நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இதற்குத்தானே இத்தனையும்வகை வகையாய் சுவை சுவையாய்
சுத்திகரிக்கப்பட்ட உணவு
வாயிருந்தும் கையிருந்தும்

எடுத்துண்ண முடியாத
உடல் வருத்தும் நோவு

உண்டு களித் தொதிக்கிய
உண்ணாமல் குதறித் தள்ளிய
மிச்ச மீதி கழிவு
உயிர் போக்கும் பசிக்கு
உதவும் கவள உணவு

நுனி நாக்கின் ருசி
அடி நாக்கடையும்போது மறைந்து
உண்டதெல்லாம் செரித்த பின்னே
உமட்டிக்கொண்டு வரும் இழிவு

இதற்குத்தானே இதற்குத்தானே
எதையும் செய்ய தூண்டி
எல்லை தாண்டும்
எல்லாமும் தாண்டும் மனதுபசியென வந்துவிட்டால்
பத்தென்ன பதினொன்றுமறியாது
ருசிகொண்ட பேர்களுக்கெல்லாம்
பசியினருமை பார்த்தாலும் உணராது

எத்தியோப்பியா நிலை[உடல்]களை
ஒரு கணமேனும் சிந்தித்து பாரு
ஒரு பருக்கையேனும்
சிந்திவிட மனம் வருமோ கூறு

மலமாகப்போகும் உணவுக்குதான்
இத்தனை பெரும்பாடு - மனிதா[பிறர்]
மரணிக்குமுன் பசிக்கு
இயன்றவரை நல் உணவளித்து உதவு...கவிதை வயல் - 40  திற்காக எழுதியது.

 ”கவியருவி”
 அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

முடவனா? முயற்சிப்பவனா?
மின்மினிகளென்றும்
விண்மீன்களாகப் போவதில்லை
இருந்தபோதும்

இருளைக் கீறி சிறு
வெளிச்சம் தரமாலது வீழ்வதில்லை

எட்டு நாட்களென்றபோதும்
பட்டுபூச்சி
சிறகடிக்காமல் சாவதில்லை
தன்னிறப்பில் பிறர் சிறக்க
வழிசெய்யாமல் போவதில்லை

அறிவிலொன்று குறைந்தவைகளே
ஆகாசம் தொட எண்ணுகையில்
ஆறறிவு பெற்ற நாமக்கேன்
அசதி வெல்ல முயற்சியில்லை

அலைவதிலும் திரிவதிலும்
அர்த்தமில்லை-வீணாக
பொழுதை கழிப்பதிலும்-பிறருக்கு
பொதியாய் கிடப்பதிலும் பெருமையில்லை

தெருவினைகள் ஊர்வினைகள்
மனிதருக்கு அழகில்லை
பொறாமைகள் பெருந்தீவினைகள்
வாழ்வுக்கு சிறந்ததில்லை

திருவினைகள்
ஏற்படவே முயற்சிக்கனும்
தீவிர முயற்சிகள்தான்
ஏக திருப்பங்களையும் உண்டாக்கும்

சோர்வுகொண்டு வீழ்ந்து கிடந்தால்
சுறுசுறுப்பு எங்கே யிருந்துவரும்
முடங்கிக் கொண்டே
முத்தெடுக்க ஆசைக்கொண்டால்
மூச்சல்லவோ மூர்ச்சையாகும்

முயற்சிக்க முயற்சிக்க
முட்பாதைகளும் பழகிப்போகும்
நடக்க நடக்க
நாளடைவில் முள்ளும் கல்லும்
முருங்கைப் பூவாக மாறும்...


”கவியருவி”
அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஊளையிடும் சோதனைகள்இறை சோதனையின்
இடிபாடுகளுக் கிடையில்
அகப்படாதோர் யாருமுண்டோ!

எலும்பும் சதையும் போர்த்திய
எந்தவோர் மனிதனையும்
விட்டு வைக்காமல்

அச்சமூட்டி எச்சரிக்கும்
இறை சோதனைக்கு
உட்படாதோர் யாருமுண்டோ?

பனிப் புயலென்றும்
சூராவளிக் காற்றென்றும்
கடலின் கொந்தளிப்பென்றும்
எரிமலை குமுறலென்றும்,

புதிது புதிதாய் பெயர்வைத்தபடி
சுற்றும் பூமியையே சூரையாடுதடி
இயற்கையும் இயற்கையெய்தபடி
இவைகள் இறைசோதனையின் சாகுபடி!

சாகவரங்கள் பெற்றோர்
இப்புவியில் உண்டோ
சாதனை பட்டியலில்
சாவற்றவறென்ற முத்திரையுமுண்டோ!

எழும்புப் பிண்டங்களை எச்சரிக்கவே
எதிர்பாரா விதமாய் நிலைகுலையும்படி
உச்சரித்து செல்கிறது
ஊளையிடும் சோதனைகள் போதனைகளாய்!

இருந்துமேனோ -இவ்வுலக
மாயையில் மவுண்டுகொண்டே
மனிதக் கூட்டங்கள்
உயிரிருந்தும் ஜடங்களாய்...

-----------------------------------

கவிதை வயல் - 27

  ”கவியருவி”
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஏழ்மையிலும்..


ஓலக் குடிசையில மச்சான்
ஒன்னா யிருப்போமுங்க
கஞ்சிகூட கருவாடு சேத்துண்டு
கொஞ்சி கொஞ்சி மகிழ்வோமுங்க

கடனும் நோயுமில் லாமதான் மச்சான்
கவனமாக இருப்போமுங்க
கொஞ்சநஞ்சம் சேத்துவச்சி நாம
கொலந்தகள படிக்கவைச்சி பாப்போமுங்க

கந்தல் துணியானாலுமே மச்சான்
கசக்கிகட்டி அணிவோமுங்க
குடிசை ஓட்டைவழி நிலா வந்துதான் நம்ம
குதூகலித்து வைக்குமுங்க

மேல்தட்டபாத்து எச்சிலூ ராமத்தான் மச்சான்
கீழ்தட்டகண்டு கண்ணீர் விடுவோமுங்க
அடுத்தவங்கள பாத்து ஏங்கமாத்தான் நாம
அழகாக வாழ்வோமுங்க

வாழ்க்கைக்கு தேவையெல்லாம் மச்சான்
வசதி வாய்ப்பு மட்டுமில்ல
அன்பும் அரவணைப்பும்தான் வாழும்
வாழ்வுக்கே ஆதாரமுங்க

நிம்மதிகள் வேறெங்குமில்ல
ஏன்பொண்சாதியே
நெறஞ்சியிருக்கு ஓன் சொல்லுக்குள்ள
போதுமென்ற மனசுக்குள்ள-ஒரு
பூந்தோட்டமே இருக்குபுள்ள

மனமேத்து ஒத்துக்கிட்டா
ஏழ வாழ்க்கவிட இன்பமில்ல -மரிக்கொழுந்தே
போதும் போதும் இது போதும்புள்ள
உன்கூட ஈருலகமும் வாரேன்புள்ள
என்னக்கிம் இனிக்க இனிக்க வாழ்வோம்புள்ள.


”கவியருவி”
அன்புடன் மலிக்கா 
                                                                          இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சிந்திக்க மறுப்பதேனோ?


 அடிப்பெண்ணே!
பெண்புத்தி பின் புத்தியென்ற
பழமொழிக் கேற்ப
காலம் முன்னேறியும்
நீ பின்னோக்கியே

காதல் பறவையென்று
காமக் கழுகிடம் சிக்கி
மதியிழந்து
மட்டிலாது திரிந்து
கண்டதே காட்சி
கொண்டதே
கோலமென்றலைந்து

உன்பெண்மை கொத்தி
குதறிய பின்னே
மடியின் சுமையால்
மானத்தையு மிழந்து
தாய்வழி இறைகொடுத்த உயிரை
தரங்கெட்டோரின் இரைக்காக
கொடுக்கத் துணியுமுன்னை
மன்னிப்பதா?
தண்டிப்பதா?

மதியிருந்தும் கெட்டு விட்டு
விதியின்மேல் பழிபோட்டு
வீணாகிப் போகின்றாய்
வெளிவேசம் தெரியாமல்
வேடன்களின் மாட்டிக்கொண்டு
வீண்பழியும் சுமக்கின்றாய்
இன்னும் எத்தனை காலம்தான்
இப்படியே இருக்கப் போகின்றாய்!

மனிதத் தவறுகள்
மண்ணில் நிகழ்வது புதிதல்ல
தவறென தெரிந்தும்
தன்னையேத் தொலைப்பது தவறு
தவறியபின் தவறுக்கு பகிரமாய்
தற்கொலை செய்துகொள்வது
தவறிலும் தவறு

திசை மாறும் பறவைகள்
சிலமணி நேரம்
திக்கற்று நிற்குமே தவிர
தன் திசை நோக்காது-வீணாய்
தன்னுயிரை விடாது,
சிந்திக்கத் தெரியாத யினத்திற்கே
தன்னைக் காத்துக்கொள்ள
திறனிருக்கையில்-முன்பே
சிந்திக்க தெரிந்த பெண்ணே
உனக்கேன் பின்னே போகுது புத்தி

காசும் காமமும்தான் -இக்
காலத்தின் உயிர் நாடி
அதனால் போகுது
உன்போன்ற உயிர்கள் அடிக்கடி
பலமுறை யோசி
பாழா[பலா]ன
காதலை தொடங்குமுன்
ஒரே ஒரு நொடி
உன்னையே நேசி
உன் உயிரை விடுமுன்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உணர்வுகளின் வெளிப்பாடு!


                              கவியருவி
அன்புடன் மலிக்கா
முத்துப்பேட்டை
                                இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கற்றதென்ன? பெற்றதென்ன?கடந்த வருட நாட்கள்
கண்மூடி திறப்பதற்குள்
உருண்டோடி விட்டது
அதில் நீ
கற்றதென்ன?
பெற்றதென்ன?

இவ் வருடமேனும்
இதைச் செய்யனும்
அதைச் செய்யனுமென்ற
சபதத்தில் ஏதேனும்
செய்ததுண்டா?

உனக்கு நீயே
கேட்டுக்கொள்
எடுத்த சபதம்
கிடப்பில் கிடந்தால்
அடுத்த சபதத்தை
ஆரம்பித்து விடாதே!

வருடங்களோ
நாட்களோ
நாளிகைகளோ
நம் எண்ணங்களையும்
நம் செயல்களையும்
சீர்திருத்துமென்றால்
அந்நாளிலோ
அந்நாளிகையிலோ
அதனை செயல்படுத்தலாம்

ஆனால்
இதெல்லாம் செய்வதற்கு
ஒன்றுமில்லை

உன்மனதில் இருக்கு
உனக்கான உளி
அதனைக்கொண்டு
உன்னை செதுக்கு
மனதளவில்
தடுக்கவேண்டியதை தடுத்து
செயலளவில்
விலகவேண்டியதிலிருந்து விலகு
செய்யவேண்டியவைகளை
சிறப்புடன் செய்வதற்கு

உறுதியும் முயற்சியும்
உன்னிடமே இருக்கு
கூடவே
இறை நம்பிக்கையையும் பொருத்து
அதைக் கொண்டு
உன்னை நீயே
உருவாக்கு
உலகம் உன்னைக்கண்டு
வியாப்பிக்கும்
உன்னிடமும்
உளிகேட்டு யாசிக்கும்...


 கவியருவி
அன்புடன் மலிக்கா
முத்துப்பேட்டை
                                                                            இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது