நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அன்பே உன் நினைவை!

நெஞ்சமெங்கும் நினைவலைகள்
நிலவில் உதித்த
மஞ்சப்பூக்களாய் பூத்திடவே-உன்
மடியில் கிடந்தேனே

மடிசாய்ந்து முகம்பார்த்தேன்-என்
மனதுக்குள்
மஞ்சம்கொண்ட உன் நினைவுகள்
மரகத வீணை மீட்டிடவே!

அன்பைச்சொரிந்து அனுதினமும்
அலைபாய விடுகின்றாய்
அந்திவானம் சிவப்பதுபோல்
அதரம் சிவக்க வைக்கின்றாய்

குளிர்கால இரவுகளில்
கோடைவெப்பம் உன்னாலே
வெயில்கால தருணங்களில்
குளிரடிக்குது தன்னாலே

நினைவுகளின் தாக்கத்தால்
நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
உணர்வுகள்  மரித்தபின்னும்
உன்நினைவோடு நானிருக்க

ஒவ்வொரு மணித்துளியும்
ஓராயிரம் ஒளிக்கதிராய்
நிலையாக  நிலைத்திருக்க
ஒவ்வொரு நொடியும்
உருகி உருகி வேண்டுகிறேன்.......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது