நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சிந்திக்க மறுப்பதேனோ?


 அடிப்பெண்ணே!
பெண்புத்தி பின் புத்தியென்ற
பழமொழிக் கேற்ப
காலம் முன்னேறியும்
நீ பின்னோக்கியே

காதல் பறவையென்று
காமக் கழுகிடம் சிக்கி
மதியிழந்து
மட்டிலாது திரிந்து
கண்டதே காட்சி
கொண்டதே
கோலமென்றலைந்து

உன்பெண்மை கொத்தி
குதறிய பின்னே
மடியின் சுமையால்
மானத்தையு மிழந்து
தாய்வழி இறைகொடுத்த உயிரை
தரங்கெட்டோரின் இரைக்காக
கொடுக்கத் துணியுமுன்னை
மன்னிப்பதா?
தண்டிப்பதா?

மதியிருந்தும் கெட்டு விட்டு
விதியின்மேல் பழிபோட்டு
வீணாகிப் போகின்றாய்
வெளிவேசம் தெரியாமல்
வேடன்களின் மாட்டிக்கொண்டு
வீண்பழியும் சுமக்கின்றாய்
இன்னும் எத்தனை காலம்தான்
இப்படியே இருக்கப் போகின்றாய்!

மனிதத் தவறுகள்
மண்ணில் நிகழ்வது புதிதல்ல
தவறென தெரிந்தும்
தன்னையேத் தொலைப்பது தவறு
தவறியபின் தவறுக்கு பகிரமாய்
தற்கொலை செய்துகொள்வது
தவறிலும் தவறு

திசை மாறும் பறவைகள்
சிலமணி நேரம்
திக்கற்று நிற்குமே தவிர
தன் திசை நோக்காது-வீணாய்
தன்னுயிரை விடாது,
சிந்திக்கத் தெரியாத யினத்திற்கே
தன்னைக் காத்துக்கொள்ள
திறனிருக்கையில்-முன்பே
சிந்திக்க தெரிந்த பெண்ணே
உனக்கேன் பின்னே போகுது புத்தி

காசும் காமமும்தான் -இக்
காலத்தின் உயிர் நாடி
அதனால் போகுது
உன்போன்ற உயிர்கள் அடிக்கடி
பலமுறை யோசி
பாழா[பலா]ன
காதலை தொடங்குமுன்
ஒரே ஒரு நொடி
உன்னையே நேசி
உன் உயிரை விடுமுன்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது