நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கலைந்து எறி


கவலைகளை

மனச்சிறையில் அடைத்து வைக்காதே
அது செல்லாக மாறி

உன்னையே அரித்துவிடும் அழித்துவிடும்

கவலைப்படுவதால்

ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு

கவலையேற்படுமென்றிருப்பின்
அது வந்தேதீரும்

வருத்தம்வந்துவிட்டதே! என

நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா

எல்லாவற்றையும் எதிர்பார்த்து
வாழ்வதே

வாழ்க்கையென்றாகிவிட்டதால்

எதையுமே

ஓர் வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்


கவலையென்பது கானல்நீர்

”ஆனால்”
நீதான் அதை நீரென்று

நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்


கவலை கவலை என

உனக்கு நீயே ஏன்
வலை பின்னிக்கொள்கிறாய்


கவலையிலும்

ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்

”வ”என்ற
 வருத்தத்தை நீங்கிவிட்டு


கவலைகளா அதை கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு அல்லது
கவலையை கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்

கவலையே காணாமல்போய்விடும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

8 கருத்துகள்:

 1. //கவலையென்பது கானல்நீர் ”ஆனால்”
  நீதான் அதை நீரென்று நினைத்து
  நனைந்துகொண்டிருக்கிறாய்//

  நல்ல வரிகள்...

  பதிலளிநீக்கு
 2. அருமையான வரிகள்!!
  உங்க டெம்பிலேட் லோட் ஆக நேரம் எடுக்குது!
  கொஞ்சம் என்னான்னு பாருங்க தோழி..

  பதிலளிநீக்கு
 3. //கவலையென்பது கானல்நீர் ”ஆனால்”
  நீதான் அதை நீரென்று நினைத்து
  நனைந்துகொண்டிருக்கிறாய்//

  நல்ல வரிகள்...//

  நன்றி, புலவன் புலிகேசி தாங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
  மீண்டும் மீண்டும் வருக

  பதிலளிநீக்கு
 4. //அருமையான வரிகள்!!
  உங்க டெம்பிலேட் லோட் ஆக நேரம் எடுக்குது!
  கொஞ்சம் என்னான்னு பாருங்க தோழி..//

  தோழரே தாங்களின்வருகைக்கும் அருமையன கருத்துக்கும் மிக்க நன்றி

  டெம்பிலேட் லோட் ஆக நேரம் எடுக்கிறதா ஏன்னு தெரியவில்லையே தோழரே,
  இங்கு சரியாக உடனே திறக்கிறதே

  பதிலளிநீக்கு
 5. //கவலையென்பது கானல்நீர் ”ஆனால்”
  நீதான் அதை நீரென்று நினைத்து
  நனைந்துகொண்டிருக்கிறாய்//

  //கவலை கவலை என உனக்கு நீயே ஏன்
  வலை பின்னிக்கொள்கிறாய்//

  //கவலையிலும் ஒரு”கலை” யை கற்றுக்கொள்
  கவலையில் இருக்கும் ”வ”என்ற வருத்தத்தை நீங்கிவிட்டு//

  எல்லாமே நெஞ்சிற்கு உரமேற்றும் வரிகள்...

  குறிப்பாய் கடைசி பத்தி அருமை....

  பதிலளிநீக்கு
 6. //வருத்தம்வந்துவிட்டதே என நீ வாடிக்கிடந்தால்
  வசந்தம்வந்து சேர்ந்திடுமா//

  தன்னபிக்கை அளிக்க கூடிய ஒரு மிக சிறந்த பதிவு.........
  விரைவில் நானும் தன்னபிக்கை பற்றீ போடா உள்ளேன்.......
  வாழ்த்துக்கள்........!

  பதிலளிநீக்கு
 7. எனக்கு ரொம்ப கவலையா இருக்கு இதை படித்து என்னா பின்னூடமிடுவது என்று

  கலக்கல்

  பதிலளிநீக்கு
 8. /எல்லாமே நெஞ்சிற்கு உரமேற்றும் வரிகள்...

  குறிப்பாய் கடைசி பத்தி அருமை//

  மிக்க நன்றி பாலாஜி

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது