நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்ணாக பிறந்தால் பாவமா?


அரலிவிதை அழுதுபுலம்பிக்கொண்டே வந்ததைப்பார்த்த
கல்லிச்செடியும், எருக்கம்பூவும் ஏன்னென்று கேட்க

இந்த அருகம்புல்லுக்கு வந்த வாழ்வைப்பார்த்தாயா!
இனிப்பை உடலில்வைத்து உயிரைக்கசக்கவைக்கும்
வியாதிக்கு இதுவும் ஒருவகையில் உதவும் மருந்தாம்.

"ஆனால்"நான்

மனங்கள் கசந்தபோது உயிரை
கொன்றுவிடும் கொடும்மருந்தாம்,
அடுத்தவரை கருக்கிவிட்டு நான்மட்டும்
பசுமையில் வாழ்வதா

வேண்டாமடி இந்தவாழ்க்கை வேறொரு
வாழ்வைதாவென்று இறைவனிடம்
வரம்கேட்க்கப்போகிறேன்
என்றுசொல்லிக்கொண்டே மீண்டும் அழுதது

உடனே
கல்லியும் எருக்கனும் சொன்னது
அதேகதிதான் எங்களுக்கும்

பெண்பிள்ளைகள் வேண்டாமென்று
பெற்றவர்களேமுடிவெடுத்து பிறந்தமணம்மாறாத
பெண்பிள்ளைகளுக்கு தாய்ப்பால்
கொடுத்தால் உயிர்வாழ்ந்திடும் என்று

எங்களின் பாலைக்கொடுத்து உயிரை எடுக்கிறார்கள்
பத்தரைமாத்துத் தங்கமான பச்சிளம்சிசுக்களை
கொலைசெய்ய எங்கள் மனம் பதறுவதால்
பரிதவித்துபோய்தான் நாங்களும் வருகிறோம்

இந்த பாழாய்போன சிலமனித
ஜென்மங்கள்தான் மனசாட்சியை
புதைத்துவிட்டு புனிதர்கள்போல் வாழ்கிறது
அதுபோல் அல்லாத வாழ்வை தரச்சொல்லி
வரம்கேட்க

வாருங்கள் ஒன்றாக சேர்ந்து இறைவனிடம்
மன்றாடுவோம் எங்களுக்கு மற்றவர்களை
வதைக்காத வாழ்க்கையைக்கொடு என்றும்
மனசாட்சியுள்ள நல்ல மனங்களாய் வாழ்வதற்கு
நல்வழிசெய் என்றும்..அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது