நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விவாகம் ரத்துபெற்றோர்களே பெற்றோர்களே
நீங்கள் பெற்றபிள்ளைகளின்
மனக்குமுறலைக்கேளுங்கள்

உங்களின் வீண்பிடிவாதத்தாலும்
வரட்டு கவுரவத்தாலும் பாதிக்கப்படுவது
நீங்களில்லை நாங்கள்

உங்களுக்குள் நீங்கள் விட்டுக் கொடுத்து
வாழத்தவறுவதால் எங்களின் வாழ்க்கை
அனைத்தும் பட்டுபோகிறது

வாக்குவாதங்கள் எல்லை மீறிவிடுதால்
குடும்பம் கோர்ட்டுக்குபோகிறது
வீண்விவாதங்கள் ரத்தாகாததால்
விவாகம் ரத்தாகிறது

கும்மியடித்த குதுகலத்திற்கு நடுவே
கோடு ஒன்று கிழிக்கப்பட்டு
இப்புறம் பத்துநாள் அப்புறம் பத்துநாள் -என
நாங்கள் பந்ததாடப்படுகிறோம்

உங்களின் வாழ்வைகண்டு கண்டு
எங்களுக்கு வாழ்க்கையின்மேலேயே
பயம்கலந்த வெருப்புவருகிறது

உதாரணமாய் இருக்கவேண்டிய நீங்களே
இப்படி உருப்படியில்லாமல் நடந்தால்
எங்களின் நிலைமை என்னவாகும்

விட்டுகொடுப்பதால் யாரும் கெட்டுப்போவதில்லை
யாசித்துக்கேட்க்கிறோம் யோசித்துப்பாருங்கள்
ஒற்றுமையாய் இருந்து உணர்ந்துபாருங்கள்
எங்களையும் இணைத்து மகிழ்ச்சியாய் வாழுங்கள்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது