நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னெவென்று சொல்வதம்மாவிழிப்பார்வைகள்
மோதிக்கொண்டதில்லை
மொழிச்சொற்கள்
விருந்துவைத்ததில்லை
கால்கள் பின்னியபடி
நிழலைத்தொடர்ந்து நடந்ததில்லை
கைவிரல்கள்
காதல் ஸ்பரிசம் அடைந்ததில்லை

ஆனபோதும்

விழிதிறதிருந்தால் யோசிக்கவும்
விழிமூடியிருந்தால் நேசிக்கவும்
விழிகள் கற்றுக்கொண்டன

விரல்மொழிகள்
பகிர்ந்தபோது மெளனமும்
எழுத்துமொழிகள்
மெளனமானபோது பகிரவும்
உள்ளம் கற்றுக்கொண்டன

உதட்டு இதழ்கள்
மூடியிருந்தபோது
உயிர்தேனை உறிஞ்சியதெப்படி
உள்ளது உள்ளபடி
உள்ளம் உருகுதடி

உருவத்தை கண்டதில்லை
ஒருவார்த்தை பேசியதில்லை
கணிணிகீபோர்டில் கைவிரல்கள்
காதல்கதை சொன்னதில்லை

ஆனபோதும்

மனமெல்லாம்
மகிழம்பூவின் வாசனைகள்
நினைவெல்லாம்
நீந்தித்தழுவும் திரவியங்கள்
புத்தம்புது பூக்களாக
புறப்படும் என்புன்னகைகள்

ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்கிறது
என்னவென்று
எனக்குசொல்லத் தெரியவில்லையடி
கணிணிமுகத்தின்மூலம்
நீ
எழுதும் எழுத்துக்களைகண்டு
 என்எண்ணங்கள் சிதறியதடி

இமைமூடாமல் காத்திருப்பேன் நானடி
என்கணினித்தோழியே
உன்மனதைக்கேட்டுச்சொல்லடி
எனக்குள் வந்திருப்பது எ
ன்னஏதுவென்று -உன்
கணினியின் கண்கள்வழியே
கவிதை ஒன்றுசொல்லடி
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது