நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விலாசம் தேடும் விழிகள்.


நன்றி கூகிள்
உன்
ஓரவிழிப்பார்வையில்
என்னுள்ளம்
ஈரமாய் நனைந்தது
நனைந்த நினைவுகளை
நித்தமும் நினைக்கின்றேன்

உன்னை
நினைத்த நாள்முதலாய்
நிலவு சுடுகிறது
நெருப்பு குளிர்கிறது
காகம் மயிலானது
கரும்பு கசப்பானது
கரையில் நிற்கும்போதே
மனம்
கடலில் தத்தளிக்குது

தனியாய் புலம்புகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
நீ இருப்பதாய்
நினைத்துக்கொண்டு
எனக்குள்
நானே சிரிக்கின்றேன்

கார்மேகம் தலையைதொட
வான்மழை மடியில் விழ
வண்ணக்கனவு விழியில் வர
வசமாய் மாட்டிக்கொண்டேன்
உன்வசத்தில்

ஏனிந்த போராட்டம்
எதற்கிந்த ஆர்ப்பாட்டம்
கல்நெஞ்சம் எனக்குள்ளே
கரைந்தோடுது நீரோட்டம்

எனக்குள் நீவந்தாய்
விழிவழியே
மறு  உயிர்தந்தாய்
மறந்துவிட வழியில்லை
மரிக்கின்ற நிலைவரையில்

உன் ஓரவிழிப்பார்வை
என் உயிருக்குள் உறைந்தது
வரமா? இல்லை சாபமா?
விடைசொல் விழியே
நீ என் விலாசம்வரும்
வரையில்
என்நெஞ்சம் உன்
நினைவரையில்...

 டிஸ்கி// இன்று. இப்படத்திற்கான  L k.  என்ற கார்த்திக்கின் கவிதை.பௌர்ணமியை பழிக்கும்
முகமுடையவளே ..

இரண்டாய் இருந்த நம்
இதயம் மணத்தால்
ஒன்றாகியது..

நம் காதலின் தூய்மை
நிலவின் வெண்மையிலும்
தூய்மையானது ..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

19 கருத்துகள்:

 1. //காகம் மயிலானது
  கரும்பு கசப்பானது//

  எப்படிங்க
  //உன் ஓரவிழிப்பார்வை
  என் உயிருக்குள் உறைந்தது
  வரமா? இல்லை சாபமா? //

  அருமை

  நல்ல கவிதை மலிக்கா

  பதிலளிநீக்கு
 2. //எனக்குள் நீவந்தாய்
  விழிவழியே
  மறு உயிர்தந்தாய்
  மறந்துவிட வழியில்லை
  மரிக்கின்ற நிலைவரையில்//

  அற்புதமான வரிகள்
  அழகான கவிதை

  (இங்கே ஆபீச்ல தமிழிஷ் வேலை செய்யவில்லை வீடு போய்
  ஒட்டு பெட்டிஎலே பார்த்து போட்டு விடுகிறேங்கோ)

  பதிலளிநீக்கு
 3. கவிதை ரொம்ப நல்லா இருக்கு தோழி...
  கவிதை எழுதுறவங்களையும் ரொம்ப நல்ல உக்குவிகிரீர்கள் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள் தோழி..

  பதிலளிநீக்கு
 4. //கார்மேகம் தலையைதொட
  வான்மழை மடியில் விழ
  வண்ணக்கனவு விழியில் வர
  வசமாய் மாட்டிக்கொண்டேன்
  உன்வசத்தில்//

  அப்பிடியா!!!!..

  க‌விதை சூப்ப‌ர‌ இருக்கு....

  பதிலளிநீக்கு
 5. யம்மாடியேவ்
  என்ன வரிகள் மல்லிக்கா... அருமை

  நெருப்பு குளிர்கிறது
  காகம் மயிலானது
  கரும்பு கசப்பானது
  கரையில் நிற்கும்போதே
  மனம்
  கடலில் தத்தளிக்குது

  தனியாய் புலம்புகின்றேன்
  தனிமையை விரும்புகின்றேன்
  நீ இருப்பதாய்
  நினைத்துக்கொண்டு
  எனக்குள்
  நானே சிரிக்கின்றேன்

  பதிலளிநீக்கு
 6. சிந்தனைகள் அற்புதமாக மிளிர்கிறது!

  பதிலளிநீக்கு
 7. தனியாய் புலம்புகின்றேன்
  தனிமையை விரும்புகின்றேன்
  நீ இருப்பதாய்
  நினைத்துக்கொண்டு
  எனக்குள்
  நானே சிரிக்கின்றேன்


  ...... Very nice! :-)

  பதிலளிநீக்கு
 8. /////நனைந்த நினைவுகளை.... நித்தமும் நினைக்கின்றேன்//////

  உள்ளத்தை அள்ளும் வரிகள்..... சபாஷ்...!

  /////எனக்குள் நீ வந்தாய்.... விழிவழியே.... மறு உயிர்தந்தாய்....///
  இந்த ஜனனமும்......

  ////மறந்துவிட வழியில்லை.... மரிக்கின்ற நிலை வரையில்////
  இந்த மரணமும்....

  மிகவும் அற்புதமான வரிகள்...

  மறு உயிர்ப்பும்....
  மரிப்பும்...
  மீண்டும் மீண்டும் உதடுகள் உச்சரிக்கும் வரிகள்...

  உன் ஓரவிழிப்பார்வை..... என் உயிருக்குள் உறைந்தது.....
  வரமா? இல்லை சாபமா?...... விடைசொல் விழியே...
  நீ என் விலாசம்வரும்....வரையில்......
  என்நெஞ்சம்....... உன் நினைவரையில்...///

  மிக அருமையான கவிதை.... மலிக்கா...

  சென்ற பதிவில் சொன்னபடி...
  புதிய கவிஞர்களின் கவிதையை தங்கள் தளத்திலேயே வெளியிட்டமைக்கும்...
  பாராட்டுக்கள்...

  அதோடு....
  L.K. என்ற கார்த்திக்கின் கவிதையில்
  ////நம் காதலின் தூய்மை..... நிலவின் வெண்மையிலும்.... தூய்மையானது////
  காதலின் தூய்மை.. அருமையான விளக்கம்... அழகான வரிகள்...

  வாழ்த்துக்கள்... கார்த்திக்குக்கு

  மலிக்காவுக்கும்... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 9. //மறந்துவிட வழியில்லை
  மரிக்கின்ற நிலைவரையில்//

  மிக மிக உண்மை...

  பதிலளிநீக்கு
 10. //நம் காதலின் தூய்மை
  நிலவின் வெண்மையிலும்
  தூய்மையானது .//

  அழகான வரிகள்...

  பதிலளிநீக்கு
 11. நம்ப மாட்டேன் ...நம்ப மாட்டேன்... இது ஒரு பெண் எழுதிய கவிதைன்னு சொன்னா நா நம்ப மாட்டேன்.. ஒவ்வொரு வரியும் அருமையா இப்பிடி எழுத முடியாது :-)) சூப்பர்...

  ((இதுக்குதான் மாத்தி யோசிக்கனுமோ ? !!!!!... ))

  பதிலளிநீக்கு
 12. //கார்மேகம் தலையைதொட
  வான்மழை மடியில் விழ
  வண்ணக்கனவு விழியில் வர
  வசமாய் மாட்டிக்கொண்டேன்
  உன்வசத்தில்//

  மாட்டிக் கொண்டதை நியாபகபடுத்துது...அழகா.

  அழகா வந்திருக்கு ரெண்டு முறை படித்து விட்டேன்...தலைப்பே ஒரு குட்டி கவிதை மலிக்கா அக்கா...வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 13. // நினைத்த நாள்முதலாய்
  நிலவு சுடுகிறது
  நெருப்பு குளிர்கிறது
  காகம் மயிலானது //

  அருமையான வரிகள்
  ரசித்தேன்

  நம்ம கடை பக்கம் வந்து பாருங்க
  www.jillthanni.blogspot.com

  பதிலளிநீக்கு
 14. ///கரையில் நிற்கும்போதே
  மனம்
  கடலில் தத்தளிக்குது
  ////////

  கற்பனையில் கடலை குடிக்கும் திறமை கவிஞன் ஒருவனுக்குத்தான் உண்டு என்பதை . இங்கு உங்களின் இந்த வரிகளும் உறுதிப் படுத்திக்கின்றன .

  பதிலளிநீக்கு
 15. உங்களிடம் கவிதை உணர்வு மிகுந்து இருக்கிறது. பாராடுக்கள். மற்றவர்களையும் ஊக்குவிக்கும் ,
  உங்கள் பண்பு பாராட்டப்பட வேண்டியது

  பதிலளிநீக்கு
 16. கவிதை நன்கு இருந்தால் மட்டும் வெளியிடவும்...

  விழி சொல்கிறது....
  -------------------
  காணத பொருலாய்
  அண்டவெளியில்
  பயணித்திருந்தேன்...
  அடிகடி
  நீ
  நினைக்க
  உன்
  நினைவீர்ப்பு
  விசையாலே...
  விலாசமே!
  இல்லாமல்
  உன் வாசல் நிற்கின்றேன்...
  எனக்கு இது
  வரமா? இல்லை சாபமா?

  பதிலளிநீக்கு
 17. உங்க கவிதை

  'காதலித்துப்பார்' எஃபக்ட்டில் இருக்குது

  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 18. கருத்துக்கள் தந்தந்த அத்தனை நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல பல

  தொடர்ந்து உங்கள் அனைவரின் ஊக்கததையும் கருத்துக்களையும் எதிர்ப்பார்க்கும்
  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது