நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கெளரவ வாழ்க்கை
உள்ளக் குமுறலை
ஒருவருக்குமறியாமல்
கொட்டித் தீர்க்க
இடம் தேடிய மனம்

அன்னாந்து பார்த்ததும்
அந்திவானம் அவசரமாய்
இன்றனக்கொன்றும்
மனக்குறையில்லை
அதனால்

மேகம் கூடி
வலம் வரவில்லை
மழை வரவும்
வாய்ப்பில்லை
என்பதுபோல்
வெளித்துக் கிடக்க

வேதனைகள் வேர்விட்டு
வேகமாய் முகம்கறுக்க
விதியிதுவோவென
வெதும்பியபடி

குளியலறை நோக்கிய
கால்கள்
கெளரவமாய் கொட்டியது
குமுறலைக் கண்ணீராய்

தண்ணீர் மட்டுமறிய
சல சலவென
சென்றது
ஷவரின் அடியில்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது