நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
காதலும். உணர்வும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதலும். உணர்வும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புரிந்துணர்தலற்று!



மலரினம் நீயடி என்கிறான்
மாலையிலேயே மடிவது அறியாமலா?

வானவில் நீதானடி  என்கிறான்
வந்து சிலநொடியில் மறைவது புரியாமலா?

நிலவினம் நீயடி என்கிறான்
காற்றற்று கிடப்பது தெரியாமலா?

ஓவிய தேவதை நீதானடி என்கிறான்
உணர்வற்று இருப்பது விளங்காமலா?

அத்தனையும் உன்னினம் என்கிறான்
அட பெண்ணினம் மென்மையினமென்கிறான்

அத்தனை ஏமாற்றுமா?
ஆணினம்!

அல்லது ஏமாற்றத்தில் இன்பம் காணுமா?
பெண்ணினம்!

காதல் செய்யும் பொழுதிலே
காதல் வார்த்தைகள் மெய்திடுமோ !

தொலைதூர கானல் நீராய் தெரிவதுபோல்
கல்யாணமனதும் பொய்திடுமோ!

புரிந்துணரதா மனங்களுக்கு
கானலும் காதலும் ஒன்றாகிடுமோ!

புரியாத புதிராகி இருவரின்
திருமண வாழ்க்கையும் திண்டாடிடுமோ!



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பூட்டிவிட்டேன் உனை வைத்து.



அன்பான காதலனே
ஆருயிர் மன்னவனே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்

நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை
உலுக்கி -அதிலுதிர்ந்த
உணர்வுகளை
உதிராமல் கோத்தாய்!

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி-அதை
தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்!

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்!

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை ஏன் கேட்கிறாய்!

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
மீண்டும்
மனத்திற்குள் பூட்டுகிறேன்

அடப்போடா காதலனே!
என்றுமே நீதான்
என் கணவனே!

இது நான் 2009 நவம்பர் மாதம் 3 ந்தேதி எழுதியது. அதிலிருந்து இதில் சின்ன மாற்றம் செய்து வெளியிட்டுள்ளேன். அது என்னான்னு கண்டுபிடிங்க..
 கண்டுபிடி கண்டுபிடி அட சும்மாதான். கண்டு பிடிங்களேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அடியே! அன்னக்கிளி...


                                                                     கிளிக் கிளிக்

இது ஒரு மீழ் பதிவு [அதிலிருந்து சிறு மாற்றங்களோடு]
இக்கவிதை தமிழ்குறிஞ்சியிலும் வெளியாகியுள்ளது
இத இப்படியும் செய்து பார்த்தேன் சும்மா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

காற்றோடு காற்றாய்...





எல்லைகள் கடந்து
எதையுமே எதிர்கொண்டு
எதிர் திசையில் நின்றபோதும்
ஏகாந்தமாய் ஏந்திக்கொள்வதும்

பச்சைப் பசுமையின்மேல்
மையம் கொண்டு
பறக்கும் திறனையும்
கற்றுக் கொண்டு
பூக்களின்மேல்
மஞ்சம் கொண்டு
பூந்தென்றலாய் வீசுவதும்.

புயலாய் வருவதும்
புண்படுத்திப்
புறபட்டுப் போவதும்
புழுதியாய் வருவதும்
புகையேற்படுத்தி
புழுங்க வைத்துப் போவதும்.

வசந்தமாய் வருவதும்
வருடிச் செல்வதும்
தென்றலாய் வருவதும்
தாலாட்டிச் செல்வதும்.

மனரணம் அதிகரித்து
மண்டியிட்டு கிடக்கும்போது
மாசற்ற உன்தழுவலால்-மனதை
மயக்கங் கொள்ளச்செய்வதும்.

உடலென்னும் கூட்டுக்குள்
உன் ஊடுருவலில்லாமல்
உயிரது வாழதென அறிந்து
உள்ளும் புறமுமாய்
உறவாடி வருவதும்.

பட்டுடலையும் தீண்டி
பரம்பொருளையும் தூண்டி
பசியைக்கூட சீண்டி
பஞ்சாய் பறக்கவைப்பதும்.

வேடிக்கையாய் சிலநேரம்
விபரீதமாய் சிலநேரம்
வித விதமாய்
விஸ்வரூபம் எடுப்பதும்.

உருவமில்லாது
ஒருவார்த்தை சொல்லாது
உலுக்கியெடுத்து
உதறித் தெளித்து
உலகையே ஆட்டிவைப்பதும்
உனக்கு கைவந்தக்கலை

என் சுவாசக்காற்றே!
என்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
உன்னைப்போல்
என்னையும் உருமாற்றி
காதலுக்குள்
காற்றாய் நுழைய வைத்ததேனோ!

உனக்குத் துணையாய்
எனைச் சேர்த்து
இவ்வுலகையே
என் கனவுக் கூட்டுக்குள்
கொண்டுவர வைத்ததேனோ!.....

திண்ணை யில் வெளியாகியுள்ள என்கவிதை..
மிக்க நன்றி திண்ணை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

சரணடைந்தேன்!..


நின்னைச் சரணடைந்தேன்
என்னுயிரே!- உன்
நினைவோடு இருக்கும்
என்மனதே!

நிறைவு பெற்றதாக்குவேன்
என் வாழ்வை-அது
உன் நினைவுகள்
எனக்குள் இருக்கும்வரை!

வாழும் தருணங்களின்
நொடிக் கொடி
வசந்தங்கள்
நடனமாடும் நம்மிடையில்

காலந்தோறும்
உன்னருகில்
கண்மூடிட வேண்டும்
உன்மடியில்

வாழ்ந்திட வேண்டும்
உன் நிழல்தன்னில்
வாழ்வு கழிந்திட வேண்டும்
உன் நினைவில்

நாளைப் பொழுதை
அறிவதில்லை
நம்முணர்வுக்கு என்றுமே
பிரிவுமில்லை..

டிஸ்கி// என்ன படிச்சாச்சா!அப்படியே இதையும் கிளிக் செய்துபாருங்கள். என் செல்லம் என்ன செய்துன்னு.. அப்படியே போயிடாம வந்து கருத்தும் சொல்லிட்டுபோங்க..
.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

ஒரு காதலி காதகியானாள்.

அன்பேயென்றாள்
அரவணைத்தேன்
ஆருயிரேயென்றாள்
ஆட்டம் கொண்டேன்

அகிலமே நீதானென்றாள்
அடிபணிந்தேன்
உயிரே உனக்காகவென்றாள்
உருகி விட்டேன்

ஒருநாள் வந்து
ஓசையின்றி அழுதாள்
உதிர்ந்து விட்டேன்

அழுத முகத்தோடு
அழுத்தமான மனதோடு
அன்பே என்ற உதட்டால்
அண்ணா என்றழைத்தாள்

அழைத்த மறுநொடி
அடிதளம் அதிர அதிர
அதாளத்திற்குள் அழுத்தப்பட்டேன்
அண்ட சராசரம் அத்தனையும்
அப்படியே உரையக் கண்டேன்

அபூர்வமாய் தெரிந்த அவள்
அசிங்கமாய் தெரியக் கண்டேன்
அடுக்கடுக்காய் என் மனயேடு
அவளின் நினைவுகளை
அடிச்சுவடு தெரியாமல்
அழிக்கக் கண்டேன்

காதலல்ல காதலல்ல
அவள் என்மேல் கொண்டது
காதலல்ல
காதலின் பெயர்கொண்டு
காலமெல்லாம் எனை
கருகவைக்க வந்த
காதல் காதகி.

டிஸ்கி// பல இடங்களில் இதுபோன்று நடகிறது அதனால்
காதல்கள் கானலாகி போகிறது. சிலநேரம் கருகியும்போகிறது. உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அமைந்தால். அந்த ஏட்டின் வலியை என் கவிதையில் மூலம் இங்கு எழுதிக்கிறுக்கினேன்.

[சுஸ்கி//இது ஆண் பெண் இருவருக்குமானதுதான் அவரவர் படிக்கும்போது மாற்றி படித்துக்கொள்ள வேண்டும் ஜமால்காக்காவின் பின்னுட்டத்தால் வந்ததிந்த சுஸ்கி.. ஹா ஹா ஹா]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

உன்னைப்போல!.



. டிஸ்கி// அச்சோ அச்சச்சோ. இந்த காதலிக்கிறவங்க இருக்காங்களே! அவங்களோட தொல்லையே இதுதானோ. காதல் நினைவா அவங்ககிட்ட ஏதாவது ஒன்னு இருந்துட்டாபோதும் இப்படிதான் புலம்பி, உருக்கிபோய்விடுவார்களாம்.[என்னாது யாரு இப்போ இப்படியெல்லாம் உருகி ஓடுவதுன்னு எல்லாம் சும்மா சும்மான்னு யாரோ சொல்லுவதுபோல் கேட்கிறது. நெசந்தானோ.]. இக்கவிதை தமிழ்குடும்பத்திலும் வந்திருக்கு  முன்னாடியே! அத அப்படியே படத்துக்குள் கொண்டுவந்திருக்கேன் அவ்வளவுதான்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பெண்பூவே!




டிஸ்கி// கூகுளில் தேடும்போது. எதாச்சையாக இப்பாவை
கண்ணில்பட்டாள் அதான் இவளை வைத்து ஒரு பட்டையை போட்டுட்டேன்..ஹா ஹா.எப்புடிகீது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

புத்தம் புதியதாய் பூத்திருக்கேன்!



//டிஸ்கியோ டிஸ்கி///இது புதுசு. நாம படித்த படிப்புக்கு ஏதோ எனக்கு தெரிந்தவரையில் கவிதையை படத்துக்குள் கொண்டுவந்திருக்கேன். எப்படியிருக்குன்னு சொன்னா ஹி ஹி இதபோல் இடையில் தொடர்வதான்னு யோசிக்கலாம்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது