நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மனம் திறக்கும் மடல்


அன்பான காதலனே
ஆருயிர் மன்னவனே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்

நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை
உலுக்கி -அதிலுதிர்ந்த
உணர்வுகளை
உதிராமல் கோத்தாய்!

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி-அதை
தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்!

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்!

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை ஏன் கேட்கிறாய்!

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
பூவெழுத்துக்களால் வார்கிறேன்

கடிதம் கண்டு
கனவுக்குள்ளேனும் வா காதலனே!
என்றுமே நீதான்
என் கணவனே!
 =====================================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஆ அதிரா, மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வாங்கம்மா பூனையம்மா நலமா. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்ச்சே இந்தபக்கமெல்லாம் வந்து,, ம்ம் பால சரியா காச்சி வைக்கவில்லையேன்னு வரலையோ.. அவ்வ்வ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிமா..

   நீக்கு
 2. பதில்கள்
  1. தம்பியே வருக. நலம் நலமறிய ஆவல்.. அன்புக்கருத்துக்கு மிக்க நன்றி குமார்..

   நீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது