நைல் நதியின் நீளத்தை மிஞ்ச
நினைத்த உனதன்பால்
நான் நிலைகுழைந்துதான் போனேன்
நீயற்ற பொழுதுகள்
நீரற்ற நிலமாவதுபோல் உணர்ந்தேன்
உன்போல் யாரும்
என்மீது அக்கரை கொண்டதில்லை
இதுதானோ
இதயமாற்றம் செய்யும் அன்பின் நிலை
அதீத அன்பே ஆன்மாவின் பிள்ளை
அதுவும் மிஞ்சினால் வருமோ சல்லை!
என்னை விரும்பியாய்
எந்நொடியும் இருந்துவிட்டு
எங்கு மறைந்தாய் எனைவிட்டு
எதையும் மறக்குமோ நம்மிதயக்கூடு
எதுவும் அழியுமோ நம்மைவிட்டு
உடல் தடதடக்க
உதிரம் கிறுகிறுக்க
குழைகிறது குமைகிறது
உனைத்தேடும் கண்கள்!
உயிர் துடி துடிக்க
உணர்வுகள் வெடி வெடிக்க
துடிக்கிறது துவழ்கிறது
உன்னால் களவாடப்பட்ட நெஞ்சம் ...
வணக்கம்
பதிலளிநீக்குஅற்புத வரிகள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் !
பதிலளிநீக்குஏக்கத்தின் இழை
எழுத்தில் ஓடுகிறது அருமை
தொடர வாழ்த்துக்கள் !
காலம் மாறலாம் காதல் மாறுமா என்று சொல்வது… போல
பதிலளிநீக்குகாதல் என்பது காலம் காலமாக மனதோடு இணைந்து எச்சூழலிலும் கைவிடாமல் வாழ்வில்
தம்பதியர்களாக
இணைவதாகும்.
பெண்ணிடம் பேசும்போது ஆண் அவள் கண்களைப் பார்ப்பான்.
பெண் அவன் கண்ணை மட்டும்தான் பார்க்கிறானா? என்று பார்ப்பாள்.
இதுதான்!
காதல்!
எண்ணங்கள்,
பதிலளிநீக்குவண்ணம்,
திறமை,
அருமை,நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக….
வாழ்த்துக்கள் !