த்துக்கொள்..
அம்மா
சாரதாவிஜயன்
//ஜமீல்பாய் எந்த அதிரை எக்ஸ்ப்ரஸில் வெளியிட்டுள்ளார்கள் எதிலும் காணோமே சகோதரி மலிகாப்பற்றி.
பதிலளிநீக்குகொஞ்சம் விபரம் தாருங்களேன்//
அன்புடன் இப்னுஉமர்.
http://adiraixpress.blogspot.com/2010/06/blog-post_19.html
சகோதரி மலிக்காவை பற்றி இங்கேதான் குறிப்பிட பட்டுள்ளது...அதை பற்றியே ஜமீல் காக்கா சொன்னார்கள்
செய்வன திருந்த செய் ,என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு நீங்கள் செய்த இந்த காரியம்
பதிலளிநீக்குமன்சூர் பாய் அதிரை எக்ஸ்பிரஸ் யில் சொன்னது
பதிலளிநீக்குஅனைத்து அதிரை வாசிகளுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,
ஒரு முக்கிய செய்தி
அதிரையை சேர்ந்த சகோதரி மலிக்க ஃபாருக் அவர்கள் காலம் சென்ற உமறு தம்பி அவர்களுக்கு அங்கிகாரம் கிடைக்க பெரும் முயற்சி எடுத்து துனை முதல்வர் வரை சேர்த்திருக்கிறார், அவருக்கு நீங்கள் எந்த ஒரு பதிவிலும் நன்றியை தெரிவிக்க வில்லை, மாறாக இந்த விஷயம் அதிரை எக்ஸ்பிரஸ் வாயிலாகவும், மற்ற பதிவர்களின் மூலமும் துனை முதல்வருக்கு சென்றடைந்ததா என்று தெரிய வில்லை, சகோதரியின் மூலமாகத்தான் வெகு விரைவில் கிடைத்தது என்பது உன்மை, எனவே அவர்களின் முயற்சிக்கு தனி ஒரு பதிவாகவோ அல்லது வேரொரு முறையில் நன்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய அவா. http://niroodai.blogspot.com/2010/06/blog-post_21.html
June 22, 2010 1:49 PM
அன்புள்ள சகோதரி மலலிக்கா,
பதிலளிநீக்குஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக,
அதிரையில் விடுமுறையில் இருப்பதாலும் இணையத்தில் அதிக நேரம் இருப்பதில்லை. தாமதமாக கருத்திடுவதற்காக மன்னிக்கவும்.
அதிரைக்கு அங்கீகாரம் கிடைத்து என்ற தலைப்பை பார்த்தவுடன் எல்லையற்ற மகிழ்ச்சி.எல்லாம் இறைவனின் நாட்டம்.
அதிரை உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க செய்வதற்காக தங்களின் முயற்சி எனக்கு மிக நன்றாக தெரியும், முன்பு நீங்களும் எனக்கு அறிவித்திருந்தீர்கள்.ஐயா காஞ்சி முரளியுடன் சேர்ந்து உங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி. தங்களையும் தங்களுடன் சேர்ந்து பாடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களையும் மறக்கவில்லை, நாங்கள் நன்றி சொல்லிக்கொண்டே இருப்போம்.
உங்களின் முயற்சியும், உங்களைப்போன்ற மற்ற சகோதர சகோதரிகளின் முயற்சியும் தான் இந்த அங்கீகாரங்களுக்கு காரணம் என்பதை நாங்கள் நிச்சயம் அறிவோம். எங்களுடை துஆக்கள் என்றைக்கும் நிச்சயம் தங்களின் குடும்பத்தினருக்கும், உங்களுடன் சேர்ந்து பாடுபட்ட அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் இருந்துக்கொண்டே இருக்கும்.
உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் தந்த தமிழக முதல்வர் மான்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல் அமைச்சார் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி.
வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா, உலக தமிழ் மாநாட்டு செயலாளர் திரு. அலாவூதீன். அவர்களுக்கும் ,உத்தமம் அமைப்பின் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.
அன்பு சகோதரியே, நீங்கள் அதிரைகாரர் என்ற விசையம் மூன்று நாட்களுக்கு முன்பு என் வலைப்பூவில் சகோதரர். காஞ்சி முரளி அவர்களின் பின்னோட்டத்தில் தான் என்னால் முதன்முதலில் அறிய முடிந்தது.
இறுதியாக சகோதரி மலிக்கா, சகோ. காஞ்சி முரளி ஆகிய இருவர்க்கும் எங்களுடைய கோடான கோடி நன்றிகள்.
தங்களின் முயற்சி சிறுமுயற்சியல்ல;
பதிலளிநீக்குசீரீய முயற்சி. மிக்க மகிழ்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்!
mansuur paay சொல்வதுபோல் செய்வார்களா! இவர்கள். எல்லாம் காரியம் ஆகும்வரைதான்.
பதிலளிநீக்குமலிக்கா
உங்களின் சீறீய முயற்ச்சியும் அதன் வெற்றியும் அகம் புறம் மகிழ்வைதருகிறது. இருந்தபோதும்.
ஒரு சகோதரியின் வெற்றிக்கு நன்றியை கருத்துரைகளில் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவதுதான் வருத்ததையளிக்கிறது.
பார்ப்போமே சம்மந்தபட்டவர்கள். ஒரு நன்றிப்பதிவாவதுபோடுகிறார்களா என.
சரவணாக்குமார்
அருமையான முயற்சி. அசத்தலான வெர்றி! வாழ்த்துக்கள் மலிக்கா.
பதிலளிநீக்குஆகா அதிரை தாஜ், ஜமீல் எல்லாம் வந்திருக்காங்களே பதிவுக்கு.
தாஜ்! சீக்கிரம் பிளாக் ஆரம்பிக்கவும், உன் நண்பனின் வேண்டுகோள்!
என் அன்பார்ந்த நெஞ்சங்களே! தாங்களின் அன்பான வருகைக்கும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் துஆக்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
பதிலளிநீக்குஎன் உடன்பிறவா சகோதர சகோதரிகளாக.தாயாக தந்தையாக என் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ளும் தாங்கள் அனைவருக்கும் நன்றியென்ற ஒன்றைமட்டும்சொல்லிக்
கொள்ளவிரும்பவில்லை. என்றென்றும் கடமைப்பட்டவளாக இருப்பேன்.
என் இறைவனின் வாக்குப்படி எதை ஒன்றைச்செய்யும்போது அவன் நாட்டமிருந்தால் மட்டுமே அது நிறைவேறும். இதில் இன்னார்செய்ததால் என்பது அவனுக்கு அடுத்தபடியே!
எந்த ஒரு நல்லகாரியமும் அதன் பலனை அடையவேண்டும்.
அதிகம்படிக்காத நான் அதிலும் தமிழைமட்டுமே மூலமாக கொண்டு செயல்பட்டுவரும் எனக்கு கணினித்தமிழை கையாளுவதில் பெருமையே! அத்தமிழை கணினியில் கொண்டுவந்த ஒரு நல்லமனிதருக்காக நான் எடுத்துக்கொண்ட இம்முயற்ச்சி இறைவன் நாட்டத்தால் நிறைவேறியதறிந்து சாஸ்டாங்கமாக விழுந்து அழுதுதொழுதேன்.
என் இறைவா என் எண்ணத்தின் பொருளறிந்து பூர்த்திசெய்துவிட்டாயே என.
எனக்கு ஊக்கம் கொடுத்து இந்தளவுக்கு வளர்த்துவிட்ட உங்களுக்கே இந்த பாராட்டுகளும். வாழ்த்துக்களும். நன்றிகளும்.
மீண்டும் சொல்லிக்கொள்கிறேன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.
மூன்றுமகன்களைமட்டுமே பெற்றிருகேனே மகளில்லையே என்றவருத்ததை. என்முதல் வருகையிலேயே போக்கிவிட்டாய்//
பதிலளிநீக்குஇது ஒன்றுபோதுமே சாராதம்மா.
கொஞ்சம் பரவாயில்லைமா. அப்பவை கொண்டுபோய் காண்பிதீர்களா? பாலு வந்தானா.
அண்ணா எப்படியிருக்கிறார்.
டிகே பக்கமமும் வந்துசெல்லுங்கள். நாளாகிவிட்டதல்லவே//
சரவணாக்குமார் கூறியது...
பதிலளிநீக்குmansuur paay சொல்வதுபோல் செய்வார்களா! இவர்கள். எல்லாம் காரியம் ஆகும்வரைதான்.
மலிக்கா
உங்களின் சீறீய முயற்ச்சியும் அதன் வெற்றியும் அகம் புறம் மகிழ்வைதருகிறது. இருந்தபோதும்.
ஒரு சகோதரியின் வெற்றிக்கு நன்றியை கருத்துரைகளில் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவதுதான் வருத்ததையளிக்கிறது.
பார்ப்போமே சம்மந்தபட்டவர்கள். ஒரு நன்றிப்பதிவாவதுபோடுகிறார்களா என.
சரவணாக்குமார்.//
சகோதரா. தாங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
நான் யாருடைய தனிப்பாராட்டுதலையும் எதிர்பார்த்து இதைசெய்யவில்லை. நல்லமனிதரின் நற்செயலுக்காக. அதை நானும் உபயோகப்படுத்துகிறேன் என்பதற்காவும். இதனால் பலபேர் பயனடைந்துவருவர்காகவும் தான். என்னுடைய இந்தசிறு முயற்சி அவ்வளவுதான்.
இதில் யாரையும் குறைகூறவேண்டாமே என் சகோதரா!
மிக்க நன்றி
// தாஜூதீன் கூறியது
பதிலளிநீக்குஅதிரையில் விடுமுறையில் இருப்பதாலும் இணையத்தில் அதிக நேரம் இருப்பதில்லை. தாமதமாக கருத்திடுவதற்காக மன்னிக்கவும்..//
உடனே வந்து பதிலிடவேண்டுமென்பதில்லை சகோதரரே அவரவரின் சூழ்நிலைகள் அவரவருக்கே தெரியும். இதில் மன்னிப்பெதற்க்கு. நீங்கள் எடுத்த ஒரு காரியத்திற்க்கு நானும். சகோதரரும்.சேர்ந்து சிறுபலம்சேர்த்தோம் அவ்வளவுதான்..
இறைவன் நாட்டப்படியே அனைத்தும் நடக்கும். நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்.
அன்புடன்
சகோதரி மலிக்கா
நல்ல இலக்கியப்பணி தங்கச்சி!
பதிலளிநீக்குஉங்களை பெருமையாய் பார்க்கிறேன்!
- திருச்சி சையது.
தங்களுடைய முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது சகோதரி. நன்றிகள் பல.
பதிலளிநீக்குசமீபத்தில் அதிரை பள்ளியில்... ஒரு வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை முடிந்து... உமர்தம்பி குறித்து உங்கள் முயற்சியை பாராட்டி ஊர்மக்கள் நோட்டீஸ் அச்சடித்து வழங்கியதும், பஞ்சாயத்தார் அதிரை தெரு ஒன்றிற்கு உமர்தம்பியின் பெயரை வைக்க இருப்பதும் கேள்விப்பட்டு மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி மல்லிகா அவர்களே!
பதிலளிநீக்கு- திருச்சி சையது.
"எந்த ஒரு அடியானும் அவன் சக்திக்குமீறி சோதிக்கப்படுவதில்லை.
பதிலளிநீக்குஅதேபோல் எந்த ஒரு நல்ல மனிதருக்கும் அவரின் நல்லதொரு செயல்களுக்கு தகுந்த கூலி வழங்கப்படாமலிருப்பதில்லை என்பது இறை வாக்கு. "
- below lines i like very much sister!
கணினியில் தமிழ் பயன்படுத்தும் அனைவரும் திரு.உமர்தம்பி ஐயாவை அறிந்துவைத்திருக்க வேண்டும். அவரது தன்னலமற்ற சேவையை என்றென்றும் நினைவு கூறுவோம். தமிழ் கணிமை முன்னோடி என கூகிளில் தேட அவரைப்பற்றி அறியப் பெற்றேன்.
பதிலளிநீக்குசகோதரி மலிக்கா தங்களின் இப்பணி மிகச்சிறந்தது. ஈருலக பாக்கியமும் கிடைக்கும். வாழ்த்துக்களும் துஆக்களும்..
பதிலளிநீக்குநிறைவோடு
சகோதரன்.