நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கனவுக்குள்ளே!தென்றல் தாலாட்டி-
என்
தலைகோதிட
கண்மூடினேன்


வீசிய காற்றோடு
வம்பளந்தேன்
வாசனைப்பூவோடு
விளையாடினேன்


நீர்வீழ்ச்சியோடு
கோபித்துக்கொண்டேன்
நீர்முகி கப்பலுக்குள்
போராடினேன்


அதிகாலைப்பொழுதில்
மூச்சுமுட்டியதாய்
உணர்ந்து
அயர்ந்தெழும் வேளையில்


தலைகுப்பற
நான்
தலையணையின்
மடியில்…


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.


என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

27 கருத்துகள்:

 1. கவிதையோடு நீங்க செலக்ட் பண்ணுற படமும் சூப்பர் தாங்க!

  //என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
  நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!//

  நல்லா இல்லை அப்படின்னு சொல்லமுடியுமா?

  பதிலளிநீக்கு
 2. //என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
  நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே//

  ஆக்கங்களுக்கு ஊக்கங்களாக வரும் பின்னூட்டம் மற்றும் ஓட்டுகளை கண்டும் ஏன் இந்த சந்தேகம் !!!

  பதிலளிநீக்கு
 3. //என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
  நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே//

  ஆக்கங்களுக்கு ஊக்கங்களாக வரும் பின்னூட்டம் மற்றும் ஓட்டுகளை கண்டும் ஏன் இந்த சந்தேகம் !!!

  பதிலளிநீக்கு
 4. என்னென்று சொல்வதம்மா. உன்னுடைய திறமைகளை. அப்பப்பா என்ன என்ன திறமைகள் ஒளிந்திருக்கு உனக்குள் வாழ்த்துக்கள் படத்தேர்வுகள் செய்வதில் உனக்கு நிகர் நீதான் சபாஷ்

  பதிலளிநீக்கு
 5. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.. ப‌ட‌மும் சூப்ப்ர்.

  பதிலளிநீக்கு
 6. ///என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
  நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே////

  தங்கள் கேள்விக்கு...
  பதில்... இதோ...!

  தமிலிஷில் முகப்பில் தங்கள் பதிவிற்கு...
  தற்போது தங்களுக்கு கிடைத்த vote 20 ...
  அதுவும் தாங்கள் பதிவிட்ட "made popular 4 hours ago" க்குள்...

  தங்கள் ஆக்கங்கள்.. படைப்புக்கள்... நான்கே நான்கு மணிநேரத்தில்.... 20 vote...

  இது எப்படி இருக்கு...!

  "கனவுக்குள்ளே" பதிவின் photoவும் கவிதையும்...
  ரொம்ப... ரொம்ப... நன்னாயிருக்கு... பேஷ்... பேஷ்..!

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 7. மரத்துல தொட்டில் கட்டி குழந்தையத் தூங்கப்போடச் சொன்னா, மரத்தையே தொட்டிலாக்கிட்டீங்களே!! பாத்தும்மா, கவனம்!!

  பதிலளிநீக்கு
 8. அதிகாலைப்பொழுதில்
  மூச்சுமுட்டியதாய்
  உணர்ந்து
  அயர்ந்தெழும் வேளையில்


  தலைகுப்பற
  நான்
  தலையணையின்
  மடியில்…

  நல்ல ரசனை மல்லிக்கா

  பதிலளிநீக்கு
 9. உங்க கனவுக்கவிதையும் படமும் அழகாய் இருக்குங்க. மேலும் பல கவிதைப் பதிவிட வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. //தலைகுப்பற
  நான்
  தலையணையின்
  மடியில்…//

  அழகு வரிகள் அக்கா ரசித்தேன்..

  ஆமாக்கா கனவ விட்டு வெழியே வந்தா வலிக்கத்தான் செய்யுது...

  பதிலளிநீக்கு
 11. நான் கண்ட கனவு மாதிரிக் கனவு.
  படம் அழகு மல்லிக்கா.

  பதிலளிநீக்கு
 12. S Maharajan கூறியது...
  கவிதையோடு நீங்க செலக்ட் பண்ணுற படமும் சூப்பர் தாங்க!.

  ரொம்ப நன்றிங்க மகராஜன்

  //என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
  நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!//

  நல்லா இல்லை அப்படின்னு சொல்லமுடியுமா?


  சொல்லமுடியுமா?
  கேள்விக்கேக்குரதபாத்தா. நல்லயில்லையினுல்ல தோனுது..

  பதிலளிநீக்கு
 13. ஜெய்லானி கூறியது...
  //என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
  நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே//

  ஆக்கங்களுக்கு ஊக்கங்களாக வரும் பின்னூட்டம் மற்றும் ஓட்டுகளை கண்டும் ஏன் இந்த சந்தேகம்.

  கூடாதுதான் இருந்தாலும் ஒருநப்பாசைதான்..

  பதிலளிநீக்கு
 14. sabira கூறியது...
  antha kolatha mathiriye iruthaan
  nalla thaan irukum,illa?//

  ஆமா சாபிரா. அதிலிருந்துதானே இப்படி வந்து நிக்கிறோம்.மீண்டும் அதேபோல் போகமுடிஞ்சா தேவலைதான்..  யாதவன் கூறியது...
  நல்ல படைப்பு

  மிக்க நன்றி யாதவா..

  பதிலளிநீக்கு
 15. /Mohamed G கூறியது...
  சூப்பர் கவிதை./

  மிக்க நன்றி முஹம்மத் அவர்களே..


  mohan கூறியது...
  azaku azaku azaku super...........//

  மிக்க நன்றி மோகன்..

  பதிலளிநீக்கு
 16. யாதவன் கூறியது...
  நல்ல படைப்பு.//

  நன்றி யாதவன்..

  சாரதாவிஜயன் கூறியது...
  என்னென்று சொல்வதம்மா. உன்னுடைய திறமைகளை. அப்பப்பா என்ன என்ன திறமைகள் ஒளிந்திருக்கு உனக்குள் வாழ்த்துக்கள் படத்தேர்வுகள் செய்வதில் உனக்கு நிகர் நீதான் சபாஷ்.//

  ரொம்ப் ரொம்ப சந்தோஷம்மா. எல்லாம் இறைவனிம் கருணையும்
  உங்களைப்போன்றவர்களின் ஆசிர்வாதமும்தான் மிக்க நன்றிம்மா..

  பதிலளிநீக்கு
 17. நாடோடி கூறியது...
  க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.. ப‌ட‌மும் சூப்ப்ர்.//

  ரொம்ப மகிழ்ச்சி ஸ்டீபன் மிக்க நன்றி..


  //வெங்கட் நாகராஜ் கூறியது...
  கவிதையையும் புகைப்படமும் அழகு.//

  வருக வருக வெங்கட். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 18. காஞ்சி முரளி கூறியது...
  ///என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
  நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே////

  தங்கள் கேள்விக்கு...
  பதில்... இதோ...!

  தமிலிஷில் முகப்பில் தங்கள் பதிவிற்கு...
  தற்போது தங்களுக்கு கிடைத்த vote 20 ...
  அதுவும் தாங்கள் பதிவிட்ட "made popular 4 hours ago" க்குள்...

  தங்கள் ஆக்கங்கள்.. படைப்புக்கள்... நான்கே நான்கு மணிநேரத்தில்.... 20 vote...

  இது எப்படி இருக்கு...!//

  அச்சோ எப்படி முரளி இதெல்லாம் நான் பார்ப்பதேயில்லையே. போய் பதிவதோடுசரி. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு.

  சகோதரியின் வளர்ச்சியில் பங்குகொள்ளும் சகோதரனாய் தாங்கள் கிடைத்தமைக்கு மிக்க நன்றி.

  /"கனவுக்குள்ளே" பதிவின் photoவும் கவிதையும்...
  ரொம்ப... ரொம்ப... நன்னாயிருக்கு... பேஷ்... பேஷ்..!

  நட்புடன்...
  காஞ்சி முரளி...//

  ரொம்ப ரொம்ப நன்றி முரளி..

  பதிலளிநீக்கு
 19. ஹுஸைனம்மா கூறியது...
  மரத்துல தொட்டில் கட்டி குழந்தையத் தூங்கப்போடச் சொன்னா, மரத்தையே தொட்டிலாக்கிட்டீங்களே!! பாத்தும்மா, கவனம்./

  ஒரே மாதரியே எல்லோரும் செய்ராங்களே மம்மி என்னை வித்தியாசமாக துயில்கொள்ளவைன்னு கேட்டதுபோல் இருந்துச்சி அதான் இப்புடி

  இருந்தாலும்
  கீழே விழுந்தாலும் அடிபடாதவாறு மூன்றடுக்கு மெத்தை போட்டு வச்சிருக்கோமுல்ல..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது