நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரண சிந்தனை!!


நன்றி கூகிள்

மனமே மனமே பாவம் செய்வதேன்
மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்
மரணசிந்தனை நினைவில் வரலையா!
இல்லை
மரணமென்பதே உனக்கு இல்லையா!

பூமியில் இறைவன் படைத்த அனைத்துமே
புனிதமனிதனே உனக்காவே! -இங்கு
சிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்
பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குது
புண்ணியங்களும் குவிந்து இருக்குது

புண்ணிய வழியை புறந்தள்ளிவிட்டு
பாவத்தின் பக்கம் மனது போவதேன்
பாதை மாறியே பயணம் செய்வதேன்
உலகவாழ்க்கையில் உன்னைத்தொலைத்ததேன்
உண்மையை உதறி உள்ளம் அலைவதேன்

கூடிக்கூடியே கோள்சொல்கிறாய்
குடும்பத்தைப்பிரிக்க புறஞ்சொல்கிறாய்
கூத்து கும்மாளாம் தேடிப்போகிறாய்
கூட்டுக்கொள்ளையில் பங்குகொள்கிறாய்

மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்
மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்
மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு
மனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்

ஃபேஷன் ஃபேஷனென
வேசமிடுகிறாய்
பெருமைப்பேசியே
பொழுதைக்கழிக்கிறாய்

வர தட்சனையை வாங்கிகொள்கிறாய்
வறுமையுடையோரை வதைசெய்கிறாய்
வட்டிக்கு வட்டி வாங்கிகுவிக்கிறாய்
வரம்புமீறியே வாழநினைக்கிறாய்

இப்படி,,,,,,,,,,

பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்
புண்ணிய வழியை மறந்துபோனதேன்
மரணசிந்தனை மனதில் வரலையா
இல்லை
மரணமென்பதே நினைவில் இல்லையா.

இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்
உண்மையில் வாழ்க்கை
மறுமையில்தான் -இதை
மனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு
மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....

டிஸ்கி//இக்கவிதை ஷார்ஜா சீமான் 12 ஆம் ஆண்டுவிழாவில்
நான் எழுதி வாசித்த கவிதை!
”சீமான்” உதவிகள் பல செய்து உதவும் மனிதநேயமுள்ள ஒருஅமைப்பு.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!

44 கருத்துகள்:

 1. mng itha podanuma ??? nallathan irukkiu ana antha photo koncham bayangaramaa irukku

  பதிலளிநீக்கு
 2. கவிதை நல்லாயிருக்குங்க....
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. கவிதயை படித்ததும் ஒரு விதமான
  மரண பயம் எனக்கு!

  பதிலளிநீக்கு
 4. //S Maharajan கூறியது...
  கவிதயை படித்ததும் ஒரு விதமான
  மரண பயம் எனக்கு!//

  மனிதருக்கு மரணத்தின் நினைவு மனதை நிரப்பியிருக்கும்போது பாவங்களையும், தவறுகளையும், செய்யவே அஞ்சுவார் என அடிக்கடி எனது அம்மாவின் அம்மா சொல்லுவார்கள்.

  பதிலளிநீக்கு
 5. இதை ப‌ற்றி சிந்தித்தால் த‌வ‌றுக‌ள் ஏது?.. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.

  பதிலளிநீக்கு
 6. சி. கருணாகரசு கூறியது...
  கவிதை நல்லாயிருக்குங்க....
  பாராட்டுக்கள்.//

  பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கருணாகரசு..
  //சி. கருணாகரசு கூறியது...
  உணர்வுக்கவிதை... அருமை//

  மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான சிந்தனைகள் நிறைந்த
  அருமையான கவிதை!!!!!

  பதிலளிநீக்கு
 8. ஷார்ஜாவில் சீமான் இயக்கமா?......அதுகுறித்து சொல்லுங்களேன் சகோதரி?!

  பதிலளிநீக்கு
 9. பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்
  புண்ணிய வழியை மறந்துபோனதேன்
  மரணசிந்தனை மனதில் வரலையா
  இல்லை
  மரணமென்பதே நினைவில் இல்லையா.


  ...... கவிதையில் ஆழமான கருத்துக்கள்..... ம்ம்ம்ம்.....

  பதிலளிநீக்கு
 10. மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்
  மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்
  மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு
  மனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய் //

  எப்படி எப்படி மலிக்கா மனிதர்களின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டுறீங்க என்ன பட்டம் கொடுத்தாலும் தகும் உங்களுக்கு. அப்பப்பா கடவுள் வாரிவழங்கிவிட்டார் உங்களுக்கே சிந்தனைகளை வாழ்த்துக்களும் பாராடுக்குக்களும்.

  பதிலளிநீக்கு
 11. என்னதான் சொன்னாலும் மனசு உடனே மறந்து விடுகிறதே !!!....

  பதிலளிநீக்கு
 12. புது டெம்ப்ளேட் நல்லாயிருக்கு

  -------------------------

  இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்
  உண்மையில் வாழ்க்கை
  மறுமையில்தான் -இதை
  மனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு
  மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....


  அருமை அருமை

  பதிலளிநீக்கு
 13. iraivaa engkal anaivarukum warpathaviyai vazangkuvayaaka.

  nalla kavithai vazththukkal.

  super temlate..

  பதிலளிநீக்கு
 14. நாடோடி கூறியது...
  இதை ப‌ற்றி சிந்தித்தால் த‌வ‌றுக‌ள் ஏது?.. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌..//

  உண்மைதான் ஸ்டீபன் சிந்தித்தால் போதுமே!

  மிக்க நன்றி ஸ்டீபன்.

  பதிலளிநீக்கு
 15. /முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
  கவிதை நன்றாகவுள்ளது/

  வாங்க சார். வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 16. அண்ணாமலை..!! கூறியது...
  சிறப்பான சிந்தனைகள் நிறைந்த
  அருமையான கவிதை.//

  ரொம்ப சந்தோஷம் அண்ணாமலை
  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 17. Chitra கூறியது...
  பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்
  புண்ணிய வழியை மறந்துபோனதேன்
  மரணசிந்தனை மனதில் வரலையா
  இல்லை
  மரணமென்பதே நினைவில் இல்லையா.


  ...... கவிதையில் ஆழமான கருத்துக்கள்..... ம்ம்ம்ம்.....//

  மிக்க மகிழ்ச்சி சித்ராமேடம். வலைச்சரத்தில் வலம்வரும் வெண்ணிலாவே! சிறந்து ஒளிவீசிவா..

  பதிலளிநீக்கு
 18. /////.....மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு
  மனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்////

  /////ஃபேஷன் ஃபேஷனென
  வேசமிடுகிறாய்
  பெருமைப்பேசியே
  பொழுதைக்கழிக்கிறாய்////

  எல்லா வரிகளும் அருமை...
  குறிப்பாய் இந்த வரிகள் மிக அருமை...
  பாராட்டுக்கள்...

  வாழ்த்துக்கள்...
  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 19. அழகான வார்த்தை கோர்வையில் வந்த அருமையான கவிதை நிறைய நிஜங்களை சொல்லி இருக்கு...ரசித்தேன்....
  வாழ்த்துக்கள்...''இறைவனை நேசி இன்பம்பெறுவாய்..''

  பதிலளிநீக்கு
 20. கவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 21. எப்பொழுதும் போல் தங்களது உயரிய சிந்தனைகள் கவிதைகளில் பிரதிபலிக்கிறது.

  வாழ்த்துக்கள் சகோதரி

  விஜய்

  பதிலளிநீக்கு
 22. நேசமிகு மலிக்காவுக்கு... நல்ல சிந்தனை மிகுந்த கவிதையை தந்தமைக்கு நன்றி!
  இதோ என் கவிதையும்..

  பொய்யான பூமியிலே..
  புரியாமல் பிறந்திட்டாய்- உன்
  பூத உடல் போய் சேரும்
  நாளதையும் மறந்திட்டாய்!

  சதையுண்ணும்
  செம்புழுக்கு சரீரத்தை
  வளர்த்திட்டாய்- இவ்
  உண்மைதனை
  அறியாத்தான்- உன் அன்னை
  உனை ஈன்றிட்டாள்!

  மண்ணுலகின் புகழென்னி வின்னிலேயும் பறந்திட்டாய்..
  உன் பேராசை காரணத்தால்
  சொத்ததையும் சுமந்திட்டாய்!

  சொப்பனத்தில் நீ நிறைந்து
  சுதந்திரமாய் திரிந்திட்டாய்..
  சொற்ப வாழ்வு ஆயுள்தனை
  சிகரமென நினைத்திட்டாய்!


  உலக உறவினிலே- நீ மிதந்து
  உல்லாசத்தில் உரைந்திட்டாய்- நீ உறங்கப்போகும் நேரமதை
  உண்மையிலே மறந்திட்டாய்!

  பதிலளிநீக்கு
 23. கவிதையல்ல வாழ்க்கைக்கு வழி. மிக அழகாய் சொன்னதற்க்கும் மறுமையை நினைவூட்டியமிக்கும் மிகுந்த நன்றி.

  அன்புடன் சகோதரன்
  ஷாஜகான்

  பதிலளிநீக்கு
 24. jaseela கூறியது...
  ஷார்ஜாவில் சீமான் இயக்கமா?......அதுகுறித்து சொல்லுங்களேன் சகோதரி?!//

  வாங்க ஜஸீலா. அதற்க்கு ஒரு பதுவு விரைவில் போடுகிறேன் விபரமாக..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
  /செல்வி கூறியது...
  மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்
  மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்
  மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு
  மனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய் //

  எப்படி எப்படி மலிக்கா மனிதர்களின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டுறீங்க என்ன பட்டம் கொடுத்தாலும் தகும் உங்களுக்கு. அப்பப்பா கடவுள் வாரிவழங்கிவிட்டார் உங்களுக்கே சிந்தனைகளை வாழ்த்துக்களும் பாராடுக்குக்களும்.//

  ஏதோ எண்ணத்துக்குள் எழுவதை எழுத்தில் வடிக்கிறேன்.

  மிக்க நன்றி செல்விமா..

  பதிலளிநீக்கு
 25. //ஜெய்லானி கூறியது...
  என்னதான் சொன்னாலும் மனசு உடனே மறந்து விடுகிறதே !!!....//

  எதையும் மறக்கட்டும் மரணத்தை தவிர..

  பதிலளிநீக்கு
 26. நட்புடன் ஜமால் கூறியது...
  புது டெம்ப்ளேட் நல்லாயிருக்கு///

  நிஜமாவா. சந்தோஷம் காக்கா..

  -------------------------

  இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்
  உண்மையில் வாழ்க்கை
  மறுமையில்தான் -இதை
  மனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு
  மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....


  அருமை அருமை.//

  மிக்க நன்றி காக்கா.

  பதிலளிநீக்கு
 27. காஞ்சி முரளி கூறியது...
  /////.....மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு
  மனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்////

  /////ஃபேஷன் ஃபேஷனென
  வேசமிடுகிறாய்
  பெருமைப்பேசியே
  பொழுதைக்கழிக்கிறாய்////

  எல்லா வரிகளும் அருமை...
  குறிப்பாய் இந்த வரிகள் மிக அருமை...
  பாராட்டுக்கள்...

  வாழ்த்துக்கள்...
  நட்புடன்...
  காஞ்சி முரளி....//

  வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி..

  பதிலளிநீக்கு
 28. seemangani கூறியது...
  அழகான வார்த்தை கோர்வையில் வந்த அருமையான கவிதை நிறைய நிஜங்களை சொல்லி இருக்கு...ரசித்தேன்....
  வாழ்த்துக்கள்...''இறைவனை நேசி இன்பம்பெறுவாய்.//

  நிஜங்களை சொல்லும்போது பயம் வருகிறது உலக வாழ்வையெண்ணி இல்லையா கனி.

  மிக்க நன்றி சீமாங்கனி..

  பதிலளிநீக்கு
 29. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
  கவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி.

  வாங்க பனித்துளி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 30. supam கூறியது...
  iraivaa engkal anaivarukum warpathaviyai vazangkuvayaaka.

  nalla kavithai vazththukkal.

  super temlate//

  ரொம்ப தேங்ஸ்ங்க சுபம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 31. விஜய் கூறியது...
  எப்பொழுதும் போல் தங்களது உயரிய சிந்தனைகள் கவிதைகளில் பிரதிபலிக்கிறது.

  வாழ்த்துக்கள் சகோதரி

  விஜய்.//

  வாங்க சகோதரரே ரொம்ப நாளாச்சி நானும் அந்த வரமுடியலை..
  ரொம்ப மகிழ்ச்சி.
  தாங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 32. வசந்தவாசல் அ.சலீம்பாஷா கூறியது...
  நேசமிகு மலிக்காவுக்கு... நல்ல சிந்தனை மிகுந்த கவிதையை தந்தமைக்கு நன்றி!
  இதோ என் கவிதையும்..

  பொய்யான பூமியிலே..
  புரியாமல் பிறந்திட்டாய்- உன்
  பூத உடல் போய் சேரும்
  நாளதையும் மறந்திட்டாய்!

  சதையுண்ணும்
  செம்புழுக்கு சரீரத்தை
  வளர்த்திட்டாய்- இவ்
  உண்மைதனை
  அறியாத்தான்- உன் அன்னை
  உனை ஈன்றிட்டாள்!

  மண்ணுலகின் புகழென்னி வின்னிலேயும் பறந்திட்டாய்..
  உன் பேராசை காரணத்தால்
  சொத்ததையும் சுமந்திட்டாய்!

  சொப்பனத்தில் நீ நிறைந்து
  சுதந்திரமாய் திரிந்திட்டாய்..
  சொற்ப வாழ்வு ஆயுள்தனை
  சிகரமென நினைத்திட்டாய்!


  உலக உறவினிலே- நீ மிதந்து
  உல்லாசத்தில் உரைந்திட்டாய்- நீ உறங்கப்போகும் நேரமதை
  உண்மையிலே மறந்திட்டாய்!/

  வருக வருக வசந்தவாசல்!
  வசந்தாமாய் இருக்கு உங்க கவிதை. மரணத்தை வசந்தமாக எதிர்பார்த்தால் வாழ்க்கை வழிதவறாமல் போய்கொண்டிருக்கும்..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 33. ஷாஜகான் கூறியது...
  கவிதையல்ல வாழ்க்கைக்கு வழி. மிக அழகாய் சொன்னதற்க்கும் மறுமையை நினைவூட்டியமிக்கும் மிகுந்த நன்றி.

  அன்புடன் சகோதரன்
  ஷாஜகான்.

  வாங்க சகோதரா தாங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 34. இந்தப் படத்துக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்குத்துக்குத் தான். அவர்கள் வெளியிட்டுள்ள பகவத் கீதை-யில் மனிதன் பழைய கிழிந்த ஆடைகளை மாற்றி எப்படி புதிய உடையை அணிகின்றானோ அது போல ஆன்மாவானது, குழந்தை, சிறுவன், வாலிபன், வயோதிகன் என்ற உடைகளை இப்பிறவியிலேயே மாற்றி மாற்றி அணிந்துவிட்டு, மரணத்துக்கப்புரம் வேறு உடையாக புதிய உடலை அவனது கர்ம பலன்களுக்குத் தக்கவாறு பெறுகிறான் என்னும் கருத்தை விளக்க இப்படம் போடப் பட்டது. கீதையின் 2.13 பதத்தில் இந்த செய்தி கொடுக்கப் பட்டுள்ளது. உங்கள் கவிதையில், மதம் என்பதே கொடாது என்ற என்னத்தை விதைதுள்ளீர்கள். இது தவறு. மனிதனாகப் பிறந்து விட்டால், இறைவன் யார், நான் யார், இறைவனுக்கும் எனக்குமுள்ள தொடர்பு என்ன, எங்கிருந்து நான் வந்தேன், இறப்புக்கு பின் எங்கே செல்வேன் போன்ற கேள்விகளுக்கு விடை தேடி கண்டுபிடிக்க வேண்டும், இல்லை என்றால் ஆடு மாடு நாய் பூனை போன்ற உயிரினத்துக்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்ணுதல், உறக்கம், குட்டிகளை ஈனுதல், தூக்கம் போன்ற செயல்களை மேற்சொன்ன மிருகங்கள் கூட செய்கின்றன. ஆறறிவு படைத்த மனிதனும் இத்தோடு நின்றுபோனால் கொடுக்கப் பட்ட ஆறாவது அறிவுக்கு அர்த்தமே இல்லை. மதத்தை கொண்டு பிறவினை, சண்டை சச்சரவுகள் செய்வது தவறு, ஆனால் இறைவனை அறியவும், அவன் மேல் அன்பு கொள்ளவும் உதவுவது மதம்.[அதற்குப் பெயர் மதம் என்றாலும் athan unmaiyaa peyar Dharmam, athai yellorum pinpatravendum.]

  பதிலளிநீக்கு
 35. //K. Jayadeva Das கூறியது...
  இந்தப் படத்துக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்குத்துக்குத் தான். அவர்கள் வெளியிட்டுள்ள பகவத் கீதை-யில் மனிதன் பழைய கிழிந்த ஆடைகளை மாற்றி எப்படி புதிய உடையை அணிகின்றானோ அது போல ஆன்மாவானது, குழந்தை, சிறுவன், வாலிபன், வயோதிகன் என்ற உடைகளை இப்பிறவியிலேயே மாற்றி மாற்றி அணிந்துவிட்டு, மரணத்துக்கப்புரம் வேறு உடையாக புதிய உடலை அவனது கர்ம பலன்களுக்குத் தக்கவாறு பெறுகிறான் என்னும் கருத்தை விளக்க இப்படம் போடப் பட்டது. கீதையின் 2.13 பதத்தில் இந்த செய்தி கொடுக்கப் பட்டுள்ளது. உங்கள் கவிதையில், மதம் என்பதே கொடாது என்ற என்னத்தை விதைதுள்ளீர்கள். இது தவறு. மனிதனாகப் பிறந்து விட்டால், இறைவன் யார், நான் யார், இறைவனுக்கும் எனக்குமுள்ள தொடர்பு என்ன, எங்கிருந்து நான் வந்தேன், இறப்புக்கு பின் எங்கே செல்வேன் போன்ற கேள்விகளுக்கு விடை தேடி கண்டுபிடிக்க வேண்டும், இல்லை என்றால் ஆடு மாடு நாய் பூனை போன்ற உயிரினத்துக்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்ணுதல், உறக்கம், குட்டிகளை ஈனுதல், தூக்கம் போன்ற செயல்களை மேற்சொன்ன மிருகங்கள் கூட செய்கின்றன. ஆறறிவு படைத்த மனிதனும் இத்தோடு நின்றுபோனால் கொடுக்கப் பட்ட ஆறாவது அறிவுக்கு அர்த்தமே இல்லை. மதத்தை கொண்டு பிறவினை, சண்டை சச்சரவுகள் செய்வது தவறு, ஆனால் இறைவனை அறியவும், அவன் மேல் அன்பு கொள்ளவும் உதவுவது மதம்.[அதற்குப் பெயர் மதம் என்றாலும் athan unmaiyaa peyar Dharmam, athai yellorum pinpatravendum.]///


  அன்பு சகோதரர் அவர்களே!
  தாங்கள் கூறியுள்ளதுபோல் இருக்கலாம் இதன் அர்தங்களெல்லாம் தெரியாத எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு தாங்களுக்கு மிக்க நன்றி. அறியாததை அறிந்துகொள்வதிலும், அறிப்படுத்துவதிலும் தவறில்லை.

  நான் இக்கவிதையில் எவ்வித்திலும் மதமோ மதம்சார்ந்த கோட்பாடுகளோ இல்லை, கூடாது, என்ற கருத்தை நான் தெரிவிக்கவில்லை!
  அப்படி இக்கவிதையில் ஏதேனும் ஒரு வரி தென்பட்டிருந்தால் அதை சுட்டிக்காட்டவும்.

  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 36. // மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு
  மனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய் //

  இந்த வரிகளில் மதம் என்பதைப் பயன் படுத்தி தீவிரவாதம் நடக்கிறது என்ற பொருளில் கூறியுள்ளீர்கள். உண்மையான மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற கருத்து இக்கவிதையில் இடம் பெறாத பட்சத்தில் மதம் என்பதே தவறு என்று மறைமுகமாக பொருள் படுகிறது. ஒரு வேலை உங்கள் கவிதையின் கட்டமைப்பு, கருத்தாக்கம் அதற்க்கு இடம் தராமல் போயிருக்கலாம். இதைப் படிக்கும் போது மதமே வேண்டாம் என்ற தவறான எண்ணம் வாசகர்களின் மனதில் வரக்கூடும். அதைத் தான் நான் சுட்டிக் காட்டினேன்.

  பதிலளிநீக்கு
 37. அன்பு சகோதரரே!
  இறைவனைநேசி இன்பம் பெறுவாய் என்ற என் சிந்தனையிலிருந்தே தெரிந்திருக்கும் நான் மதமோ, இறைவனோ இல்லையென்று சொல்பவரல்ல என்று.

  நான் எழுதியதின் நோக்கம் புனிதத்தின்
  பெயரால் யாரும் பாவம் செய்திடக்கூடாதே! என்ற நல்லெண்ணமேதவிர தாங்கள் சொல்வதுபோல் அல்ல.

  இதைப்பற்றி மேலும் விவாதங்கள் வேண்டாமென நினைக்கிறேன்.

  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர் அவர்களே!

  பதிலளிநீக்கு
 38. நல்ல வரிகள் மல்லிக்கா


  மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு
  மனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்

  இந்தவரிகளில் அப்படி ஒன்றும் கொலை குற்றம் நடை பெறவில்லை என்பது என் கருத்து ஏன் தேவையற்ற விவாதங்கள்

  பதிலளிநீக்கு
 39. செந்தில்குமார் கூறியது...
  நல்ல வரிகள் மல்லிக்கா


  மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு
  மனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்

  இந்தவரிகளில் அப்படி ஒன்றும் கொலை குற்றம் நடை பெறவில்லை என்பது என் கருத்து ஏன் தேவையற்ற விவாதங்கள்.//

  வாங்க செந்தில்.

  தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 40. சொல்லவேயில்ல.....!

  ////K. Jayadeva Das கூறியது...
  இந்தப் படத்துக்கு நீங்கள் நன்றி சொல்ல ............... .........கீதையின் 2.13 பதத்தில் இந்த செய்தி கொடுக்கப் பட்டுள்ளது. ////

  நாங்களும் கீதையை படித்த ஆள்தான் நண்பரே....

  கற்கால மனிதன் எந்த மதத்தைச் சார்ந்தவன் நண்பரே... இடையிலே சில சுயநலவாதிகள் நுழைந்து மக்கள் மனதை குழப்பி விட்டார்கள்... "மதம் என்பதே ஓர் அபின் (போதை) " தான் என்ற ஓர் மேதை சொன்னதை ஏற்றுக்கொள்பவன் நான்... மனிதனாய் பிறந்தவன் அனைவரும் உடலால் நிர்வாணமாய்...... உள்ளத்தால் காமம், குரோதம், வன்மம், தீங்கு போன்ற எண்ணங்கள் ஏதுமின்றி... விகல்பம் ஏதுமின்றி நல்லவனாய்த்தான் பிறக்கிறான்... சில மனித மிருகத்தின் போதனைகளால்... மதம் எனும் போதைக்கு அடிமையாகி... அவன் எவ்வளவு கல்வி, கேள்விகளில் சிறந்தவனாய் இருந்தாலும்... மதம், சாதி, இனம், பிரிவு இந்த வலைதனில் சிக்கி... தன்னையும்.. தன் சந்ததியையும் படுபாதாளத்தில் தள்ளிக்கொள்கிறான்...

  எங்கெல்லாம் மதம் தலை தூக்குகிறதோ...
  அங்கெல்லாம் 'மனிதம்' மரித்துப்போகிறது..

  இது நிதர்சனமான நிஜம்... உண்மை....

  அதோடு...

  /////உங்கள் கவிதையில், மதம் என்பதே கொடாது என்ற என்னத்தை ........................செல்வேன் போன்ற கேள்விகளுக்கு விடை தேடி கண்டுபிடிக்க வேண்டும் /////

  என்னவோ.. இவர் இறைவனுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு போலவும்... நெருங்கிய உறவினர் போலவும் பிதற்றி இருக்கிறார்...

  இவரது முதல் வரியினைக்கொண்டே இவருக்கு பதில் அளிக்க விரும்புகிறேன்..."

  "கடமைச் செய்... பிரதிபலனை எதிர்பார்க்காமல்.." இதுதான் இவர் கூற்றுப்படி பகவத் கீதையில் கண்ணன் சொன்னது... அதன் வழி இவர் நடக்கிறாரா...? நாகேஷ் வசனம் பேசியதைப்போல "கவிதை எழுதி பேர் வாங்குபவர் உண்டு... குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்க K. Jayadeva Das நினைக்கிறார் போலும்"...

  ஜெயதேவ தாஸ் அவர்களே...
  நீங்கள்...
  முதலில் கொஞ்சமாவது 'மனிதம்' உள்ள மனிதனாய் இருங்கள்...
  பின் மதத்தைப் பற்றி பேசலாம்..Ok..!


  இறுதியாய்...

  நண்பரே... இந்த "நீரோடை" தளம்....

  நான் வந்த நாள் முதல்..... அல்லது கண்ட நாள் முதல்... ஓர் மத சார்பற்ற... சாதி சாராத... நடுநிலை வலைதளமாய் இருக்கிறது...

  ஓர் சகோதர...சகோதரித்துவ வலைதளமாய் இருக்கிறது...

  இதனுள் வந்து குழப்பம் விளைவிக்க முயலாதீர் நண்பரே...!

  (வேறே பாஷைல சொல்லனும்னா கும்மியடிச்சிட்டு போயிடாதீங்கோ ... )

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 41. முரளி தங்களின் அன்பான கருத்துரைகளுக்கு, எனது நன்றிகள்.

  ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புரிந்துகொள்கிறார்கள். அதுதான் மாற்றமான கருத்துரைகள். மற்றபடி ஒன்றுமிலை.

  இங்கு வரும் சகோதரர்களும் சகோதரிகளும் என் உறவினர்கள்போல்தான்.

  நான் என் மனசாட்சிக்கு பயந்து இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பவள்.
  அனைவருக்கும் இறைவன் நேசத்தையும் பாசத்தையும் அளவில்லாமல் அள்ளிதரட்டும்..

  என்றும் அன்புடன்
  சகோதரி மலிக்கா

  பதிலளிநீக்கு
 42. /பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்
  புண்ணிய வழியை மறந்துபோனதேன்//
  //மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்//

  பாவம் செய்தாலும் ,புண்ணியம் செய்தாலும் ஒருநாள் மரணம் வரத்தானே போகிறது ...
  ஒழுக்கம் என்ற பெயரில் உணர்வுகளை அடக்கி கொண்டு வாழ்வதை காட்டிலும் ....சந்தோசமாக வாழ்ந்து மரணத்தை எதிர் கொள்வதில் தவறென்ன ...

  மரணம் பற்றி என் பார்வை ...
  http://thanikaatturaja.blogspot.com/2010/06/blog-post_02.html

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது