நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்பதிப் பூக்களின் சந்திப்பு!

வியாழன் மாலை 7 30, மணிக்கு லூலூசெண்டர் வாசலில் பதிப்பூக்கள் அறிமுகங்களின்
அணிவகுப்பு அதன் பின்பு லூலூவின் பின்பக்கம்
பூங்காவில் சந்திப்புகளில் கொண்டாட்டம் என ஏற்பாடு செய்திருந்த மாலைவேலையில்
பெண்பூக்களின் வருகைக்காக எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
பூக்களில்லாத பூங்கா.
பூங்காவின் எதிர்ப்பார்ப்பை முதலில் பூர்த்தி செய்தது மல்லிகைப்பூதான்.
கையில் வெயிட் அதிகமிருந்ததாலும். செல்லமகனுக்கு உடம்பு சற்று சரியில்லாததாலும் பூங்காவிலே வெயிட் பண்ணவேண்டியதாகிவிட்டது
ஜலிப்பூ லூலூவிற்கு வந்துவிட்டதெனவும் மற்ற பூக்களை எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் சொன்னார்கள்.

பூங்காவோடு மல்லிகைப்பூவும். மற்ற பூக்களுக்காக காத்திருந்தது
வாசலுக்கும் பூங்காவுக்கும் குட்டிப்போட்ட பூனையாக 2 முறை போன் செய்து ஜலிப்பூவிடம் எல்லாம் வந்தாச்சா வந்தாச்சா கேட்டுக்கொண்டே உலாவர


8,25 மணிக்கு ,4 பூக்கள் வாசலில் வந்துநிற்க.
மல்லிப்பூ அந்த பூக்களை பார்த்ததும் சற்று இன்ப அதிர்ச்சி தேடலின் முடிவு இன்னும் தொடர்ந்தது. 5 பூக்கள்தான் ஒன்றுகூடிமலரப்போகிறது என எதிர்பார்த்தவேளையில் பத்துப்பதினோறு பூக்களாய் மலரபோகிறது என சொன்னதும் மற்ற பூக்களின் வரவுக்காக.தேடல் தொடர்ந்தது.

வந்த பூக்களில், 4 பூக்களின் பெரியப்பூ ஸாதிகாக்கா. அடுத்த பூ ஆஸியாக்கா.
அடுத்தபூ மலரக்கா. அடுத்தது. ஸாதிக்காவின் தங்கை.
பூக்கள் வந்தததும் மல்லிப்பூவிடம். இதில் யார் யார் எந்த பூன்னு கேட்டதும் மல்லி முழித்த முழியபார்கனுமே திக்கித்திணறி முட்டிமோதி, இது ஸாதிப்பூ அப்படின்னு சொல்லுவதற்க்குள் சிரிப்புகளின் ஓசை அதிர்ந்தெழுந்தது. அடுத்ததுடுத்து. அறிமுகங்கள் கைக்குலுக்கள்கள். என பூங்காவைச்சுற்றிலும் உள்ளவர்கள் பார்க்க 3, 4, கிளிக் கிளிக். ஏன்னா மலரக்கா உடனே போகனுமுன்னு.அவங்கபோனதும் உள்ளேவந்தமர்ந்து பேச்சுக்கள் தொடர்ந்தது ஆச்சர்யங்களும் மகிழ்வுகளும் பகிரப்பட்டது,


ஆஸியக்கா மல்லியைப்பார்த்து நான் மல்லியை இப்படி எதிர்ப்பார்கவேயில்லைப்பா என 3, 4, முறை சொன்னதும், அப்படி என்ன சொன்னாங்கன்னு கேக்குறீகளா? அத்தனை சாந்தமாக இருக்காளாம் இந்த  மல்லி. உடனே மல்லி கைத்தட்டி யாரங்கே பாரூக்கலி எங்காப்பா  போயிட்டே வந்து இதமுதல கேளுங்கன்னு சொன்னதும்.

 யாருப்பா அது பாரூக்
அதான் நம்ம மச்சான் அப்படின்னு முடிக்கலை
 எழுந்ததே சத்ததுடன் சிரிப்பும் கும்மாளமும் இத இததான் உங்ககிட்ட எதிர்பார்தோமுன்னு. ஹா ஹா
சிரித்துமுடித்த வேளையில் வந்துசேர்ந்தது மற்றப்பூக்களான ஜலீலாக்கா, ஹுசைனம்மாக்கா, நாஸியா மற்றும் சீனியர் மனோசாமிநாதன் மேடம்.


ஒரு பூ வந்துக்கொண்டிருபதாக சொன்னதும் மற்றபூக்கள் மீண்டும் அறிமுகம் மீண்டும் சிரிப்பு இதில் மீண்டும் பாரூகலி மேட்டரை சொல்லி அடித்த அரட்டை. என மனங்களும் முகங்களும் சந்தோஷத்தாண்டவமாடின.

ஹுசைனம்மாவுக்கு போன்வர அநன்யா மஹாதேவன். என்ற பூ லூலூ வாசலில் பூத்திருப்பதாகவும் தான்மட்டும் அதெல்லாம் தைரியமாபோய் அழைத்து வந்துவிடுவேனென ஹுசைனம்மாக்கா, புறப்பட்டதும் டிரங்குபெட்டி ஸ்ராங்தான் என எல்லாரும் கிசுகிசுகவும் மீண்டும் சிரிப்பலை.


அநன்யா வந்ததும் மீண்டும் அறிமுகம் மீண்டும் சிரிப்பு, பின்பு ஆஸியாக்காவின் அத்தானை அறிமுகப்படுத்தினார்கள் அவர்கள் வெக்கப்பட்டுக்கொண்டதுபோல் தெரிந்தது ஏன்னா இத்தனை மலர்கள் ஒன்றுகூடி நிற்கும்போது ஹி ஹி நெசந்தானே ஆஸிக்கா. ஹுசைனம்மா தன் அத்தானை ஷேஃப்டியாக லூலூ செண்டரிலே நிக்கவச்சிட்டு வந்துட்டாங்க! நம்ம அத்தான் இந்த பாவம் பிஞ்சிப்பூவ இத்தனபூக்கள் மத்தில் விட்டுவிட்டு அவுக அத்தான்வீட்டு போய்ட்டாக!
நாஸியா அப்பால அவுக அத்தான நிப்பாட்டிவச்சிட்டு அதோ அதோன்னு வெள்ளகாக்காவ காட்டுறமாதரிகாட்டினது சூப்பரப்பூ.
ஒவ்வொருவரும் அவரர்களின் பங்குகளுக்கு பேச்சிகளும், சிரிப்புகளும், அதிலும் அநன்யாவின் பேச்சி அழகு தமிழை தம்ழாக பேசியது சூப்பர். என்ன அநன்யா உங்களுக்கு மட்டுந்தான் சொடக்குபோடத்தெரியுமா பேச்சில்[அதாவது சோக்] நாங்களும் போட்டுட்டோமுல்ல ஹா ஹா.
இந்த பிரியாணி இல்லாத பிரியாணி சட்டிய வச்சிட்டு கிண்டலோ கிண்டல். மனோம்மாவை சந்திச்சதில் மிக்க மகிழ்ச்சி ஓவியங்களின் தாரகையின்னு சொல்லலாம் தத்ரூபமாய் வரையும் அவர்களுக்கு ஒரு கிளாப்ப்ப்ப்..

எல்லாப்புகழும் இறைவனுக்கே ஸாதிக்காக்கா பேச்சிலும்சரி எழுத்திலும்சரி படு சூப்பர். அன்று பூக்களில்லாத பூங்காவுக்கு பூக்களின் அணிவகுப்பை மலரச்செய்த பெருமை அவர்களுக்கே சாரும். அவங்க தங்கை படு அமைதி அவங்க சிரிப்பு சூப்பர்.
மலரக்கா[எப்புடி அக்கான்னு கூப்பிடவேணானுன்னா விடுவோமா]
அடிக்கடி பார்த்தமுகம் ஆனாலும் இப்போதுதான் அறிமுகம்.
அப்புறம் நம்ம ஆலினார் அவுகளிடம் நிறைய பேசவேயில்லை.ஏன்னா நாங்க ரெண்டுபேரும் மற்றப்பூக்களை கவனிக்கும் பொறுப்பில் [பொ]பருப்பாய் இருந்ததால்.

இத்தனை நாள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாத அன்புகொண்ட நெஞ்சங்கள் பார்த்துக்கொண்டபோது சந்தோஷங்கள் சந்தனமாய் அள்ளிதெளித்தது.
பாசங்கள் பந்திப்போட்டு பரிமாரிக்கொண்டது.
ஆனந்தம் ஆடிப்பாடி அத்தனை நெஞ்சங்களையும் குளுர்வித்தது.

போட்டோக்கள் கிளிக் கிளிக் என பூங்கவிற்கு மேலும் வெளிச்சத்தை உண்டாக்கியது. ஸாதிக்காக்கா ஒவ்வொரு முகமாய் கிளிக்கும்போது பிரியாணி. என்னதிது தனித்தனியா கிளிக் வாண்டடுக்கு வக்கப்போறீங்களாக்கா ந்னு சொன்னது [அக்கா உங்க காதில் விழுந்திச்சா] அப்பாடா ஒரு நல்லகாரியம் செய்துட்டன்

அப்பால ஆஸிக்காக்கு போன் போகனுமுன்னு உடனே பார்சல் பிரிக்கப்பட்டது.
ஜலீக்காவின் வேர்கடலை. முர்தபா. மசால்வடை. யக்கோவ் எனக்கு பிடிக்குமுன்னுதானே அந்த வேர்கடலை;;;மல்லிப்பூவின். பெயர் சூட்டப்படாத புது ரெசிபி. புதுசா டிரை பண்ணினேன். [சரி நீங்களெல்லாம் சேர்ந்து அது ஒரு பேர் வச்சிடுங்களேன். எல்லாம் எடுத்து பரிமாறப்பட்டது. மல்லியின் ரெசிபி ரெம்ப்ப்ப்ப்ப நல்லாயிருக்கு செர்ட்பிக்கட் கிடைத்தது [ஹய்யா காலரை தூக்கிவிட்டுகிறேன்.] வேற வழி சொல்லித்தானே ஆகனுமுன்னு யாரோ முணுமுணுப்பது கேக்குதுங்கோய்ய்ய்ய், சற்று வேலை ஜாஸ்திதான் ஆனால் பரம திருப்தி. என்ன சிறு வருத்தம் அநன்யா சாப்பிடலை ஆத்துல அடிவிழுமுன்னு இல்ல அநன். அநன் வருவது தெரியாது இல்லையின்னா சைவமும் செய்திருப்பேன். சந்தோஷம் மனோம்மா டேஸ்ட் பார்த்தது, ஆஸியாக்கா வேர மார்க் போடுறேன்னு சொல்லிட்டு போயிருக்காக அக்கா கொஞ்சம் பாத்து பரிவிச்சிபோடுங்க..
இதில் ஓரமா சின்ன வெள்ளபிளேட்டில் இருக்குதே அதுதான் பெயர் வைக்காத மல்லியின் ரெசிபி

சாப்பாட்டு பரிமாற்றங்கள் முடிந்துக்கொண்டிருக்கும் வேளையில் முதலில் ஆஸியாக்கா. அப்புறம் அநன்யா. மீண்டும் வந்த மலர் மீண்டும். அப்புறம் மனோம்மா. ஒவ்வொரு ஆளாக கிளம்ப. நாஸியாவுக்கு பழைய தோழி அங்கேவர இரட்டிப்பு மகிழ்ச்சி. நாசியா கிளம்புறேன்னு சொன்னதும் அல்லாஹூ மறந்துடிச்சின்னு. ஏதோ மல்லியினால் முடிந்த சின்ன கிஃப்ட்ன்னு ஆளுக்கொரு குட்டி ஹேண்ட் பேக் கொடுத்தேன். அநன்யாவுக்கு ஹுசைனம்மாவிடம் கொடுத்தனுப்பினேன். அப்பால போனா வாங்கிக்கோங்க அநன். ஆஸிக்காவிற்கும், மனோம்மாவிற்கும், மலருக்கும், தரவேண்டியது மல்லியிடமே உள்ளது. நிச்சயம் மீண்டும் சந்திக்கும் வாய்புள்ளது தந்துடுவேன்..
எல்லாரும் போய்விட மல்லி, ஜலி, ஹுசை, ஸாதி, அவங்க தங்கை, என 5 மலர்கள் மட்டும். அப்பால நம்ம அத்தான் வாந்தாச்சி.பிரியாவிடைகள் சொல்லி,
காரில் ஏறியபோது  என் மச்சானையும் இதுதான்பா நம்மோட உயிர்ன்னு சொல்லி அறிமுகம். அநியாத்துக்கு வெக்கப்பட்டுக்கொண்டே நல்லாயிருக்கீங்களா ந்னு கேட்டு முடிப்பதற்குள் பாவம் பச்சபுள்ள //இல்ல// கருப்புபுள்ளைக்கு வேர்த்துப்போச்சி. அப்புறம் ஒருவழியா சமாளித்து சிரிச்சி, பை பை சலாம் சொல்லி விடை பெறும் போது மணி 10 25.


ஒரு சேர இத்தனை முகங்களை கண்டதும் அவர்களிடம் பேசியதும் மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்கியது.

எதை கொண்டுவந்தோம் பிறக்கும்போது
அல்லது எதை கொண்டு செல்லப்போகிறோம் இறக்கும்போது
ஆனால் இருக்கும்போதே சேர்த்துவைத்து இவ்வுலகில் விட்டுவைத்து செல்லமுயற்ச்சிப்போமே! அன்பான நட்பை..
என்றுநினைத்தபடியே மனம்முழுக்க
நட்பு பூவின் வாசம்
நாசிவழியே நெடியேறி
நெஞ்சுக்குள் நுழைந்து கஸ்தூரியின்
நற்மணமாய் கமழ்ந்து மணத்தது.


அகமும் புறமும் ஒருசேர சந்தோஷக்குவியல்கள்
அறிமுகங்களின் அணிவகுப்பால் அரங்கேறியது

திருமுகங்கள் பார்த்த திருப்தியிலே
தித்தித்து நெஞ்சம் துள்ளிக்குதித்ததுவே!

எழுத்துக்களின் ஈர்ப்பால் கவர்ந்தவர்கள்
எண்ணிலடங்கா அன்பால் எதிரெதிரே!

நட்பின் வழிமையை நமக்குணர்த்த
நான் நீ என போட்டிப் போட்டனரே!

உணர்வுகள் ஊற்றுப்பெருக்கெடுத்து
நட்புக்குள் ஓடி உறைந்தனவே!

நிலையில்லா உலகில் நாமிருந்தும்
நல்ல நட்பை
நிலைநிறுத்த முனைவோமே!!

பூக்களின் பெயர்கள்

ஸாதிகாக்கா[எல்லாபுகழும் இறைவனுக்கே]
ஜலில்லாக்கா[சமையல் அட்டகாசங்கள்]
ஆஸியாக்கா[சமைத்து அசத்தலாம்]
மலர் ரக்கா [மலர்]
ஹுசைனம்மா க்கா [ஹுசைனம்மா]
மனோ மேடம் [முத்துச்சிதறல்]
அநன்யா [அநன்யாவின் எண்ண அலைகள்]
நாஸியா [பிரியாணி]

கடைசியாக [மூவோடை மலிக்கா]
எல்லாம் அறிந்த பெரியவாளுகளுக்கு மத்தியில், எதுவுமே அறியாத சும்மா பதிவர்ன்னு பேரவச்சிக்கிட்டு ஏதேதோ
கிறுக்கிதள்ளும் நான் நான் நானே! 

டிஸ்கி// ஆனந்த மழையில் நனைந்தில் பிடித்தது ஜுரம். ஆதலால்.
 இதில் எதுவும் சொல்ல விடுபட்டிருந்தால் ஆலினார் நிர்வாகம் பொறுப்பேற்கும் என்பதையும். அதற்கு துணையாக டிரங்கு பெட்டியையும்கேட்கும்படியும். இல்லாத பிரியாணியிடம் பிரியாணிக்கேட்டு தொந்தரவு செய்யும்படியும். அநனிடம் அழ்கு தம்ழை கற்றுதர கேட்டுக்கும்படியும் வலியுருத்துகிறேன்.
போட்டோக்கள் தந்த கூகிளுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

அப்புறம் அக்காக்களுக்கு. [அடியே மல்லி சொன்னத மறந்துட்டு அக்கா சொக்கானு எழுயிருக்கே அடிவாங்கப்போறே.] யாரெல்லாம் வாறீங்க அடிக்கன்னு சொல்லிட்டா அடிகொடுக்க வசதியா ஏற்பாடுகள் செய்யப்படும்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது