நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வலி


கைதடியை

தட்டித் தட்டியக்கொண்டே
தள்ளாடியபடி வந்த தாத்தா

தடுமாறிவிட்டார்
நான்கு கைகள் தாங்கியபடி

வீடுவந்து சேர்த்தவர்கள்
வாசல்திரும்பவில்லை

உள்ளிருந்து ஒலித்தது

ஓருசத்தம்
வயதாகிவிட்டால் வீட்டின்

ஒருமூலையில் கிடக்காமல்
வாக்கிங் என்ன வேண்டிகிடக்கு

வாக்கிங்

கத்தியில்லாமல்

குத்திய வார்த்தையால்
வலிபொறுக்காமல்

வழிந்தது கண்ணீர்
ரணப்பட்ட மனம்

தானாய் புலம்பியது ரத்தினமே நீ
பூவும் பொட்டுமாய் போய்விட்டாய்
இந்த புண்பட்ட கிழவனுக்கு
எப்போது உயிர்
பொசுக்கென்று போகுமோ,,,
வலுவிழந்துவிட்டால் வாழ்க்கை
வலியாகிப்போய்விடுமோ-


என்று
வருத்தும் நெஞ்சடைக்க
விழியருவி பார்வையை மறைக்க
வெற்றிடத்தை உற்றுப்பார்த்தபடி
உருக்குலைந்த உடம்போடு

உருகியது மனம்...

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

15 கருத்துகள்:

 1. தனித்து விடுப்பட்ட முதியோர்களின் மன நிலையை ஆழமாக சொல்லி இருக்கின்றீர்கள். ஆமாம், அவர்களுக்கு அப்பொழுது தேவை காசோ, பண்மோ இல்லை, பாசம் மட்டுமே. இதனை அனைவரும் உணர்ந்தால் நலம்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு பழமொழி..........குருத்துமட்டை பழுத்தமட்டைய பாத்து சிரித்ததாம்....கவிதை உண்மையாய் வலித்தது...

  பதிலளிநீக்கு
 3. //கத்தியில்லாமல் குத்திய வார்த்தையால்
  வலிபொருக்காமல் வழிந்தது கண்ணீர்
  ரணப்பட்ட மனம் தானாய்புலம்பியது ரத்தினமே நீ
  பூவும் பொட்டுமாய் போய்விட்டாய்//

  பிரிவின் கொடுமை....

  வயதானவனின் வலிகளை வார்த்தைகளின் வடித்துள்ளீர்கள்...நல்ல பகிர்வு...

  பதிலளிநீக்கு
 4. சிறுவயதில் நம்மைக் கண்போலப்
  பார்த்து, வளர்த்தவர்களுக்கு
  பணிவிடை செய்யும் வாய்ப்பு பெற்றவர்கள்
  பாக்கியம் செய்தவர்கள்.
  அதை புரியாமல் விடுபர்கள் இறைவனிடமிருந்து
  கோபத்தையே பெறுவார்கள்.

  பதிலளிநீக்கு
 5. கவிதையை படித்ததும் மனசு வலித்தது.உண்மையை அழகா சொல்லிருக்கிங்க...

  பதிலளிநீக்கு
 6. ப்ச்...

  கடவுளே மனிதனுக்கு 60 வயதுக்கு மேல வாழ்றதுக்கு அனுமதி குடுக்காத.. அந்த அறுபது வயது போது நிறைவாய் வாழ்ந்துவிட்டு போகிறோம் அதற்க்குமேல் வாழ்வது எல்லாருக்கும் மனக்கஷ்டமே......

  பதிலளிநீக்கு
 7. கண்டுகொள்ளப்படாத ஒரு முதியவரின் வலியை அழகாக சொல்லியுள்ளீர்கள். எழுத்துப் பிழைகளை நீக்கினால் இன்னும் கவிதை அழகு பெறும்.

  பதிலளிநீக்கு
 8. //தனித்து விடுப்பட்ட முதியோர்களின் மன நிலையை ஆழமாக சொல்லி இருக்கின்றீர்கள். ஆமாம், அவர்களுக்கு அப்பொழுது தேவை காசோ, பண்மோ இல்லை, பாசம் மட்டுமே. இதனை அனைவரும் உணர்ந்தால் நலம்.//

  காசு பணத்தைவிட முதுமையில் பாசம் ஒன்றே பெரியது அதைஉணர்ந்து செயல்பட்டால் நிச்சியம் நாளை நமக்கும் தேவைப்படும்,

  தாங்களின் கருத்துகக்ளுக்கு மிக்க மகிழ்ச்சி ஷஃபி

  பதிலளிநீக்கு
 9. //ஒரு பழமொழி..........குருத்துமட்டை பழுத்தமட்டைய பாத்து சிரித்ததாம்....கவிதை உண்மையாய் வலித்தது//

  நல்ல பழமொழி இந்த கவிதைக்கு ஏற்றமொழி..நன்றி

  பதிலளிநீக்கு
 10. //பிரிவின் கொடுமை....

  வயதானவனின் வலிகளை வார்த்தைகளின் வடித்துள்ளீர்கள்...நல்ல பகிர்வு...//

  பாலாஜி தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 11. //மனம் நெகிழ்ந்தது//

  மனம் நிறைந்தது அருணா முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 12. //சிறுவயதில் நம்மைக் கண்போலப்
  பார்த்து, வளர்த்தவர்களுக்கு
  பணிவிடை செய்யும் வாய்ப்பு பெற்றவர்கள்
  பாக்கியம் செய்தவர்கள்.
  அதை புரியாமல் விடுபர்கள் இறைவனிடமிருந்து
  கோபத்தையே பெறுவார்கள்//

  ஆமாம் நிஜாம் அண்ணா சரியாக சொன்னீர்கள்,

  புரிந்துநடந்தால் புண்ணியம் பெருவோம்..

  பதிலளிநீக்கு
 13. முதுமையின் வேதனை.நினைக்கவே பயமாயிருக்கு.வயதானால் என்னென்ன ஆகுமோ !

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது