நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உணர்வோடு உறவாடு


இது வெரும் வார்த்தகளுக்காக மட்டுமல்ல
நாம்வாழும் வாழ்க்கைக்காக,,வும்

உதிரம்தந்து உழைப்பும்தந்து

உயிரைக்கூட தரதுணிந்த
உறவுகளை உதறிவிட்டு
ஒதுங்கி வாழ்வதற்காக
பிரிவை தேர்ந்தெடுத்து

தனிமையை தேடிப்போகும்
உறவுகளே!

உங்கள் உறவுகள் கொடுக்கும் வலிமையை

 பிரிவுகள் கொடுக்கிறதா?
உறவுகளில் கிடைக்கும் சந்தோஷங்கள்,

பிரிவுகளில் கிடைக்கிறதா?
உறவுகளில் உண்டாகும் ஒற்றுமை

பிரிவுகளில்தான் உண்டாகிறதா?

நாமென்ன வானதில்

விளிம்பிலிருந்தா குதித்தோம்
இல்லையே
தந்தையென்னும்

உறவின் உதிரத்தில் உதித்து
தாயென்னும்

உறவின் கருவில் ஜனித்தவர்கள்தானே!

நம்கூடபிறந்தவர்களிடம்கூட எதற்கு பிணக்கு
நம்உறவுகளோடு ஏன் வம்பு வழக்கு
பிறப்பென்னும் பிரிவுமட்டும்போதுமே
கர்பத்திலிருந்து வெளியேவந்த நமக்கு,

விட்டுகொடுத்துப்போவதென்பது

அற்றுபோய்வருவதால்
உறவுகளெல்லாம்

வெட்டிக்கொண்டேபோகிறது
உணர்ச்சிவசப்பட்டு

உறவுகளை பிரிந்துவிடுவதால்,
உடல் உணர்வுகளை

இழந்துநிற்கும் நிலையில்
உள்ளம் உறவுகளை

தேடிக்கொண்டேஇருக்கிறது.

உயிரோட்டமுள்ள உறவுகளை

உதாசிணப்படுத்திவிட்டு
உயிரற்ற காகிதபணத்தின்

உறவைத்தேடி ஓடுகிறது மனிதஇனம்
ஓ உறவே;
உன் உயிர் உன்னைவிட்டு

விலகிவிடும்போது
நீ ஓடித்ஓடி தேடிய உயிரற்ற காசால்
கலங்கத்தான்முடியுமா--இல்லை”
ஒருசொட்டுகண்ணீர் விடதான்முடியுமா?

உறவுகள் சேர்ந்திருப்பின்

சிறுசிறு சங்கடங்கள் வருவது சகஜம்
உறவுகளை பிரிந்திருப்பின்

மனகஷ்டங்கள் வருவது சுலபம்
சங்கடங்களென்பது

கலைந்துபோகும் மேகம்-ஆனால்
மனகஷ்டங்களென்பது ஆராத்துயரம்.

உலன்றுபோனவனுக்கு நல்லுறவுகளிருப்பின்
உயிர்பித்து எழுவான் –அதுவே
பிரிந்துபோனவனுக்கு
நல்லுறவுகள் இல்லையேல்
பரிதவித்துப்போவான்.

உறவுகளின் உன்னதம்

பிரிவுகளில் தெரியும்
பிரிவுகளின் வேதனை

உறவுகளைஇழந்திருக்கும்போது புரியும்
உறவுகளை பிரிந்துவாழும்

வாழ்க்கையில் ஏற்படும் ஓர் அதிருப்தி
உறவுகளை இணைத்து-இணைந்து

வாழ்வதே மனதுக்கு திருப்தி.

உறவுகள் பலவிதம்- அதைவிட

பிரிவுகள் பலபலவிதம்
உறவுகளுக்குள்

விரிசல்களும் வலிகளும் ஏற்படும்-
ஏனெனில்
உறவுகள் அனைத்தும் மனிதருள்

வெளியாகும் மனிதப்பிறவிகளே!

/ஆகவே/

உறவுகளோடு இணங்கி உறவாடு
பிரி”வினை” என்னும்

வினையை குழிதோண்டிப்போடு
உறவுகளிடம் மனமுவர்ந்து உறவாடு
தீய உறவுகளிடம் இரு விழிப்புணர்வோடு......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

//இந்த கவிதை தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதி வெளியான வரிகள் //

7 கருத்துகள்:

 1. உறவுகளோடு இணங்கி உறவாடு
  பிரி”வினை” என்னும் வினையை குழிதோண்டிப்போடு
  உறவுகளிடம் மனமுவர்ந்து உறவாடு
  தீய உறவுகளிடம் இரு விழிப்புணர்வோடு...... ( அர்த்தமுள்ள வார்த்தைகள் ) மிகவும் சூப்பர் மலிக்கா

  பதிலளிநீக்கு
 2. //விட்டுகொடுத்துப்போவதென்பது அற்றுபோய்வருவதால்
  உறவுகளெல்லாம் வெட்டிக்கொண்டேபோகிறது//

  கரெக்ட்டா சொன்னீங்க.....

  பதிலளிநீக்கு
 3. ( அர்த்தமுள்ள வார்த்தைகள் ) மிகவும் சூப்பர் மலிக்கா]//

  மிகவும் மகிழ்ச்சி சாருக்கா

  பதிலளிநீக்கு
 4. //கரெக்ட்டா சொன்னீங்க.....//

  சந்தோஷம் வசந்த் தாங்களின் கருத்துக்கு,

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப நல்லா இருக்குங்க மலிக்கா! வாழ்த்துக்கள்!தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. //ரொம்ப நல்லா இருக்குங்க மலிக்கா! வாழ்த்துக்கள்!தொடர்ந்து எழுதுங்கள்.//

  முதலில் தாங்களின் வருகைக்கு மிக்க நன்றி ராஜாராம்.

  தங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது