நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏனென்ற கேள்வி எனக்குள் பிறக்குது!

எத்தனை எத்தனையோ
மாதர் சங்கங்கள்
மகளிர் மன்றங்கள்
தணிக்கை குழுக்கள்
இன்னும்
எத்தனை எத்தனையோ
இருந்தும் என்ன பயன்-பல
மாந்தர்களின் நிலை?
மலிந்தல்லவா கிடக்கிறது

படித்தவர்முதல் பாமரர்கள் வரை
பார்க்கும் கண்கள் அத்தனைக்கும்
போதைதரும் போகப்பொருளாய்
வில்லியாய் வேடதாரியாய்
பணத்தாசை பிடித்தவர்களாய்
பலவிதங்களில் பந்தாடப்படும்
மாந்தர்கள்

கட்டில் முதல் தொட்டில் வரை
ஊர்தொட்டு உலகம்வரை
ஒவ்வொன்றிலும் ஊன்றுகோலாய்
இருக்கும் பெண்மையை
ஒட்டு துணியுடன் ஆட விடும்
பெரிய திரை

ஆதிக்கம் செய்பவர்களாக
அடுத்தவர்கள் கணவர்களுக்கும்
ஆசைபடுபவர்களாக
ஊறுவிளைவிப்பவர்களாக
சித்தரிக்கும் சின்னத்திரை

சோப்பிலிருந்து சீப்புவரை
ஆணியிலிருந்து அந்தரங்கம்வரை
அனைத்திலும்
அரைகுறை அங்கங்களுடன்
அலையவிடும் மீடியாக்கள்

”இப்படி”

எல்லா வட்டாரத்திலும்
துரத்தித் துரத்தி
துவேசம் செய்யப்படும்
பெண்கள்
இதை சில பல நேரங்களில்
பெண்மணிகளே செய்வதும்
செய்யத்தூண்டுவதும் தான்
விந்தையிலும் விந்தை-இதை
பார்க்கும்போது
நெஞ்சம் பதைக்குது
மனதும் வலிக்குது

மேலைநாட்டு மோகமிங்கே
மேம்பட்டுக்கிடக்குது
எதை சொன்னாலும்
பழைய காலமென
பரணியில் போடுது
மனித மனங்களிங்கே
மதிப்பை இழக்குது
காகிதப் பணத்தின்
பதவி உயருது
கடவுளின்
பயங்கூட விட்டுப்போகுது

எந்திரமாக்கப்பட்டு
எல்லைகள் மீறுது
எந்த நேரத்திலும்
எதுவும் நடக்குது
தனிமனித ஒழுக்கம்
தவறிப்போவதால்
தன்னை
பிறர் ஆளும் நிலையில்
மனிதமிருக்குது
தன்னைக் காத்துக்கொள்ளவே
தவறிப்போகுது....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது