நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காரணம் அறிவீரோ?
உயிர்வதை கூடாதுன்னு
உயரிய சட்டமிருக்குங்க
அது எந்த உயிரென்பதிலே

தெரியாமத்தானிங்கே குழம்பிக் கெடங்குங்க

மனிதமிழந்து மானமிழந்து
மனிதர்கள் வாழும் உலகினில்
மனசாட்சி எதிர்பார்ப்பதெல்லாம்-நம்
மடமைதானுங்க

கேவலமா கூடிக் குலவி
குழந்த பெக்குறா
அப்பன் பேரூ தெரியாததால
அனாதையாக்குறா

ஆயி அப்பன் சேந்தும் பல
கூத்து நடத்துறார்
தன் கூத்து நடத்த தடையிதுன்னு
சிசுக்கள தொரத்தி வதைக்கிறார்

ஐந்தறிவும் ஆறறிவும்
ஒன்னாச்சேருது -அது
அவங்க பணபாசையில
ஜீவகாருன்யமாகுது

நாகரீக மெத்தயில
நாலுகாலு மிருங்கிடக்குது-கேட்டா
நன்றியுள்ள ஜீவனிதுதான்னு
நம்ம குத்திக் காட்டுது

ஐந்தறிவோ ஐயமின்றி
அறையில் தூங்குது
ஆறறிவோ
அடைக்காக்க யாருமின்றித் தவிக்குது

என்ன சொல்லி யார திட்ட
ஒன்னும் புரியல
காரணங்கள் என்னன்னு கண்டும்
காரி உமிழ முடியல

காரணங்கள் கொட்டிக் கெடக்கு
கேடு கெட்ட பூமியில்
பூமியென்ன செய்யுமிந்த
மனிதர் செய்யும் கேட்டினில்..... கவிதை வயல் - 60, திற்காக எழுதியது...


  ”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

6 கருத்துகள்:

 1. ஒவ்வொரு முறையும் மிக நேர்த்தியாக எழுதிறீங்க சகோ. வார்த்தைகள் உங்களுக்கு வளைந்து கொடுக்கிறது, பாராட்டுகள்.

  வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை..
  தொடர்ந்து எழுதுங்கள்
  தொடர்ந்தே வருகிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேசமிகு உறவுகளின் பாசமிகு கருத்துகளுக்கு எந்நாளும் எனது நன்றிகள்..

   எழுத்துகளுக்கு கிடைக்கும் உயரிய பரிசே தங்களைபோன்றோரின் ஊக்கமெனும் கருத்துகள்தான்..
   மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ..

   நீக்கு
 2. தனிமனித ஒழுக்கம் சீரழிந்த பின் என்னத்த சொல்ல...!

  நல்லதொரு ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது