நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இப்படியும் சில

வெட்டிக்கொண்டே
இருந்தநேரத்திலும்
தாலாட்டும் காற்றுக்குள்
தலைகோதிக்கொண்ட மரங்கள்..


மடித்துக்கிடந்த
எச்சில் இலையில்
மிச்சம் மீதீ தேடிய
பிஞ்சுவிரல்கள்..

சாக்கடைநாத்தத்தில்
முக்குளிப்பதால்
சந்ததிகளின் தேகத்தில்
சந்தனவாசம்..

இடையோரத்தில் குறுகுறுத்தது
முதலாளியின் கண்
இழுத்துமூடிய முந்தானையில்
இருமழழையின்முகம்..

ஆறடிஉயரம் அந்தரத்தில்
தொங்கியது
அரைசாண் வயிற்றுக்கு
ஆகாரம் வேண்டி..

விடியவிடிய கத்தியது
காவலுக்கிருந்த நாய்
கழுத்தில்கட்டிய கயிற்றை
தளர்த்திவிடச்சொல்லி..

தன்வம்சத்தை
விருத்தியாக்கிவிட்டு
தன்னை சாய்த்துக்கொள்ளும்
வாழை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது