நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆத்திரமும் கோபமும்ஆத்திரம் அழகல்ல
கோபம் நல்ல குணமல்ல

ஆத்திரத்திரத்தினால் ஏற்படும்
அத்தனை செயல்களின் பாதிப்பும்

தன்னைமட்டும் சார்ந்ததல்ல
தன்னைச்சார்ந்தவர்களையும் பாதிக்கும்

ஆத்திரத்தால் எதை சாதிக்கிறாய்
நீ ஆத்திரப்படுகிறாய் என்பதற்காக வேண்டுமென்றால்

அன்றைய காரியங்கள் நிறைவேறும்  -ஆனால்
நாட்கள் நகர நகர அதுவே உனக்கு நரகமாகும்

கோபம் கொள்ளும்போது உன்னை நீ உற்றுப்பார்
உனக்குள் ஒரு மிருகம் இருப்பதை உணர்வாய்

ஆத்திரத்தால் கோபத்தால் அழிவுகளும் வருத்தங்களும்
மிஞ்சுமே தவிர வேறென்ன கிடைக்கும்

இளமையில் ஆத்தித்தையும் கோபத்தையும்
வித்திட்ட மனிதன்

முதுமையில் தனிமையையும் விரோதத்தையும்
அறுவடை செய்கிறான்

ஆத்திரம் அறிவை அகற்றிடும் ஆயுதம்
கோபம் கூடவே இருந்து குழிப்பறிக்கும் கொடுங்குணம்

அன்பினால் சதிக்க முடிந்ததை ஒன்றை
ஆத்திரத்தால் ஒருபோதும் சாதிக்கமுடியாது

குணத்தால் கோடானகோடி பெறுவது சுலபம்
கோபத்தால் சிறு கடுகுகூட கிடைப்பது கஷ்டம்

ஆத்திரமும் கோபமும் மிக மிக மிக
அத்தியாவசியமானால் மட்டுமே கையாளவேண்டும்
அதனைவிட ஆயிரமடங்கு சிறப்பு
அன்பை கையாண்டு வெற்றிகொள்வது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது