நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பிள்ளைநிலாஒன்பதுமாதம் முக்குளித்து
வயிற்றுக்குள் உலவிய வெள்ளிநிலா
இடுப்புவலியை உண்டாக்கி
வெளியில் வந்தது பிள்ளைநிலா
வினோத சப்தங்கள் கேட்டிடவே
வீல்லென்று அழுதிட முகம் சிவந்திடுமே


மூடிய மலர்விழி முனுமுனுக்க
மெதுவாய் திறந்தது இமை இரண்டை
கருவறை இருள்கண்ட கறுவிழிகள்
உலகொளி பட்டதும் மூடியதே


கையும் காலையும் கட்டிக்கொண்டு
கர்ப்பபையிற்குள் இருந்த பிள்ளை
பிஞ்சிக்கால்கையை பிரித்துக்கொண்டு
விறித்து உதைத்து துள்ளியதே


கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு
நமட்டுச்சிரிப்பு சிரித்திடவே
நரியை விரட்டிச்சிரிக்கிறதாம் என்றுச்சொல்லி
நம்மையும் சிரிக்கவைத்திடுமே


நெற்றியை நுகர்ந்து பார்க்கையிலே
நாசியில் வாசம் ஏறிக்கொள்ளும்
மீண்டும் மீண்டும் அவ்வாசம்
நுகர்ந்து நுகர்ந்து பார்க்கத்தூண்டிடுமே


பசித்து குழந்தை அழுகையிலே
அள்ளியனைத்து அன்னை பால்தருவாள்
இதற்குமுன் தொப்புள் வழியே உண்டதற்கு
அதுஅறியாமல் முட்டிமோதிடுமே


பாலை அருந்திய மயக்கத்திலே
பச்சிளம் பிள்ளை உறங்கிடுமே
உறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டே
உறங்காமல் இருப்பது ஒரு சுகமே..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது