நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புதுப்பித்தேன்
கதிரவனின் கதிர்வீச்சை கண்ணடித்தது சிரித்தது

காலைதென்றலுடன் கைகுழுக்கி நடந்தது

அன்னை ஊட்டிவிட அழகாய் உண்டது

அவள்மடியில் படுத்தமடி மயங்கிக்கிடந்ததுரெட்டை பின்னல்போட்டு ரெக்கைகட்டிப்பறந்தது

மழையுடன் காதல் கொண்டு மறைந்து நின்றதுபட்டுபாவாடை கட்டி பட்டாம்பூச்சியானது

பல்லாங்குழியாடி பரவசம் அடைந்ததுபச்சைக்குதிரை தாண்டி பட்டென விழுந்தது

பாண்டியாடி கோட்டை தவறாய் மிதித்ததுபளிங்கி [கோலி]விளையாடி பத்து பத்தாய் சேர்த்தது

ஒளிந்து விழையாடி ஒப்பீ சொன்னதுகபடியாடி கொண்டு குதூகலம் அடைந்தது

கயிறு தாண்டித்தாண்டி களைத்துப்போனதுதட்டாம்பூச்சி பிடிச்சி மீண்டும் பறக்கவிட்டது

தட்டாமலைச் சுற்றி துள்ளிக்குதித்தது
உயரத்திலிருந்து  குளத்தில் குதித்தது

இக்கரையிலிருந்து அக்கரைக்கு சென்றதுமுதுகில் ரெண்டடி வாங்கிக்கொண்டது

முனுமுனுத்துக்கொண்டே மீண்டும் ஓடியது


மனதிற்குள் புதைந்துள்ள மகிழ்ச்சிகளை
மீண்டும் புதுப்பித்து சிறுபிள்ளையாய்
தோன்றி சிறகடிக்கிறது மனம்
இப்படியே இருந்துவிடச்சொல்லி ஏங்குது தினம்...அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது