நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

யாரடா நீ...

 
அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

எங்கிருந்து வந்தாய்
என்னில் வந்து நுழைந்தாய்
என் தொப்புள்கொடி பந்தமா?-இல்லை
என் தூராத்து சொந்தமா?

எந்தத் தொடர்புமில்லாமலே
எனக்குள் உறைந்துள்ளாய்
எனக்காக துவழ்கிறாய்
என்னிலிருந்து யோசிக்கிறாய்
என்னைமட்டும் நேசிக்கிறாய்

எது நம்மை இணைத்ததென்று
இன்றளவும் யோசிக்கிறேன்
இணைத்தது எதுவென்றபோதும்
நம்மை பிரிக்காத
வரமொன்றை யாசிக்கிறேன்

என்னை நீ நேசிக்க
உன்னை நான் சுவாசிக்க
ஒட்டும் உறவும் இல்லாமலே
ஒன்றாகி போனோம்
ஒளிவீசும் ஒளியாகி
உயிர் நட்பாக ஆனோம்...

முக்கியசெய்தி
இன்று மாலை 6.30 மணிக்கு
துபையில் தந்தை ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின்
தீரன் திப்பு சுல்தான் காவிய வெளியீட்டுவிழா
சிவ் ஸ்டார் பவன்.கராமாவில் நடைபெற இருக்கிறது
அனைவரும் வருக
கவிநயம் பருகுக.. 

அப்புறம் என் [பாலோவர்ஸை] என்னை பிந்தொடர்பவங்களின் பட்டியலை காணவில்லையே யாராவது பார்த்தீங்கள்.[வெளிநாட்டுச் சதியா இருக்குமோ] அதை எப்படி மீண்டும் கொண்டு வருவது ப்லீஸ் ஐடியா தாங்க.. அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது